செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 21

பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை (https://senkodi.wordpress.com/2010/03/26/fir-awn/)

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு: பிர் அவ்னும் பிதற்றும் செங்கொடியும் (http://ihsasonline.wordpress.com/2012/10/09/firawn_and_senkodi/)

நான் பிதற்றியிருப்பதாக கூறியிருக்கும் நண்பர் இஹ்சாஸ் தன்னுடைய பதிவில் பிதற்றாமல் கூறியிருப்பது என்ன? இதை தெரிந்து கொள்ள வேண்டுமானால், பிர் அவ்னின் உடல் குறித்து நான் என்னுடைய கட்டுரையில் எழுப்பியிருந்த கேள்விகளை தெரிந்து கொள்வது அவசியம்.

1) பிர் அவ்ன் என்பது தனியாக எந்த மன்னனையும் குறிக்காது. சோழ மன்னன் பாண்டிய மன்னன் என்பதுபோல் குலத்தைக் குறிக்கும் சொல்.
2) இரண்டாம் ரமோசஸின் உடல் மட்டுமல்ல எகிப்திய மன்னர்கள் பலரது உடல் வேதம் குறிப்பிடும் மன்னனாக அடையாளப் படுத்தப்பட்டிருக்கிறது.
3) இரண்டாம் ரமோசஸின் உடல் செயற்கையாக பதப்படுத்தப்பட்டது தானேயன்றி பதப்படுத்தப்படாமல் கடலில் கண்டெடுக்கப்பட்டதல்ல.
4) இரண்டாம் ரமோசஸ் கடலில் மூழ்கடித்து கொல்லப்பட்டவனல்ல இயற்கையாக தொன்னூறு வயது வரை வாழ்ந்து ஆட்சி செய்து மறைந்தவன்.
5) வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அப்படியான நிகழ்ச்சி வரலாற்றில் நிகழ்ந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லாததோடு மட்டுமன்றி அதில் ஏராளமான முரண்பாடுகளும் இருக்கின்றன.

மேற்குறிப்பிடப் பட்டிருக்கும் எதற்காவது இஹ்சாஸ் பதிலளித்திருக்கிறாரா? அந்தக் கட்டுரையில் மையமாக எழுப்பப்பட்ட எதற்கும் பதிலளிக்காமல் அதை பிதற்றல் என்று எப்படி ஒருவரால் முடிவு செய்ய முடியும் என்றால், அவருக்கு மதப் பைத்தியம் முற்றியிருக்கிறது என்பதைத் தவிர வேறொரு முடிவுக்கு வர முடியுமா? சரி என்னதான் கூறியிருக்கிறார் அவரின் மறுப்புப் பதிவில்?

தொடக்கத்திலேயே அடித்திருக்கிறார் பாருங்கள் ஒரு பல்டி; தேர்ந்த சர்கஸ் கலைஞன் கூட அடிக்கத் துணியாத அளவுக்கான பல்டி. அந்த உடல் குரான் குறிப்பிடும் உடல் தான் என்று குரானோ முகம்மதோ கூறவில்லை. மட்டுமல்லாது அந்த உடல் வெளிப்படுத்தப்பட்டு விட்டதா அல்லது இனிமேல் தான் வெளிப்படுத்தப்படுமா என்பதும் தெரியாது. எனவே இதை வைத்துக் கொண்டு குரான் பிழை என்று கூறக்கூடாது என்கிறார். ஐயா, இஹ்சாஸ் இஸ்லாமிய பரப்புரை மேடைகளிலெல்லாம் பல ஆண்டுகளாக அந்த உடல் குரானை மெய்ப்படுத்தி விட்டிருக்கிறது என்று நீங்கள் விதந்து போற்றும் பிஜே உட்பட பலரும் பேசி வந்திருக்கிறார்களே; ஆவணமாக எழுதி வைத்திருக்கிறார்களே; குரான் மொழிபெயர்ப்புகளில் கூட அதை இடம்பெறச் செய்திருக்கிறார்களே; இப்போது நீங்கள் கூறும் இந்தப் பதிலை அவர்களிடம் ஏன் நீங்கள் கூறியிருக்கக் கூடாது. குரான் கூறும் அந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்கிறீர்களா? கண்டுபிடிக்கப்படவில்லை என்கிறீர்களா? எப்படி சமாளிக்கலாம் என்று யோசிப்பதை விட ஏன் உண்மையை தெரிந்து கொள்ள நீங்கள் முயலக்கூடாது? ஓ .. உண்மையை தெரிந்து கொள்ள முயன்றால் நீங்கள் மதவாதியாக நீடிக்க முடியாது என்பதாலா?

