கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே

அண்மைக்காலமாக முகநூலில் இஸ்லாமிய பரப்புரைப் பதிவுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நாத்திகர்களை எதிர்கொள்வதாக எண்ணிக் கொண்டு அவர்கள் இடும் பதிவுகள் நகைப்பை வரவழைக்கின்றன. எடுத்துக்காட்டாக புர்கா கலாச்சாரத்தை எதிர்க்கிறோம் என்றால் பெண்களை ஆடையில்லாமல் அலையச் சொல்கிறோம் என்று அவர்களாகவே பொருள் கொண்டு அதற்கு விளக்கம் அளித்து புளகமடைந்து கொள்கிறார்கள்.

இன்னொரு பக்கம் ஒரு முகநூல் பக்கத்தை இப்படி தொடங்கி இருக்கிறார்கள். 

“நாத்திகர்கள் இஸ்லாத்தை நோக்கி பல கேள்விகளையும் அவதூறுகளையும் முன்வைப்பர். முஸ்லிம்கள் பதில்களை மட்டுமே அளிப்பர். இங்கு நாம் நாத்திகத்தையும் அது சார்ந்த தத்துவங்களையும் சித்தாந்தங்களையும் கொள்கைகளையும் கேள்விக்குட்படுத்தி விவாதிக்கலாம் உரையாடலாம். இஸ்லாத்தை நோக்கி வீசப்படும் கேள்விகளை கேள்விக்குள்ளாக்கும் இடமிது. இனி வெற்றுக் கேள்விகளை வீசி விட்டு தப்பிக்க இயலாது”

இப்படி உயர்ந்த(!)  நோக்கத்தைக் கொண்டிருக்கும் இந்த முகநூல் பக்கத்தின் தலைப்பு: இஸ்லாம் VS நாத்திகம்: தத்துவார்த்த உரையாடல்.

இந்த முகநூல் பக்கத்தில் இணைந்து பதில் கூற வேண்டும் என்று நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டார். தலைப்பும் நோக்கமும் ஈர்ப்பது போல் இருக்கிறதே என்று இணைந்து கொண்டேன். அதன் அப்போதைய பதிவு ஒன்றை எடுத்துக் கொண்டு (கடவுள் யார்?)பதிலளித்தேன். அது விவாதமாக மாறியது.  இந்த விவாதத்தைத் தான் “மீண்டும் ஒரு விவாதம்” என்ற இடுகையாக இட்டேன். ஆனால் இப்போது அந்தப் பதிவு பதிலில்லாமல் முடங்கிக் கிடக்கிறது. இனி வெற்றுக் கேள்விகளை வீசி விட்டு தப்பிக்க இயலாது என்று பெருமையாக எழுதிய அவர்களே, வெற்றுப் பதிவுகளை வீசிவிட்டு தப்பித்துக் கொண்டார்கள்.

நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்களின் கடைசிப் பதிவான கண்ணால் பார்த்தால் தான் நம்புவேன் என்ற பதிவை இப்படி நிறைவு செய்திருக்கிறார்கள்,

“நாத்திகர்கள் இறைவனை தவிர மற்றனைத்தையும் கண்மூடித்தனமாக நேரடியாக கண்ணால் பார்க்காமல் எந்தவித ஆதாரத்தையும் கேட்காமல் ஆராயாமல் நம்புகிறார்கள். இறைவன் என்ற போது மட்டும் கண்ணால் கண்டால் தான் நம்புவேன் என்கிறார்கள். இது அறியாமையின் உச்சம் அல்லது அறிவுசார் நேர்மையின்மை”

இப்படித் தான் அவர்களின் ஒட்டு மொத்த புரிதலுமே போதாமையுடன் இருக்கிறது.  அவர்களாக ஏதாவது ஒன்றை கற்பனை செய்து கொண்டு அந்த கற்பனைக்கு பதிலளித்துக் கொண்டிருக்கிறார்கள். எளிதாக சொன்னால் காற்றில் கத்தி வீசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மெய்யாக அவர்களை பொருட்படுத்தி நம் வாதங்களை வைத்தால் காணாமல் போய் விடுகிறார்கள். இது தான் அவர்களின் அறிவுசார் நேர்மையின்மையாக இருக்கிறது.’’

அண்மையில் இன்னொரு பதிவையும் அவர்கள் எழுதி இருக்கிறார்கள். அறிவியல்வாதம் என்று அதற்குப் பெயர். அதாவது அறிவியலை, சரியா தவறா என்று அறிந்து கொள்வதற்கு பயன்படும் ஆய்வு முறை என்பதிலிருந்து இறக்கி அதையும் ஒருபக்கத்தின் வாதமாக மாற்றி இருக்கிறார்கள். அதில் அவர்கள் எழுதி இருக்கும் சேதிகளெல்லாம் ஏற்கனவே நாம் கூறியது போல கற்பனை வாதங்களாக இருக்கின்றன என்பதோடு மட்டுமல்லாமல் முதிர்ச்சியற்றும் இருக்கின்றன. இதை விவாதமாக முன்னெடுத்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் பதில்களற்று நின்று போகக் கூடும் என்பதால் கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது.

