தடுப்பூசி அறிவாளிகளும், கட்டாய எதிர்ப்பு அறிவிலிகளும்

கட்டாயாமாக திணிக்கப்படும் தடுப்பூசி மருத்துவத்துக்கு எதிராக உலகமெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான ஓர் இயக்கமே இயங்கி வருகிறது. கட்டாயத் தடுப்பூசி எனும் நிலை, நேரடியாகவோ மறைமுகமாகவோ உலகின் எந்த நாட்டிலும் இல்லை. என்றாலும் கூட கட்டாயத் தடுப்பூசி என்று அவ்வப்போது அரசுகள் பூச்சாண்டி காட்டுவதும், மக்கள் அதற்கு எதிராக போராடுவதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. உலகமெங்கும் இருக்கும் இந்தப் போக்கு தற்போது இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் தொடங்கி இருக்கிறது.

கொரோனாவுக்கு எதிராக கட்டாயமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனும் நிலை சட்ட ரீதியாக இந்தியாவில் இல்லை. ஆனால் மறைமுகமாக அதை திணிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்களை செல்லிடப் பேசிகளிலோ, நேரடியாகவோ வைத்திருந்து தேவைப்படும் போது காண்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்துகிறார்கள். பெரிய வணிக வளாகங்களுக்குள் தடுப்பூசி போடாதவர்கள் யாரும் வரக் கூடாது என்று கட்டளையிடுகிறார்கள். விமான, ரயில் போக்குவரத்துகளில் தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கிறார்கள். இன்னும் இது போல் பல அறிவிப்புகள். இதெல்லாம் எந்த விதத்தில் சரி?

ஒன்றிய அரசோ, மாநில அரசுகளோ கொரோனா தடுப்பூசி குறித்து கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன? கட்டாயத் தடுப்பூசி தான் எங்கள் நிலை. கண்டிப்பாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டாக வேண்டும், போடாமல் இருப்பது தண்டனைக்குறிய குற்றம் என்று அறிவிப்பு செய்யுங்கள். அல்லது, விரும்பியவர்கள் போட்டுக் கொள்ளலாம் விரும்பாதவர்கள் மீது எந்தவித கட்டாயத் திணிப்பும் இருக்காது என அறிவித்து மறைமுக திணிப்பை விலக்குங்கள். இரண்டையும் செய்யாமல் அமைதி காப்பது அயோக்கியத்தனம் இல்லையா?

சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டிலும் கட்டாயத் தடுப்பூசிக்கு எதிரான பேரணி ஒன்று நடந்தது. இதை கிண்டல் செய்து முகநூல் பதிவர் ஒருவர் இப்படி எழுதியிருந்தார்.

“கட்டாய தடுப்பூசி வேண்டாம் என்று சிலர் போராட்டம் நடத்துகிறார்கள்.. சரிதான் .. நீங்களே போய் தடுப்பூசி போட்டுகிட்டா அவங்க ஏன் கட்டாயப்படுத்த போறாங்க.. போய் போட்டுகிட்டு அவங்கள கொஞ்சம் வேலை பளுவ கொறைங்க..”

அதாவது, கட்டாயத் தடுப்பூசிக்கு எதிராக எந்தக் கருத்தும் கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை இல்லை. உலக நடைமுறைக்கு எதிராக தடுப்பூசியை கட்டாயப்படுத்துவது குறித்து இவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. அது சரி என இவர்கள் நம்புகிறார்கள். அவ்வாறு நம்புவதாலேயே அவர்களுக்கு எதிராக கருத்து கொள்ளும் உரிமை இல்லை. இது தான் அந்த எள்ளலில் இருக்கும் தொனிப்பு. சமூக வலை தளங்களில் இப்படி மிகப் பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தடுப்பூசிக்கு ஆதரவானவர்களா? தடுப்பூசியை கட்டாயமாக போடுவதற்கு ஆதரவானவர்களா? என்று இவர்களால் தங்களை பிரித்தறிய தெரிந்திருக்கிறார்களா? என்று கூட தெரியவில்லை.

