செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 17

கோள்களும் அதன் விசையும் குரானின் தேற்றங்கள்

 

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 

 

கோள்களும் விசைகளும் பற்றிய குரான் வசனங்களில் நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி எனும் சொல்லில் புவி ஈர்ப்பு விசையை ஏற்றி வைத்திருப்பது குறித்து எழுதியிருந்தேன். இதை எந்த விதத்திலாவது மறுத்திருக்கிறாரா? அல்லது அது புவி ஈர்ப்பு விசையைத்தான் குறிக்கிறது என்று எந்த விதத்திலாவது நிருவி இருக்கிறாரா? இரண்டையும் செய்யவில்லை. வெறுமனே உவமைக்கு மட்டும் உதாரணத்தைக் கூறி ‘மான் கராத்தே’ காட்டி விட்டார். இதற்கிடையில் நிரூபிக்க முடியுமா என்று சவடால் வேறு. பாவம் என்ன செய்வார், அவருக்கு இடப்பட்டிருக்கும் பணி மறுத்து எழுத வேண்டும் என்பது, அதேநேரம் எதை மறுப்பது எப்படி மறுப்பது என்பதை யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை போலும். ஐயன்மீர், முதலில் கட்டுரையை படித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள். எது புனைவாக எழுதப்பட்டிருக்கிறது? எது மறுப்பாக எழுதப்பட்டிருக்கிறது? என்பதை அறிந்து எதை எப்படி மறுப்பது என்பதை ஆய்ந்தறிந்து அதன் பின்பு மறுப்பை கூறுங்கள்.

 

அந்த வசனத்தில் எதை அறிவியல் என்று கூறுகிறார்களோ அது உவமையாக கூறப்பட்டிருக்கிறது. நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி அல்லது தூண்களின்றி வானம் படைக்கப் பட்டிருக்கின்றது. குரானில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த உவமை பொருத்தமானதில்லை. எனவே. அது புவியீர்ப்பை குறிக்காது என்பது என்னுடைய வாதம். எந்த விதத்தில் அந்த உவமை பொருத்தமானதில்லை? புவியீர்ப்பு விசை என்ன தன்மைகளைக் கொண்டிருக்கிறதோ அந்த தன்மைகளை உவமையும் கொண்டிருந்தால் தான் அது பொருத்தமான உவமையாகும். புவியீர்ப்பு விசையின் தன்மை என்ன? புவியின் எல்லாப் பகுதிகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. பொருட்களைத் தன்வசம் ஈர்க்கிறது. இந்த இரண்டு தன்மைகளையும் அந்த உவமை எதிரொலிக்கிறதா? என்றால் இல்லை என்பதே பதில். ஒரு கட்டிடத்தின் தளங்களை தூண் தாங்கிப் பிடித்தால் அது எல்லா இடங்களிலும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஓரிரு இடங்களில் இருந்தால் போதும். ஒரு தூண் ஒருபோதும் பொருட்களை தன் வசம் ஈர்க்காது. எனவே அது பொருத்தமானதில்லை, ஆகவே அது புவியீர்ப்பு விசையை குறிக்காது என்று விளக்கினால், நமக்கு மண்ணாங்கட்டி பாடம் எடுக்கிறார் நண்பர். நானும் அதே மண்ணாங்கட்டியை எடுத்துக் கொள்கிறேன்.

 

இஹ்சாஸ் ஒரு மண்ணாங்கட்டி என்று வைத்துக் கொள்வோம், என்றால் என்ன தன்மையில் அந்த உவமையைக் கூறுவோம்? இஹ்சாஸ் புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவராக இருக்கிறார் அதுபோல மண்ணாங்கட்டியும் புரிந்து கொள்ளாது. எனவே, இஹ்சாஸின் புரிந்து கொள்ளாத தன்மை மண்ணாங்கட்டியிலும் இருப்பதால் மண்ணாங்கட்டியை அவருக்கு உவமையாக கூறுவோம். இது பொருத்தமான உவமை. இஃதன்றி, இஹ்சாஸ் சட்டை அணியாமல் நிற்கிறார், மண்ணாங்கட்டியும் சட்டை அணியாது எனவே அவர் மண்ணாங்கட்டி என்று யாரேனும் உவமை கூறுவார்களா? அப்படிக் கூறினால் அது பொருந்தாத உவமை. ஆனால் குரானின் தூண் விவகாரத்தில் எத்தன்மைக்கு உவமை கூறப்பட்டுள்ளதோ அத்தன்மைக்கே பொருந்தவில்லை என்று தான் நான் கூறியிருக்கிறேன். தந்தை ஒரு குடும்பத்துக்கு தூணாக இருக்கிறார் என்றால் அந்த தன்மைக்கு மட்டும் தானே உதாரணமும் உவமையும். சட்டை போடவில்லை, கைலி உடுத்தவில்லை என்று பொருத்தமற்று கூறிக் கொண்டிருப்பது யார்? பதில் கூற வக்கற்றிருந்தால் அதற்காக திசை திருப்பக் கூடாது.

 

இன்னொரு கோணத்திலும் அந்த வசனத்தைப் பார்க்கலாம். ஈர்ப்பு விசை என்பது கோளோடு தொடர்புடையது. புவியீர்ப்பு விசை என்றால் அது புவியோடு தொடர்புடையது. இதில் வானம் எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்பதற்குத்தான் பார்க்கின்ற தூண்களின்றி என்ற பதில் வருகிறது. அதாவது இந்த உவமையின் உண்மை வானம் பார்க்கின்ற தூண்களால் அல்லாது பார்க்க முடியாத தூண்களால் உயர்த்தப்பட்டிருக்கிறது என்பதே. தெளிவாகச் சொன்னால் அவ்வாறான தூண்கள் இல்லாது போனால் வானம் விழுந்துவிடும் என்பது தான் அதில் உட்பொதிந்திருப்பது. இதில் புவியீர்ப்பு எங்கிருந்து வந்தது? இதில் அறிவியல் இருக்கிறதா? குறைந்தபட்சம் அவியலாவது இருக்கிறதா? இதைத்தான் புனைவாக குறிப்பிட்டிருந்தேன். இதை நிரூபிக்க முடியுமா? என்று சவடால் விட்ட இஹ்சாஸ், நேர்மையானவராக இருந்திருந்தால் அதில் என்ன அறிவியல் இருக்கிறது என்பதையல்லவா வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.

 

இவைகள் ஒருபுறமிருக்கட்டும். ஒரு மொழிபெயர்ப்பில் ‘பார்க்கின்ற தூண்களின்றி’ படைக்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. பிரிதொன்றிலோ ‘வானம் தூண்களின்றி படைக்கப்பட்டிருக்கிறது அதை நீங்கள் பார்க்கிறீர்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. இது மட்டுமா? குரானுக்கு உரையெழுதிய பெரும்பாலான ஆசிரியர்கள் தூண்களின்றி படைக்கப் பட்டிருப்பதாகவே மொழி பெயர்த்திருக்கிறார்கள். என்றால் அதை பார்க்கின்ற தூண்களின்றி என உருமாற்றி புவியீர்ப்பு விசையோடு திருமணம் செய்வித்தது யார்? எதற்காக? வேறொன்றுமில்லை இக்கால அறிவியல் உண்மைகளையெல்லாம் முகம்மது ஆறாம் நூற்றாண்டிலேயே சொல்லிவிட்டாராக்கும் என்று அப்பாவி மக்களை ஏய்த்து மதவாத ஜல்லியடிப்பதற்குத் தானேயன்றி வேறெதற்காகவும் இல்லை.

 

அதுசரி, நண்பர் கூறுவதை பொருட்டாக எடுத்துக் கொள்ளலாம், நான் தெளிவாக இப்படி எழுதியிருக்கிறேன், \\\தாங்கிப்பிடிக்கிறது, விலகிவிடாமல் இருக்க உதவுகிறது என்பதற்கு தூண் எனும் குறியீடு ஓரளவு பொருந்துவதாகவே கொள்வோம். ஆனால் ஈர்ப்புவிசை என்றால் தன்வசம் பொருட்களை ஈர்க்க வேண்டுமே, மேலே எறிந்த பொருள் செலுத்து வேகம் தீர்ந்ததும் திரும்ப வரவேண்டுமே, இதை எப்படி தூண்களோடு ஒப்பிடுவது?/// என்றொரு கேள்வியையும் கேட்டிருக்கிறேன். பூதக்கண்ணாடி வைத்து தேடிப் பார்த்தும் இதற்கான பதில் இல்லையே ஏன்? இது தான் மதவாதம் என்பது, எதையும் பரிசீலித்துப் பார்ப்பதில்லை. சாதகமான இடங்களில் சவடால் அடிப்பது, பாதகமான இடங்களில் கள்ள மௌனம் சாதிப்பது. இதைத்தானே தொடக்கத்திலிருந்து பார்த்து வருகிறோம்.

 

அடுத்து குறிப்பிட்ட காலம் வரை சென்று கொண்டிருக்கும் என்று குரான் வசனம் கூறுவதன் பொருள் என்ன? இதில் குறிப்பிட்ட காலம் வரை என்பது கோள்களின் இயக்கம்; அதாவது பூமியோ சந்திரனோ மட்டுமல்லாது சூரியனும் விரைந்து கொண்டிருக்கிறது. எல்லாக் கோள்களும் விண்மீன்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன, விரைந்து கொண்டிருக்கின்றன எனும் அறிவியல் உண்மையை அந்த வசனம் கூறுவதாக கதையடிக்கிறார்கள். இதை மறுத்து குரான் வசனங்களில் அறிவியல் இருப்பதாக ஜம்பமடிப்பதற்கு மதவாதிகள் என்ன உத்தியை பயன்படுத்துகிறார்கள் என்பதை விளக்கும் விதமாக சில குறிப்புகளைக் கூறியிருந்தேன். பூமி தட்டை என்று உலகம் நம்பிக் கொண்டிருந்த காலத்தில் குரான் உருண்டை என்றது என்பார்கள். ஆனால், உண்மையில் குரான் தயாரிக்கப் பட்டுக் கொண்டிருந்த போது பூமி உருண்டை எனும் புரிதல் மக்களுக்கு இருந்தது என்பது மட்டுமல்லாமல் குரான் பூமியின் வடிவம் உருண்டை என்று கூறவும் இல்லை. அது போலவே கோள்கள் விண்மீன்களின் இயக்கம் குறித்து இந்த வசனம் கூறவும் இல்லை; அதேநேரம் குரானுக்கு வெகு காலத்துக்கு முன்பே கோள்களின் இயக்கம் குறித்த அறிவு மனிதனுக்கு இருக்கவும் செய்தது. இதைக் குறிப்பிட்டு விட்டுத் தான் \\\எல்லாம் அல்லாவால் படைக்கப்பட்டவை என்பதுதான் அல்லா குறித்த வல்லமை, அதிகாரம், இஸ்லாத்தின் அடிப்படை. நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை/// என்று முத்தாய்ப்பாகவும் கூறியிருந்தேன். இவை எதையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாத நண்பர் மறுப்பு கூற வேண்டுமே என்பதற்காக ஏதேதோ உளறி வைத்திருக்கிறார். ஒருவேளை இவைகளையெல்லாம் படித்து நண்பருக்கு ரோசம் வந்து, மெய்யாகவெ அந்த வசனத்தில் அறிவியல் இருக்கிறது என்பதை நிரூபித்தால் அதன் பின்னர் நான் விளாக்கங்களுடன் வருகிறேன்.

 

அடுத்து நான் மப்பில் உளறுவதாக நண்பர் எழுதியிருந்தார். எழுதுவதற்கு ஒன்றுமில்லாத போது, பதில் கூற முடியாத போது அவதூறு பொழிவது மதவாதிகளின் வழக்கம். அதை தவறாமல் பின்பற்றியிருக்கிறார் இஹ்சாஸ். ஆனால் மெய்யாகவே மப்படித்தது போல் இஹ்சாஸ் உளறிக் கொட்டியிருக்கிறார், அவைகளைப் பார்க்கலாமா? 1. \\\இவர்களுக்கும் அரேபியாவில் வாழ்ந்த முகம்மது நபிக்கும் என்ன தொடர்பு/// அப்படி ஏதேனும் தொடர்பு இருப்பதாக நான் எங்கேனும் கூறியிருக்கிறேனா? அறிவியலுக்கும் முகம்மதுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவர் கூறியதில்  அறிவியலும் இல்லை. இதைத்தான் நான் தொடக்கத்திலிருந்து கூறிக் கொண்டிருக்கிறேன். 2. \\\இவர்கள் ஏற்கனவே கூறியிருந்தால் ஏன் கொப்பர்னிகஸ் போன்றோர் கூறும்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்?/// கோப்பர்நிகஸ் சூரியக் குடும்பத்தின் மையத்தை பூமியிலிருந்து சூரியனுக்கு நகர்த்தியதால் விமர்சிக்கப்பட்டார்.

 

அடுத்து, குறிப்பிட்ட காலக் கெடுவரை சென்று கொண்டிருக்கும் என்பதை எடுத்துக் கொள்ளலாம். இதன் பொருள் என்பதாக மதவாதிகள் கூறுவதென்ன? இப்பேரண்டத்தின் அனைத்து பருப் பொருட்களும் விரைந்து கொண்டிருக்கின்றன என்பது அண்மை கண்டுபிடிப்பு. இதைத்தான் இந்த வசனம் கூறுகிறது என்கிறார்கள். ஆனால் இந்த வசனம் கூறுவதென்ன? குறிப்பிட்ட காலக் கெடுவரை சென்று கொண்டிருக்கும் அதன் பிறகு செல்லாது என்றால் அது குறிப்பிடுவது அறிவியலை அல்ல மதக் கற்பனையை. இதைத்தான் நான் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன், \\\நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை/// இது எப்படி அறிவியல் கண்டுபிடிப்போடு தொடர்பு படுத்தப்படுகிறது என்றால் எந்த விளக்கமும் கிடைக்காது, ஆனாலும் மதவாதிகளுக்கு அது அறிவியல் அவ்வளவு தான்.

