தோழர் செங்கொடியின் மரணத்தை முன்னிட்டு…..

அண்மையில் தமிழ் அறிந்த அனைவரும் ஒருமுறையேனும் உச்சரித்த, உச்சரிக்கும் பெயராக மாறியிருக்கிறது காஞ்சி தோழர் செங்கொடியின் பெயர். அவரின் தற்கொலை தமிழகத்தை அதிரவைத்தாலும், அந்த ஈகம் கண்களில் நீரையும், அரசின் மீதான கோபத்தையும் வரவழைத்திருந்தது. அதேநேரம், தற்கொலை தீர்வாகுமா? மூன்று உயிருக்காக ஒரு உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்தில் சரியாகும் என்று கேட்டுக் கொண்டு பதிவுலகில் ஒரு கூட்டம் வலம் வந்தது. தற்கொலைகள் தீர்வல்ல, அது ஒரு போராட்ட வழிமுறை அல்ல. என்றாலும் அதன் பின்னிருக்கும் அரசியலை நீர்த்துப் போகவைக்கும் ஓர் உத்தியாக இது கையாளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பெரும்பாலானோர் தோழர் செங்கொடியின் உடலில் எரிந்த அரசியலின் வெப்பத்தை எதிர்கொள்ள முடியாமல், இரக்க உணர்ச்சியை அணிந்து கொண்டு பார்த்தவர்கள். வேறு சிலரோ மதப் போர்வைக்குள் பத்திரமாக பதுங்கிக் கொண்டு எட்டிப் பார்த்தவர்கள். முத்துக்குமார் நிகழ்வின் போதும் இந்த மதவாதிகள் ஓயாமல் ஓதிய பாட்டுக்களை மீளக் கொண்டுவந்து இப்போதும் ஓதிப் பார்க்கிறார்கள்.

முதலில் கடையநல்லூர்.ஆர்க் தளத்தில் இது குறித்த ஒரு விவாதம் நடைபெற்றது. அதில் என்னுடன் விவாதித்தவர் தொடரமுடியாமல் நிறுத்திக் கொண்டார். பின்னர், ’நெத்தியடி முகம்மது’ என்ற பெயரில் எல்லோருக்கும் அறிமுகமான பின்னூட்டவாதியாக இருந்து பின்னர் பதிவரான நண்பர் முகம்மத் ஆஷிக் தளத்திலும் இது குறித்த கட்டுரை இருப்பதை அறிந்து. அங்கும் அந்த சுட்டியை இணைத்திருந்தேன். முதலில் அதற்கு பதிலளித்த நண்பர் முகம்மத் ஆஷிக், அதன் பிறகு நான் அளித்த விளக்கங்களை வெளியிடவில்லை. பிளாக்கர் பின்னூட்ட விதிகளை சரியாக அறிந்து கொள்ளாமல் நான் வெளியிட்ட முதல் பின்னூட்டம் வெளிவராத போது, அதை அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைத்து வெளியிடக் கோரியிருந்தேன். அதுபோல இப்போதும் பிரச்சனையாக இருக்கும் என எண்ணி அவருக்கு மீண்டும் மின்னஞ்சலாக அனுப்பிவைத்தேன். ஆனால் இப்போதுவரை அது வெளிவரவே இல்லை.

எனவே, அதை இங்கு பதிவு செய்துவிடலாம் எனும் எண்ணமே இந்த இடுகை. மட்டுமல்லாது, முன்பு ஒருமுறை இதே நெத்தியடி முகம்மது இங்கு தமது பின்னூட்டம் வெளிவருகிறதா என்று சோதனை செய்து பார்ப்பதற்காக ஒரு பின்னூட்டமிட்டார். உருப்படியில்லாத இந்த பின்னூட்டம் எதற்கு என்று அதை நீக்கிவிட்டேன். உடனே அவரது சகோ.க்கள் எங்கள் பின்னூட்டத்தை எப்படி நீக்கலாம் என்று வானுக்கும் மண்ணுக்குமாய் குதித்தார்கள். (நூலகம் பகுதியில் விவாதம் எனும் தலைப்பில் ஏழ்மையும் அதன் காரணமும் என்பதில் இதை காணலாம்) இந்த நேரத்தில் அதுவும் நினைவில் வந்து போனது, அதற்காகவும் இந்தப் பதிவு.

