இந்திப் பூக்களில் தேனிருந்தால், தேனீக்கள் தேடிவரும்!

லநூறு அரசுகளாக சிதறிக்கிடந்த இத்துணைக் கண்டத்தை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தலைமையில் பிரிட்டானியர்கள் ’இந்தியா’ என்று, தனது துப்பாக்கி முனையால் ஒருங்கிணைத்தார்கள். அது நாள் வரை இந்துக்கள் என்றழைக்கப்படும் நால்வர்ணத்தாரில் பார்ப்பனர்கள் வட இந்தியப் பகுதிகளில் தனது பார்ப்பனிய சித்தாந்தத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தி தலைமை சக்தியாக திகழ்ந்து வந்தனர். தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களிடம், தமது பார்ப்பனிய சித்தாந்தத்தை ஆட்சியாளர்கள் மூலம் நிலை நாட்டியிருந்தனர். ஆனாலும் சித்தாந்த மற்றும் அரசியல் தலைமை சக்தியாக வரலாற்றில் ஒரு போதும் தமிழர்களால், பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதில்லை.

வட இந்தியப் பகுதிகளில் சித்தாந்த தலைமையாக இருந்தாலும், அரசியல் தலைமையாக விரல் விட்டு எண்ணிவிடும் இடங்களில், காலங்களில்  குறிப்பிட்ட கால அளவுகளில் மட்டுமே அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தனர். ஒரு வர்ண பிரிவினராக இருந்தாலும் சத்திரிய பிரிவினரும் குலங்களை உள்ளடக்கிய சாதிய கூட்டமைப்பாக இருந்ததால், சமூக செல்வத்தை கைப்பற்றுவதற்கான போட்டியில், அவர்களுக்கு இடையிலான பகைமையினால் ஏற்படும் அரசியல் வெற்றிடங்களே பார்ப்பன கும்பலை அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான காலங்களாக திகழ்ந்தன.

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இத்துணைக் கண்டத்தை வெற்றி கொள்வதற்கான வாய்ப்பையும் கூட, மேற்கண்ட பிரிவினைகளே ஏற்படுத்தி தந்தது. ஆங்கிலேய ஆட்சி தவிர்க்க வியலாத சக்தியாக மாறியதும், அவர்களிடம் முதலில் ஊர்ந்து சென்று அட்டை போல் ஒட்டிக் கொண்டது பார்ப்பன கும்பல். அது நாள் வரை தமது வேதங்களும், புராணங்களும், இதிகாசங்களும் புனிதமானவை என்று நம்மிடம் தம்பட்டம் அடித்து கொண்டிருந்தனர். பார்ப்பன கும்பலின் இந்த புனிதத்தை ஆங்கிலேயர்கள் தமது நலன்களுக்கு ஏற்பவும், தம்மால் சகிக்க முடியாத – பெண்களை உடன் கட்டை ஏற்றுதல் – பார்ப்பன இழிவுகள் சிலவற்றை தனது பூட்ஸ் கால்களால் மிதித்த போதும் அதற்கு எதிராக பொங்கி எழுந்து பார்ப்பன கும்பல் போராடவில்லை. அதற்கு மாறாக அட்டை புழுக்களான பார்ப்பன கும்பலுக்கு வரலாற்றில் வேறு எப்போதுமே கிடைத்திராத அளவுக்கு, ஒரே தலைமையின் கீழ் ஒரு நாடாக இத் துணைக் கண்டம் கிடைத்ததானது, நாடு முழுக்கவே மக்களின் ரத்தத்தை உறுஞ்சுவதற்கான நல் வாய்ப்பாக  கருதியது. இதனால் ஆங்கிலேயர்களின் கால்களை நக்கிப் பிழைக்க ஏதுவாக, புனிதமான தமது தேவ பாசையான சமஸ்கிதத்தை தங்களது கோவணத்திற்குள் செருகி வைத்துக் கொண்டு, ஆங்கிலத்தை கற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.