 

அடுத்து சூரியன் அதற்குறிய இடத்தை நோக்கிச் செல்கிறது என்பதை எடுத்துக் கொள்ளலாம். இதற்கு மதவாதிகள் புனையும் அறிவியலை புஹாரி 3199 வெடி வைத்து தகர்க்கிறது. அதனால் தான் நண்பர் மெதுவாக அது ஏற்கமுடியாத ஹதீஸ் என்று நூல்விட்டுப் பார்க்கிறார். அது ஏற்க முடியாதது என்பதற்கு அவர் கூறும் காரணம், அது குரான் கூறும் ஒரு தகவலோடு முரண்படுவது என்கிறார். அதாவது அர்ஷ் பூமி, சூரியனுக்கு மேலே இருப்பதாக குரான் குறிப்பிடுகிறதாம், இந்த ஹதீஸில் கீழே இருப்பதாக பொருள் வருகிறதாம். இது முரண்பாடு என்பதால் செல்லாது என்று தீர்ப்புக் கூறுகிறார். எந்த அடிப்படையில் அர்ஷ் கீழே இருப்பதாக பொருள் வருகிறது? விளக்க முடியுமா நண்பரால்?

59 thoughts on “செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 17

 1. nattula ethanayo theerka vendiya pirachinaigla ullathu,athai viitutu islam meethu avathuru solluvathi velaya vachurukiya, islam meethu kalangam kura unaku enna arugathia ullathu???

  anaivarayum samamaka mathipuduvathu islamin atipadai.

  ungal koilkalil mukiamanavargal varuvathargaga samil wait pannum , athu pola islamil oru manithargaga tholugai ethirparthu nindrathai kelvipadathunda nee!!!

  indiavil pirivinai undu panuvathai seithu varum nee unmayil oru keeltharamanavan. nalla ennam ulla manithan endral nee ithu pol vetkakedaga eluthathey!!!!!

  islam patri thaveraga elutha unnai ookuvipathu yaar?? panam kodupathu yaar??

  ivalavu pesum nee en kelvikaluku pathil sol

  1. murugani north indians sivanin kulanthayaga etru kolvathu illai??

  2. iyyapan eppadi piranthan enna theriuma??

  3. krishani poluthu poku enna??

  4. than manaivi meethu santhegam konda raman kadavula???

  5. kadavuluku kammam undu, sandai undu???

  please visit http://thathachariyar.blogspot.in/

  read it and you will die soon because you following the worst things of HINDU

 2. ஹலோ செங்கொடி,

  கொஞ்ச காலமா எல்லை மீறித்தான் போகுது உங்கள் எழுத்து. குறையை மட்டுமே லென்ஸ் வைத்து தேடினால் உங்கள் பைத்தியம் தெளியாமல் போய்விடும். உங்கள் பைத்தியம் தெளிய கடைசியாய் ஒரு சான்ஸ் தர எண்ணுகிறேன். நேரடி விவாதத்துக்கு கூப்பிட்டால் நீங்களும் உங்கள் குரூப்பும் பின்னங்கால் பிதடியில் இடிபட ஓடுவீர்கள் என்பது தெரியும். உங்கள் வழிக்கே வருகிறேன். கண்ணியம் மிக்க இஸ்லாமா செத்து செல்லரித்துப் போன கம்மூனிசமா என்ற தலைப்பில் எழுத்து விவாதத்துக்கு நான் தயார். நீங்கள் தயாரா?

 3. மூமின் ஷாந்து,

  ஒரு முன்னாள் மூமின் இஸ்லாமை விமர்சிக்கிறார். குரானில் உள்ள பிதற்றல்களை புட்டு புட்டு வைக்கிறார். அதுக்கு பதில் சொல்லாமல் இந்தும்தம் பற்றி ஏன் பேசுகிறீர்கள்?

  அதுவும் பெரிய டுபாக்கூரு கேள்விகள் இதே மாதிரி கேள்வி இஸ்லாமையும் கேட்போம்!!!

  1.murugani north indians sivanin kulanthayaga etru kolvathu illai??
  முருகனை வட இந்தியர் கும்பிடுவதில்லை, இது எப்படின்னா சுன்னி மூமின்கள் அலியை முகமதின் வாரிசாக ஏற்பதில்லை, அஹம்தயாக்கல்,பஹாய் மூமின்கள் முகமதுவை இறுதி துதராக ஏற்பது இல்லை. அது போல்தான்
  சுன்னிகள் சியாக்களை கொல்ல,அவன் திருப்பி அடிக்க என்று இஸ்லாம் காட்டுமிராண்டித் தனமாக இருக்கிறது. தமிழரும் ,வட இந்தியரும் முருகன் விஷயத்தில் சண்டை போடுவது இல்லை. வட இந்தியன் தமிழ் நாடு வந்தால் முருகனை கும்பிடிவான்.

  2. iyyapan eppadi piranthan enna theriuma??
  சைவமும் வைணவமும் இணைந்து தோன்றியது ஐயப்ப வழிபாடு.
  லிபியாவில் அமெரிக்க தூதர் [கிழவன்யா]ஆணைக் கற்பழித்து கொலை செய்த மூமின்கள் கதையை பத்தி பேச வந்திட்டான்

  3. krishani poluthu poku enna??

  புல்லாங்குழல் வாசித்தல்,மூமின்களின் பொழுது போக்கு காஃபிர்களை கொல்லுதல்.

  4. than manaivi meethu santhegam konda raman kadavula???

  முகமது ஆயிஷா மீது சந்தேகம் கொள்ளவில்லையா?. சந்தேகம் வந்தால் 4 ஆண் சாட்சி வேணுமின்னு குரானில் சொன்னவன் கடவுளா??

  5. kadavuluku kammam undu, sandai undu???

  காமமும் கடவுளே. முகம்துவின் காம்த்துக்கு விள்க்கம் சொல்வது போல் யாரும் செய்வது இல்லை. 6 வயது பெண்ணில் இருந்து 60 வயது கிழவியைக் கூட விடாத இறைத் தூதரு.. இந்த ஆளை திட்டினால் மூமின்களுக்கு கோபம் வேற!!!

  ஹா ஹா ஹா

 4. //அதாவது அர்ஷ் பூமி, சூரியனுக்கு மேலே இருப்பதாக குரான் குறிப்பிடுகிறதாம், இந்த ஹதீஸில் கீழே இருப்பதாக பொருள் வருகிறதாம். இது முரண்பாடு என்பதால் செல்லாது என்று தீர்ப்புக் கூறுகிறார். எந்த அடிப்படையில் அர்ஷ் கீழே இருப்பதாக பொருள் வருகிறது? விளக்க முடியுமா நண்பரால்?//

  அல்லாவின் அர்ஷ்(?)பூமி,சூரியனுக்கு மேலும் இல்லை கீழும் இல்லை புத்த‌க‌த்தில் தான் இருக்கிற‌து! ஒன்றுமில்லாத‌ க‌ற்ப‌னைக‌ள் எல்லாம் இருக்கிற‌தாக‌ எழுதி வைத்துக் கொண்டால் அதற்கு பெயர் ஆதாரமாகாது. அவ‌ர்க‌ளைப் பொருத்த‌வ‌ரையில் அதுதான் ஆதார‌ம் என‌ மூட‌த்த‌ன‌மாக‌ ந‌ம்ப‌த்தான் முடியுமே த‌விர‌ நிரூபிக்க‌ முடியாது. இதுதான் ம‌த‌ அறிவிய‌லின் புரிந்துண‌ர்த‌ல் ந‌ம்பு தோழா…ந‌ம்பு!!!!!!!!!!!

  இனிய‌வ‌ன்….

 5. சகோதரர் முபாரக்
  தங்கள் ஊரில் நடந்த சம்பவங்களை என்னை போன்ற முன்னால் இஸ்லாமியர்கள் நன்கு அறிவோம்,உங்கள் ஊரில் உள்ள tntj சமூகத்தாரிடம் முதலில் இஸ்லாம் சம்பந்தமான விமர்சனங்களுக்கு பகுத்தறிவு அடிப்படையில் என்ன பதில் வைத்துள்ளீர்கள்?,முதலில் நீங்கள் சொல்வது சரியா என்பதை மறுஆய்வு செய்யுங்கள் பிறகு நேரடி விவாதம் என்ற தலைப்புக்கு வரலாம் ஏனென்றால் நானும் உங்களைபோல கொதித்து எழுந்தவன்தான் ஆனால் இஸ்லாத்தின் மறுபக்கத்தை புரட்டிப்பாருங்கள் உண்மை நிலை என்னவென்று தெரியவரும்!
  எவராவது நன்மையை போதிக்கும் மார்க்கத்தை குறை கூறுவார்களா?
  அதற்காக ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை நிராகரிக்க வேண்டாம் முதலில் தவறை தவறென்று ஏற்றுகொள்கின்ற மனப்பாங்கை வளர்த்துகொள்ளுங்கள் பிறகு செங்கொடி போன்றவர்களிடம் பொதுவுடமையை பற்றி பேசலாம்!
  உங்களுக்கு அது தேவையில்லை!
  நம்முடைய மார்க்கத்தில் இவர் கூறுவது இருக்கின்றதா? இல்லையா? அதற்கு ஏன் இன்னொருவர் விளக்கம்?
  ஏன் உங்களுக்கு சிந்தனைதிறன் இல்லையா/அல்லது புரியவில்லையா?
  அடிமை என்றொரு தலைப்பு இட்டார் அது சரியாய் தவறா என்று பாருங்கள் அதை விடுத்து மற்றதை குழப்பி கொள்ளவேண்டாம்!
  விவாதம் வாரியா பாப்போம் என்று சொல்வது உங்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று எனக்கு தெரியும் நானும் அதில் இருந்தவன்தான்!
  நீங்கள் நினைக்கலாம் குறைவான நபர்கள் இருக்கிறார்கள் என்று,உண்மை அதுவல்ல என்னை போன்ற கோடிக்கணக்கான நபர்கள் இஸ்லாம் அந்நிய மார்க்கம் என்றும் அதனை இங்கு உள்ளவர்கள் தமக்கு தகுந்தாற்போல் மாற்றிகொண்டுள்ளார்கள் என்பதை அறிவர், நான் கூறுவது என்னை போன்ற முன்னால் இஸ்லாமியர்களை! நீங்கள் காபிர்கள் என்று எண்ணிவிடவேண்டாம்! என்றாவது ஒரு நாள் உண்மை உலகுக்கு தெரிய வரும் அன்று முஹம்மது நபியை பற்றி படம் அடுத்தது தவறு என்று கூடும் இதே கூட்டம் எரிபொருள் விலை ஏற்றியதற்கு ஒன்று கூடும்!
  அன்றைக்கு இந்த அரசியலில் புதிய புரட்சியுண்டாகும்!!
  அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் சகோதரன்!

  /

 6. முதலில் நியுட்டனின் ஈர்ப்புவிசை இப்போது கோப்பர்நிகஸின் கோள்களின் இயக்கம். குரானில் இருப்பதெல்லாம் அறிவியல் கூறுகள் தான் என்று நிரூபிக்கவேண்டுமென்றால், குரான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம் அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த காலமாக இருக்கவேண்டும். மதவாதிகள் அந்த அடிப்படையில்தான் எல்லாவற்றையும் தொடங்குவார்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவை குறிப்பதற்கு அறியாமைக்காலம் எனும் சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதன்படி அந்தக்கால மக்கள் பூமி தட்டை என நினைத்துக்கொண்டிருந்தார்கள் என்று கூறுவார்கள், ஏனென்றால் குரான் உருண்டை எனக்கூறுவதாக விளக்கினால்தான் அறிவியல் என்று கூறமுடியும். அந்த வழியில்தான் விண்ணின் கோள்கள் எல்லாம் அப்படியே நிலையாக நின்றுகொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருந்த காலத்தில் இப்படி ஒரு வசனத்தை இறக்கியவன் எல்லாம் அறிந்த இறைவனாகத்தானே இருக்கமுடியும்? என்று வியக்கிறார்கள். ஆனால் விண்ணின் கோள்கள் எல்லாம் சுழன்று சுற்றிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு கோள்களின் இடைப்பட்ட தூரங்கள் என்ன என்பதை எல்லாம் அரிஸ்டார்க்கஸ் (கிமு320-250) ஹிப்பார்க்கஸ் (கிமு 190-120) காலத்திலேயே உலகம் அறிந்திருந்தது. ஆனால் இவர்களோ குரான் தான் எல்லாவற்றையும் அறியாமைக்காலத்திலேயே சொல்லிவிட்டதாக கதையளந்து கொண்டிருக்கிறார்கள். மெய்யாகவே இதுபோன்ற வசனங்கள் அறிவியலை கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் உண்மை. எல்லாம் அல்லாவால் படைக்கப்பட்டவை என்பதுதான் அல்லா குறித்த வல்லமை, அதிகாரம், இஸ்லாத்தின் அடிப்படை. நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை.

 7. நல்லூர் முபாரக்,

  உங்களைப் போன்றோர் இஸ்லாமும் தெரியாமல் கம்யூனிசமும் தெரியாமல் சலம்பிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் போன்றோரின் பொழுதுபோக்கிற்காக என்னுடைய நேரத்தை செலவிட நான் ஆயத்தமாக இல்லை. அல்லது மெய்யாகவே நீங்கள் ஒரு பெரிய அப்பாடக்கர் என்றால் கம்யூனிசமும் இஸ்லாமும் ஒரு கொள்கை எனும் அடிப்படையில் எந்தப் புள்ளியிலிருந்து வேறுபடுகிறது என்பதற்கான பதிலை எழுதுங்கள். அந்தப் பதிலிலிருந்து உங்களை அங்கீகரிக்க வேண்டுமா என்பதை நான் தீர்மானிக்கிறேன்.