தொடர்புடைய நண்பர் முகம்மத் ஆஷிக்கின் பதிவு: பதிவரே நிறுத்துங்கள் மூளைச் சலவையை

நண்பர் முகம்மத் ஆஷிக்,

வேறொரு தளத்தின் விவாதத்தை இங்கு வைக்க வேண்டாம் என்பது தான் அன்று செங்கொடி தளத்தின் நிலைபாடு, விமர்சனங்களை மறுப்பதல்ல. அதனால் தான் தேவைப்படின் மின்னஞ்சலில் கேட்கலாம் எனும் தெரிவும் தரப்பட்டிருந்தது.  அந்தப் பதில்கள் பொதுவில் வைக்கப்பட வேண்டும் என்பது உங்கள் விருப்பமாக இருந்திருந்தால் அதையும் அப்போதே வெளிப்படையாக கேட்டிருக்கலாமே.  ”வேறொரு தளத்தின் விவாதங்கள் இங்கு தொடர வேண்டாம் என்றால், இந்த தளத்திற்கான கேள்வியாக முன்வைக்கிறோம், பதில் தாருங்கள்”  என்று ஏன் உங்களால் கேட்டிருக்க முடியாது?  ஏனென்றால், உங்கள் நோக்கம் அதுவல்ல.

\\ அது உங்கள் கேள்விகளுக்கான பதிலாக அத்தளத்தில் பதியப்பட்டதல்ல///—அப்புறம் எதற்கு என்னை அங்கே பின்னூட்டங்களை பார்வையிட சொன்னீர்கள்…? ///ஒரே தலைப்பு எனும் அடிப்படையில் ஒரு தொடக்கத்திற்காகவே அந்த சுட்டி தரப்பட்டிருந்தது.///—இல்லை..! நீங்கள் அதற்காக நீங்கள் தரவில்லை.  —பின்னூட்டங்களை படிக்க சொல்லித்தான் தந்தீர்கள்..! எதற்கு இந்த முரண்..?//

இதில் என்ன முரண் இருக்கிறது என்பதை கொஞ்சம் தெளிவு படுத்துங்களேன்.  உங்கள் பதிவில் எழுப்பப்பட்டிருப்பதற்கான பதிலல்ல. ஆனால், உங்கள் பதிவின் நோக்கமும், அங்கிருக்கும் பின்னூட்டங்களின் நோக்கமும் ஒன்றே எனும் அடிப்படையில்; இப்பதிவில் என்னுடைய பதிலைத் தொடங்குவதற்கான ஒரு முனோட்டமாக அதை உங்கள் பார்வைக்கு தந்திருந்தேன். இது எந்த விதத்தில் முரண்பட முடியும்.

உங்கள் கேள்விக்கான பதிலாக தரப்பட்டவையல்ல என்றபோதிலும், செயலை மட்டுமே எடுத்துக்கொண்டு காரணத்தைப் புறந்தள்ளும் உங்களது இழிவை மறுப்பதை துல்லியமாக்குகிறது. இதில் என்ன முரண் இருக்கிறது? முதலில் வாக்கியங்களை பிய்த்துப் பார்ப்பதை விட அந்த வாக்கியம் கூறும் பொருளை உய்த்துப் பார்ப்பது எப்படி என்பதை கற்றுக் கொள்ள முன்வாருங்கள்.

தற்கொலைகள் ஆதரிக்கப்பட, பின்பற்றப்பட வேண்டிய ஒன்றல்ல. ஒரு மனிதனின் முடிவு எனும் நிலையில் அது தவறு. அதேநேரம் அந்த தவறான முடிவுக்கான நோக்கம் ஒரு பொது நலம் சார்ந்து, அரசுக்கு எதிரான கலகமாக இருப்பதால், இந்தத் தன்மையை உணர்ந்து அந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதால் அதை வெறும் தற்கொலை எனும் செயலாக மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது.  இது தான் முத்துக்குமார், செங்கொடிக்கான வீரவணக்கமாக கட்டுரைகளில் பயணப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது. அவர்களின் முடிவு தவறானது என்பதும் கட்டுரைகளில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் பெரியவரின் கருத்து கூட அந்த முடிவு தவறு என்பதையே சுட்டிக் காட்டுகிறது.  இதில் எங்கிருந்து வருகிறது முரண்?  முன்முடிவுகளை கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசிப்பதை விட அதில் உள்ளாடும் பொருளைப் புரிந்து கொண்டு எதிர்வினையாடுவது உங்களுக்கு கடினமாகவே இருக்கும் என்பது எனக்கு புரிந்ததுதான்.