கொரோனா தொடங்கிய காலம் தொட்டு அறிவியலுக்கு ஆதரவானவர்கள், அறிவியலுக்கு எதிரானவர்கள் என்றொரு பிளவு ஓடிக் கொண்டிருக்கிறது. இதை பிரித்தறிய முயற்சிகள் எதுவும் தேவையில்லை. கொரோனாவை, மருத்துவ ஏகாதிபத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரும் அறிவியலுக்கு ஆதரவானவர்கள். கொரோனாவுக்கு எதிராக, மருத்துவ ஏகாதிபத்தியத்து எதிராக, தடுப்பூசிக்கு எதிராக ஐயம் கிளப்புவோர்கள் அனைவரும் அறிவியலுக்கு எதிரானவர்கள். நானும் இது குறித்து பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். இந்த வகையில் நானும் ஒரு அறிவிலி தான்.

மேற்கண்ட அந்த முகநூல் பதிவில் அது குறித்த சிறிய விவாதம் நடந்தது. அந்த விவாதத்தின் சாரம்சமாக நான் எழுப்பியவை 1. கட்டாயத் தடுப்பூசிக்கு எதிராக போராடுவோருக்கென்று ஒரு கருத்து இருக்கிறது. அது குறித்து உங்கள் கருத்து என்ன? 2. தடுப்பூசி தான் தீர்வு என்றால் உலக அளவில் இரண்டு தடுப்பூசியும் போட்டுக் கொண்டவர்களுக்கே மீண்டும் தொற்று ஏற்படுகிறதே இது ஏன்? 3. கேள்வி எழுப்பினால், போராட்டம் நடத்தினால் மீளாய்வு செய்து விமர்சனக் கண்ணோட்டத்துடன் விளக்கம் கொடுப்பதற்குப் பதிலாக கிண்டல் செய்வது ஏன்? எனும் கேள்விகளைத் தான். இதில் முதல் மூன்றாம் கேள்விகளுக்கு பதிலில்லை. இரண்டாம் கேள்விக்கான பதிலின் சாராம்சம் கீழே,

தடுப்பூசி என்பது சர்வரோக நிவாரணியல்ல. அதேபோல அறிவியல் என்பது ஒரே நாளில் அனைத்தையும் கண்டுபிடித்துவிடுவதல்ல. படிப்படியாக முன்னேறுவதே அறிவியல். .. .. .. முடிந்தளவுக்கு மக்களின் இறப்பையாவது தடுத்துவிடவேண்டும் என்கிற அக்கறையில் உருவாக்கப்பட்டது தான் தற்போதைய தடுப்பூசிகள். .. .. .. தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா வருமா என்றால் வரலாம் தான். ஆனால் தடுப்பூசி போடாதவர்களை விடவும் தடுப்பூசி போட்டவர்கள் மிகமிகக் குறைவாகத் தான் சீரியஸ் நிலையளவில் பாதிக்கப்படுகிறார்கள். மிகமிகக் குறைவாகத் தான் இறக்கிறார்கள். .. .. .. எதையுமே செய்யாமல் அமைதியாக நம் முன்னோர்களைப் போலவே அறிவியலைப் பயன்படுத்தாமல் வாழ்ந்தால் ஸ்பேனிஷ் ஃப்ளூவுக்கும், ப்ளேக் நோய்க்கும், ப்ளேக் டெத்துக்கும் அக்காலகட்டத்தில் வாழ்ந்த உலகின் பாதிக்கும் மேற்பட்ட மக்களை பலிகொடுத்ததைப் போன்று தான் இப்போதும் பலிகொடுக்க வேண்டி இருக்கும். .. .. .. அறிவியலை அனைவருக்குமாகவும், இலவசமாகவும், ஒரே தரத்துடனும் வழங்கவேண்டும் என்று கோருவதே மார்க்சியம். அதைவிட்டுவிட்டு அறிவியலைப் புறந்தள்ளுவோம் என்பதல்ல.