போகட்டும், ஏன் அவர்கள் அமைதியாகி விடுகிறார்கள்? அல்லது ஏன் அவர்களால் பதில் கூற முடிவதில்லை?  ஏனென்றால் ஏற்கனவே, முடிவு செய்யப்பட்டுவிட்ட ஒன்றை நம்பிக் கொண்டிருப்பவர்கள். அதற்கு மாற்றாக அவர்களால் பேச முடியாது, செயல்பட முடியாது. சமூக ஊடகங்களில் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள் என்றால், அதன் பொருள், தங்களுடைய நம்பிக்கையை அப்படியே தக்க வைத்துக் கொண்டு ஏதோ ஒரு வகையில் இதற்கு விடை கூறிவிட முடியும் எனும் எண்ணத்தினால் தானே தவிர வேறெதற்காகவும் இல்லை.  இதை அவர்கள் மெய்யாக அறிந்து கொண்டு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அல்ல. அப்படி அவர்கள் நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு எதிராக உண்மையே வந்து நின்றாலும் கூட, உண்மையின் பேருரு அவர்களை மலைக்க வைத்தாலும் கூட. அதை ஆய்வு செய்வதோ அந்த ஆய்வுகளிலிருந்து முடிவுகளை வந்தடைவதோ அவர்களுக்கு முடியாததாக இருக்கிறது. அதனால் தான் ஒரு கேள்வி எழுப்பப்பட்டதும் அதற்கு பதில் தேடுவதை விட தன்னுடைய நம்பிக்குள் அடங்கவில்லை என்றால் பதில் கூறாமல் கடந்து செல்ல விரும்புகிறார்கள். இதைத் தவிர வேறெந்த காரணமும் இருக்க வாய்ப்பில்லை.

கடவுள் என்ற ஒன்றின் இருப்புக்கு எந்தவிதமான சான்றும் இல்லை. அதேநேரம் உலகில் கோடிக்கணக்கான மக்களால் நம்பப்படுகிறது. இந்த இரண்டையும் இணைத்துத் தான் மதங்கள் குறித்த கண்ணோட்டத்தை மார்க்சியர்கள் வந்தடைகிறார்கள். “இதயமற்ற உலகின் இதயமாகவும், மக்களுக்கு அபினியைப் போன்றும் செயல்படுகிறது மதம்” என்கிறார் ஆசான் மார்க்ஸ். இந்த மேற்கோளில் அபினி எனும் சொல் போதைப் பொருள் எனும் பொருளில் அல்ல, மயக்க மருந்து எனும் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஆசான் லெனின் இன்னும் ஒருபடி மேலே சென்று, “சோசலிச அரசைப் பொருத்தவரை மதம் என்பது மக்களின் தனிப்பட்ட ஒன்று.  கம்யூனிஸ்ட் கட்சியைப் பொருத்தவரை மதம் என்பது சமூகச் சிக்கல்” என்று தெளிவுபடுத்தி இருக்கிறார். இந்த அடிப்படையில் தான் மதங்களை மார்க்சியர்கள் பார்க்கிறார்கள்.

அதனால் தான் மதம் குறித்த விவாதங்களை முன்னிலைப்படுத்தாமல், சமூக, அரசியல், பொருளாதார நிலமைகளை கவனித்து காளமாடிக் கொண்டிருக்கிறார்கள்.  அதேநேரம், தனியுடமை சமூகம் அகலும் போது மதங்கள் காயத்தின் மீது இருக்கும் பொருக்கைப் போல் உலர்ந்து உதிர்ந்து விடும் என்று வாளாவிருக்கவும் முடியாது அல்லவா. அதனால் அவ்வப்போது மேலெழுந்து வரும் சமூகக் கருத்து எனும் அடிப்படையில் மதவாதங்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருவதும் இன்றியமையாததாகிறது.

எனவே, கடவுளை நம்பும் நண்பர்களே, உங்களுக்கு நீங்களே உள்வசமாய் சிந்தித்துப் பாருங்கள். கடவுளை ஏற்றுக் கொள்ள (கவனிக்கவும்: கடவுளை ஏற்றுக் கொள்ள என்று குறிப்பிடப்பட்டுள்ளது, கடவுளை நம்ப என்று அல்ல) ஒற்றை ஒரு காரணம் கூட இல்லை. இதற்கு மேலும் நீங்கள் உங்களின் நம்பிக்கை உண்மை என நம்பினால் கீழ்காணும் சேதிகளுக்கு விடை தேடிப் பாருங்கள்.

கடவுள் இல்லை என மறுப்பதற்கான,

அறிவியல் காரணங்கள்:

1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.

2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.

3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.

வரலாற்று காரணங்கள்:

1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.

2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.

சமூக காரணங்கள்:

1. கடவுளின் தகுதிகள் என்று கூறும் படியான ஆற்றல் இருந்திருந்தால் மனித வாழ்வில் அது செலுத்தியிருக்கும் தாக்கம் மக்களிடம் கண்டறியப்படவில்லை. தெளிவாகச் சொன்னால் மனித வாழ்வின் அறவாழ்வு விழுமியங்கள் அழிந்திருக்கின்றன.

2. கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.

நன்றி.

77 thoughts on “கடவுள் என்பதும் மூடநம்பிக்கையே

 1. மனித அல்லது உலக வரலாற்றில் கடவுள் தோன்றியது மிகவும் பிற்காலத்தில்…

 2. விதிகளை வரைமுறைகளை படைப்பது தான் இறைவன்
  அந்த விதிகளுக்கும் வரைமுறை களுக்கு் ம் அப்பாற் பட்டவன் தான் இறைவன்
  படைத்தவனை அவனுடைய படைப்புகலுக்குள் அடக்க பார்ப்பது அதனுள் வைத்து அளந்து பார்ப்பது பகுத்தறிவல்ல

 3. நீங்களும் உங்கள் நம்பிக்கையை தான் கூறுகிறீர்கள்
  இன்றைய நவீன அறிவியல் கூட இறைவன் இல்லை என்று அறுதியிட்டு உறுதியாக சொல்ல வில்லை சொல்லவும் முடியாது

 4. இல்லை நான் உறுதியாக கூறுகிரேன். நம்பிக்கையை அல்ல. அறிவியல் கடவுள் இருக்கிறதா இல்லையா என்ற எந்தக் கேள்வியையும் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அது கற்பனைகளில் உலகில் விளையாடுவதில்லை. இது வரை கிடைத்த அறிவியல் முடிவுகளின் படி கடவுள் இல்லை.