\\ இங்கே யாரும் அவர்களை இழிவு படுத்தவில்லை….. ஏன் நீங்கள் கண்டனம் செய்யவில்லை என்றேதான் திருப்பி திருப்பி கேட்கிறோம் // அல்ல, அவர்களின் முடிவு தவறானது என்பது அந்த கட்டுரைகளில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால், மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் காரணங்களால் அதை கண்டனம் செய்ய வேண்டிய அவசியமில்லை.  நீங்கள் இழிவுபடுத்தவில்லை எனக் குறிப்பிட்டிருந்தாலும் உங்களின் கட்டுரை அவர்களை இழிவுபடுத்தவே செய்கிறது.  \\ எந்த காரணத்துக்காகவும் யார் செய்தாலும்// என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்களே அது இழிவுபடுத்தல் தான். அதாவது காரணத்தை, நோக்கத்தை முன்வைத்து செய்யப்பட்ட ஒரு செயலை அந்த நோக்கத்தை நீக்கிவிட்டு செயலை மட்டும் தான் பார்ப்பேன் என்பது இழிவு படுத்தல் தான்.  \\ இறைவனை நம்பிக்கை கொண்ட ஒருமுஸ்லிம் இது போன்ற பகுத்தறிவு இல்லாத இழிசெயலை ஒருபோது செய்யமாட்டான்// \\ மூடர்கள் கூட இந்த இழி செயல் செய்வார்களா? // இந்த பின்னுட்டங்களுக்கும் உங்களின் இடுகைக்கும் உள்ள வித்தியாசம் அவர்கள் பயன்படுத்தியிருப்பது போன்ற சொற்களை நீங்கள் பயன்படுத்தவில்லை என்பதது தானேயன்றி, இரண்டின் நோக்கமும் இழிவு படுத்துவது தான். சரி இப்போது நீங்கள் கூறுங்களேன், மதம் என்பதைத்தவிர செங்கொடிகளின் தற்கொலைகளை எதிர்ப்பதற்கு என்ன தான் காரணம்?

\\ நல்ல நோக்கம் உள்ளது என்றும் சொல்லிவிட்டு அதை செய்ய நீங்கள் முன்வரமாட்டீர்கள்……..பெரியவரின்’ துப்பாக்கி தூக்கும் வரிகளும் நல்ல நோக்கம்தானா…? அதையும் தெளிவுபடுத்தி விடுங்கள் // நீங்கள் புரியாதது போல் நடித்துக் கொண்டிருக்கும் விசயம் இது தான்.  நாங்கள் அதைச் செய்ய முன்வராததன் காரணம், நல்ல நோக்கம் மட்டும் போதாது, நல்ல வழிமுறையும் வேண்டும். நோக்கமும், வழிமுறையும் சரியாக இருக்கும் ஒன்றைத்தான் நாங்கள் பின்பற்ற முடியும்.  நோக்கம் மட்டும் நல்லதாக இருந்தால் அதை இழிவு படுத்தவும் முடியாது செயல்படுத்தவும் முடியாது.  இதைத்தான் நீங்கள் தலைவர்கள், தொண்டர்கள், பிரபாகரன், பிடல் காஸ்ட்ரோ என்றெல்லாம் நீட்டி முழக்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆம், பெரியவரின் துப்பாக்கி தூக்கும் வரிகளும் நல்ல நோக்கம் தான்.