 8. ஹலோ செங்கொடி உங்க சவடால்களை நீங்களே சாக்கில் கட்டி வைத்துக் கொள்ளுங்கள். எனக்குத் தேவை உங்கள் ஆன்சர். முடியுமா? முடியாதா? தி இஸ் மை சிம்பிள் கொஸ்ஷன். நேரடி விவாதம்ண்ணா தலை தெறிக்க ஓடும் குரூப் நீங்கள் அது எல்லோருக்கும் தெரியும். எழுத்து விவாதம் என்று வெண்ணை வெட்டி பயில்வானாக இருந்தீர்கள். இப்போ இதுலயும் சீப் ட்ரிக்ஸ். நேரடியா கூப்பிட்டோம் டுமிக்கி கொடுக்கிறீர்கள். எழுத்துவிவாதத்துக்கும் இப்போ எஸ்கேப். அறிவாளித்தனமா எழுதுவது தான் மிச்சம். தைரியமிருந்தால் எழுத்து விவாதத்துக்கு வாருங்கள், முடியாவிட்டால் வெளிப்படையாக சொல்லிவிட்டு எஸ்ஸாகிடுங்க. சும்ம சீன் போடுற வேலையெல்லாம் வேண்டாம்.

 9. எனக்கு ஒரே சந்தேகம்தான்…ப்ளீஸ் ஆன்சர் திச…
  ஒரு ஆண் சொர்க்கம் செல்லும்போது 72 அவுரி(அழகான யாரும் அது வரை தொடாத பெண்கள்)ரெடியாக இருப்பார்கள் என்கிறது இஸ்லாம்…
  சரி ஒரு பெண் சொர்க்கம் சென்றால் 72 ஆண்கள் வேயிட்டிங்கா?

 10. //நேரடி விவாதம்ண்ணா தலை தெறிக்க ஓடும் குரூப் நீங்கள் அது எல்லோருக்கும் தெரியும். // பி.ஜே – சான் விவாதத்தைப் ( http://goo.gl/gVk5W ) பார்த்தபிறகு ஓரளவுக்கு நாகரீகம் உள்ளவர்கள்கூட பி.ஜெ கும்பலிடம் விவாதத்திற்கு செல்லமாட்டார்கள். இவர்களிடம் விவாதம் செய்வதும் சரி, ரோட்டில் திரியும் பொறுக்கிகளிடம் விவாதம் செய்வது சரி, இரண்டும் ஒன்று தான்.

 11. மூமின் நல்லூர் முபாரக்
  ஏன் மூமின்கள் முகமது சிறந்தவரா என விவாதம் செய்வது இல்லை?

  ஆகவே முகம்து சிறந்தவரா? நித்யானந்தா சிறந்தவரா என்பதே சரியான விவாதம் ஆக இருக்கும். எனினும் விவாதத்திற்கு முன்பு இக்கட்டுரையை படித்து விட்டு தைரியம் இருந்தால் வரவும்!!

  நித்யானந்தாவும் மொஹம்மத் இப்னு அப்தல்லாவும் – ஒரு ஒப்பீடு

  http://goo.gl/zSDmf

  முஹம்மதின் வழிப்பறி கொள்ளைகள் (ஆர்ய ஆனந்த் vs எஸ் இப்ராஹிம்)
  http://goo.gl/7klVK

  Ready?????????????

 12. என் ஃபிரண்ட்ஸ் சொன்னாங்க செங்கொடி ஒரு காமெடி பீஸு. விவாதத்துல பதில் சொல்ல முடியாத நிலமை வந்தால் அள்ளக்கைகள களத்துல இறக்கி விட்டு கண்டதையும் பேசி திட்டி விவாதத்த திசை திருப்புவார் என்று. அது உண்மை தான் போலிருக்கிறது. இன்னும் விவாதமே ஆரம்பிக்கல. செங்கொடி சைலண்ட், அள்ளக்கைகள் வயலண்ட். வொய்….?

 13. சகோதரர் நீங்கள் எது கூறினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பது உங்களுடைய பதிலில் பட்டவர்த்தமாக தெரிகிறது! நீங்கள் மட்டுமல்ல உங்களைபோன்ற நிறைய நிறைய பேர் இப்படித்தான் இருக்கிறார்கள் நான் கண்டவரை!
  இதனை வேதனையுடனே பதிவு செய்கிறேன். நான் தெரியாமல் தான் கேட்கிறேன் உங்களுக்கெல்லாம் பகுத்தறிவு என்று ஒன்று இருக்கிறதா? சந்தேகமாக உள்ளது முபாரக் ,தயவுசெய்து வருத்தபடவேண்டம்,தவறாக என்ன வேண்டாம் ஒரு தவறை இப்படீல்லாம் நியாயப்படுத்த உங்களுக்கு உறுதுணையாக இருப்பது என்ன?
  முதலில் தவறு என்ன என்பது தெரிந்தால்தானே உங்களுக்கு மற்றது புரியும், நீங்கள்தான் கருவறை ரகசியம்,இதயம் சுருங்கி விரிதல்,முதுகந்தண்டு விந்து,பிரித்த பால், இப்படி அறிவியலை கூறிய முகமதுவை கண்டு இன்னும் பயந்து ஓடிக்கொண்டு இருக்கிறீர்கள்!
  பின் எப்படி உங்களுக்கு மனிதாபினம் பற்றிய சிந்தனை இருக்கும்?
  நீங்கள் விசாலமான அறிவு பெற்றவராக இருந்தால் உங்களுடைய pj வின் மொழிபெயர்ப்பு குர்ஆனில் உள்ள அடிமைபென்களுடன் திருமண பந்தம் இல்லாமல் உடலுறவு கொள்வது சகஜம் என்று லாவணி பாடியது சரி என்று ஏற்றுகொள்பவரா நீங்கள்?
  முதலில் அஹற்கு பதில் தெளிவாக கூறுங்கள்

 14. செங்கொடியை நான் பார்த்ததே கிடையாது! நீங்கள் சொல்வது போல் யாரும் அல்லக்கை அல்ல!
  நீங்கள்தான் நபிக்கும்,காணாத கடவுளுக்கும் அல்லாகை!
  நாங்கள் நபியின்றி நல்வழியில் நடப்பவர்கள்,நீங்கள் உங்களுக்கு ஒரு எஜமானர் இருந்தால்தான் நாங்கள் நல்லவர்களை இருப்போம் என்பதில் உறுதியாய் உள்ளீர்கள் !
  நீங்கள் கூறுவதுபோல் சத்தியத்திற்கு சாட்சியை நாங்கள்தான் உள்ளோம் நீங்கள் அல்ல!

 15. பி.ஜெ ஒரு பொய்யன் என்று கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது சக முஸ்லிம்களும் நிரூபித்திருக்கிறார்கள். அவருடைய ரசிகப் பெருமக்கள்தான் இன்னும் அவரை நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

 16. சகோதரர் ராபின்
  பொய் கூறுவதில் முதலிடத்தில் இருப்பவர்கள் கிருத்தவர்கள் !
  அடுத்த இடம்தான் இஸ்லாமியர்களுக்கு !

 17. நல்லூர் முபாரக்,

  நான் இஸ்லாம் குறித்து எழுதுகிறேன் என்றால் அது குறித்து அறிந்திருக்கிறேன். அதற்கு இதுவரை நான் எழுதியிருக்கும் தொடர் கட்டுரைகள் சாட்சி. நீங்கள் கம்யூனிசம் குறித்து பேசப்போகிறீர்கள் என்றால் அது குறித்து உங்களுக்கு என்ன தெரியும். மெய்யாகவே என்னுடன் விவாதம் செய்ய வேண்டும் என விரும்பினால் அலட்டல்களை விட்டுவிட்டு கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறுங்கள் பின்னர் பார்க்கலாம்.

 18. //சகோதரர் ராபின்
  பொய் கூறுவதில் முதலிடத்தில் இருப்பவர்கள் கிருத்தவர்கள் !
  அடுத்த இடம்தான் இஸ்லாமியர்களுக்கு !//
  அப்படியா! பி.ஜெ வைப் பற்றி சொன்னால் உடனே ஒட்டு மொத்தமாக ஏதோ சர்வே எடுத்ததுபோல பேசுகிறீரே.
  நான் கொடுத்த வீடியோவைப் பார்த்தவர்கள் சொல்லட்டும் யார் பொய் சொல்கிறார்கள் என்று.

 19. சகோதரர் ராபின்
  கிருத்துவத்தை நம்புகிறவரா நீங்கள்?
  //அப்படியா! பி.ஜெ வைப் பற்றி சொன்னால்//
  நாங்கள் இஸ்லாமியர்களையும்,கிருத்துவர்களையும் ஒரே நிலையில் வைத்து பார்க்கிறோம்
  கிருத்துவர்கள் தத்தனேரி சுடுகாடு என்றால்,முஸ்லிம்கள் ஓயாமேரி சுடுகாதான்!
  இதில் pj வும் ஒன்றுதான் நீங்கள் கூறுபவரும் ஒன்றுதான்!
  இதில் என்ன ஒட்டுமொத்த சர்வே?
  எந்த மண்ணாங்கட்டி சர்வேயும் எங்களுக்கு தேவையில்லை!
  pj முரட்டு கிறுக்கன் என்றால், ஜான் பிடிவாதம் பிடிக்கிற முரட்டு கிறுக்கன்!

 20. சகோதரர் ராபின் !
  நீங்கள் அளித்த இணைப்பை பார்த்து யார் பொய் சொல்கிறார்கள் என்பதை தெரிந்து அதன் மூலம் இந்த உலகத்துக்கு என்ன பயன் இருப்பதாக தங்கள் நினைப்பு?
  என்னை பொறுத்தவரை இருவருமே சமூக குற்றவாளிகள்தான்!!
  தண்டனைக்குரிய குற்றம் தெரிந்துதான் செய்கிறார்களா இல்லை அறியாமல் செய்கிறார்களா என்பதுதான் புரியவில்லை !

 21. //நாங்கள் இஸ்லாமியர்களையும்,கிருத்துவர்களையும் ஒரே நிலையில் வைத்து பார்க்கிறோம்// நீங்கள் என்னத்தை நம்பினால் எனகென்ன, என்னுடைய கருத்தை நான் சொல்லியிருக்கிறேன் அவ்வளவுதான்.
  //கிருத்துவர்கள் தத்தனேரி சுடுகாடு என்றால்,முஸ்லிம்கள் ஓயாமேரி சுடுகாதான்!// தோழர்கள் உட்பட எல்லாரும் ஒருநாள் சுடுகாடு போக வேண்டியதுதான்.

  //இதில் pj வும் ஒன்றுதான் நீங்கள் கூறுபவரும் ஒன்றுதான்!// நல்லது.

  //எந்த மண்ணாங்கட்டி சர்வேயும் எங்களுக்கு தேவையில்லை!// ரொம்ப விரகிதியில் இருக்காரு போல இருக்கு.

  //pj முரட்டு கிறுக்கன் என்றால், ஜான் பிடிவாதம் பிடிக்கிற முரட்டு கிறுக்கன்!pj முரட்டு கிறுக்கன் என்றால், ஜான் பிடிவாதம் பிடிக்கிற முரட்டு கிறுக்கன்!// நீங்க எப்படி?

  //நீங்கள் அளித்த இணைப்பை பார்த்து யார் பொய் சொல்கிறார்கள் என்பதை தெரிந்து அதன் மூலம் இந்த உலகத்துக்கு என்ன பயன் இருப்பதாக தங்கள் நினைப்பு?// தென் தமிழகத்தின் கடந்த நூறு ஆண்டுகால வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தெரியும், என்ன நன்மை என்று.

  //என்னை பொறுத்தவரை இருவருமே சமூக குற்றவாளிகள்தான்!!// உங்களுக்கு நல்ல காமெடி சென்ஸ் இருக்கு.

  //தண்டனைக்குரிய குற்றம் தெரிந்துதான் செய்கிறார்களா இல்லை அறியாமல் செய்கிறார்களா என்பதுதான் புரியவில்லை !// இன்னும் கம்யுனிச ஆட்சி வரவில்லையே, அதற்குள் என்ன அவசரம்?

 22. நிலா ,
  அதற்கு முந்தைய விவாத சுட்டியையும் கொடுத்துள்ளேன் .அதையும் பாருங்கள் உண்மை புரியும் .பதில் தராமல் ஆர்யா ஆனந்த் ஓடியதை அறிவீர்கள்..
  http://pagadu.blog.com/2012/04/10/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-vs-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE/
  மேலும் கீழ்க்கண்ட சுட்டியில் ஆர்யாஆனந்த் அந்தவிவாதத்தை தொகுத்துள்ளார் .அதில் எனது வாதங்கள இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது அதிலிருந்தே உண்மைகளை உணர முடியும் .
  நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் பின்னூட்டம் இடுவதில் அத்தளத்தில் ஏற்பட்ட சிக்கலை அதிலுள்ளவர்கள் அறிவர் .அதனால் தடைபட்டது.
  http://newindian.activeboard.com/forum.spark?aBID=134804&p=3&topicID=48724317

 23. Robin///// இவர்களிடம் விவாதம் செய்வதும் சரி, ரோட்டில் திரியும் பொறுக்கிகளிடம் விவாதம் செய்வது சரி, இரண்டும் ஒன்று தான்.////
  ராபின் ,ஆன்லைன் பீஜெவில் விவாதம் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது .நீங்கள் உங்களுக்கு சாதகமானதை பொறுக்கி யு டியுபில் வெளியிட்டது போல அவர்கள் வெளியிடவில்லை .ஆதலின் அசல் பொறுக்கிகள் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம் http://onlinepj.com/bayan-video/vivathangal/quran-is-gods-word-debate-video/
  அப்புறம் பைபிளிலிருந்து இவ்வளவு பொருக்கியிருப்பார்கள் என்பது விவாத முடிவில்தான் தெரிந்ததா?