இதில் சில கேள்விகள் எழுகின்றன. தடுப்பூசி குறித்து கேள்வி எழுப்பி விட்டாலே அது அறிவியலை புறந்தள்ளுவது என்று எப்படி இவர்கள் முடிவு செய்கிறார்கள்? தடுப்பூசி என்பது லூயி பாஸ்டர் கண்டு பிடித்த கிருமி தியரியின் மேம்பட்ட வடிவம். இது அறிவியல் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் லூயி பாஸ்டரின் அதே காலகட்டத்தில் வாழ்ந்த இன்னொரு அறிவியலாளரான அந்தனியோ பீச்சாம்ப் லூயி பாஸ்டரின் கிரிமி தியரி தவறு என்று நிரூபித்து லூயி பாஸ்டரையே ஏற்க வைத்தவர். அந்தனியோ பீச்சாம்ப் பின் ஆய்வுகளை இவர்கள் அறிவியல் என்று ஏற்கிறார்களா? இரண்டு முரண்பட்ட முடிவுகள் அறிவியலில் வெளிப்பட்டால் எந்த அடிப்படையில் சரியானதை முடிவு செய்ய வேண்டும் என்று இயங்கியலின் அடிப்பையில் முடிவு செய்து தான் லூயி பாஸ்டரின் கிருமி தியரி ஏற்கப்பட்டதா? தங்களை மார்க்சியர்களாக கருதுவோர் இதற்கு பதில் கூற வேண்டாமா?

தடுப்பூசி போட்டவர்கள் மிகவும் குறைவாகத் தான் இறக்கிறார்கள் என்பது எந்த அடிப்படையும் இல்லாத வெற்று நம்பிக்கை. கொரோனா டெல்டாவைக் கடந்து டெல்மிக்ரான், ஒமிக்ரான், தற்போது இஸ்ரேலில் புளுரோனா என்று அடுத்தடுத்து திரிவுகள் தொற்றிக் கொண்டும் மரணம் ஏற்பட்டுக் கொண்டும் தான் இருக்கிறது. இந்த தொற்றுகள் ஏற்பட்டு மரணமடைந்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களா? போடாதவர்களா? புதிய திரிபு தீநுண்மிகள் தொற்றியவர்கள் மரணமடைந்தவர்களில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எத்தனை பேர்? தடுப்பூசி போடாதவர்கள் எத்தனை பேர்? எனும் கணக்கெடுப்பு எங்காவது நடந்திருக்கிறதா? அப்படியான கணக்கெடுப்பு தரவுகள் எதுவும் இல்லாத நிலையிலேயே தடுப்பூசி போட்டவர்கள் குறைவாக இறக்கிறார்கள் என்று எந்த அடிப்படையில் கூற முடியும். ஆனால் புதிய திரிபு தொற்றிய அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களே என்பது வெளிப்படையாக தெரியும் உண்மை. இந்தியாவைப் பொருத்தவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஒமிக்ரான் தொற்றாளர்கள் அனைவருமே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களே. அப்படி என்றால் அறிவியல் அடிப்படையில் என்ன முடிவுக்கு வர முடியும்? ஏன் இவர்கள் அதற்கு மாற்றான முடிவை வந்தடைகிறார்கள்?