 

தட்டையான புரிதல் என்றால் அதற்கு எதிரான பதங்களை பாவிப்பதால் மட்டும் உங்கள் புரிதல் உருண்டையாகிவிடும் என எதிர்பார்க்க முடியுமா?  சுமையூந்து நிகழ்வுக்கும் செங்கொடி நிகழ்வுக்கும் உள்ள பொருத்தப்பாடு, இருவரும் தங்களை இழக்கத் துணிகிறார்கள் சுயநலமற்ற ஒரு காரணத்திற்காக. சுமையூந்து என்பது உருவமாக இருக்கிறது, அதனால் தடுக்கும் வழிகளும் வெளிப்படையாக இருக்கிறது. இதுவே செங்கொடி விசயத்தில் அருவமாக இருக்கிறது. தமிழகம் தழுவிய போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் சரியான பலனைத் தருமா எனும் ஐயம் எழுகிறது.  அந்த தூக்கு குறித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இரண்டு நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஒருவேளை செங்கொடி காப்பாற்றப்பட்டிருக்கலாம்.  எனவே இது வெறும் தற்கொலை மட்டுமல்ல அரசு தாமதத்தால் விளைந்த கொலையும் கூட.  ஏனென்றால், செங்கொடியின் முடிவு மக்களின் போராட்டங்களை அரசு கண்டுகொள்ளாததை பாற்பட்டும் இருக்கிறது.  உருண்டை என கேலி செய்வதால் மட்டும் உங்களுக்கு பருண்மையான புரிதல் வந்து விடாது.

நீங்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக தியாகம் என கொண்டாடிக் கொண்டிருக்கும் நிகழ்வில் என்ன பொதுநலம் இருக்கிறது?  இறைவன் சொந்தக்காரன் என்று உங்கள் நம்பிக்கையை கூறுகிறீர்கள்.  வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் சுயநலமாக ஒரு தற்கொலைக்கு தயாராவதையே தியாகம் என்று பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடிக் கொண்டிருக்கும் நீங்கள்,  ஒரு பொது நலனுக்காக பிரமாண்டமான அரசு எந்திரத்தின் அநீதிக்கு எதிராக எந்த ஆயுதத்தை எடுப்பது என்று புரியாமல், பயன்படவேண்டுமே எனும் பதைப்பில் மேற்கொண்ட முடிவை இழிவு படுத்துகிறீர்கள். எந்த விதத்தில் இது சரி கூறமுடியுமா?

உங்களின் சமூக மற்றும் அரசியல் புரிதல் தவறானது.  உயிர் என்பதை வெறும் இருத்தலுக்கான சாரம் என்பதாக புரிந்து கொள்ளக் கூடாது.  கொள்ளைகளும் கொலைகளும் புரிந்து வயிறு வளர்ப்பதை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவனுக்கு இருப்பதும்,  சமூகத்துடிப்புடன் போராட்டக் களத்தில் நிற்பதையே வாழ்க்கையாகக் கொண்டவனுக்கு இருப்பதும் தன்மையில் உயிர் தான். ஆனால் இரண்டையும் ஒன்றாக மதிப்பிட முடியுமா?  வாழ்க்கை என்பது யாரோ தருவதற்கும், அதை திருப்ப ஒப்படைப்பதற்கும் இடைப்பட்ட புனிதமல்ல.  இருப்பதின் அடையாளமே அதை எதற்காக செலவிட தயாராக இருக்கிறோம் என்பதில் பொதிந்திருக்கிறது.  இறைவன் தந்த உயிர், அதை அவன் தான் எடுக்க வேண்டும் நாமே போக்கக் கூடாது எனும் மத விழுமியங்களில் இருந்தே தற்கொலைகளுக்கு எதிரான உங்களின் அறச்சீற்றம் எழும்புகிறது.  மெய்யில் இது அறச்சீற்றமே அல்ல.  இது உங்கள் அகச்சீற்றம்.  அதை சமூகத்தளத்தில் இருந்து எழுப்பப்படும் கேள்விகள் போலக்காட்டி அகச்சீற்றத்தை அறச்சீற்றமாக மொழிமாற்றம் செய்கிறீர்கள் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

செங்கொடி

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

11 thoughts on “தோழர் செங்கொடியின் மரணத்தை முன்னிட்டு…..

 1. இனி சென்கொடிகளின்

  “அடையாள சாவின் எண்ணிக்கை பெருக்கும்

  தமிழர்களின் குறைகள் சிறுக்கும்”

 2. பேஷ்! பேஷ்! நல்ல முடிவு!

  தோழர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டுகிறேன் !?

 3. இருப்பதின் அடையாளமே அதை எதற்காக செலவிட தயாராக இருக்கிறோம் என்பதில் பொதிந்திருக்கிறது.