 24. செங்கொடி /// நான் இஸ்லாம் குறித்து எழுதுகிறேன் என்றால் அது குறித்து அறிந்திருக்கிறேன். அதற்கு இதுவரை நான் எழுதியிருக்கும் தொடர் கட்டுரைகள் சாட்சி. நீங்கள் கம்யூனிசம் குறித்து பேசப்போகிறீர்கள் என்றால் அது குறித்து உங்களுக்கு என்ன தெரியும். ///
  இஸ்லாமிய அறிஞர்களும் உங்கள் கட்டுரைகள் உங்களது அறியாமையை வெளிப்படுத்துவதாக நினைக்கிறார்கள் போலும் அதனாலேயே உங்களை அவர்களுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு கூறுகிறார்கள்

 25. ////தென் தமிழகத்தின் கடந்த நூறு ஆண்டுகால வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தெரியும், என்ன நன்மை என்று.////
  உங்களை பொருளாதரத்தையும் நேரில்பார்த்தாலும் தெரியும் .

 26. சகோதரர் ராபின்
  //என்னுடைய கருத்தை நான் சொல்லியிருக்கிறேன் //
  நானும் என்னுடைய கருத்தை சொல்லியிருக்கிறேன் அம்புட்டுதான்.
  //தோழர்கள் உட்பட எல்லாரும் ஒருநாள் சுடுகாடு போகவேண்டியதுதான் //நல்ல கண்டுபிடிப்பு!!
  இதில் pj வும் ஒன்றுதான் நீங்கள் கூறுபவரும் ஒன்றுதான்!// நல்லது(ஏற்றுகொண்டதற்கு நன்றி)
  //விரகிதியில் இருக்காரு போல இருக்கு./ஆமாங்க,இந்த மதவாதிகளபார்த்தா வேதனையாகவும் இருக்கு!
  //நீங்க எப்படி?// கிறுக்குத்தனத்தை விமர்சனம் பண்ணும் நகைச்சுவையும்,நல்லவனாக வாழ ஆசைபடும் இளைஞன்!
  //கடந்த நூறு ஆண்டுகால வரலாற்றை எடுத்துப் பார்த்தால் தெரியும், என்ன நன்மை என்று.//யம்மாடி!
  //உங்களுக்கு நல்ல காமெடி சென்ஸ் இருக்கு.// ஹி ஹி ரொம்ப நன்றிங்க!
  //அதற்குள் என்ன அவசரம்?// ஒன்றுமே அவசரம் இல்லை! இந்த PJ வும்,ஜானும் இருக்கிறவரை நடக்குமா?

 27. சகோதரர் இப்ராகிம்
  உங்களுடைய குடுமி சண்டையில் அவர் இவரை திட்டுவது,இவர் அவரை திட்டுவது என்று எதனை காலம்தான் இருக்கபோகிறீர்கள்?
  உண்மை என்னவென்று இன்னுமா நீங்கள் உணரவில்லை?
  முகம்மதுவை விமர்சனம் பண்ணி எடுக்கப்பட்ட படத்தை கண்டித்து இந்த முஸ்லிம்கள் பண்ணிய அழிட்சாட்டியத்தை பார்த்தீர்களா?
  என்றோ இறந்துவிட்ட ஒரு மனிதருக்காக இவ்வளவு வன்முறை தேவையா?
  இதுதான் சமாதானத்தை போதிக்கும் லட்சணமோ?

 28. //இஹ்சாஸ் ஒரு மண்ணாங்கட்டி என்று வைத்துக் கொள்வோம்//
  மடசாம்பிராணி என்று கூட வைத்துக்கொள்ளலாம்!!

 29. சகோதரன் ,////உண்மை என்னவென்று இன்னுமா நீங்கள் உணரவில்லை?///
  கம்யுனிசமும் ஜனநாயகமும் போடு குடுமி சண்டையில் பல உண்மைகளை உணர்ந்தோம் .அதனாலே முஹம்மது நபி[ஸல்] அவர்கள் வழியில் நிலைத்தோம் .
  ஆப்கானிஸ்தானில் ரஷ்யா செய்த அளிசாட்டியத்தை விடவா ?
  இராக்கில் அமெரிக்க செய்த அளிசாட்டியத்தைவிடவா.?
  பாலஸ்தினத்தில் இஸ்ரேல் செய்யும் அளிசாட்டியத்தைவிடவா?
  முஸ்லிம்கள் அழிசாட்டியம் செய்துவிட்டார்கள்.?
  தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைதியான முறையில் தனது எதிர்ப்பை காட்டவில்லையா?
  தனிமனிதனின் கருத்துக்களின் சுதந்திரத்தில் தலையிட மறுப்பதாக கூறும் அமேரிக்கா எத்தனை தனிமனிதர்களை கருத்துக்களையும் கழுத்துக்களையும் நெரித்துள்ளது என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டுமா?

 30. sagodharan, //இஹ்சாஸ் ஒரு மண்ணாங்கட்டி என்று வைத்துக் கொள்வோம்//
  மடசாம்பிராணி என்று கூட வைத்துக்கொள்ளலாம்!!/////
  அப்படியெனில் NO.1 சிங்கப்பூர் சாம் பிராணி யார்?

 31. சகோதரன் ///என்றோ இறந்துவிட்ட ஒரு மனிதருக்காக இவ்வளவு வன்முறை தேவையா?////
  என்றோ இறந்துவிட்ட ஒரு மனிதரைப் பற்றி அவதூறாக படமெடுத்தது நன்முறையா?
  இவ்வளவு மோசமாக படமெடுப்பது அதை வெளியிடுவது அதற்கு வக்காலத்து வாங்குவது இதெல்லாம் ஒரு சாராருக்கு தேவைப்படும்பொழுது மறு சாராருக்கு வன்முறை தேவையாகிறது.
  ஆக வன்முறைக்கு காரணமானவர்களை சாம்பலாக்கி ,அதில் வெந்நீர் ஊற்றி அழிப்பதை செய்யாமல் அப்பாவி மக்களை வன்முறைக்கு ஆளாக்கி தங்களை அழித்துக் கொள்ள செய்து வேடிக்கை பார்ப்பதும் சமாதானம் பற்றி குரலிடுவதும் எம்முறையில் சரி?

 32. //விஞ்ஞானி அப்துல் கலாமே சொல்லிவிட்டார் உங்களுக்கு இன்னும் என்ன பயம் என்கிறார். போலிமருத்துவர் சொன்னால் பயங்கொள்ளாமல் எப்படி இருப்பது? அப்துல்கலாம் ஒரு ராக்கெட் தொழில்நுட்ப விஞ்ஞானி. ரியாக்டர்கள் இயங்கும் விதம் குறித்தும் அதன் பாதுகாப்பு குறித்தும் அவர் எப்படி சான்றிதழ் கொடுக்க முடியும்? காவிரிக் கரையில் சிறுநீரகக் கோளாறுக்கு தோல் மருத்துவரிடம் ஆலோசனை கேட்பார்களோ!//

  Samething Mr.sengodi, if Abdul Kalam doesn’t know anything about nuclear reactor, you know nothing about Islam, we Muslims know you are a dubakoor fellow.

 33. சகோதரரே
  NO.1 சிங்கப்பூர் சாம் பிராணி இருப்பது எனக்கு தெரியாது! மன்னிக்க வேண்டும்!
  அது சம்மந்த பட்டவர்களுக்கே நன்கு தெரியும், மேலும் இஹ்சாசை மட்டப்படுத்தவேண்டும் என்று கூறவில்லை ராபின் சொன்னதுபோல் விரக்தியில் கூறப்பட்ட வார்த்தை மட்டுமே!
  //என்றோ இறந்துவிட்ட ஒரு மனிதரைப் பற்றி அவதூறாக படமெடுத்தது நன்முறையா?//
  இல்லைதான்,அதற்காக?
  //வக்காலத்து வாங்குவது இதெல்லாம் ஒரு சாராருக்கு தேவைப்படும்பொழுது//
  எந்த சாராருக்கு நீங்கள் கூறும் தேவை?
  அமெரிக்கனுக்கு,இஸ்ராயிலுக்கு,பிஜேபி க்கு ,R S S க்கு சரியா? நான் சொல்வது ?
  இன்னும் ஒட்டுமொத இஸ்லாமிய விரோதிகளுக்கு சரியா ?
  நாங்கள் என்ன தவறு செய்தோம்? வன்முறை தேவைப்படும் சாரார் உங்கள் பக்கம்,,
  தேவைப்படும்போது எடுத்துக்கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்வது முறையா?
  //வன்முறைக்கு காரணமானவர்களை சாம்பலாக்கி??!!//
  என்ன தீர்வு இது? இதற்காக வன்முறையில் ஈடுபடுவது நபியின் மதிப்பை அதிகப்படுத்துமா ? குலைக்குமா?
  உங்களுக்கு எப்படி தெரியும்? நடுநிலைவாதிகளை கேளுங்கள், கூறுவார்கள்!
  சரி காரணிகள் இருந்தால் வன்முறை செய்யலாம் என்கிறீர்களா? வன்முறையில் ஈடுபட்டு என்னுடைய நண்பனின் இருசக்கரவாகனத்தை சேதப்படுத்தியது சரியா?
  இன்னும் எத்தனையோ? பாதிப்பை சரியா முறையில் பதிவு செய்யவே உதாரணம் கூறினேன்.
  வன்முறையை தூண்டுவது வன் முறையாலருக்கு சரி? நக்சல் பாரிகளுக்கு சரி,, உங்கள் புரிதலில்!
  மூமின்களுக்கு ?
  //அப்பாவி மக்களை வன்முறைக்கு ஆளாக்கி//
  சகோதரரே அப்பாவி மக்கள் நீங்கள் அல்ல,, முன்னாள் முஸ்லிம்களாகிய நாங்கள்தான்!
  கலவரத்தில் பாதிக்கப்படுபவனே அப்பாவி!
  கலவரத்தை தூண்டுபவர்கள்,கலவரத்தை செய்பவர்கள் அப்பாவிகள? நல்ல கதை!

  போர்களத்தில் குழந்தைகளை குதிரையின் காலில் மிதித்து கொன்று விட்டு கேட்டால் அதற்கு பின்னால் நபி தடை செய்த வசனத்தை காண்பிப்பது போல் இதற்க்கு சண்டையில் கிழியாத சட்டை உண்டா?என்று கேட்க வேண்டாம்!
  முன்னாள் எங்களுடைய,இப்போது உங்களுடைய நபியை தவறாக சித்தரித்து விட்டதனால் அண்ணலாருக்கு இழுக்கு என்றால் சாதாரண திரைப்படத்துக்கு நீங்கள் மதிப்பளித்து,இதனால் இஸ்லாத்துக்கு அவமானம் என்று நினைக்கிறீர்களா? அவ்வளவு பெரிய ஆயுதமா அப்படம்?

 34. சகோதரர் ஜிடனே!
  நாங்களும் முஸ்லிம்கள்தான் முன்னாடி!
  விசாலமான அறிவுடன் பகுத்தறிவோடு சிந்தனை செய்யுங்கள்!!
  உங்களின் நிலை என்னவென்று தெரியும்!
  தெரியாத செங்கோடிக்கு நீங்கள்தான் சந்தேகத்தை தெளிவுசெய்து விடுங்களேன்,என்னை போன்றவர்கள் மீண்டும் இஸ்லாத்தில் முழுமையாக நுழைகிறோம்!!

 35. //உங்களை பொருளாதரத்தையும் நேரில்பார்த்தாலும் தெரியும் .// எங்கள் பொருளாதாரம் நாங்கள் பெற்ற கல்வியினால் வந்தது. அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை?

 36. //கிறுக்குத்தனத்தை விமர்சனம் பண்ணும் நகைச்சுவையும்,நல்லவனாக வாழ ஆசைபடும் இளைஞன்!// உங்களுக்கு கிறிஸ்தவத்தை நினைத்தால் கிறுக்குத்தனமாக தெரிகிறது எனக்கு கம்யுனிசத்தை நினைத்தால் கிறுக்குத்தனமாக தெரிகிறது. எல்லாம் அவரவர் நம்பிக்கையைப் பொறுத்த விஷயம். உங்கள் விமர்சனத்தில் எந்த நகைச்சுவையையும் பார்க்கமுடியவில்லையே, வெறித்தனம்தான் தெரிகிறது. நாங்க எல்லாம் என்ன, கெட்டவனாக வாழவா ஆசைப்படுகிறோம்?

 37. @இப்ராஹீம்,

  //அதற்கு முந்தைய விவாத சுட்டியையும் கொடுத்துள்ளேன் .அதையும் பாருங்கள் உண்மை புரியும் .பதில் தராமல் ஆர்யா ஆனந்த் ஓடியதை அறிவீர்கள்..//

  நம்முடைய விவாதத்தில், முஹம்மது செய்த வழிப்பறி கொள்ளைகளை பட்டியலிட்டு விளக்கி உள்ளேன். அதற்கு எந்த பதிலும் தராமல், சம்பந்தமில்லாத சில குர் ஆன் வசனங்களை குறிப்பிட்டு அதற்கு என்னை பதவுரை, தெளிவுரை எழுத சொல்லி விவாதத்திலிருந்து பயந்து ஓடி விட்டு, பல நாள்கள் கழித்து இப்படி ஒரு அலம்பல் தேவையா உங்களுக்கு?