 5. இது வரை கிடைத்த அறிவியலின் முடிவுகளின் படி///
  இதோடு அறிவியல் ஆராய்ச்சிகள் முடிந்து விட்டதா
  இனி ஆராய்ச்சி எதுவும் செய்யாதா

 6. நீங்கள் சொல்லுங்களேன். இனிவரும் எந்தக் காலத்திலாவது அறிவியல் ஆய்வில் கடவுள் சிக்கி விடுவாரா?

 7. எதிர்காலத்தில் நடக்கலாம்
  அல்லது நடக்காமல் இருக்கலாம்
  அதை
  நிகழ் காலத்தில் நீங்கள் எப்படி முடிவு செய்ய முடியும்

 8. 1. எந்தக் காலத்திலும் கடவுளின் இருப்பை அறிவியலால் உறுதி செய்ய இயலாது. ஏனென்றால் கடவுள் என்ற ஒன்று இல்லை. மறுபக்கம் கடவுளை அறிவியலால் அளக்க முடியாது என்று ஒருமித்த குரலில் அனைத்து ஆத்திகர்களும் கூறுகிறார்கள். அறிவியல் அளந்து விட்டால் அவர் கடவுளாக இருக்க முடியாது என்பதால்.

  2. நிகழ்காலத்தில் நாங்கள் கடவுள் இல்லை என்று கூறுவதற்கு போதிய சான்றுகள் இருக்கின்றன. அறிவியல் உறுதி செய்யவில்லை என கூறும் நீங்கள் கடவுளை எப்படி நம்புகிறீர்கள்? அப்படி என்றால் அது உங்களின் வெற்று நம்பிக்கை தானே. உண்மையை ஒப்புக் கொள்வதில் என்ன தயக்கம்? ஏன் தயக்கம்?

 9. ////கடவுள் இல்லை என மறுப்பதற்கான,

  அறிவியல் காரணங்கள்:

  1. எப்போதும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும் ஆற்றல் என்று எதுவுமில்லை.

  2. தொடக்கமோ முடிவோ இல்லாத பொருள் என்று எதுவும் இல்லை.

  3. எந்த ஒரு பொருளையும் சாராமலும், எந்த ஒன்றிலிருந்து சார்பு பெறப்படாமலும் எதுவுமில்லை.

  வரலாற்று காரணங்கள்:

  1. ஆதி மனிதர்கள் வாழ்வில் கடவுள் எனும் நிலை இருந்ததற்கான எந்த சான்றும் கண்டறியப் படவில்லை.

  2. பூமியில் மனிதன் எனும் உயிரினம் தவிர ஏனைய உயிரினங்களுக்கு கடவுள் எனும் உணர்வு இல்லை.

  சமூக காரணங்கள்:

  1. கடவுளின் தகுதிகள் என்று கூறும் படியான ஆற்றல் இருந்திருந்தால் மனித வாழ்வில் அது செலுத்தியிருக்கும் தாக்கம் மக்களிடம் கண்டறியப்படவில்லை. தெளிவாகச் சொன்னால் மனித வாழ்வின் அறவாழ்வு விழுமியங்கள் அழிந்திருக்கின்றன.

  2. கடவுளிடமிருந்து கிடைத்தது என்று சொல்லத்தக்க, சோதித்தறியத்தக்க எதுவுமே கண்டறியப்படவில்லை.

  நன்றி.
  PUBLISHED BY செங்கொடி////

  பிறக்கும் சிசுவுக்கு இரண்டு தொப்புள் கொடிகள் – ஒன்று தாயோடு இணைந்தது. அது அறுக்கப் பட்டதும், அதற்கு உயிர் கொடுப்பது கண்ணுக்குப் புலப்படா ஆன்ம தொப்புள் கொடி. அது இல்லா விட்டால், நீவீர் இறப்பீர். மானிட / உயிரினப் பிறவிகளை இயக்குவது பிறப்பு / இறப்பை நிகழ்த்துவது நிரந்த படைப்பாளி.

  தேனீக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தேன் சேகரித்து வரும். எறும்பினம் அணிவகுத்துச் செல்லும். உயிரினம் செய்யும் அனைத்து வினைகளும் இறையால் திட்டமிடப் பட்டவை. இறை இல்லையேல் செங்கொடியார் மூச்சுவிட முடியாது. பிரபஞ்சத்தின் நிகழ்வுகள் காரண – விளைவு நியதியைப் பின்பற்றும். சூரிய மண்டலத்தில் பூமி மட்டுமே மானிட / உயிரின / பயிரின வளர்ச்சிக்கு படைக்கப் பட்டுள்ளது. ஆன்மா என்னும் உயிர் இல்லையேல் செங்கொடியின் மூச்சு நின்று விடும்.

