வலதுசாரிகள் மட்டும் தான் நீதிபதி ஆகமுடியுமா?

அரசு எந்திரம் பார்ப்பனியமயமாகி இருக்கிறது என்பது நீண்ட நாட்களாகவே இங்கு நிலவிக் கொண்டிருக்கும் கருத்து. குறிப்பாக மோடி ஒன்றியத்தில் தலைமை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து இது மிக உச்சமாக, மிக வெளிப்படையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நீதித் துறையில். இதற்கு பல்வேறு தீர்ப்புகளை சான்றாக கூறலாம். பாபரி பள்ளிவாசல் வழக்கு, அப்சல் குரு வழக்கு உள்ளிட்டவை மிகவும் துலக்கமானவை.

அண்மையில் வெளியான மூன்று தீர்ப்புகள் குறித்து ரெட்பிக்ஸ் வலையொளிக்காக சவுக்கு சங்கர் அலசுகிறார். நீதிபதிகள் எந்த மாதிரியான சிந்தனையுடன் இருக்கிறார்கள். அவர்களின் தீர்ப்பு குறித்து எழும் விமர்சனங்களுக்கு அல்லது அவர்களின் தீப்பின் தன்மைக்கு எந்த விதத்திலாவது பொறுப்பேற்கும் கடமை அவர்களுக்கு இருக்கிறதா? அப்படி எந்தக் கட்டாயமும் நீதிபதிகளுக்கு இல்லை என்றால், அதேநேரம், அப்படியான விமர்சனங்களில் உணர்ச்சி மேலீட்டில் சொற்களை பயன்படுத்தி விட்டால் அவர் மீதி நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும் உரிமையும் அதிகாரமும் நீதிபதிகளுக்கு உண்டு என்றால் .. .. ..

நீதி மன்றம் என்பதன் பொருள் என்ன?

பாருங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பகிருங்கள்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்