  //மேலும் கீழ்க்கண்ட சுட்டியில் ஆர்யாஆனந்த் அந்தவிவாதத்தை தொகுத்துள்ளார் .அதில் எனது வாதங்கள இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது அதிலிருந்தே உண்மைகளை உணர முடியும் .
  நீங்கள் கொடுத்துள்ள சுட்டியில் பின்னூட்டம் இடுவதில் அத்தளத்தில் ஏற்பட்ட சிக்கலை அதிலுள்ளவர்கள் அறிவர் .அதனால் தடைபட்டது.

  http://newindian.activeboard.com/forum.spark?aBID=134804&p=3&topicID=48724317

  //

  நம்முடைய விவாதத்தை
  மேற்கண்ட சுட்டியில் நான் தொகுக்க வில்லை. இதை வேறு எவரோ செய்துள்ளார். அவர் யாரென்றே எனக்கு தெரியாது.

 38. சகோதரன் ,தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமெரிக்க தூதரகம் முன்னால் தனது கடுமையான எதிர்ப்பை எவ்வித வன்முறை இன்றி நடத்தியது .மேலும் அதிகமான கூட்டம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதால் உடனடியாக அதை நீக்கும் முகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  ஆனால் தவ்ஹித் ஜமாஅத் போல அனைத்து அமைப்புகளும் இருக்க வாய்ப்பில்லை. மற்ற அமைப்புகள் அதிக கூட்டம் கூடினால் உணர்ச்சியால் கொந்தளிப்பார்கள்.அதன் விளைவுகளே உங்களது நண்பனின் பைக் எரிக்கப்பட்டிருக்கலாம்.அதற்கு அந்த அமைப்புகளே அந்த நண்பரை அறிந்து அதற்கான நஷ்ட ஈடு வழங்கியிருக்க வேண்டும்.தமிழ்நாடு தவ்ஹித் ஜ்மாத்ஹாக இருந்தால் அதையே செய்யும்.அதனாலே இது போன்றே ஒற்றுமை கோசங்களில் டிஎன்டிஜே கலந்துகொள்வதில்லை.
  ////சகோதரரே அப்பாவி மக்கள் நீங்கள் அல்ல,, முன்னாள் முஸ்லிம்களாகிய நாங்கள்தான்!
  கலவரத்தில் பாதிக்கப்படுபவனே அப்பாவி!
  கலவரத்தை தூண்டுபவர்கள்,கலவரத்தை செய்பவர்கள் அப்பாவிகள? நல்ல கதை!////

  முஸ்லிம்களே அப்பாவிகள் .அவர்களது அப்பாவித்தனத்தை பயன்படுத்தி அவர்களை அழிப்பதற்காகவே இது போன்ற படங்கள் எடுக்கப் படுகின்றன .இதுவரை நடந்த அனைத்து கலவரங்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே .

  ////போர்களத்தில் குழந்தைகளை குதிரையின் காலில் மிதித்து கொன்று விட்டு கேட்டால் அதற்கு பின்னால் நபி தடை செய்த வசனத்தை காண்பிப்பது போல் இதற்க்கு சண்டையில் கிழியாத சட்டை உண்டா?என்று கேட்க வேண்டாம்!///
  நீங்கள் சொல்லியிருப்பது புரியும்படியாக இல்லை .

  ////முன்னாள் எங்களுடைய,இப்போது உங்களுடைய நபியை தவறாக சித்தரித்து விட்டதனால் அண்ணலாருக்கு இழுக்கு என்றால் சாதாரண திரைப்படத்துக்கு நீங்கள் மதிப்பளித்து,இதனால் இஸ்லாத்துக்கு அவமானம் என்று நினைக்கிறீர்களா? அவ்வளவு பெரிய ஆயுதமா அப்படம்?///
  முஸ்லிமில் முன்னாள்,இந்நாள் என்றெல்லாம் இல்லை. இறைவனையும் அவனது தூதரையும் மறுத்துவிட்டால் அவன் முஸ்லிம் இல்லை.இதில் முன்னாள் என்று சொல்லி பெருமை தேட வேண்டிய அவசியமில்லை .
  சகோதரன் ,உங்களில் ஒருவரையும் அவரது மனைவியையும் நீலப்படத்தில் காட்டினால் நீங்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ளுங்கள் .

 39. சகோதரன் ///தெரியாத செங்கோடிக்கு நீங்கள்தான் சந்தேகத்தை தெளிவுசெய்து விடுங்களேன்,என்னை போன்றவர்கள் மீண்டும் இஸ்லாத்தில் முழுமையாக நுழைகிறோம்!!////
  தெரியாத செங்கொடிக்கு தெளிவு செய்யவே நேரடி விவாதத்திற்கு அழைக்கிறோம் ,அதன் மூலம் உங்களைப் போன்றவர்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைய வாய்ப்பு உள்ளதால் என்பதாலே செங்கொடி நேரடி விவாதத்திற்கு மறுத்து வருகிறார்,.மேலும் அவர் சார்ந்த அமைப்பும் அதற்கு அனுமதி தராது.
  இன்னும் நீங்கள் உண்மையானவராக இருந்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறு முன்னர் தகுந்த இஸ்லாமிய அறிஞர்களை நேரடியாக அணுகி பல விளக்கங்களை பெற்றிருக்க வேண்டும் .

 40. சகோதரரே
  //அதன் விளைவுகளே உங்களது நண்பனின் பைக் எரிக்கப்பட்டிருக்கலாம்.அதற்கு அந்த அமைப்புகளே அந்த நண்பரை அறிந்து அதற்கான நஷ்ட ஈடு வழங்கியிருக்க வேண்டும்//
  எவ்வளவு சாதரணமாக சொல்லிவிட்டீர்கள்!
  கொளுத்துபவன் பெயர்,இயக்கம் முகவரி இதெல்லாம் எழுதிவைத்துவிட்டா செல்வான்?
  உங்களுடைய பெயர் அடிபடுகிறது என்றவுடன் எங்கள் இயக்கம் என்றைக்கும் தவறு செய்யாது,கொந்தளிக்காது என்று நமது அண்ணன் பேசுவதைப்போல பேசுகிறீர்கள்,அதற்கான வருத்தத்தை கூட தெரிவிக்காமல்?
  என்னை விடுங்கள் அரசு பேருந்து மற்றும் அதில் பயணம் செய்த பயனாளிகளின் பாதிக்கப்பட்ட பணிகளுக்கு யார் பொறுப்பு? அதையும் உங்கள் இயக்கம் செய்யவில்லையா? கும்பலாக நின்றுகொண்டு சாலையை அடைத்தது யார்?
  நீங்கள் சாலையிலேயே நிற்க வில்லையா? அது போகட்டும் முஸ்லிம்களை அழிப்பதற்காக இதுபோன்ற படங்களை எடுக்கிறார்கள் என்று கூறுவது வேடிக்கையாக தெரியவில்லையா?
  இஸ்லாத்தை அதன் அடிப்படை நோக்கம் தெரியாத முஸ்லிமல்லாத நபர் என்று என்னை நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் தங்களிடம் அப்படி அடையாலப்படுதினேனே தவிர நீங்கள் சொன்னதுபோல்
  //முன்னாள் என்று சொல்லி பெருமை தேட வேண்டிய அவசியமில்லை//
  பெருமையை நான் அப்படி கூறி பெறுவதைவிட நான் எந்த மதமும் சாராதவன் என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன்! தயவுசெய்து அப்படிமட்டும் கூறாதீர்கள் என்னைபோன்றவர்களால் ஜீரணிக்க முடியாது!
  நல்ல விஷயங்கள் எந்த நிலையில்,யாரிடம் இருந்தாலும் ஏற்றுகொள்வோம்,அதே சமயத்தில் ஒழுக்கமாக நடக்கவும்,நல்லவனாக இருக்கிறேன் என்று பெருமைப்படவும் மதம் தேவையில்லை!
  //சகோதரன் ,உங்களில் ஒருவரையும் அவரது மனைவியையும் நீலப்படத்தில் காட்டினால் நீங்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்//
  இதிலிருந்தே தெரிகிறது நீங்கள் அந்த படத்தை விஷமிகளின் செயலாக பார்க்கவில்லை என்று!
  முஹம்மது நபியின் படுக்கையறையில் வைத்து எடுக்கப்பட்டதை போல் பதறுகிறீர்கள்!
  நிச்சயமாக, என்னையோ,எங்களில் ஒருவரையோ நீலபடத்தில் காண்பிக்க ஒன்று நாங்கள் அதில் பங்கெடுக்க வேண்டும், அல்லது எங்களுக்கு தெரியாமல் அப்படம் எடுக்கப்பட்டிருக்கவேண்டும்! சரியா? இரண்டும் குற்றம்தான்! ஆனால் நீங்கள் கூறுவது எந்தவகையில் என்று தெரியவில்லை எனக்கு.
  நங்கள் இப்போதுதான் தெளிவாக உள்ளோம்!
  எல்லா விளக்கமும் பெற்றதினால்தான் இஸ்லாத்தின் மறுபக்கம் தெரிந்தது! புரிந்து கொண்டோம்!

 41. சகோதரரே
  உங்களுடைய முடிவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என்று நன்கு தெரிகிறது!
  அதனால்தான் முன்னரே கேட்டேன் நீங்கள் கிருத்துவத்தை நம்புகிறவரா என்று. ஏனெனில் உங்களுக்கு ,அதற்காக நிறைய தளங்கள் உள்ளது, உங்கள் பதிவுகள் பிறருடைய பகுத்தறிவை தூண்டுபவையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்!
  இஸ்லாத்தை விமர்சனம் பண்ணும் அதே வேலையில் கிருத்துவத்தையும் கொஞ்சம் திருப்பிப்பாருங்கள் ! இங்கு
  குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வேலை பார்க்க வேண்டாம் !

  ஆதலால் இஸ்லாமியர்கள் அப்படியே திருந்தி இடையில் நீங்கள் போடும் பின்னூட்டத்தில் கிருத்துவம்தான் சிறந்தது என்று நினைத்துவிடுவார்கள் என்று மனப்பால் குடிக்கவேண்டாம்!
  ஏனென்றால் இஸ்லாத்தை எப்படி ஆய்வு பண்ணினோமோ அதைபோலத்தான் கிருத்துவத்தையும் ஆய்வு பண்ணி மேலும் உலகளாவிய கடவுட்கொள்கையினால் எந்த பயனும் இல்லை என்ற முடிவில் ஒரு புள்ளியில் இணைந்துள்ளோம்!
  இதில் அவர் சிறந்தவர்,இவர் சிறந்தவர் என்ற பேச்சுக்கே இடமில்லை,
  //கம்யுனிசத்தை நினைத்தால் கிறுக்குத்தனமாக தெரிகிறது.//
  நீங்கள் கூறுவதுபோல் உங்களுக்கு பொதுவுடைமை கிறுக்குத்தனமாக தெரிய எதாவது ஒன்றை ஆய்வு செய்தீர்களா?
  சகோதரரே பொதுவுடைமை நீங்கள் நம்பும் கிருத்துவத்தை போல் நம்பிக்கை சார்ந்த விடயமல்ல!
  கிருத்துவத்தில் நீங்கள் ஆண்டவர் கூறிவிட்டால் எதைவேண்டுமானாலும் நம்புவீர்கள்!
  பொதுவுடமையில் எதையும் என்,எதற்கு என்று ஆய்வுக்கு உட்படுத்தி பார்த்துதான் முடிவு ஏற்படும்,தவிர எதனையும் முடிவு என்றோ இதுதான் சரி என்றோ அறிவியலும்,பொதுவுடமையும் ஏற்றுகொள்வதில்லை!
  மனிதனுக்கு ஒவ்வாத விடயங்கள் எப்படிப்பட்டதாகிலும் களைந்தெறிய மதவாதிகள் எதனையும் விட்டுக்கொடுப்பதில்லை! நம்பிக்கை சம்மந்தப்பட்டுவிட்டது என்பதால்.,
  நீங்கள் அதனோடு இதை கலக்க வேண்டாம்!
  நீங்கள் நகைச்சுவை எதிர்பார்ப்பவராக எனக்கு தெரியவில்லை,
  என்ன வெறித்தனத்தை கண்டீர்கள் என்னுடைய பின்னூட்டத்தில்?
  கூறுங்கள் மாற்றிக்கொள்கிறேன்.
  //நாங்க எல்லாம் என்ன, கெட்டவனாக வாழவா ஆசைப்படுகிறோம்?//
  அது உங்களுடைய விருப்பம்,.//
  //நல்லவனாக வாழ ஆசைபடும் இளைஞன்!// இது என்னுடைய விருப்பம்!
  அதற்காக உங்களை நல்லவராக வாழ விரும்பாதவர் என்று கூறவே இல்லையே!
  உங்களுடைய பின்னூட்டத்திலேயே தெரிகிறது வெறித்தனம் யாரிடம் உள்ளதென்று!

 42. மிஸ்டர் செங்கொடி உங்கள் கேள்விகளை விவாதத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன காலேஜ் லெக்சரரா? நான் என்ன ஃபஸ்ட் ஸ்டாண்டர்ட் பாப்பாவா? டெஸ்ட் வைத்து என்னை தெரிந்து கொள்வதற்கு. தைரியமிருந்தால் விவாதத்துக்கு வா. இல்லாவிட்டால் முடியாது என்று சொல்லிவிட்டு ஓடிப்போ. ஆனாலும் இந்த அளவுக்கு சீன் காட்டக் கூடாது நீங்கள்.