  விஞ்ஞான நியதிகள்

  1. காரண – விளைவு, காரண – நிகழ்வு, காரண- இயக்கம்,
  2. எந்திராப்பி [ தேய்வு நியதி ] [ENTROPY LAW]
  3. நியூட்டனின் இயக்க நியதிகள் [அதுவின்றி எதுவும் அசையாது, இயங்காது] . புறத் தூண்டலின்றி அகத் தூண்டல் கிடையாது. அதாவது இறைத் தூண்டலின்றி பிரபஞ்சப் பெருவெடிப்பே நிகழாது. பூமியைச் சுழல விட்டது எது ?

 10. இறைவனை ஒப்பு கொள்ள உங்கள் அறிவியல் தரும் சான்றிதழ்கள் எங்களுக்கு தேவை இல்லை
  இறைவனை உணர அல்லது நம்பிக்கை கொள்ள அல்லது கண்டு கொள்ள அறிவியலின் கருவிகள் தேவை இல்லை
  இறைவன் மனிதர்களுக்கு கொடுத்துள்ள ஆறாம் அறிவை பயன் படுத்தினால் போதுமானது

 11. இது போங்காட்டம்.
  கடவுளை ஒப்புக்கொள்ள அறிவியல் தரும் சான்றிதழ் தேவையில்லை. அறிவியலின் கருவிகள் தேவையில்லை என்று இப்போது கூறும் நீங்கள், முதலிலேயே கூறியிருந்தால் இந்த விவாதம் தேவையற்றுப் போயிருக்குமே. இதை நீங்கள் எந்த இடத்தில் கூறுகிறீர்கள் என்பது முதன்மையானது. கடவுள் என்பது மெய்யான இருப்பா? அல்லது வெறும் நம்பிக்கையா? என இரண்டில் ஒன்று பதில் கூற வேண்டிய இடத்தில் வந்து இதைக் கூறுகிறீர்கள் என்றால் அதன் பொருள் என்ன? கடவுள் மெய்யான இருப்பு அல்ல, எங்களின் நம்பிக்கை தான் என்பதை வேறு சொற்களில் கூறியிருக்கிறீர்கள் என்பது தான். இதைத் தான் நான் கட்டுரையில் வெளிப்படுத்தி இருக்கிறேன். கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு தப்பித்து ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை.
  இது இருக்கட்டும். அது என்ன? \\உங்கள் அறிவியல் தரும் சான்றிதழ்கள் எங்களுக்கு// என்று எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் என்ன அறிவியலுக்கு எதிரானவர்களா? கடவுள் என்ற ஒன்றைத் தவிர வேறு எதற்கும் நீங்கள் அறிவியலை விட்டு விலகுவதில்லை. அப்புறம் என்ன? உங்கள் அறிவியல் ….. எங்களுக்கு என்று பிரிவு கற்பிக்கிறீர்கள். பார்த்தீர்களா? கடவுள் எனும் கற்பிதத்தை மெய்ப்படுத்த வேண்டி எந்த எல்லையில் சென்று நிற்கிறீர்கள் என்று. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
  அது என்ன இறைவன் கொடுத்த ஆறாம் அறிவு? இந்த அறிவுக்கு இலக்கமிடும் வேலையில் எனக்கு உடன்பாடில்லை. இறைவன் கொடுத்தது என்பது உங்கள் நம்பிக்கை அது உங்களிடமே இருக்கட்டும். அறிவை பயன்படுத்தி எப்படி இறைவனை கண்டுபிடித்தீர்கள்? கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன், நானும் தெரிந்து கொள்கிறேன்.

 12. அறிவியல் ஆதாரங்களுடன் சொன்னால் மட்டுமே இறைவன் இருப்பதை நம்புவோம் என்ற கொள்கையில் இருக்கும் உங்களை போன்றவர்களுக்கு தான் பதில் சொல்லி இருக்கிறேன்
  இறைவன் படைத்தது அறிவியல்
  அந்த அறிவியல் இறைவனுக்கு சான்று கொடுக்க தேவை இல்லை
  இறைவன் தந்த பகுத்தறிவு
  இதை உபயோகித்து அறிந்தால் போதுமானது
  எதுவும் தானாக உருவாகாது என்பது தான் அறிவியல்
  அதுவே இறைவன் இந்த உலகத்தை படைத்ததற்கு ஆதாரமாக இருக்கிறது
  இந்த அண்ட சராசரங்களில் இருக்கும் எந்த ஒன்றும் தானாக உருவாகி இருக்க வாய்ப்பு இல்லவே இல்லை
  படைப்புகள் நம் கண் முன்னே இருக்கும் போது படைத்தவன் இருந்தே ஆகா வேண்டும்
  இதை உணர்வதற்கு அறிவியலும் அறிவியலின் கருவிகளும் தேவை இல்லை
  பகுத்தறிவு மட்டும் போதுமானது
  நம்பிக்கை என்பதை தனியாக வைத்து விட்டு
  சினதனையை முடுக்கி விட்டாலே போதும்
  நம்பிக்கை தானாக வந்து ஒட்டி கொள்ளும்

