நம்புங்க! பாஸ் நம்புங்க! இஸ்லாம் கண்ணியமான மதம் தான்!

vinavu tntj 2

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற பெயரிலுள்ள மதபிழைப்புவாதக் கும்பல் அன்மையில் காணொளி ஒன்றை வெளியிட்டது. இப்படி காணொளிகளையும், கேட்பொலிகளையும் அடிக்கடி வெளியிடுவது அந்த மதபிழைப்புவாதக் கும்பலுக்கு வாடிக்கை தான் என்றாலும் இந்த முறை அவர்கள் வெளியிட்டது வினவு தோழர்களை எதிர்த்து. அந்த காணொளியை கண்டு நமக்கு அதிர்ச்சி ஏதும் ஏற்படவில்லை. ஏனென்றால் ஏற்கனவே அவர்கள் வெளியிட்ட பல காணொளிகளை கண்டு தொலைத்த அனுபவம் நமக்கு இருக்கிறது என்பதாலும், இது அந்த மதவாதக் கும்பலுக்கு வழக்கமான ஒன்று என்பதாலும் தான். ஆனாலும், மலத்தை அள்ளி வீசி விளையாடிக் கொள்வது அக் கும்பலுக்கு வாடிக்கை என்பதால் அதை நம்மீது வீசுவதை அனுமதிக்க முடியாதல்லவா?

 

இது குறித்த வினவு வின் கட்டுரையையும், அந்த மதக்கூச்சல் காணொளியையும் கீழே உள்ள சுட்டியில் காணலாம்

 

வினவுடன் TNTJ நேருக்கு நேர் : ஒரு காமெடி டைம்

 

வினவு தன்னுடைய வாசகர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்கு திட்டமிட்டு தன் வாசகர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. இதில் அந்த மதபிழைப்புவாதக் கும்பலும் கலந்து கொள்கிறது. அங்கு வினவு எழுதியுள்ள பல கட்டுரைகளில் அதாவது இஸ்லாம் குறித்த கட்டுரைகளில் தவறுகள் இருக்கின்றன என்கிறார்கள். என்ன தவறு இருக்கிறது சொல்லுங்கள்? என்கிறார் தோழர். அதற்கு அந்த மத பிழைப்புவாதக் கும்பல் இன்னின்ன தவறுகளை அந்தக் கட்டுரைகளில் நீங்கள் செய்திருக்கிறீர்கள். இன்னின்ன விதங்களில் அது தவறாக இருக்கிறது என்று விளக்கமளித்திருந்தால்; எது சரி எனும் விவாதம் அங்கு நடந்திருக்கும் அந்தக் கும்பலுக்கு நேர்மையிருந்திருந்தால் முடிவும் கூட எட்டப்பட்டிருக்கும். ஆனால் நடந்தது என்ன? அதை நாங்கள் இங்கு சொல்ல மாட்டோம். மேடை போட்டு சொல்லுகிறோம், நீங்கள் அங்கு வந்து எங்களோடு விவாதம் செய்யுங்கள் என்கிறார்கள். அதாவது, வினவு தோழர்கள் தாங்கள் எழுதிய கட்டுரைகளில் என்ன தவறு செய்திருக்கிறார்கள் என்று கூறுவதற்குக் கூட அவர்களின் விசிலடிச்சான் குஞ்சுகள் நூறு பேர் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள்.

 

ஏம்பா! கண்ணியமான கொம்பனுங்களா! என்ன தவறு என்று எடுத்துக் கூற முடியவில்லை என்றால் எதை நட்டு வைக்கிறதுக்கப்பா அந்த கலந்துரையாடலுக்கு சென்றீர்கள்? நேரடி விவாதத்துக்கு அழைப்பது தான் உங்கள் நோக்கமென்றால், அதை முறையாக அறிவித்துவிட்டு வேறொறு நேரத்தில் சென்றிருக்கலாமே; தோழர் நாளை வாருங்கள் இது குறித்து பேசலாம் என்றாரே சென்றீர்களா? ஏம்பா! கண்ணியமான கொம்பனுங்களா! வம்பு பண்ணுவதற்கென்றே திட்டமிட்டு சென்றீர்களா?