 43. சகோதரன் ////உங்களுடைய பெயர் அடிபடுகிறது என்றவுடன் எங்கள் இயக்கம் என்றைக்கும் தவறு செய்யாது,கொந்தளிக்காது என்று நமது அண்ணன் பேசுவதைப்போல பேசுகிறீர்கள்,அதற்கான வருத்தத்தை கூட தெரிவிக்காமல்?///
  நீங்களும் செங்கொடிப் போலவே அறையை விட்டு வெளியே வராது எழுதி வருகிறீர்கள்.பைக் எரிக்கப்பட்ட அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் டிஎண்டீஜே கலந்துகொள்ளவில்லை .அதைத்தான் ஒற்றுமை கோசத்தில் டிஎன்டிஜே பங்கேற்காது என்று சொல்லியிருந்தேன் .12/09 இல் தனியாக ஆர்பாட்டம் டிஎன்டிஜே நடத்தியது.அதிக கூட்டத்தினால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை தீர்க்க உடனடி நடவடிக்கையுமஎடுக்கப்பட்டது.
  பைக் எரித்தவனை கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த அனைத்து அமைப்புகளும் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.அந்த அமைப்புகள் அதற்க்கான நஷ்ட ஈடுவை கொடுக்க வேண்டும் என்று நான் கூறிஇருப்பது வருத்தம் தெரிவிப்பதை விட ஒருபடி மேலானது.
  ////முஸ்லிம்களை அழிப்பதற்காக இதுபோன்ற படங்களை எடுக்கிறார்கள் என்று கூறுவது வேடிக்கையாக தெரியவில்லையா?//
  முஸ்லிம்களை சீண்டினால் அவர்கள் இது போன்ற ஆர்ப்பாட்டத்தை செய்வார்கள்.அதன்மூலம் கலவரம் ஏற்படும்.ஏற்படாவிட்டால் ஏற்படுத்தலாம் .அப்புறம் சிறைவாசம் தீவிரவாதம் செட் அப்கள் பண்ணிக்கொள்ளலாம் .அவர்கள் கல்வியிலோ ,பொருளாதரத்திலோ முன்னேறவிடாமல் வைத்துக்கொள்வது என்பது உலக அளவில் யூதர்களின் திட்டமும் ,இந்திய அளவில் சங்க குடும்ப திட்டங்களாகும் .
  ////இஸ்லாத்தை அதன் அடிப்படை நோக்கம் தெரியாத முஸ்லிமல்லாத நபர் என்று என்னை நினைத்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் தங்களிடம் ///
  இஸ்லாத்தின் அடிப்படை நோக்கம் என்னவென்று தெரிந்து கொண்டீர்கள்?சொல்லுங்களேன் .நானும் தெரிந்து கொள்ளட்டும்.
  இஸ்லாத்தின் அடிப்படை நோக்கம் என்று நீங்கள் சொல்லியிருப்பது கிட்டத்தட்ட ஹிந்துத்துவாக்களின் சொற்கள் போல உள்ளது
  ///எல்லா விளக்கமும் பெற்றதினால்தான் இஸ்லாத்தின் மறுபக்கம் தெரிந்தது! புரிந்து கொண்டோம்!///
  இஸ்லாத்தில் ஒரு பக்கமே உள்ளது.இல்லாத மறுபக்கம் எப்படி உங்களுக்கு தெரிந்தது?இஸ்லாத்தின் பெயரால் நீங்கள் கண்ட மறுபக்கத்தை காட்டுங்கள் .
  ///போர்களத்தில் குழந்தைகளை குதிரையின் காலில் மிதித்து கொன்று விட்டு கேட்டால் அதற்கு பின்னால் நபி தடை செய்த வசனத்தை காண்பிப்பது போல் இதற்க்கு சண்டையில் கிழியாத சட்டை உண்டா?என்று கேட்க வேண்டாம்!///
  நீங்கள் சொல்லியிருப்பது புரியும்படியாக இல்லை .இதை விளக்க மறந்துவிட்டீர்களா ?

 44. சகோதரன் ////நிச்சயமாக, என்னையோ,எங்களில் ஒருவரையோ நீலபடத்தில் காண்பிக்க ஒன்று நாங்கள் அதில் பங்கெடுக்க வேண்டும், அல்லது எங்களுக்கு தெரியாமல் அப்படம் எடுக்கப்பட்டிருக்கவேண்டும்! சரியா? இரண்டும் குற்றம்தான்!///
  குற்றம் என்றால் நடவடிக்கை எடுப்பீர்களா?
  அல்லது தனிமனித உரிமைகளில் தலையிடக் கூடாது என்று சாதரணமாக எடுத்துக் கொள்வீர்களா?

 45. சகோதரரே
  //கொடுக்க வேண்டும் என்று நான் கூறிஇருப்பது வருத்தம் தெரிவிப்பதை விட ஒருபடி மேலானது.//
  ரொம்பவும் சந்தோஷம்,அப்படியானால் மற்ற முஸ்லிம்களின் நிலை வேறு கொந்தளிப்பார்கள்! நீங்களோ
  //ஒற்றுமை கோசத்தில் டிஎன்டிஜே பங்கேற்காது// என்று கூறுகிறீர்கள்!
  ஆகவே TNTJ முஸ்லிம்களே தனி கூட்டமாக இருப்பார்கள் என்று கூறவருகிறீர்கள்,.
  அப்படியானால் நடந்த சம்பவத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கூறியிருந்தால் நான் தொடர்ந்து முஸ்லிம்கள் மட்டுமே காரணம்,TNTJ முஸ்லிம்கள் காரணம் இல்லை என்று ஒதுங்கியிருப்பேன் பரவாயில்லை.
  //பைக் எரித்தவனை கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை//
  தொலைந்து போகட்டும் என்றுதான் நாங்களும் விட்டுவிட்டோம்,நீங்கள் கண்டுபிடிக்க வேண்டாம் அந்த முஸ்லிம் வேறு நீங்கள் வேறு என்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள்!
  திரைப்படம் எடுத்து இஸ்லாமியர்களை அழிப்பதற்கு நீங்கள் கூறிய யூதர்கள் சதி என்பது நீங்கள் இன்று கூறவில்லை இனவெறியை உண்டுபண்ணும் மதவாதிகளின் பிதற்றல்!
  யூதர்கள் கெட்டவர்கள் அரபுலகத்தை விட்டு விரட்டியடிக்கப்படவேண்டும் என்பது என்றைக்கு இஸ்லாம் உருவானதோ அன்றிலிருந்து இன்று வரை காட்டரபுகளின் வேதவாக்கு!
  யூதர்களுக்கு நான் வக்காலத்து வாங்குவதாக எண்ணவேண்டாம். உலகில் எந்த இனமும் வெறியுடன் புறப்பட்டால் அடுத்த இனம் எதிரியாகத்தான் தெரியும்! யூதர்களுக்கும் முஸ்லிம்கள்தான் எதிரி! அதற்கு நீங்களும் விதிவிலக்கல்ல.அதற்காக யூதர்கள் அனைவரும் நல்லவர்கள் என்றும் கூறவில்லை! தீய எண்ணம் உள்ளவர்கள் உலகில் எல்லா பகுதிகளிலும் உள்ளார்கள்,அது இயற்கை!!
  இஸ்லாத்தின் அடிப்படை நோக்கம் என்னவென்று கேட்டுள்ளீர்கள்,ஏதோ வெறுமையாய் கேட்பது போல் உள்ளது!
  உங்களுக்கு தெரியாததா சகோதரரே எனக்கு தெரியப்போகிறது? மேலும் , உங்களுக்கு தெரியாது என்றோ நான் சொல்லித்தருகிறேன் என்றோ சொல்லவில்லையே!
  //இஸ்லாத்தில் ஒரு பக்கமே உள்ளது//
  சகோதரரே அது உங்களுக்கு தெரிந்தவரை.
  ,எல்லோருக்கும் மறுபக்கம் உண்டு உலகில் எல்லாவற்றிற்கும் மறுபக்கம் உண்டு !
  ஒருபக்கம் மட்டுமே உள்ளது ,மறுபக்கம் இல்லையென்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது என்று உங்களை கேட்க விரும்பவில்லை காரணம் உங்களுடைய பின்னூட்டங்களை படித்துப்பார்த்து பார்த்து இவ்வளவு விளக்கங்களை பெற்றுமா உங்களுடைய சிந்தனை மற்றகருத்துக்களை பரிசீலிக்கவில்லை?
  ஆச்சரியமாக உள்ளது சகோதரரே உங்களுடைய பயிற்சி!!
  நீலப்படம் சம்மந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள்
  // குற்றம் என்றால் நடவடிக்கை எடுப்பீர்களா?//
  தகுதி,பொறுப்பு,அதன்மூலம் வழங்கப்படும் சட்டம் என் கையில் இருந்தால் நிச்சயம் எடுப்பேன்.
  அடுத்தது சம்மந்தமே இல்லாமல் கேள்வி கேட்டுள்ளீர்கள்
  //அல்லது தனிமனித உரிமைகளில் தலையிடக் கூடாது என்று சாதரணமாக எடுத்துக் கொள்வீர்களா?//
  எது தனிமனித உரிமை? எது தலையீடு ? நான் கேட்டது என்ன ? முகம்மதுவின் நற்பெயருக்கு களங்கம் சாதாரண திரைப்படம் ஏற்படுத்திவிடுமா என்றுதானே?
  நீங்கள் கண்டனத்தை பதிவு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தியால் தீர்வு அதுவாகி விடுமா?
  பாதிப்படைந்த பொதுமக்களுக்கு என்ன தீர்வு? என்றுதான் கேட்டேன், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆயிரம் பிரச்சினை இருக்க ஏனிந்த நிலையில் இஸ்லாமியர்கள் என்ற முறையில்தான் வினா எழுப்பப்பட்டதே தவிர வேறதற்குமில்லை.
  சண்டையில் கிழியாத சட்டை எது என்று கேட்டிருந்தேன்! செங்கொடியின் தலைப்பை தாண்டி நான் சென்றதனாலும் விவாதம் வேறுவகையில் செல்வாதாலேயே அதனை விடுத்தேன்!
  இன்னும் நீங்கள் இனி வரும் பின்னூட்டங்களை தலைப்பை ஒட்டியே தொடர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்!
  ஒருவேளை இஹ்சாசுக்கு பதில் நீங்கள் என்றால் செங்கொடியின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கலாம்!
  நீங்கள் கேட்டுவிட்டதால் கூறுகிறேன்!
  பின்வரும் ஹதீதுகளை நடுநிலையோடு படித்துப்பாருங்கள் !
  புஹாரி ஹதீத் எண்:3012 ,
  முஸ்லிம் ஹதீத் எண் :3589 ,3590
  படித்து பாருங்கள் இதனையும் !
  பின்னர் ஹதீத் எண் : 3014 ,இதனில் பெண்களையும்,குழந்தைகளையும் கொள்வது தடை செய்யப்பட்டது என்று பதிந்துள்ளார்கள்!
  அதனாலேயே நான் போர்களக்கொலைகளை போல தெரியாமல் நடந்துவிட்டதென கூறவேண்டாமென கூறினேன்!
  மற்றபடி மேற்சொன்ன ஹதீதுகள் பலஹீனமானவை என்றோ,பலமானவை என்றோ உங்கள் மேலிடம் கூறும் விளக்கங்களை பெற்று இங்கு பகிர்ந்து தலைப்புக்கு வெளியில் செல்ல வேண்டாம் என கேட்டுகொள்கிறேன்!