 13. நாடோடி மன்னன் எனும் நண்பரே,
  நீங்களே உங்கள் பதிவை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். முரண்பாடுகளும் மயக்கங்களுமாக நிறைந்து கிடக்கின்றன. இறைவன் படைத்தது அறிவியல் என்கிறீர்கள், இறைவன் தந்த பகுத்தறிவு என்கிறீர்கள். இது போன்றவைகலெல்லாம் உங்கள் நம்பிக்கைகளா? பொது உண்மைகளா? எது பொது உண்மை எது ஒருபக்க நம்பிக்கை என்பதை பிறித்தறிய முடியாத மயக்கத்தில் இருக்கிறீர்கள் என்பதை எண்ணும் போது பரிதாபம் தான் மேலிடுகிறது.
  எந்த ஒன்றின் இருப்பும் அறிவியலின் மேடையில் உரசிப் பார்க்கப்பட வேண்டும் என்பதே எங்களின் தேடல். எங்களின் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும் என்றால் அறிவியலில் தான் பேச வேண்டும். ஏனென்றால் இங்கு அறிவியல் தான் பொது உண்மை. அறிவியல் தான் உரைகல். ஆனால் நீங்கள் உங்கள் நம்பிக்கையை மெய்யான இருப்பு என்பதற்கு அறிவியல் தேவை இல்லை என்கிறீர்கள். என்றால் எந்த அடிப்படையில் இங்கு பேசுகிறீர்கள். உங்களுக்கு உங்கள் நம்பிக்கையே போதும் என்றால் இந்த விவாதம் எதற்கு? கவனிக்கவும் உங்கள் நம்பிக்கையோடு நாங்கள் போரிடவே இல்லை. அது எங்களுக்கு தேவையும் இல்லை. நீங்கள் எதை எப்படி வேண்டுமானாலும் நம்பிக் கொள்ளுங்கள். ஆனால் அதை பொது வெளியில் சொல்ல வேண்டும் என்றால் அறிவியலாகத் தான் சொல்ல வேண்டும். அப்போது தான், உங்களைப் போல் இல்லாமல் வேறு விதமான நம்பிக்கை கொண்டவர்களிடமோ அல்லது எங்களைப் போன்ற எந்த ஒன்றையும் ஆய்வு செய்து பார்க்கும் தன்மை உள்ளவர்களிடமோ உங்கள் கருத்துகளை முன் வைக்க முடியும். உங்கள் நம்பிக்கையை திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதற்கு பொது வெளி எதற்கு?
  முந்திய என் பின்னூட்டத்தில் அறிவியலை உங்களுக்கு எதிராக நிறுத்தி இருக்கும் போக்கை கேள்விக்கு உட்படுத்தி இருந்தேன். அதற்கு நீங்கள் எந்தப் பதிலும் கொடுக்கவில்லை. கொடுக்காதன் காரணம் இது தான். அறிவியலை உங்களால் மறுக்கவும் முடியாது. அதேநேரம் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றிக் கொள்ள அறிவியலுக்கு எதிராக நிற்கவும் வேண்டும். இந்த இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர்களின் சிந்தனை ஒருபோதும் சரியானதாக இருக்க முடியாது.
  எந்த ஒன்றும் தானாக உருவானது என்று யாரும் சொல்லவே இல்லை. எல்லாவற்றுக்கும் காரண, விளைவுகள் வேண்டும் என்பது தான் அறிவியல். இப்போது நீங்கள் சொல்லுங்கள் தானாகவே தோன்றின என்பது சரியா? தவறா? உங்களைப் போன்ற ஆத்திகர்கள் தான் எல்லாம் தானாகவே தோன்றியது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். கடவுளின் விருப்பாடியே அனைத்தும் உருவாயின. கடவுளில் சொல்லிருந்தே திடீரென்று எல்லாம் உருவாயின என்று நீங்கள் தான் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் சொல்லுங்கள் தானாகவே தோன்றின என்பது சரியா? தவறா? ஆனால் அந்தக் கடவுள் எப்படி தோன்றினான் என்று கேட்டால் மட்டும் உங்களுக்கு கசந்து விடும். உடனே அறிவியலால் கடவுளை அளக்க முடியாது என்று கூறுவீர்கள். இப்படி முன்னுக்குப் பின் முரணாக பேசுவது யார்?
  இந்தப் பேரண்டம் தானாகவே தோன்றியது என்று எந்த அறிவியலாளரும், எந்த கம்யூனிஸ்டும் கூறியதே இல்லை. இந்தப் பேரண்டம் சிங்குலாரிடியில் இருந்து தொடங்கியது என்றே கூறுகிறார்கள். சிங்குலாரிடிக்கு முன் என்ன? என்றால் தெரியாது. இன்னும் ஆய்வுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்று தான் கூறுவார்களே தவிர தானாகவே தோன்றியது, திடீரென்று உண்டாயிற்று என்று யாரும் கூறுவதில்லை. ஆக எந்த நிலையிலும் முரண்படாமல் இருப்பது நாத்திகர்களே.
  கடவுளை உணர்வதற்கு அறிவியலும் அறிவியலின் கருவிகளும் தேவை இல்லை பகுத்தறிவு மட்டும் போதுமானது என்று கூறியிருக்கிறீர்கள். அறிவியல் தேவை இல்லை என்றால் பகுத்தறிவு எங்கிருந்து வரும்? அல்லது அறிவியலும் பகுத்தறிவும் வேறுவேறா? கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன் நானும் தெரிந்து கொள்கிறேன். சரி அப்படியே இருக்கட்டும் அறிவியலை விலக்கி வைத்து விட்ட பகுத்தறிவைக் கொண்டு எப்படி நீங்கள் கடவுளை கண்டு கொண்டீர்கள். அதை சொன்னால் தானே தெரியும். சொல்லுங்கள் தெரிந்து கொள்வோம்.