மம்மிகளை பதப்படுத்த அக்கால மனிதர்கள் நேட்ரான் எனும் உப்பையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் அது குரான் கூறும் உடல் தான் என சத்தியம் செய்பவர்கள் அந்த உடலில் உப்பு இருந்தது என்பதைத் தவிர வேறு எந்தச் சான்றையும் வைக்கவில்லை. அதேநேரம் அந்த நேரத்தில் அந்த மருத்துவர் கூறியதை மறுத்து எழுப்பட்ட கேள்விகள் எதற்கும் அவர் பதிலளித்ததில்லை. மட்டுமல்லாது அது குரான் கூறும் உடல் தான் என்பதை நிரூபித்தால் ஆதாயமடையும் இடத்தில் அவர் இருந்திருக்கிறார். அதாவது சௌதி மன்னரின் குடும்ப வைத்தியராக இருந்திருக்கிறார். இது ஒருபுறம் இருக்கட்டும், ஏன் அந்த உடல் பிரமிடினுள் இல்லாமல் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட வேண்டும்? இது வரலாற்று அறிவு இல்லாமல் எழுப்பப்படும் கேள்வி. அந்த உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் ஏதோ ஒரு நதிப்பள்ளத்தாக்கு அல்ல. ராஜாக்களின் பள்ளத்தாக்கு என்பது தான் அந்த இடத்தின் பெயர். ஏன் அந்தப் பெயர் வந்தது என்றால், பல மன்னர்களின் உடல் அங்கு புதைக்கப்பட்டிருக்கிறது என்பதால் தான். பிரமிடுகள் என்பது பதப்படுத்தப்பட்ட மன்னர்கள் என்றாவது உயிர் பெற்று எழக்கூடும் எனும் நம்பிக்கையின் நீட்சி. இதனால் பொன்னையும், ஏராளமான பொருட்களையும் ஏன் இளம் பெண்களையும் கூட மன்னர்களின் உடலுடன் வைத்தார்கள். இதனால் திருட்டும் மம்மிகளை சேதப்படுத்துவதும் நடந்திருக்கிறது. எனவே மன்னர்களின் பதப்படுத்தப்பட்ட உடலை பாதுகாப்பதற்காக பிரமிடுகளில் வைக்காமல் மறைத்து வைப்பதும், அடிக்கடி இடம் மாற்றுவது நடந்திருக்கிறது என்பதை வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. ஏன் இரண்டாம் ராமோசஸ் உடலிலும் கூட அது எங்கெல்லாம் இடம் மாற்றப்பட்டது என்பதற்கான குறிப்புகள் கிடைத்திருக்கின்றன. எனவே அந்த உடல் பிரமிடினுள் இல்லை என்பதே கடலிலிருந்து கிடைத்தது என்பதற்கான ஆதாரமாகி விடாது. அதுசரி இதே ரீதியில் ஒரு எதிர்க்கேள்வியும் எழுப்பலாம். கடலில் வீடப்பட்ட அந்த உடல் ராஜாக்களின் பள்ளத்தாக்குக்கு வந்தது எப்படி?

அடுத்து என்னுடைய கட்டுரைகளிலிருந்து சில மேற்கோள்களை குறிப்பிட்டு விளக்கம் கூறுவதாக எண்ணிக் கொண்டு ஏதேதோ கூறியிருக்கிறார். இரண்டாம் ரமோசஸ் மூட்டுவலியால் இறந்தாரா? பல்வலியால் இறந்தாரா? என்பது முதன்மையானதல்ல அவர் தொன்னூறு வயதுவரை வாழ்ந்திருக்கிறார் என்பதே கவனிக்கப்பட வேண்டியதும் பதில் கூறப்பட வேண்டியதுமான விசயம். பிர் அவ்ன் உடலைப் பொருத்தவரை மதவாதிகள் கூறியிருப்பது என்ன? பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே அந்த உடலை வெளிப்படுத்தி இருந்தால் அதனை பாதுகாத்து வைத்திருக்கும் தொழில்நுட்பம் மனிதனுக்கு தெரியாது என்பதால் அந்த உடலை அழிய விட்டிருப்பான் என்பதால் அந்த தொழில் நுட்பம் தெரிந்த இன்றைய காலத்தில் அல்லா அதை வெளிப்படுத்தியிருக்கிறான் என்று கூறுகிறார்கள் மதவாதிகள். இதை மறுத்துத்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனிதன் பதப்படுத்திய உடல் இன்றும் பாதுகாப்பாக கிடைத்திருக்கிறது. இதன் பொருள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் பதப்படுத்தும் தொழில்நுட்பம் தெரிந்திருக்கிறான் என்பது தான். அதைத்தான் மம்மிகளும் உறுதிப்படுத்துகின்றன. அப்படியென்றால் அந்தக் காலத்தில் தொழில்நுட்பம் தெரியாது இப்போது தெரியும் என்று மதவாதிகள் சிக்ஸர் அடிப்பது, அவர்களின் உட்டாலக்கடி வேலைக்கு எடுத்துக்காட்டு. இதை மறுக்கிறேன் என்று நண்பர் இஹ்சாஸ் என்ன எழுதியிருக்கிறார்? ரமோசஸ் கடலில் மூழ்கி இறந்ததும் அவனும் அவன் படையும் அவன் சாம்ராஜ்யமும் அழிந்து விட்டது. எனவே யார் பாதுகாத்து வைத்திருக்க முடியும் என்கிறார். அவ்வாறு இரண்டாம் ரமோசஸ் இறந்தபின் அவன் சாம்ராஜ்யம் அழிந்து விட்டது என்பதற்கு ஆதாரமாக நண்பர் இஹ்சாஸிடம் ஏதாவது பௌன்சர்கள் இருந்தால் வீசிப் பார்க்கட்டும். ஏனென்றால் இரண்டாம் ரமோசஸுக்குப் பிறகு அவனது பதிமூன்றாவது மகன் அரியணைக்கு வந்தான் என்கிறது வரலாறு. தெளிவாகச் சொன்னால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்லிவிட்டு அதுதான் பட்டுக் கோட்டைக்கான வழி என்று அடம் பிடிக்கிறார்.