 4. தியாகத்தை இழிவுபடுத்துவது மனிதசெயல் அல்ல!என்பதை எப்போதுதான் இந்த முட்டாள்கள் புரிந்துகொள்ளப்போகிறார்கள்.என்றோ ஒருநாள் இப்ராஹிம் நரபலியிட்டதை ஹஜ் (தியாகத்திருநாள்)என்று கொண்டாடலாம்.அநத நரபலியை (ஆனால் இவங்க தியாகத்திற்க்கு ஆடு என்ன பாவம் செய்தது )இன்றுவரை கடைபிடிப்பது தியாகச்செயல்.ஆனால் தோழர் செங்கொடி செய்தது தியாகம் இல்லையா?தியாகம் பற்றி புரியவில்லையென்றால் விட்டுவிடுங்கள் அதற்காக இழிவுபடுத்தாதீர்கள். அதுசரி இவங்க நம்பும் ’கடவுளுக்கே’ அதிகபட்சம் இவங்க செய்யும் தியாகம் மயிரை இழப்பது மட்டும்தானே!

 5. இந்த இடுகை வெளியிடப்பட்டதும் வேறு வழியின்றி அவசரமாக 
  என்னுடைய பின்னூட்டத்தை நண்பர் ஆஷிக் வெளியிட்டுள்ளார். 
  கூடவே முகத்தில் மண் ஒட்டவில்லை என்பதை அப்பட்டமாக 
  காட்டும் வண்ணம் ஒரு பதிலும்.
  
  ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~ said... 45
  @ சகோ.செங்கொடி...
  
  விபச்சாரம் தவறு. ஆனால், வயிற்றுப்பிழைப்புக்காக 
  செய்யலாம் என்பது உங்கள் கொள்கை. 
  குடிப்பது தவறு. ஆனால், உழைத்து களைத்து உடல்வலியை 
  போக்க குடிக்கலாம் என்பது உங்கள் கொள்கை. கொலை/
  தற்கொலை தவறு. ஆனால், நல்ல நோக்கத்துக்காக அதாவது 
  உங்கள் மகஇக வளர்ச்சிக்காக இதை பிறர் செய்யலாம் என்பது 
  உங்கள் கொள்கை. "இதை நீங்கள் ஏன் செய்யவில்லை" என்று 
  மீண்டும் மீண்டும் நான் கேட்பதற்கு பதிலாக... ///நல்ல 
  நோக்கம் மட்டும் போதாது, நல்ல வழிமுறையும் வேண்டும். 
  நோக்கமும், வழிமுறையும் சரியாக இருக்கும் ஒன்றைத்தான் 
  நாங்கள் பின்பற்ற முடியும்.///---என்று சொல்லி 
  முடித்திருக்கிறீர்கள்.
  ///நோக்கம் மட்டும் நல்லதாக இருந்தால் அதை இழிவு படுத்தவும் 
  முடியாது, செயல்படுத்தவும் முடியாது.///---என்றும் சொல்லி
  விட்டு... 'இது தீய வழிமுறை' என்று நன்கு அறிந்திருந்தும் 
  அதையே ஊக்கப்படுத்தி 
  அதை தொடர்ந்து ஆதரித்தும் வருகிறீர்கள்.
  
  இதுபோன்று கொள்கை என்ற எதுவும் இல்லாமல், கொள்கை
  வேஷம் போடும் 'பக்கா பிழைப்புவாத கோமா கும்பலுடன்' 
  இனியும் விவாதிப்பது ஒரு மண்ணுக்கும் பிரயோஜனப்படாது 
  என்று எப்போதோ புரிந்து கொண்டேன்..!
  
  உங்கள் தவறான புரிதலில் இருந்து வெளிவந்து பகுத்தறிவோடு 
  சிந்தித்தால் ஒருவேளை நீங்கள் சிந்தை தெளிவு பெறக்கூடும். 
  