 14. இறைவன் தந்த அறிவையும் அறிவியலை யம் நான் மருப்பவன் அல்ல
  அதே சமயம் அறிவியலை கொண்டு தான் இறைவனை நிரூபிக்க வேண்டும் என்று கூறுவதும் ஏற்புடையது அல்ல
  விதிகளையும் விதிமுறைகளையும் இந்த அண்ட சராசரங்களுக்கும் மனிதர்களுக்கும் படைத்தது இறைவன் தான்
  இந்த விதிமுறைகளுக்கும் விதிகளுக்கும் அப்பாற்பட்டவன் தான் இறைவன்
  இறைவன் தந்த அறிவியலுக்கும் விதிமுறைகளுக்கு ம் உள்ளே அதை படைத்தவனை அடக்க நினைப்பது அறிவான சிந்தனை அல்ல
  அறிவியலை கொண்டு ஒரு போதும் இறைவனை நிரூபிக்க மாட்டார்கள்
  ஏன் என்றால் ஒவ்வொரு புதிய கோள்களை கண்டு பிடிக்கும் போதும் அறிவியல் தன் அறிவை தம்பட்டம் அடித்து கொள்ளவே ஆசை படுகிறது தவிர இறைவனின் பெயரை கூற மறுக்கிறது
  இது வரை
  மருத்துவ அறிவியல் கண்டு பிடித்தது எல்லாம் உருவாக்கியது எல்லா வற்றுக்கும் காரணம் அதறக்கு தேவையான எல்லாவற்றையும்
  இறைவன் இந்த பூமியில் படைத்து இருப்பதால் தான்
  இந்த பூமியில் உள்ள எந்த மூல பொருளையும் தொடாமல் அறிவியல் எந்த ஒன்றையும் இது வரை படைக்க வில்லை
  உருவாக்கி தான் இருக்கிறது
  கண்டு பிடித்து தான் இருக்கிறது
  அறிவியலால் சொந்தமாக ஒரு கொசுவை கூட படைக்க முடியாது
  கொசுவை விடா அற்பமான ஒன்றை கூட அறிவியலால் படைக்க முடியாது
  இறைவனை நிரூபிக்க அறிவியல் தேவை இல்லை
  தர்க்க ரீதியான வாதங்களே போதுமானது
  அறிவியல் தான் எல்லாம் என்று நினைப்பவர்கள் இறைவன் படைத்த இயற்க்கை சீற்றங்களையாவது மாற்றி காட்ட வேண்டும் அல்லது நிறுத்தி காட்ட வேண்டும்
  வாதங்கள் தொடரும்
  அறிவு பூர்வமாக

 15. நண்பர் நாடோடி மன்னன்,
  ஆக, தெளிவாக அறிவிக்கிறீர்கள். விவாதம் செய்ய வரவில்லை. கிளிப்பிள்ளை போல் புரியாமல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கப் போகிறேன் என்று தெளிவாக அறிவித்திருக்கிறீர்கள். இதைத்தான் நீங்கள் அறிவுபூர்வமான வாதம் என்று நம்புகிறீர்கள். அப்படித் தானே.
  \\இறைவன் தந்த அறிவையும் அறிவியலை யம்//
  \\விதிகளையும் விதிமுறைகளையும் இந்த அண்ட சராசரங்களுக்கும் மனிதர்களுக்கும் படைத்தது இறைவன் தான்//
  \\அதறக்கு தேவையான எல்லாவற்றையும் இறைவன் இந்த பூமியில் படைத்து இருப்பதால் தான்//
  \\இறைவன் படைத்த இயற்க்கை//
  இதெல்லாம் நீங்கள் கூறியவைகள். இதை நான் ஏற்கனவே கேள்விக்கு உள்ளாக்கியுள்ளேன். உங்கள் நம்பிக்கையும், பொது உண்மையும் ஒன்றல்ல. என்று மீண்டும் மீண்டும் என்னை கூறிக் கொண்டிருக்கச் செய்கிறீர்கள்.
  இறைவன் தான் இதையெல்லாம் படைத்தான் என்பதற்கு ஏதாவது ஒரு வழியில் சான்று தந்து விடுங்கள். நாம் தொடர்ந்து பேசுவோம்.

 16. தானாக உருவாகும் என்பதற்கு நீங்கள் அறிவியல் ஆதாரம் தாருங்கள்

 17. தெளிவாக படித்து விட்டேன்

 18. தெளிவாக படித்திருந்தால் இப்படி கேட்டிருக்க மாட்டீர்களே, \\தானாக உருவாகும் என்பதற்கு நீங்கள் அறிவியல் ஆதாரம் தாருங்கள்//

 19. தானாக எதுவும் உருவாகாது என்பது தான் என் வாதம்

 20. படைப்பவன் தான் இறைவன்
  ஆதியும் அந்தமும் அவனே
  அவனை யாரும் படைக்க முடியாது
  படைக்க பட்டவன் இறைவனாக இருக்க முடியாது

 21. அப்படிப்பட்ட கடவுள் என்றால் என்ன என்றாவது சொல்லலாமே. அதை நீங்கள் எப்படி கண்டுணர்ந்தீர்? ஆதாவது தனே எதுவும் உருவாகாது. கடவுளைத் தவிர. \\அவனை யாரும் படைக்க முடியாது
  படைக்க பட்டவன் இறைவனாக இருக்க முடியாது// என்பதை எப்படி உணர்ந்தீர்கள்? அதாவது அப்படியாகப்பட்ட கடவுள் எதிலும் அகப்படாத, எதனாலும் உருவகிக்க முடியாத ஒன்றை மனிதன் எப்படி கண்டு கொண்டான்? இது முரண்பாடாக தெரியவில்லையா உங்களுக்கு. எதாவது ஒரு நிலையில் உறுதியாக நில்லுங்கள்.