இருவேறு வரலாற்றுக் கட்டங்களை சேர்ந்தவர்களாயினும், இரு ஆக்கிரமிப்பாளர்களும் – ஆரியர், ஆங்கிலேயர் – ஒருவருக்கொருவர்  தமக்கிடையே, தத்தமது நலன்களுக்கு ஏற்ப புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டனர். முதலாளித்துவ வரலாற்று கால கட்டத்திற்குரிய அரசியல் மற்றும் நிர்வாக கட்டமைப்புகளை ஆங்கிலேயர்கள் உருவாக்கியதும், எதையும் புதிதாக உருவாக்கும் திறனற்ற பார்ப்பன கும்பல், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் உருவாக்கிய உருது மொழியில் இருந்து அராபிய, பாரசீக சொற்களை எடுத்துவிட்டு, அதுவரை தமது கோவணத்திற்குள் செருகி வைத்திருந்த சமஸ்கிருதத்தை, வட இந்திய மக்களின் வட்டார மொழியோடு கலந்து ஆங்கிலேய எசமானர்களின் ஆசியோடு அதற்கு இந்தி என்று பெயர் சூட்டினர்.

இத் துணைக் கண்டத்தை ஆள்வதற்கு மத அடிப்படையில் மக்களை பிரித்தாலும் தனது சூழ்ச்சிக்கு இந்து, இந்தி என்பதை பயன்படுத்த, தனது முழு ஆசியையையும் ஆங்கிலேய ஆட்சி அதற்கு வழங்கியது.

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் காலத்திலேயே நடந்த மாகாணங்களுக்கான தேர்தல்கள் மூலம் ஆட்சியை பிடித்த பார்ப்பன கும்பல், கல்விக் கூடங்களில் இந்தியை கட்டாய மொழியாக்கியது. மராட்டியம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் வாழ்ந்த மக்களின் மொழி மற்றும் கலாச்சார ரீதியிலான பின் தங்கிய நிலையின் காரணமாக அம்மக்கள் பார்ப்பன கும்பல் நலனுக்கான இந்தி திணிப்பை ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் சென்னை மாகாணத்தில், அதிலும் தமிழ் பேசும் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களை, தமது மொழி மற்றும் கலாச்சார வாழ்வின் உயர்ந்த மட்டம் காரணமாக இந்தி திணிப்பை எதிர்த்த போராட்டத்தை தந்தை பெரியார் தலைமையில் நடத்த வைத்தது.

பார்ப்பன ராஜாஜி தலைமையிலான பார்ப்பன கும்பலுக்கு, தமிழர்களின் இந்தப் போராட்டம் இந்தி திணிப்பை கைவிட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அதன் பிறகான வரலாற்றுக் காலம் முழுக்கவே, பார்ப்பன கும்பல் இந்தியை தமிழர்கள் மீது திணிப்பதற்கு இடைவிடாது முயற்சித்தே வருகிறது.

அதிலும் பார்ப்பன பாசிச பாஜக கும்பலின் தலைமையில் மத்திய ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், புதிய கல்விக் கொள்கை, மத்திய அரசுப் பணிகளில் இந்தி தெரியாத தமிழர்களை புறக்கணிப்பது என பல்வேறு வழிகளில் தமிழகத்தில் இந்தியை திணிப்பதற்கு தன்னிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.

இந்தி தெரியாதவர்கள் இந்தியர்கள் இல்லை என்கிறார்கள். இந்தி தெரியாதவர்களும், இந்து அல்லாதவர்களும் தீவிரவாதிகளாக நடத்தப்படுகிறார்கள். தமது ஆட்சி அதிகார பெரும்பான்மையை பயன்படுத்தி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை இல்லாமல் ஆக்கியது போல, இந்தி  தெரியாதவர்கள் இந்தியர்களும் இல்லை, இந்துக்களும் இல்லை என்ற சட்டத்தையும் கொண்டு வந்தால் அதை தமிழர்கள் மனமார வரவேற்க காத்திருக்கிறார்கள்.

”இந்தி தெரியாது போடா”,என்ற முழக்க  வாசகத்தின் உள்ளடக்கம், இந்தி தெரியாதவர்கள் இந்தியர்கள் இல்லை என்ற உங்களின் முடிவை தமிழர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பது தான். இந்தியா என்ற உங்களின் ’புனித’ நாட்டில் வாழ்வதை விட, தமிழனாக, தமிழ் நாட்டில் வாழ்வதையே தமிழர்கள் பெருமையாக கருதுவதன் வெளிப்பாடு தான் இம் முழக்கம்.                