  உங்களுக்கு நல்ல சிந்தையை கொடுக்க எல்லாம் வல்ல ஏக 
  இறைவனிடம் இறைஞ்சுகிறேன்..! 
  இதற்கு மேல் சொல்ல வேறொன்றும் இல்லை சகோ.செங்கொடி.
  September 12, 2011 5:14 PM
  
  என்ன ஒரு கோபம் \\கொள்கை என்ற எதுவும் இல்லாமல், கொள்கை
  வேஷம் போடும் 'பக்கா பிழைப்புவாத கோமா கும்பலுடன்' இனியும் 
  விவாதிப்பது ஒரு மண்ணுக்கும் பிரயோஜனப்படாது என்று எப்போதோ 
  புரிந்து கொண்டேன்..!// எப்போதோ புரிந்து கொண்ட நீங்கள் உங்கள் 
  முதல் பதிலை எழுதியது ஏன்? நேர்மையாளர்கள் என்று பறைசாற்றிக் 
  கொள்வது, பதிலளிக்க முடியாத கேள்விகளை எழுப்பினால் அதை 
  வெளியிடாமல் கள்ள மவுனம் சாதிப்பது, அம்பலப்படுத்தப்ட்டு 
  விட்டால் கோபத்தை வெளிப்படுத்துவது, தூற்றுவது. நம்புங்கள்.... 
  இவர்கள் நேர்மையாளர்கள் தான்.
 6. //ஒருநாள் இப்ராஹிம் நரபலியிட்டதை ஹஜ் (தியாகத்திருநாள்)என்று கொண்டாடலாம்.அநத நரபலியை (ஆனால் இவங்க தியாகத்திற்க்கு ஆடு என்ன பாவம் செய்தது )இன்றுவரை கடைபிடிப்பது தியாகச்செயல்//

  யாகம் வேள்வி தகனபலி நரபலி உயிர்பலி கூடாது.

  022:037. Neither their meat nor their blood reaches God, but what reaches Him is the righteousness from you.

  quranist@aol.com

 7. வலிபோக்கன், on செப்டம்பர்12, 2011 at 1:42 மாலை said:

  இருப்பதின் அடையாளமே அதை எதற்காக செலவிட தயாராக இருக்கிறோம் என்பதில் பொதிந்திருக்கிறது.

  90:04. We have designed man to struggle.

  quranist@aol.com

 8. //1.விபச்சாரம் தவறு.
  ஆனால், வயிற்றுப்பிழைப்புக்காக செய்யலாம்

  2.குடிப்பது தவறு. ஆனால், உழைத்து களைத்து உடல்வலியை போக்க குடிக்கலாம்

  3.கொலை/தற்கொலை தவறு.
  ஆனால், நல்ல நோக்கத்துக்காக

  அதாவது

  மகஇக வளர்ச்சிக்காக இதை பிறர் செய்யலாம் //

  வடிவேலு said: சொல்லவே இல்ல !!!

 9. நண்பர் ஆஷிக்கின் தளத்தில் தான் பின்னூட்டத்தை தடுக்கவில்லை என்று நண்பர் ஹைதர் அலியின் கேள்விக்கு பதில் கூறியுள்ளார். அவர் தடுத்து வைத்திருந்தார் என்பது தான் என்னுடைய குற்றச்சாட்டு என்பதால் எது சரி என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

  இந்தப் பதிவை நான் வெளியிட்டது கடந்த 11 ஆம் தேதி இரவு சுமார் 11 மணிக்கு, தடுத்து வைத்திருந்த பின்னுட்டத்தை அவர் வெளியிட்டது 12 தேதி மாலை நான்கு மணிக்கு. இரண்டுக்கும் இடையில் தோராயமாக பதினைந்து பணி நேரம் இருந்தாலும், நான் எதிர்ப்பதிவு இட்டிருப்பது காலை அலுவலக நேரத்திலேயே அவருடைய கவனத்திற்கு வந்திருக்கும். அவரின் கவனத்திற்கு வந்த சிலமணி நேரத்திலேயே தடுத்து வைத்திருந்த பின்னூட்டத்தை மின்னஞ்சலிலிருந்து வெளியிடுகிறார் என்றால், அதில் அவரின் பதட்டம் வெளிப்பட்டிருப்பதாக கருத இடம் இருக்கிறது.