 

ஏம்பா! கண்ணியமான கொம்பனுங்களா! அது என்ன எதுக்கெடுத்தாலும் நேரடி, நேரடின்னு குதிக்கிறீங்க? முகம்மதை நேரடியா பாத்துட்டு தான் நம்புனீங்களா? இல்ல அல்லாவை நேரடியா பாத்தீங்களா? இல்லை புஹாரி என்பவர் 5,92,500 ஹதீஸ்களை பொய் என்று தள்ளினாரே அதை நேரடியாக பார்த்தீர்களா? இப்ப நீங்க நேரடி நேரடின்னு குதிக்கும் மர்மம் என்ன? உங்கள் புரட்டுகளுக்கு அது அங்கீகாரம் வழங்குகிறது என்பதால் தானே. உங்கள் புரட்டு அங்கீகாரத்துக்கு நாங்கள் துணை போவதா?

 

ஏம்பா! கண்ணியமான கொம்பனுங்களா! நீங்க நேரடியா நடத்துன எந்த விவாதத்திலாவது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறீர்களா? ரெண்டு நாள் கூத்தடிச்சுட்டு, உங்க கொள்கை(!) உங்களுக்கு எங்க கொள்கை(!) எங்களுக்குன்னு போறதுக்கு எதுக்குப்பா நேரடி? பொழுது போகவில்லை என்றால் நேரடி நேரடின்னு ரெண்டு காலுல குதிக்க ஆரம்பிச்சுவீங்களா?

 

ஏம்பா! கண்ணியமான கொம்பனுங்களா! வெட்டி ஒட்டி வித்தை காட்டி வீடியோ வெளியிட்டிருக்கிறீர்களே. பேச வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் எடுத்த வீடியோவை ஆடியோவை வெட்டாமல் வெளியிடும் தைரியமோ, துணிவோ, நேர்மையோ இருக்கிறதா உங்களுக்கு? அதைச் செய்யுங்கள் அப்போது யாரும் எதுவும் செய்யாமலேயே கிழிந்து தொங்கும் உங்கள் முகமூடி.

 

ஏம்பா! கண்ணியமான கொம்பனுங்களா! நீங்க கூப்பிட்டா நாங்க உங்க பின்னாடி வந்துரணுங்களா? என்ன தகுதி இருக்கு உங்களுக்கு? மதபிழைப்புவாத கூட்டத்தோடு நாங்க உட்கார்ந்து விவாதம் நடத்துவதா? உழைக்கும் மக்களோடு தான் எங்கள் தொடர்பு. உழைக்கும் மக்களுக்கு துரோகமிழைக்கும் கும்பலோடு எங்களுக்கு ஒரு உறவுமில்லை. உங்களை அம்பலப்படுத்துவது தான் எங்கள் வேலை. அதற்கு உங்களுடன் நேரடியாக விவாதிக்க வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை. சங்க பரிவாரக் கும்பல்களுடன் எப்படி விவாதிக்க மறுக்கிறோமோ அதே அடிப்படையில் தான் இந்த மத பிழைப்புவாதக் கும்பல்களுடனும் விவாதிக்க மறுக்கிறோம். இரண்டுக்கும் ஒரு வேறுபாடும் இல்லை. அதேநேரம், முஸ்லீம்களோடு நாங்கள் பேசுகிறோம், விவாதிக்கிறோம், புரியவைக்கிறோம், வென்றெடுக்கிறோம். ஆனால் மதபிழைப்புவாத கும்பல்களை நாங்கள் அவ்வாறு எடுத்துக் கொள்வதில்லை. ஏனென்றால், அளவுகளில் வித்தியாசமிருந்தாலும் அவர்கள் வர்க்க எதிரிகள்.

 

ஏம்பா! கண்ணியமான கொம்பனுங்களா! உங்க மதம் தான் எல்லாதையும் விட பெஸ்டுண்ணு மெய்யாலுமே கருதுகிறீர்கள் என்றால், வாருங்கள்! எழுத்து விவாதம் என்றால் ஏன் இப்படி பயந்து நடுங்குகிறீர்கள்? நீங்கள் என்றாலும் சரி உங்கள் கடைசி நபி பிஜேவோட பிரதிநிதியானாலும் சரி. வாருங்கள்! ஒரு கை பார்த்து விடலாம்.