 22. உங்கள் மனம் மிகுந்த குழப்ப நிலை யில் உள்ளதாக உணர்கிறேன்
  அமைதியாக இருந்து என்னுடைய பதிலை சிந்திக்கவும்

 23. அப்படியா? எந்த இடத்தில் எப்படி குழம்பியிருக்கிறது என்று கூறுவது தானே விமர்சனத்துக்கு அழகு. அப்படியில்லாமல் நீங்கள் குழம்பி இருக்கிறீர்கள் என்று மட்டும் கூறினால் அதற்கு அவதூறு என்று பொருள்.

 24. மறுபடியும் பதில் களை படிக்கவும்

 25. படிக்காமல் உள்வாங்காமல் பதில் எழுதுவது எனக்குப் பழக்கமில்லை. முதலில் நான் எந்த இடத்தில் எப்படி குழம்பி இருக்கிறேன் என்று கூறுங்கள்.

 26. ஒரே கேள்வியை பதில் சொன்ன பிறகும் திருப்பி திருப்பி கேட்பதில் இருந்தே நீங்கள் குழப்பத்தில் இருப்பதாக உணர்கிறேன்

 27. இல்லையே பதில் கூறப்பட்ட பிறகு ஒரே கேள்வியை நான் மீண்டும் எந்த இடத்திலும் கேட்கவில்லை. உங்கள் பதில் பொருத்தமற்று இருந்தது என்றால் எவ்வாறு பொருத்தமற்று இருக்கிறது என்பதையும் விளக்கி இருப்பேன். ஆனால் பதில் கூற முடியாமல் பொருத்தமற்ற பதிலை நீங்கள் மீண்டும் மீண்டும் கூறி இருக்கிறீர்கள் என்று என்னால் எடுத்துக் காட்ட முடியும். அப்போது நீங்கள் குழம்பிப் போய் இருந்ததாக ஒப்புக் கொள்வீர்களா?

  அதுசரி இப்படியே போய்க் கொண்டிருந்தால் எப்படி? கடவுளை எப்படி கண்டறிந்தீர்கள் என்பதற்கு பதில் கூறுங்கள்.

 28. எடுத்து காட்டுங்கள்
  பொருத்தமற்ற பதிலை

  தேடல் விரும்பி கடவுளை கண்டு அறிய முடியாது. உணர்ந்து அறிய முடியும்

 29. பொருத்தமற்ற பதில் 1;:
  கேள்வி \\கடவுள் இல்லை என்று கூறுவதற்கு போதிய சான்றுகள் இருக்கின்றன. அறிவியல் உறுதி செய்யவில்லை என கூறும் நீங்கள் கடவுளை எப்படி நம்புகிறீர்கள்?//
  பதில்: \\இறைவனை ஒப்பு கொள்ள உங்கள் அறிவியல் தரும் சான்றிதழ்கள் எங்களுக்கு தேவை இல்லை//
  எப்படி பொருத்தமற்றது: அறிவியல் கடவுளில்லை என்பதை உறுதி செய்யவில்லை எனக் கூறும் நீங்கள் கடவுளை எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள் என்ற கேள்விக்கு கடவுளை நம்ப அறிவியல் தேவையில்லை என்று கூறுயிருக்கிறீர்கள். அதாவது கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் ஆதாரம் கேட்கும் நீங்கள் நம்புவதற்கு தேவையில்லை என்கிறீர்கள். இது தான் முரண்பாடான பொருந்தாத இடம்.
  பொருத்தமற்ற பதில் 2:
  கேள்வி \\பொது வெளியில் சொல்ல வேண்டும் என்றால் அறிவியலாகத் தான் சொல்ல வேண்டும். ……. உங்கள் நம்பிக்கையை திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதற்கு பொது வெளி எதற்கு?//
  பதில் \\விதிகளையும் விதிமுறைகளையும் இந்த அண்ட சராசரங்களுக்கும் மனிதர்களுக்கும் படைத்தது இறைவன் தான் இந்த விதிமுறைகளுக்கும் விதிகளுக்கும் அப்பாற்பட்டவன் தான் இறைவன்//
  எப்படி பொருத்தமற்றது: பொதுவெளியில் பொது உண்மைகளைத் தான் பேச வேண்டிமேயல்லாது, தனி நம்பிக்கையிஅ பேசக் கூடாது என்பதை விளக்கிய பிறகும் மீண்டும் மீண்டும், கடைசி வரை இறைவன் படைத்தான் எனும் உங்கள் நம்பிக்கையைத் தான் கூறிக் கொண்டிருக்கிறீர்கள். இது பொருத்தமற்ற இடம்.
  பொருத்தமற்ற பதில் 3:
  கேள்வி \\அறிவியலை உங்களால் மறுக்கவும் முடியாது. அதேநேரம் உங்கள் நம்பிக்கையை காப்பாற்றிக் கொள்ள அறிவியலுக்கு எதிராக நிற்கவும் வேண்டும்//
  பதில் \\இறைவன் தந்த அறிவையும் அறிவியலை யம் நான் மருப்பவன் அல்ல அதே சமயம் அறிவியலை கொண்டு தான் இறைவனை நிரூபிக்க வேண்டும் என்று கூறுவதும் ஏற்புடையது அல்ல//
  எப்படி பொருத்தமற்றது: அறிவியல் நான் மறுக்கவில்லை எனக் கூறும் அதே நீங்கள் தான் உங்கள் அறிவியல் தரும் சான்றிதழ் எங்களுக்கு தேவையில்லை என்று கூறியிருக்கிறீர்கள். இப்படி முரண்பட்டுக் கூறுவது பொருத்தமில்லாததா இல்லையா?
  பொருத்தமற்ற பதில் 4:
  கேள்வி \\உங்களைப் போன்ற ஆத்திகர்கள் தான் எல்லாம் தானாகவே தோன்றியது என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். ……. இந்தப் பேரண்டம் தானாகவே தோன்றியது என்று எந்த அறிவியலாளரும், எந்த கம்யூனிஸ்டும் கூறியதே இல்லை//
  பதில் \\தானாக உருவாகும் என்பதற்கு நீங்கள் அறிவியல் ஆதாரம் தாருங்கள்//
  எப்படி பொருத்தமற்றது: ஆத்திகர்கள் தான் தானாக உருவாகும் என்கிறார்கள் நாத்திகர்கள் அல்ல என்று கூறிய பிறகும் தனாக உருவாகும் என்பதற்கான அறிவியல் ஆதாரத்தை என்னிடம் கேட்கிறீர்களே இது பொருத்தமற்ற பதிலா இல்லையா?
  இதற்கு மேலும் இந்த பொருத்தமற்ற பதில்களை நீட்டித்து கொண்டு போக விரும்பவில்லை. சேதிக்குத் திரும்புவோம். கடவுளை எந்த வழியிலேனும் நிருபிக்க முடியாது. அறிவியல் உதவாது என்றால் வேறு ஏதாவது அளவு கோல்கள் வைத்திருக்கிறீர்களா? ஆம் என்றால் அது எப்படி பொது உண்மையாக பொருத்தமான அளவுகொல்லாக இருக்கும் என்று கூறிவிட்டு அந்த அளவுகோலின்படி கடவுளின் இருப்பை நிரூபிக்கலாமே. ஆக, கடவுள் அதில் அகப்பட மாட்டார். இதில் தெரிய மாட்டார். இதால் அளக்க முடியாது என்றெல்லாம் கூறி இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பச் சொல்கிறீர்கள். நீங்கள் மட்டுமல்ல அனைத்து ஆத்திகர்களும் சிக்கிக் கொள்ளும் இடம் இது தான். இதில் தான் இப்போதைய என் பிடியும் இருக்கிறது.

