ஆசியபாணி உற்பத்தி முறை, சாதி, இந்திய கம்யூனிசம்

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி நூறாண்டுகள் ஆகின்ற போதும் ஏன் புரட்சியை நோக்கி முகம் திருப்பக் கூட முடியவில்லை? என்றொரு கேள்வியை கம்யூனிஸ்டுகளிடம் எழுப்பினால் .. .. ..

கிடைக்கும் பதிலை இரண்டாக பிரிக்கலாம்.

  1. ஆசிய பாணி உற்பத்தி முறை
  2. சாதி முறை குறித்த போதாமை.

இந்த இரண்டையும் குறித்து தத்துவத் தளத்தில் விவாதிக்கிறார் பேராசிரியர் முர்ஸ்பன் ஜல். இவர் புனேவின் இந்திய கல்வி நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பொருளாதார மற்றும் அரசியல் வாராந்தரி – ஈ.பி.டபிள்யூ இதழில் – மே 10, 2014ல் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு தான் இந்த குறு நூல்.

இன்றைய இந்திய கம்யூனிச சூழலில் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் இந்தப் பொருள் குறித்து விவாதித்தாக வேண்டும். அவ்வாறான விவாதத்துக்கு இக் குறுநூல் சிறந்த பங்களிப்பை வழங்கும் என்பது உறுதி.

நூலிலிருந்து .. .. ..

“இந்திய சமுதாயத்தை இயக்குவது எது? ஆதிக்கம் செலுத்தும் சமூக வர்க்கங்களின், ஆதிக்கம் செலுத்தும் சாதிகளின் சித்தாந்தம் என்ன? இந்திய உயரடுக்கினர் மக்களை ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தவும், அதன் மூலம் இந்தியாவில் புரட்சியைத் தடுக்கவும் முடியும் வகையிலான சித்தாந்தம் என்ன?”

இந்தக் கேள்வி சிந்தனையாளர்களிடம் தோன்றவில்லை. ஏனென்றால், அவர்கள் ஆசியபாணி உற்பத்தி முறை என்ற பரந்த வகையினத்திலிருந்து சாதி என்ற பிரச்சினையை பிரித்து விடுகிறார்கள்.

பதில் எளிமையானதாகத் தெரிகிறது – சாதி என்பது மார்க்சிய அடித்தளத்தின் இயங்கு பொருளாக மட்டுமின்றி, இந்தியாவில் சமூக படிவங்களை வரையறுக்கும் ஹெகலிய சாரமாகவும் கருத்துருவாகவும் உள்ளது. இந்தப் பதில் எளிமையானதாக இருந்தாலும், இந்திய நாகரிகத்தின் இந்த வினோதமான “புதிரை” விடுவிப்பதற்கு ஒரு கறாரான விளக்கவுரை தேவைப்படுகிறது.

படியுங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்

நூலை மின்னூலாக (PDF) பதிவிறக்க

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்