 

ஏம்பா! கண்ணியமான கொம்பனுங்களா! நீங்க நேரடியாக என்ன சொல்லி குதிக்க கூப்பிடுறீங்க? இஸ்லாம் சரியா? மார்க்சியம் சரியா?(மார்க்சியம் என்று உச்சரிக்கக் கூட தெரியாத நீங்கள் தோழர்களுக்கு மார்க்சியம் கற்றுக் கொடுக்கப் போகிறீர்களா?) என்று நேரடியா குதிக்கப் போறீங்களே. வினவு எழுதிய கட்டுரைகள், சமூகம் சார்ந்து இருந்ததா? மதம் சார்ந்து இருந்ததா? சமூகத்தை விட்டுவிட்டு ம()தத்தில் மட்டும் குதிக்கிறது உங்கள் நோக்கம். சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்காக எல்லா ()தங்களையும் சுத்தப்படுத்துவது தோழர்கள் நோக்கம். உங்கள் வி.குஞ்சுகளுக்கு வேண்டுமானால் சிந்திக்காமல் நீங்கள் பேசுவது புல்லரிக்கலாம். தோழர்கள் அப்படி அல்ல.

 

ஏம்பா! கண்ணியமான கொம்பனுங்களா! பெரும்பான்மை மக்கள் நம்புவது தான் இஸ்லாம் என்று தோழர்கள் கூறியதில் ஏதாவது தவறு இருக்கிறதா? எது இஸ்லாம்? சன்னி, ஷியா, போரா என்று இருக்கும் பிரிவுகளில் சன்னிகள் பெரும்பான்மையாக இருப்பதால் தானே அதை இஸ்லாமாக நீங்கள் கூறிக் கொண்டிருக்கிறீர்கள்? உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டும் நோக்கத்துடன் அமெரிக்கா பெற்றெடுத்த கள்ளக் குழந்தை தானே இஸ்லாமிய மீட்டுருவாக்கம். அதைச் சொல்லிக் கொண்டுதானே உழைக்கும் மக்களின் மத நம்பிக்கைகளை நீங்கள் கேவலப் படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்? உழைக்கும் மக்களாய் இருக்கும் தோழர்கள் அதைதான் சரியாகக் கூறியிருக்கிறார்கள். இதோ நான் சவால் விட்டுக் கூறுகிறேன். முகம்மதுவுக்கும் இஸ்லாத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை. வரலாற்றறிவும், அறிவு நேர்மையும் கொண்ட எந்தக் கொம்பனும் என்னுடன் எழுத்து விவாதத்துக்கு வரலாம். தைரியம் இருக்கிறதா உங்களில் யாருக்காவது? திராணி இருக்கிறதா உங்களில் எவருக்காவது?

 

அன்பார்ந்த இஸ்லாமிய நண்பர்களே!

 

எல்லா மதங்களையும் போல் நாங்கள் இஸ்லாத்தையும் விமர்சிக்கிறோம். அதில் உங்களுக்கு இருக்கும் கருத்து வேறுபாடு ஒரு பக்கம் இருக்கட்டும். உங்கள் மத நம்பிக்கையின் படியே கூறுங்கள். மேற்கண்ட காணொளியை பார்த்தீர்கள் தானே.

 

  1. இப்படி நாராச நடையில் பேசுவதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?
  1. ஒரு நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் சென்று விளக்களிக்கிறோம் என்று கூறிய பிறகும் நேரடி நேரடி என்று குதிப்பதை அங்கீகரிக்கிறீர்களா?
  1. சிறிய இடம் என்பதை கேவலப்படுத்தும் விதமாக பேசுவதை அங்கீகரிக்கிறீர்களா?
  2. நேரடி விவாதம் உங்களோடு நடத்துவதற்கில்லை என்று கூறய பிறகும் நாள் குறித்து வரவேண்டும் என்று கொக்கரிப்பதை அங்கீகரிக்கிறீர்களா?
  1. வராவிட்டால் சேலை அனுப்புவோம் என்று பெண்களை இழிவு படுத்துவதை அங்கீகரிக்கிறீர்களா?