  என்னுடைய பின்னூட்டத்தை நண்பர் மூன்று பகுதிகளாக பிரித்து வெளியிட்டிருக்கிறார். (பின்னூட்ட எண்கள் 42,43,44) ஆனால் முதல் பின்னூட்டத்தில் (42) மூன்றாக பிரித்து இட்டிருக்கிறேன் என்று நான் நண்பருக்கு மின்னஞ்சல் அனுப்பிய செய்தியும் சேர்ந்தே இருக்கிறது. நானும் மூன்றாக பிரித்து இட்டிருக்கிறேன், நண்பரும் மூன்றாக பிரித்து இட்டிருக்கிறார். ஆனால் நான் இட்டது மட்டும் வெளிவரவில்லை என்றால் அதன் பொருள் என்ன? மட்டுமல்லாது அந்த இடுகையில் பெரிய பின்னூட்டம் எதுவோ அதன் வார்த்தைகளை எண்ணி, அந்த எண்ணிக்கைக்கு மிகாமலேயே என்னுடைய பின்னூட்டத்தை இட்டிருந்தேன். என்றால் அப்படி என்ன கோளாறு இருக்கிறது கூகிளின் பின்னூட்ட அமைப்பில்?

  நண்பருக்கு நான் அனுப்பிய மின்னஞ்சலை இடுகை வெளியிடுவதற்கு சற்று முன்னர் தான் படம் (ஸ்க்ரீன் ஷாட்) எடுத்தேன். அதில் தெளிவாக அனுப்பிய நேரம் செப்டம்பர் 8 (மூன்று நாட்களுக்கு முன்னர்) என்றிருக்கிறது. அந்த மடலை, சிரமத்திற்கு மன்னிப்புக் கோரி பின்னூட்டம் வெளிவராததால் முன்னர் வெளியிட்டது போல் வெளியிட வேண்டித் தான் அனுப்பியிருக்கிறேன் என்ற செய்தியும் இருக்கிறது. ஆனால் தற்போது நண்பர் ”அந்த மின்னஞ்சலை போகட்டும் என்று விட்டுவிட்டதாக”கூறியிருக்கிறார். நான் வெறுமனே அவருடைய அறிதலுக்காக மட்டும் அனுப்பியிருக்கிறேன் என்றால் ஏன் சிரமத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? அவர் என்னுடைய விளக்கங்களை மொக்கையாக கருதினாலும் வெளியிட வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. அதை செய்யாமலிருந்தது என்ன காரணத்தால்?

  எனவே நண்பர் என்னுடைய பின்னூட்டங்களை தடுத்துத் தான் வைத்திருந்தார் என்பதில் இப்போதும் நான் உறுதியுடன் இருக்கிறேன்.

  அடுத்து, நண்பர் இது குறித்து விவாதம் செய்வதற்கு தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார். எனவே நானும் என்னுடைய ஆயத்தநிலையை பதிவு செய்கிறேன். மட்டுமல்லாது ஒரு நிபந்தனையையும் நண்பர் விதித்திருக்கிறார். \\ வைக்கப்படும் வாதங்களில் அர்த்தம் இருக்க வேண்டும். அரைத்த மாவையே அரைக்கும் பொருளற்ற வறட்டு மொக்கைகளாக வாதங்கள் அமையக்கூடாது. அவ்வளவுதான்// வாதங்களில் அர்த்தம் இருக்கிறதா, பொருளற்று அரைத்த மாவே அரைக்கப்பட்டிருக்கிறதா, வறட்டு மொக்கைகளாக இருக்கிறதா என்பதை என்பதை எந்த அடிப்படையில் முடிவு செய்வது?

  ஆனால் நான் இவ்வாறு நிபந்தனைகளையெல்லாம் விதிக்க ஆர்வம் கொள்ளவில்லை. அவர் கூறும் பதில் என்னவாக இருந்தாலும் அவற்றை பரிசீலித்து தகுந்த பதிலளிக்க ஆயத்தமாக இருக்கிறேன். குருட்டு புரிதல்களாக இருந்தாலும், வறட்டு வாதங்களாக இருந்தாலும், ஆயாசமாக வந்தாலும், மொக்கைத்தனம் வெளிப்பட்டாலும், அரைத்த மாவாக இருந்தாலும் (எல்லாம் நண்பர் பயன்படுத்திய சொற்கள் தான்) அவரின் பதில் எப்படி இருந்தாலும் பதிலளிப்பதோடு மட்டுமல்லாமல் மேற்குறிப்பிட்ட விதத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதையும் சேர்த்தே விளக்கமளிக்கிறேன். என்னுடைய வாதங்கள் ஏற்கனவே வைக்கப்பட்டுவிட்ட படியால். முடிந்தால் நண்பர் பதில் கூறட்டும். இப்போதிலிருந்தே நான் காத்திருக்கிறேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s