 46. நபி[ஸல்] அவர்களிடம் ,குதிரைப் படையினர் ,இரவுநேரத்தில் திடீர் தாக்குதல் நடத்தும்பொழுது எதிரிகளான இணைவைப்பாளர்களின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு விடுவார்களே என்று கேட்கப்பட்டது அதற்கு அக்குழந்தைகளும் அவர்களின் தந்தையை சேர்ந்தவர்களே என்று பதிலுரைத்தார்கள்.
  சகோதரன்,/////ஆகவே TNTJ முஸ்லிம்களே தனி கூட்டமாக இருப்பார்கள் என்று கூறவருகிறீர்கள்,.///
  இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் அதிகமாக திரண்டால் என்னவெல்லாம் நடக்குமோ அதைப்போல அல்லாது முஸ்லிம்களும் அதிகமாக கண்டன ஆர்பாட்டங்களில் திரண்டால் ஒரு சில அசம்பாவிதங்கள் நடக்கும் .கட்டுபடுத்த அவர்களால் இயலாது .ஆனால் டிஎன்டிஜே வில் கட்டுப்படுத்த இயலும் .இதத்தான் உங்களிடம் கூறவந்தேன் ..என்னுடைய கூற்றில் உங்களது குரூர புத்தியை குதுகாலிக்க செய்யவேண்டாம்.
  ////யூதர்கள் சதி என்பது நீங்கள் இன்று கூறவில்லை இனவெறியை உண்டுபண்ணும் மதவாதிகளின் பிதற்றல்!//
  அப்படியெனில் சங்ககுடும்ப பற்றி கூறியது உண்மை .ஏனெனில் ,நீங்கள் இந்தியாவில் உங்களது நாத்திக கொள்கைக்கு அவர்கள் பிரதான எதிரிகள் .ஆதலின் அதை ஒப்புக் கொள்கிறீர்கள் .ஆனால் யூதர்கள் உங்களுக்கு அவசியமில்லாதவர்கள்.ஆனாலும் உங்களுக்கு இன்னொருவகையில் வேண்டியவர்கள்..ஏனெனில் இன்று இஸ்லாத்திற்கு எதிராக பல அயோக்கியத்தனமான கருத்துக்களை உங்களைப் போன்றவர்களுக்கு தந்து உதவியவர்கள் .அமெரிக்காவில் முஸ்லிம் ஜீவ்ஸ் யுனிவர்சிட்டி அமைத்து முஸ்லிம் அறிஞர்களால் புறக்கணிக்கப்பட்ட நூல்களை முஹம்மது நபி[ஸல்] அவர்களைப் பற்றி அவதூறுகள் பரப்புவதற்கு ஆதாரமாக வழங்கி உங்களைப்போன்ற குரூரங்களுக்கு உதவுபவர்கள் .
  ///அதற்காக யூதர்கள் அனைவரும் நல்லவர்கள் என்றும் கூறவில்லை! தீய எண்ணம் உள்ளவர்கள் உலகில் எல்லா பகுதிகளிலும் உள்ளார்கள்,அது இயற்கை!!////
  ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்ட சொன்ன ஒரு அப்பிராணியை சித்திரவதைப்படுத்தி கொன்றது முதல் பாலஸ்தீன குழந்தைகளை கொல்லுகிறவர்கள் வரை ,சதித்திட்டம் தீட்டி கிளிண்டனின் விந்தை ஆடையில் தோய்த்தவர்கள் வரை நல்லவர்களை காணமுடியவில்லை. நீங்கள் கண்டுபிடித்து சொல்லுங்கள்.
  ///உங்களுடைய பின்னூட்டங்களை படித்துப்பார்த்து பார்த்து இவ்வளவு விளக்கங்களை பெற்றுமா உங்களுடைய சிந்தனை மற்றகருத்துக்களை பரிசீலிக்கவில்லை?///
  மற்ற கருத்துக்களை ,மாற்று கருத்துக்களை சொல்லுங்கள்.அது உங்களின் முதல் பக்கமே ஒழிய இஸ்லாத்தின் மறுபக்கம் இல்லையென நிருபிப்போம்
  // குற்றம் என்றால் நடவடிக்கை எடுப்பீர்களா?//
  தகுதி,பொறுப்பு,அதன்மூலம் வழங்கப்படும் சட்டம் என் கையில் இருந்தால் நிச்சயம் எடுப்பேன்.////
  இப்போதுதான் அது உங்களது கையில் இல்லையே !இல்லாத இந்த நிலையில் என்ன செய்வீர்கள்?
  அமெரிக்கா அது தனிமனித உரிமை என்கிறது.,நீங்களும் அதே அடிப்படையிதான் ஆதங்கப்படுகிரீர்களோ என்று கேட்டுள்ளேன்.
  ///முகம்மதுவின் நற்பெயருக்கு களங்கம் சாதாரண திரைப்படம் ஏற்படுத்திவிடுமா என்றுதானே?
  நீங்கள் கண்டனத்தை பதிவு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தியால் தீர்வு அதுவாகி விடுமா?/////
  கணடனத்தை பதிவு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த ஜனநாயகம் அனுமதிக்கிறது .ஆம் தீர்வு மத்திய அரசு இந்தியாவில் தடை செய்தது.
  /////பாதிப்படைந்த பொதுமக்களுக்கு என்ன தீர்வு? என்றுதான் கேட்டேன், ////
  முஸ்லிம்களும் மக்கள்தான் .அவர்களும் பல போராட்டங்களினால் பாதிபடைந்திருக்கிரார்கள் .அவர்களுக்கு என்ன தீர்வை செய்தீர்கள்?
  /////ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஆயிரம் பிரச்சினை இருக்க ஏனிந்த நிலையில் இஸ்லாமியர்கள் என்ற முறையில்தான் வினா எழுப்பப்பட்டதே தவிர வேறதற்குமில்லை.///
  ஆர்பாட்ட நடத்த என்னவென்ன பிரச்னைகள் இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும் .அதற்காக ஆர்பாட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம் .எப்போவாது செங்கொடி பதிவரிடம் ஆலோசனை கேட்கப் படும்வேளையில் நீங்கள் சொல்லுங்கள்..
  ///ஒருவேளை இஹ்சாசுக்கு பதில் நீங்கள் என்றால் செங்கொடியின் விமர்சனத்திற்கு பதில் அளிக்கலாம்!///
  செங்கொடி கடவுள் நிறத்தை கேட்பார் .பதில் அளிக்க பாலகன் ஒருவனை அழைத்து வரவேண்டும் .
  ஹதித்கள் பற்றி இறைவன் நாடினால் விளக்குவேன்

 47. சகோதரரே
  //நீங்களும் செங்கொடிப் போலவே அறையை விட்டு வெளியே வராது எழுதி//
  இஸ்லாம் என்ற அறையை விட்டு வெளியில் வராமல் இருப்பது உங்களை போன்றோர்கள்தன்!
  இயக்கம்,போராட்டம் என்பது புரட்சியை மையமாக வைத்து நடத்துபவர்கள் சிந்திக்கவேண்டிய ,மக்கள் திரளின் மாபெரும் சக்தி!
  அது உங்களைபோன்ற எது கூறினாலும் ,தேசத்தை எவன்,எங்கு அடகு வைத்தாலும் எனக்கு கவலையில்லை!
  எனக்கு தேவை உயிரினும் மேலான எனது நபியும்,மார்க்கமும் தான் என்று நினைப்பவர்களுக்கு உங்களுடைய நிலையில் இருந்து சிந்திப்பவர்களுக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை!

 48. சகோதரன்,
  இஸ்லாம் சோசலிசத்தை மறுக்கவில்லை. இங்கு எழுதிக்கொண்டிருக்கும் சோசலிசத்தை மறுக்கும் சகோ.கள் தங்களுடை வர்க்கம் சார்ந்தே தங்களின் கருத்தை முன்வைக்கின்றனர்.

 49. சகோதரன், தேசத்தை அல்லாஹ்விடமா அடகு வைத்துவிட்டார்கள் .அதற்காகத்தான் செங்கொடி தேசத்தை மீட்க இந்த தளத்தில் கடுமையாக போராடி கொண்டிருக்கிறாரோ.
  ஏற்கனவே சென்கொடிதான் சொல்லியிருக்கிறார் பெயர் மாற்றம் செயக் கூட வீட்டு படியை விட்டு இறங்கினது கிடையாது என்று.பிறகு
  எந்த அடகுகடையிளிருந்து தேசத்தை மீட்க செங்கொடி என்ன போராடி,நீவிர் என்ன போராடி ,போராடி .போரடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?
  ///எனக்கு தேவை உயிரினும் மேலான எனது நபியும்,மார்க்கமும் தான் என்று நினைப்பவர்களுக்கு உங்களுடைய நிலையில் இருந்து சிந்திப்பவர்களுக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை!///

  ஆம் உண்மையே ,அதனால்தான் தெருவில் நடக்கையில் பாதைக்கு இடையூறாக பழத்தோல் முதல் அனைக்கப்பாடாத பீடி,சிகரெட் துண்டுகள் அகற்றுவது முதல் இந்த தேச மக்களுக்கு ரத்த தானம் செய்வதிலிருந்து பல்வேறுவகையில் தொண்டு செய்து வருகிறோம் .தனது சொத்தை தனது வாரிசுகளுக்கு கொடுக்காமல மக்களுக்காக ஒதுக்கிய நபி[ஸல் ]மக்களுக்காகவே வாழ்ந்தார்.

 50. சகோதரரே
  //குரூர புத்தியை குதுகாலிக்க செய்யவேண்டாம்.//
  ஆம் உங்களிடம் குரூரபுத்தியை குதூகலிக்க செய்து எனக்கு என்ன ஆகப்போகிறது? மன்னிக்கவும் எனக்கு அதைப்போல எண்ணமும் இல்லை,அது எங்களுக்கு பழக்கமுமில்லை
  //சங்ககுடும்ப பற்றி கூறியது உண்மை .//
  சங்ககுடும்பம் என்ற ஒரு வார்த்தை தவறியதால் இத்தனை கற்பனையா?
  //முஹம்மது நபி[ஸல்] அவர்களைப் பற்றி அவதூறுகள் பரப்புவதற்கு//
  எதுவும் தேவையில்லை முகம்மதுவை பற்றி கூறுவதற்கு. உங்களுடைய புஹாரி,முஸ்லிம் போன்ற பதிவுகளே போதும். இதுவரை இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகள் அனைத்தும் எதிலிருந்து எடுக்கப்பட்டது என்று நினைக்கீறீர்கள்?
  யூதர்கள் தமிழ்நாட்டில் வந்து முஹம்மதுக்கு எதிராக தமிழில் புத்தகம் வெளியிட்டுவிட்டார்களா?
  //நல்லவர்களை காணமுடியவில்லை//
  கெட்டவர்களாகவே அடையாளப்படுத்திவிட்டு நல்லவர்கள் இல்லை என்று கூறலாமா சகோதரரே?
  //மற்ற கருத்துக்களை ,மாற்று கருத்துக்களை சொல்லுங்கள்.அது உங்களின் முதல் பக்கமே ஒழிய இஸ்லாத்தின் மறுபக்கம் இல்லையென நிருபிப்போம்//
  இது வரை கூறியதெல்லாம் என்ன ? நீங்கள் நிரூபிப்போம்,வெற்றி பெறுவோம் என்றே கூறிக்கொண்டிருந்தால் அடுத்தவர்களின் கருத்தை எந்த வகையிலும் சிந்தனையில் செலுத்த விரும்பவில்லை என்பது தெளிவு.
  //ஆர்பாட்டம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம்//
  உங்களுடைய ஆர்ப்பாட்டங்களை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் .
  //நடக்கையில் பாதைக்கு இடையூறாக பழத்தோல்,அனைக்கப்பாடாத பீடி,சிகரெட் துண்டுகள் அகற்றுவது முதல் இந்த தேச மக்களுக்கு ரத்த தானம் செய்வதிலிருந்துபல்வேறுவகையில் தொண்டு செய்து வருகிறோம்//
  உங்களுக்கு தெரிந்த புரட்சி இதுதானா?
  தேசத்தை அடகு வைப்பது என்றால் என்ன என்பதை தெரிந்துவிட்டு அப்புறம் அது யாரிடம் அடகு வைக்கப்பட்டுகொண்டிருக்கிறது அல்லாஹ்விடமா? இல்லை அன்னியனிடமா? என்று கேளுங்கள்
  //ஹதித்கள் பற்றி இறைவன் நாடினால் விளக்குவேன்//
  இறைவன் நாடாவிட்டாலும் நீங்கள் விளக்குவீர்கள் என்பது எனக்கு தெரியும்!
  //குழந்தைகளும் பாதிக்கப்பட்டு விடுவார்களே என்று கேட்கப்பட்டது அதற்கு அக்குழந்தைகளும் அவர்களின் தந்தையை சேர்ந்தவர்களே என்று பதிலுரைத்தார்கள்.//
  ஒரு காட்டுமிராண்டி கூட இதனை ஏற்றுக்கொள்ளமாட்டான்!
  எந்த ஒரு மனிதாபிமானவனும் இதனை நடைமுறைபடுத்த மாட்டான்!
  இதனையும் நீங்கள் நியாயப்படுத்துவீர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி,அப்புறம் என்ன தொடரட்டும் உங்களின் மாற்று ஹதீதுகளின் அணிவகுப்பு,
  என்னால முடியல இப்ராகிம்.