 

நீங்கள் அங்கீகரிக்க மாட்டீர்கள் என்பது தெரியும். ஆனாலும் அதை உங்களுக்குள்ளே வைத்திராமல் அந்த மதபிழைப்புவாத கும்பலுக்கும் அறிவித்து உங்கள் கண்டனத்தை பதிவு செய்யுங்கள். இதை நாங்கள் எங்களுக்காக கோரவில்லை. உங்களில் சிலரையும் இப்படி அவர்கள் பிராண்டிக் கொண்டிருக்கிறார்கள். அவைகளை தடுக்க வேண்டும் எனும் நோக்கில் கேட்கிறோம். உங்களுக்கு தவறு எனப்படுவதை சுட்டிக் காட்டி கேள்வி கேட்க தயங்காதீர்கள்.

 

கடைசியாக வந்த தகவல்: இந்த மதபிழைப்புவாதக் கும்பல் தங்கள் ஓட்டு அரசியல் நிலைபாடுகளால் அம்பலப்பட்டு தங்கள் சொந்த அணிகளினாலேயே கேள்விகளால் துளைத்தெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் வினவு தோழர்களை நாராசமாக விமர்சித்து பேசிய காணொளியை வெளியிட்டார்கள். இதுவும் அவர்களின் அணிகளிடையே பெரும் அதிருப்தியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது உடனேயே அவர்களின் முகநூல் கணக்கில் பின்னூட்டப் பெட்டியை அடைத்து மூடியதில் வெளிப்பட்டது. இப்போது தனி நபர்களை நாராசமாக விமர்சிப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம் என்று புதிய விதிமுறைகளை ஏற்படுத்தியிருக்கிறார்களாம். இது தான் தோழர்களின் வெற்றி. என்ன தான் மதவாதம் பேசினாலும் உழைக்கும் மக்கள் வர்க்க ரீதியாக ஒன்றிணைவார்கள் என்பதற்கான அடையாளம் இது. மதபிழைப்புவாதக் கும்பலுக்கான சம்மட்டி அடி இது.

 

உழைக்கும் வர்க்கம் அணி திரளும், முதலாளித்துவ, பார்ப்பன, மதவாத கும்பல்களின் ஆதிக்கத்தை வெட்டி வீழ்த்தும்.

7 thoughts on “நம்புங்க! பாஸ் நம்புங்க! இஸ்லாம் கண்ணியமான மதம் தான்!

  1. ததஜாவினரின் முகமூடிகளை கிழிக்க, அவர்கள் நமக்கு வாய்ப்பு தரமாட்டார்கள் போலிருக்கிறது.

  2. நைஜிரிய பெண்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து எழுதி இருப்பிங்களோன்னு நினைச்சேன்.

  3. //சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்காக எல்லா ம(ல)தங்களையும் சுத்தப்படுத்துவது //

    ம(ல)தங்களை சுத்தப்படுத்துவது அல்ல. அகற்றுவது என்றிடுங்கள்.

  4. நம்புங்க! பாஸ் நம்புங்க! தவ்ஹீத் ஜமாத் கண்ணியமான இயக்கம்தான்! இப்படி இருந்திருக்க வேண்டும் பாஸ் தலைப்பு.

  5. நண்பர் ஃபெரோஸ் பாபு,

    அந்த தலைப்பு தவறாக சூட்டப்பட்டதாக நான் கருதவில்லை. ஏனென்றால், அவர்களே தாங்களை முஸ்லீம்களின் பிரதிநிதியாகத் தான் கருதிக் கொள்கிறார்கள். இதோ அவர்கள் தளத்திலுள்ள அறிவிப்பைப் பாருங்கள்.

    tntj

    அறிந்தே தான் இந்த தலைப்பை வைத்தேன். ஆனாலும் தலைப்பின் ஒட்டு மொத்த பொருளின் மாற்றுக் குறைவை உணர்ந்தே இருக்கிறேன். எனவே சுட்டுருவக அணியில் வைக்கப்பட்ட தலைப்பாக கொள்க.

  6. Dear Admin,
    You Are Posting Really Great Articles… Keep It Up…We recently have enhanced our website, “Nam Kural”… We want the links of your valuable articles to be posted in our website…

    To add “Nam Kural – External Vote Button” to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

    To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% – 100% of daily links of NamKural in social networking websites such as,
    1. Facebook: https://www.facebook.com/namkural
    2. Google+: https://plus.google.com/113494682651685644251
    3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

    தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

    நன்றிகள் பல…
    நம் குரல்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்