இதற்கு முன்னர் உலகில் நேர்ந்த பல தொற்றுகளில் தடுப்பூசி தான் உலகை காப்பாற்றியதா? கொரோனா முதல் அலை தொடங்கி தாண்டவம் ஆடி அடங்கிய பின்னர் தான் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. பின் படிப்படியாக உலகம் முழுவதிலும் பெரும்பாலானவர்களுக்கு போடப்பட்டது. அதன் பிறகு கொரோனா இரண்டாம் அலை, மூன்றாம் அலை, டெல்மிக்ரான், ஒமிக்ரான், புளுரோனா என்று வரிசையாக தொற்றுகள் தொற்றிக் கொண்டும் உருமாறிக் கொண்டும் இருக்கிறது. இதில் கொரோனா தடுப்பூசியின் பங்கு என்ன? தடுப்பூசி கொரோனா திரிபை பரப்புவதில் பங்களித்ததா? எனும் கேள்வியையே ஒதுக்கி விடலாம். இப்போது அது தேவையில்லை. தடுப்பூசி கொரோனாவையும் அதன் திரிபுகளையும் தடுப்பதில் என்ன பங்காற்றியது? என்றொரு கேள்வி இருக்கிறதல்லவா? அதற்கு இவர்களின் பதில் என்ன? அவர்கள் அறிவிலிகளாக இருப்பதாகவே கொள்வோம். ஒவ்வொரு நாடும் தன்னுடைய நாட்டில் எத்தனை விழுக்காடு தடுப்பூசி செலுத்தியிருக்கிறோம் என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் தடுப்பூசி செலுத்தாமல் இருப்போர் சொற்ப எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். அப்படி என்றால் தற்போது கொரோனா இல்லாமல் போயிருக்க வேண்டுமே.

முதலில் குறிப்பிட்ட தடுப்பூசி குறிப்பிட்ட நோயைத் தடுக்கும் என்று எந்த பன்னாட்டு மருத்துவ நிறுவனமாவது உறுதியளித்திருக்கிறதா? குறிப்பிட்ட தடுப்பூசி எந்தப் பக்க விளைவையும் ஏற்படுத்தாது என்று எந்த பன்னாட்டு மருத்துவ நிறுவனமாவது உறுதியளித்திருக்கிறதா? குறைந்தளவு குறிப்பிட்ட தடுப்பூசி குறுகிய கால பக்க விளைவை மட்டுமே ஏற்படுத்தும் நீண்டகால பக்க விளைவை ஏற்படுத்தாது என்றாவது எந்த பன்னாட்டு மருத்துவ நிறுவனமாவது உறுதியளித்திருக்கிறதா? அல்லது குறிப்பிட்ட தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் பின்னர் குறிப்பிட்ட நோய்த் தொற்று ஏற்படவே இல்லை என்றாவது எந்த பன்னாட்டு மருத்துவ நிறுவனமாவது உறுதியளித்திருக்கிறதா? இப்படி எந்த உறுதியும் கொடுக்காத தடுப்பூசிக்கு ஆதரவாக எப்படி இவர்கள் இவ்வளவு உறுதியான நம்பிக்கையை கொண்டுள்ளார்கள்?

போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்த சாபின், ‘‘சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட பின்னரும், அரசு ஆவணங்களை உற்றுநோக்குகையில் இந்த மருந்தால், பெரும் அளவு பலன் ஏதும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது’’ என்று கூறியிருக்கிறார். அதாவது, ‘போலியோ சொட்டு மருந்தினால்தான் போலியோ என்ற நோய் அற்றுவிட்டது எனும் கூற்றைப் பொய்’ என்று அதனை கண்டுபிடித்தவரே கூறியிருக்கிறார்.

அமெரிக்காவில் ஆட்டிசம் எனும் நோய் பரவியதற்கான காரணம் போலியோ தடுப்பூசி செலுத்தியது தான் என்று அமெரிக்க நீதி மன்றம் ஒப்புக் கொண்டு 2,409 வழக்குகளில் இழப்பீடு வழங்க உத்தரவிட்டிருக்கிறது.

ஜப்பானில் எம்எம்ஆர் தடுப்பூசியை குழந்தைகளுக்குப் போட்ட போது ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளின் விளைவால் ஜப்பான் அரசு அடியோடு எம்எம்ஆர் தடுப்பூசியை  தடை செய்தது.