இந்தி தெரியாத மக்கள் அதை எதற்காக தெரிந்து கொள்ள வேண்டும்? ஆங்கிலம் அந்நிய மொழி என்றால் இந்தியும் தமிழர்களுக்கு அந்நிய மொழிதான். ஆனால் ஆங்கிலம் அந்நிய மொழியாக இருந்தாலும் அது தமிழர்களுக்கு தொடர்பு மொழி மட்டுமல்ல, அம் மொழியில் தான் இன்றைய வாழ்க்கைக்கு தவிர்க்க வியலாத விஞ்ஞான கல்வியை தமிழர்கள் கற்கிறார்கள். இந்தியில் கற்பதற்கு என்ன இருக்கிறது?

தமிழர்கள் தமது தாய் மொழியான தமிழை விஞ்ஞான மொழியாக  வளர்த்தெடுக்கவில்லை என்பது உண்மை தான். அதற்கு இந்திய ஆட்சியாளர்கள் தீர்மானிக்கும் சுயசார்பற்ற பொருளாதார கொள்கைகளின் ஓர் அங்கமாக தமிழர்களும் கட்டாயமாக இணைக்க பட்டிருக்கும் உறவு தான் அடிப்படை காரணமாகும். என்னதான் பார்ப்பன கும்பல் சுயசார்பற்ற பொருளாதார கொள்கைகளை திணித்தாலும், கல்வி குலக்கல்வி அடிப்படை நடைமுறையை கொண்டிருந்தாலும், மாநில அரசின் வரம்பிற்கு உட்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி இவைகளை சமூக பரவலாக்கம் செய்திருக்கிறது தமிழ்ச் சமூகம். இதன் வாயிலாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இந்திய மாநிலங்களிலேயே பெரும் சாதனைகளை ஈட்டியிருக்கிறது. இந்த சாதனை தான் பார்ப்பன கும்பலின் கண்களை உறுத்துகிறது. வட நாட்டவர்களின் துபாயாக தமிழகம் மாறியிருக்கிறது. அதை இல்லாமல் செய்வதற்குதான் பார்ப்பன கும்பல் முயற்சிக்கிறது.

காலம்,காலமாக எவ்வளவு இடையூறுகளை எதிர் கொண்டாலும் தமிழர்களின் தாய் மொழியாகிய தமிழ் செழுமையான இலக்கண, இலக்கிய வளம் கொண்ட செம்மொழியாக வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் தமிழை விஞ்ஞான மொழியாக வளர்த்தெடுப்பதற்கான அனைத்து சமூக ரீதியான அறிவார்ந்த உள்ளடக்க கூறுகளையும் கொண்டது தமிழ்ச் சமூகம். மொழி மற்றும் சமூக அடிப்படையில் பல நூற்றாண்டுகள் பின் தங்கிக் கிடக்கும் வட இந்திய சமூகம், தனது ஏலாமையால் ஏற்றுக் கொண்டிருக்கும் ஒரு மொழியை ஏற்க வேண்டிய தேவை தமிழர்களுக்கு எங்கிருந்து வர முடியும்?

பாலை நிலமாக கிடக்கும் இந்தியில் வளம், அறிவு, விஞ்ஞானம் ஆகிய பூக்கள் மலருமா!? அது முடியும் என்றால் அதை அவர்கள் செய்து காட்டட்டும். பூக்கள் மலர்ந்தால், அதிலுல்ல தேனை பருகுவதற்கு தேனீக்களுக்கு எவனும் அழைப்பிதழ் எதையும் அனுப்பத் தேவையில்லை. அது, அதை தானே தேடிவரும்.

மராட்டியர்களும், குஜராத்தியர்களும், ராஜஸ்தானியர்களும் தம்மை ஈன்ற தாயை விபச்சாரி என்று பழித்து விட்டு, கோமாதாவின் யோனியை புனிதமானதாக கொண்டாடினால், அது அவர்களின் உரிமையாக இருந்து விட்டு போகட்டும்! அதை இழிவான செயலாக கருதுவோரும் கூட, அதையே செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவதற்கு எவனுக்கும் உரிமையில்லை!

முதற்பதிவு: மூடக்கிழவன். மெய்ப்பொருள்          

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s