 51. சகோதரன் //முஹம்மது நபி[ஸல்] அவர்களைப் பற்றி அவதூறுகள் பரப்புவதற்கு//
  எதுவும் தேவையில்லை முகம்மதுவை பற்றி கூறுவதற்கு. உங்களுடைய புஹாரி,முஸ்லிம் போன்ற பதிவுகளே போதும். இதுவரை இஸ்லாத்திற்கு எதிரான பதிவுகள் அனைத்தும் எதிலிருந்து எடுக்கப்பட்டது என்று நினைக்கீறீர்கள்?////
  உலகத்தில் இதுவரை சிறப்பு மிக்க மனிதர்களின் வரலாற்றை அவர்களின் தரப்பில் எழுதியவர்கள் ,அவர்களின் ஒரு பக்கத்தை மட்டுமே எழுதியுள்ளனர் .அவர்களை சாதனைகளையும் மெச்சப்பட்ட பண்புகளையும் அவர்களுக்கு சாதகமானவற்றையும் பற்றியே எழுதியுள்ளனர் .அவர்களின் மறுபக்கம் மிச்சப்பட்ட குணங்களையும் நடவடிக்கைகளையும் மற்றவர்களால் விமர்சிக்கப்பட்டாலும் அவை எதிர்தரப்பு கருத்துக்கள் என்று அங்கீகாரம் இல்லாதவைகளாக கருதப்பட்டு வந்துள்ளன .
  ஆனால் முஹம்மது நபி[ஸல்] அவர்களின் வரலாற்று குறிப்புகள் அவரது 24 மணி நேர வாழ்க்கைகளும் அப்படியே விடுபடாமல் வரலாற்று குறிப்புகளாக மக்கள் மத்தியில் வைக்கப்பட்டுள்ளது.அவர்களின் வாழ்க்கையின் ஒரு நிமிடத்துளிகள் கூட விடப்படாது அவரது தோழர்கள் அல்லது மனைவிகள் முஹம்மது நபி[ஸல்] அவர்களுடன் நெருங்கியவர்களாக இருந்து அவரது வாழ்க்கை குறிப்புகளை உலகத்தில் வெளிப்படையாக வைத்துள்ளனர்..அவற்றில் ஒரு சில வரலாற்று குறிப்புகள் தவறுதலாக அறிவிப்பாளர்களால் கூறப்பட்டிருக்கும்.அவற்றினையும் அலசி ஆயிந்து அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் நூற்றுக்கணக்கான அறிஞர்கள் குறிப்புகள் தந்துள்ளனர்.ஆனால் யூதர்களும் யூத கருத்துடையவர்களும் அதில் உள்ளசிலவற்றினை தங்களுக்கு சாதகமாக் விகாரமாக அர்த்தம் செய்து அனர்த்தம் செய்து வருகின்றனர்.
  ///யூதர்கள் தமிழ்நாட்டில் வந்து முஹம்மதுக்கு எதிராக தமிழில் புத்தகம் வெளியிட்டுவிட்டார்களா?///
  இது அறிவுக்கு பொறந்தும் கேள்வியா? யூத கழிவுகளை உண்டு வாந்தி எடுக்கும் பலதமிழ் கழிசடைகளை காணவில்லையா?
  /////கெட்டவர்களாகவே அடையாளப்படுத்திவிட்டு நல்லவர்கள் இல்லை என்று கூறலாமா சகோதரரே?///
  நல்லவர்கள் இருந்தால் நீங்கள் அடையாளம் காட்டுங்கள்.
  ///இது வரை கூறியதெல்லாம் என்ன ? நீங்கள் நிரூபிப்போம்,வெற்றி பெறுவோம் என்றே கூறிக்கொண்டிருந்தால் அடுத்தவர்களின் கருத்தை எந்த வகையிலும் சிந்தனையில் செலுத்த விரும்பவில்லை என்பது தெளிவு.///
  இதுவரை நீங்கள் என்னிடம் கூறினீர்கள்?
  ///உங்களுக்கு தெரிந்த புரட்சி இதுதானா?///
  1980 இல் தமிழக இஸ்லாமிய சமுதாயம் எப்படி இருந்தது ?இப்போது எப்படி இருக்கிறது ?இக்காலத்தில் மாற்றங்களை அறிதவர்களுக்கு எங்களின் புரட்சி தெரியும்.
  ////தேசத்தை அடகு வைப்பது என்றால் என்ன என்பதை தெரிந்துவிட்டு அப்புறம் அது யாரிடம் அடகு வைக்கப்பட்டுகொண்டிருக்கிறது அல்லாஹ்விடமா? இல்லை அன்னியனிடமா? என்று கேளுங்கள்/////
  வெறும் கற்பனைகளையும் ,நடைமுறைகளுக்கு சாத்தியப்படாத புரட்டுகளையும் ,சர்வதிகார அடாவடியால் சாத்தியப்பட்டவைகளும் புரட்டப்பட்டு ,விரட்டப்பட்டு அழிந்த பிறகு நீங்கள் எதை புரட்சி என்று சொல்ல வருகிறீர்கள்?எதை அடமானம் என்று சொல்ல வருகிறீர்கள்?
  ////ஒரு காட்டுமிராண்டி கூட இதனை ஏற்றுக்கொள்ளமாட்டான்!
  எந்த ஒரு மனிதாபிமானவனும் இதனை நடைமுறைபடுத்த மாட்டான்!///
  ரஷ்யா அந்நாட்டு குழந்தைகளை புரட்சியின் வெடிப்பில் கொன்றது ,உலகப் போரில் கொன்றது எவ்வித காரணமுமின்றி ஆப்கானில் அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்து அந்நாட்டை இன்றுவரை சீரழிக்க காரணமாக இருந்தது ,ஜப்பானில் அணுகுண்டுகளை வீசி அதன் பாதிப்புகளை இன்று பிறக்கும் குழந்தைகளை கூட பாதிப்புக் குள்ளாக்கியது முதல் மானை கொன்றால் சிறை மயிரய் இழுத்தால் சிறை என்னும் மனிதாபிமான மிக்க என்று கூறப்படும் இக்கால ஈராக்கில் விண்ணில் இருந்தே குண்டு வீசி எத்தனை குழந்தைகளை கொன்று குவித்தீர்கள் என்று டிவியில் பார்க்கவில்லையா?
  இவர்கள் காட்டு மிராண்டிகளா ?நாட்டு காருண்யா கண்மணிகளா?என்பதை முதலில் சொல்லுங்கள் அப்புறம் நபி ஸல் கலைத்து போர்களைப் பற்றி பார்ப்போம்

 52. சகோ.இப்ராகிம்
  //ரஷ்யா அந்நாட்டு குழந்தைகளை புரட்சியின் வெடிப்பி………இவர்கள் காட்டு மிராண்டிகளா ?நாட்டு காருண்யா கண்மணிகளா?//
  இப்ப இதுவா சந்தேகம்?திரும்பவும் கெட்டவர்களை அடையாளப்படுத்த கேட்டேனா?
  /////////// இப்படியே போட்டு போட்டு பதில் கூறுவதற்கு பதில் கேட்ட சந்தேகத்திற்கு பதில் கூறுங்கள்
  //அக்குழந்தைகளும் அவர்களின் தந்தையை சேர்ந்தவர்களே//
  அப்படியென்றால் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்று அர்த்தம் .
  இந்த செயல் சரியா?
  ஒரு வரியில் பதில் கூறுங்கள்.

 53. எழுத்து விவாதத்துக்கு சவால் விட்டிருக்கும் செங்கொடியே, நான் விவாதத்துக்கு வருகிறேன் என்று கூறியும் எஸ்கேப் ஆனது ஏன்? தைரியம் இருந்தால் விவாதத்துக்கு வா, சாக்குப்போக்கு சொல்லி ஓடி ஒழியாதே. சகோதரர் குலாம் மீது பாய்ந்து பிடுங்கும் செங்கொடி என்னுடன் விவாதத்துக்கு வர பய்ப்படுவது ஏன்? நோஸ்கட்டாகிவிடும் என்று பயமா? பதில் சொல் செங்கொடியே

 54. சகோதரன் //////
  ///////// இப்படியே போட்டு போட்டு பதில் கூறுவதற்கு பதில் கேட்ட சந்தேகத்திற்கு பதில் கூறுங்கள்
  //அக்குழந்தைகளும் அவர்களின் தந்தையை சேர்ந்தவர்களே//
  அப்படியென்றால் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்று அர்த்தம் .
  இந்த செயல் சரியா?////

  போரில் குழந்தைகளையும் பெண்களையும் வயோதிகர்களையும் கொல்லக் கூடாது என்று குர்ஆன் தெளிவாக அறிவிப்பதை தாங்கள் அறியாது அல்ல.இருப்பினும் இஸ்லாத்திற்கு எதிராக ஏதாவது ஒரு செய்தி கிடைக்காதா ?அதைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருப்பது உங்களைப் போன்றோரின் வாடிக்கை.
  போரில் குழந்தைகள் கொல்லக் கூடாது என்ற குரான் கட்டளைகளுக்கு மாற்றமாக இரவில் தாக்குதல் நடத்தும் வேளையில் குழந்தைகளும் கொல்லப் பட்டுவிடுவார்களே என்ன செய்வது என்று வீரர்களின் கேள்விக்கு நபி ஸல் அவர்கள் பதிலா அளிக்கும் ஹதித் அது .நிர்ப்பந்தமான சூழ்நிலையில் வேறு வழி என்பதுதான் அதன் பொருள் .எதிரிகளை கொல்லுகையில் தவறுதலாக குழந்தைகள் கொல்லப்பட் வாய்ப்பிருந்திர்க்கிறது அந்த மட்டிலுமே எடுத்துக் கொள்ள .முடியும் .
  இரு எதிரிகளும் ரிவால்வர் கையில் வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் சுட்டுத்தள்ள முயற்சிக்கிரறாக்கள் .அதில் ஒருவர் தனது குழந்தையை கேடயமாக வைத்து குழந்தை சுட்டுவிடாதே என்று கூறிக் கொண்டு அதே சமயத்தில் தனது ரிவால்வரால் எதிரியை சுட்டுக் கொல்ல முயற்சி செய்தால் அந்த எதிரியாக நீங்கள் இருந்தால் நான் செத்தாலும் பரவாயில்லை எதிரியின் குழந்தையை கொல்லக் கூடாது என்று இருப்பீர்களா?
  சகோதரன் /////—————–/////// நீங்கள் இனி இப்படி போட்டு கேட்காமல் ஒரே வரியில் பதில் சொல்லுங்கள்

 55. சகோ.
  குழந்தையை கொன்றது சரியா? தவறா? என்றுதான் கேட்டேனே தவிர எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்று கேட்கவில்லை! உங்களுக்கு மட்டும் அந்த ரிவால்வர் சூழ்நிலை எப்படி தெரிந்ததோ என்று எனக்கு தெரியவில்லை.அப்படி சூழ்நிலையை விளக்கி ஹதீது எதுவும் உள்ளதா? போரில் எதிரிகளின் பெண்கள்,குழந்தைகளை அடிமைகளாக பிடிப்பது சொத்துக்களை தனதாக்கிகொள்வது என்பது அன்றைய உலக நிலை.
  அது சரி என்று இன்றும் லாவணி பாடுவது உங்களுடைய நிலை
  ,மேலும் ஒன்றை சரிஎன்று கூறிவிட்டு பின்னர் அது தவறு என்று சட்டம் அல்லது வஹி என்று கூறுவதற்கு இறைவனும் தேவையில்லை,தூதரும் தேவையில்லை !
  முத் ஆ திருமணம்,மது, ஆரம்பித்து போரில் அதுவும் இரவில் குழந்தைகளை கொல்வது சரியென்று கூறிவிட்டு பின்னர் அதனை தடை செய்தது வரை எல்லாம் முஹம்மது என்ற தனி மனிதனின் அனுபவங்கள்தான்!
  அப்படி தீயவர்களை,தீமைகளை எதிர்க்க வேண்டும் என்பதில் யாருக்கும் குறிப்பாக பகுத்தறிவு சிந்தனையாளர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கமுடியாது ,
  மனிதனின் இயலாமையிலேயே தீமையை எதிர்க்க வழி பலவாக கையாளப்படுகின்றது
  மார்க்கத்தை கூறி முடிக்கவே இத்தனை போர்களா? இதுதான் எல்லாம் வல்ல இறைவனின் வல்லமையா?

 56. சகோ
  இரவில் நல்லவன் சென்று போர் புரிய மாட்டான் ! கொள்ளைக்காரன் மட்டுமே செல்வான்!
  அதுவும் குழந்தைகளையும்,பெண்களையும் கொல்வது நல்லவனுக்கு அழகல்ல!
  சரி அப்படி ஏதோ ஒரு சூழ்நிலையில் சேதப்படுத்துவதாக இருந்தாலும் அதையும் இறைதூதரிடம் கேட்டுத்தான் தெரிந்துகொள்ளவேண்டுமா?
  கொஞ்சம் இப்போது யோசித்துப்பாருங்கள் உண்மை என்னவென்று புரியும்!
  இவர்களின் நிலை அன்று அதுதான்! அதைத்தாண்டி சிந்திக்க இறைவனும் வாய்ப்புகளை வழங்கவில்லை!
  எவன் செத்து ஒழிந்தால் எனக்கென்ன? எனக்கு தேவை என்னுடைய மார்க்கம் பரவ வேண்டும்,அதை தவிர எதை எவர் நல்லதென்று,செய்தாலும் ,தீமையை செய்தாலும் பதிலடி கொடுப்பேன் என்று கர்ஜிப்பதை குரானில் நீங்கள் கண்டிருப்பீர்கள்! வேறு வழியே இல்லையா?சிந்தனை செய் சிந்தனை செய் கெஞ்ச மட்டும் தெரிந்தால் போதுமா?

 57. சகோதரா ////கிங்//எவன் செத்து ஒழிந்தால் எனக்கென்ன? எனக்கு தேவை என்னுடைய மார்க்கம் பரவ வேண்டும்,அதை தவிர எதை எவர் நல்லதென்று,செய்தாலும் ,தீமையை செய்தாலும் பதிலடி கொடுப்பேன் என்று கர்ஜிப்பதை குரானில் நீங்கள் கண்டிருப்பீர்கள்! ////
  கீழ்க்காணும் ஹதித்கள் உங்களது கருத்துக்கு எதிராக இருப்பதை அறிந்துகொள்ளுங்கள் .மேலும் குதிரை வீரர் குறிப்பிட்ட போரில் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டதாக எந்த தகவலும் கிடையாது .ஆதலால் கேள்வியை வைத்தே கொல்லப்பட்டுவிட்டதாக கதைப்பதை தவிர்க்கவும் .
  s\சகோதரா
  யூதர்களில் ஒருவர் முகத்தி917. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
  யூதர்களில் ஒருவர் முகத்தில் அடி வாங்கிக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவர், ‘முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘அவரைக் கூப்பிடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே அவரை அழைத்(து வந்)தார்கள். (அவரிடம்) ‘இவரை முகத்தில் அறைந்தீரா?’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் ‘மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தேடுத்தவன் மீது சத்தியமாக’ என்று கூறக் கேட்டேன். உடனே நான், ‘முஹம்மத்(ஸல்) அவர்களை விடவுமா? என வினவினேன். அப்போது எனக்குக் கோபம் ஏற்பட்டு இவரை அறைந்து விட்டேன்’ என்றார். நபி(ஸல்) அவர்கள் ‘இறைத்தூதர்களிடையே என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்து விடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா? அல்லது ‘தூர்’ (சினாய்) மலையில் (இறைவனைச் சந்தித்த போது) அவர்கள் அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டுவிடப்பட்டார்களா? என்று எனக்குத் தெரியாது’ என்று கூறினார்கள்.62
  Volume :7 Book :87
  ல் அடி 3015. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பங்கெடுத்த புனிதப் போர்களில் ஒன்றில் பெண்ணொருத்தி கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதைத் தடை செய்தார்கள்.

 58. அக்குழந்தைகளும் அவர்களின் தந்தையை சேர்ந்தவர்களே//
  அப்படியென்றால் குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்று அர்த்தம் .
  இந்த செயல் சரியா?
  .
  சகோ

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s