அடுத்து மெர்நெப்தாவின் உடலை அதுதான் அந்த உடல் என்று கூறப்படுவதற்கு எதிராக ஒரு சான்றை குறிப்பிட்டிருந்தேன். அதாவது தான் கானான் பகுதியை வெற்றி கொண்டதையும் ஆட்சி புரிந்ததையும் கல்வெட்டாக அம்மன்னன் குறித்து வைத்திருக்கிறான். அதாவது தான் கடலில் மூழ்கி இறந்து போனதன் பிறகு புதிதாக உறுவான குடியேற்றப்பகுதியான கானான் பிரதேசத்தை தான் உயிருடன் இருக்கும் போதே ஆட்சி செலுத்தியிருப்பதாக கல்வெட்டு பதித்துருக்கிறான் என்று கூறினால்; அதை மறுக்கிறேன் என்று நண்பர் இஹ்சாஸ் குரான் கானான் பிரதேசம் என்று பெயர் குறிப்பிடவில்லை. மன்னன் கடலில் மூழ்கி இறந்த பிறகு அவன் எப்படி ஆட்சியதிகாரம் செலுத்தியிருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். குரான் அந்தப் பகுதியின் பெயரை மட்டுமா குறிப்பிடவில்லை, மன்னனின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை. அதனால் தானே இஹ்சாஸ் ஆராதிக்கும் மதவாத அறிஞர்(!) இஷ்டத்துக்கு கிரிக்கெட் விளையாட முடிகிறது. அதுசரி நண்பர் இஹ்சாஸ் குரான் கூறும் உடல் இரண்டாம் ரமோசஸ் என்கிறாரா? மெர்நெப்தா என்கிறாரா? எதோ எழுதி வைப்போம் என எண்ணாமல் எழுதியிருப்பது என்ன என்று கொஞ்சல் புரிந்து கொள்ள முயல்வது நல்லது.

இவைகளெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் 10:92 ம் வசனத்தில் இடம் பெற்றிருக்கும் “ஃபிபதனிக்க” எனும் சொல்லின் பொருள் என்ன? ஆங்கிலத்தில் குரானுக்கு உரையெழுதியவர்களில் பெரும்பாலானோர் “we will save in your body” என்று மொழிபெயர்த்திருக்க தமிழில் மட்டும் அது “உன் உடலை பாதுகாப்போம்” என்று மாறிப் போனதன் மர்மம் என்ன? உன்னை உன் உடலில் பாதுகாப்போம் என்பதற்கும், உன் உடலைப் பாதுகாப்போம் என்பதற்கும் இடையே உள்ள பொருள் வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது. உன்னை உன் உடலில் பாதுகாப்பேன் என்றால் உயிருடன் பாதுகாப்பேன் என்று பொருள். உன் உடலைப் பாதுகாப்பேன் என்றால் உன்னைக் கொன்று உன் உடலை மட்டும் பாதுகாப்பேன் என்று பொருள். எது சரியானது? குழப்பமே உன் மறுபெயர் தான் குரானோ.

இஹ்சாஸின் இந்தக் கட்டுரையை படிக்கும் போது இவ்வளவு பரிதாபத்துக்கு உரியவரா நண்பர் என்று தான் எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அவர்தான் எழுதியிருக்கிறார் நான் பிதற்றியிருக்கிறேன் என்று. பாவம் நண்பர் இஹ்சாஸ் .. .. .. வேறு என்னதான் சொல்வது?

6 thoughts on “செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 21

  1. வணக்கம் தருமி ஐயா,

    நானே அப்படி ஒரு எண்ணத்தில் தான் இருந்தேன். இப்போதூ சரியாக இருக்கிறதா? வேறு ஆலோசனைகள் இருந்தால் குறிப்பிடுங்கள்.

  2. நண்பர் சொர்ணமித்ரன்,

    எந்த மதத்தையும் தாக்குவதில்லை, எல்லா மதங்களையும் விமர்சிக்கிறோம். இஸ்லாத்திற்கு எதிரான விமர்சனங்களுக்கு மட்டும் அதிக கவனம் கிடைக்கிறது அவ்வளவு தான்.

  3. ஆராயிந்து அறிந்து கொள்ள சொல்லுகிற ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. உங்களுடைய விமர்சனங்கள் பழுத்த மரத்தில் கல்லடிப்பதற்கான எடுத்துக்காட்டே.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்