இந்தியாவில் உபி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் போலியோ தடுப்பூசி போட்டுக் கொண்ட பல குழந்தைகள் மரணமடைந்த போது, இந்தியத் தடுப்பு மருந்து பிரிவின் தலைவரான மருத்துவர் ஜேக்கப் புலியேல், ‘இந்திய சூழலுக்குச் சொட்டு மருந்து சரிப்பட்டு வராது’ என்று தெரிவித்திருந்த உலக சுகாதார நிறுவனம், திடீரென்று இங்கு தீவிர போலியோ முகாமுக்குப் பரிந்துரை செய்தது யாரால் எதனால்’’ என்று கேள்வி எழுப்பினார். உலகம் முழுவதும் இது போன்று பல கேள்விகள் இருக்கின்றன. இது போன்ற கேள்விகள் எதற்காவது அவர்கள் பதில் கூறுவார்களா?

அம்மை நோய் தடுப்பூசி குறித்தும் பெரிதாக அவர்கள் பேசுகிறார்கள். அம்மை நோய் எப்போது தொடங்கியது? எப்போது உச்சத்தில் இருந்தது? எப்போது அடங்கியது? அம்மை நோய்க்கு தடுப்பூசி எப்போது கண்டுபிடிக்கப்பட்டது? அம்மை தடுப்பூசி போடத் தொடங்கிய காலத்தில் அம்மை பாதிப்பு ஏற்படுத்தும் பெரிய நோயாக இருந்ததா? இப்போது உலகில் அம்மை நோயே இல்லையா? இருக்கிறது என்றால் எவ்வளவு பேருக்கு இருக்கிறது? அவர்கள் அம்மைத் தடுப்பூசி போட்டவர்களா? போடாதவர்களா? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பன்னாட்டு தரவுகளிலிருந்து பதில் தர முடியுமா அவர்களால்?

இன்றுவரை தடுப்பூசிகளால்தான் மக்கள் நோய்களில் இருந்து காப்பாற்றப்பட்டனர் என்றோ, இந்த வகை தடுப்பூசிகளினால் நோய்கள் இல்லாமல் போய்விட்டன என்றோ சொல்வதற்கு அதிகாரப்பூர்வமான அறிவியல் ஆராய்ச்சிகள் ஏதுவும் உலகில் நடத்தப்படவே இல்லை என்பதே நடைமுறை உண்மை. மேலும், தடுப்பூசி போடப்படாததால் மக்கள் இறந்தனர் என்ற அதிகாரபூர்வச் செய்திகளும் இல்லை.

தடுப்பூசி போடாவிட்டால் இப்போதை விட அதிக மக்கள் இறந்திருப்பார்கள் என்று அவர்களின் நம்பிக்கை சார்ந்த ஊகத்திலிருந்து ஒரு முடிவை வந்தடைந்து தான் அவர்கள் தடுப்பூசியை ஆதரிக்கிறார்கள். அதைத் தவிர அறிவியல் பூர்வமான வழிமுறையின் மூலம் தான் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தடைந்தோம் என்று கூறுவதற்கு அவர்களிடம் எந்தத் தரவும் இல்லை. இருப்பதெல்லாம் சில மருத்துவர்களின் பேட்டி தான். அது அந்தந்த மருத்துவர்களின் கருத்து என்று தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமே தவிர, அவைகளை பொது உண்மை என எடுத்துக் கொள்ள முடியாது.

எனவே, நண்பர்களே, தோழர்களே, கட்டாயத் தடுப்பூசிக்கு எதிராக பேசுகிறோம் என்பதாலேயே எங்கள் மீது அறிவியலுக்கு எதிரானவர்கள், அறிவிலிகள் என்றெல்லாம் அவதூற்றுச் சகதியை வீசாதீர்கள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்