  \\கடவுளை கண்டு அறிய முடியாது. உணர்ந்து அறிய முடியும்// எப்படி உணர்ந்து அறிந்தீர்கள்? அதைச் சொன்னால்
  தானே அது உணர்தலா? அல்லது வெற்று கற்பனையா? என்பதை புரிய வைக்க முடியும். எனவே அதைச் சொல்லுங்கள்.

 30. மிகவும் எளிது
  என்ன போன்ற ஆத்திகரை உங்களை போன்றவர்களின் கேள்விகள் பிடிக்க முடியாது
  பொதுவான விசயதை கொண்டு இறைவனை நிரூபிக்க சொல்கிறீர்கள்
  நீங்கள் அறிவியலை மட்டுமே நம்புபவர்
  நான் அறிவியலையும் இறைவனையும் என் அறிவையும் நம்ப கூடியவன்
  நீங்கள் இறைவனை நம்ப மாட்டீர்கள்
  நான் அறிவியலை மட்டும் தான் நம்ப வேண்டும் என்று நிர் பந்தித்தால் அது என்னிடம் நடக்காது
  அறிவியல் இது வரை இறைவன் இல்லை என்று அறுதியிட்டு கூற வில்லை
  அறிவியல் கூறினால் தான் இறைவனை ஏற்று கொள்ள வேண்டும் என்று யாரும் யாரையும் நிர்பந்தம் செய்ய முடியாது
  எல்லோருக்கும் பொதுவான பகுத்தறிவை கொண்டு சிந்தித்தால் இறைவனை அறிந்து கொள்ள முடியும்
  எந்த ஒரு பொருளையும் உருவாக்க அதை உருவாக்கியவன் ஒருவன் தேவை படும் போது
  இந்த உலகம் அண்டாராசரங்கள்
  அதில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் தானாக உருவாகியது என்று சொன்னால் அது நகைப்புக்கு உரிய விசயம் தான்
  படைப்புகள் இருக்கும் பட்சதித்ல் அதை படைத்தவன் ஒருவன் இருந்தே ஆக வேண்டும்
  பாமரனுக்கு கூட தெரிந்த விடயம் தான் இது
  இதற்கு பெரிய ஆராய்ச்சிகள் எதுவும் தேவை இல்லை
  பகுத்தறிவை பயன் படுத்தினால் மட்டும் போதும்

 31. \\என்ன போன்ற ஆத்திகரை உங்களை போன்றவர்களின் கேள்விகள் பிடிக்க முடியாது// ஆமாம் உண்மை தான். நேர்மையாக கேட்ட கேள்விக்கு பதில் கூறுபவர்களை அல்லவா? பிடிக்க முடியும். முரண்பாட்டை சுட்டிக் காட்ட முடியும். பொருத்தமற்று இருப்பதை சுட்டிக்காட்டி சரி செய்ய முடியும். அது இல்லை என்றால் எப்படி பிடிப்பது.
  இப்போதும் உங்களின் இந்த இன்னூட்டத்தில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்ட முடியும். சுட்டிக் காட்டத்தான் போகிறேன். ஆனால் அதை உணர்ந்து கொள்வதற்கு நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டுமே. அங்கு அல்லவா சிக்கல் இருக்கிறது.
  \\நான் அறிவியலையும் இறைவனையும் என் அறிவையும் நம்ப கூடியவன்// இதன் பொருள் என்ன? அறிவியல் – பொது உண்மை எனவே அது புரிகிறது. என் அறிவு – அறிவியலினால் உங்களுக்கு கிடைத்திருப்பது எனவே அதுவும் புரிகிறது. இறைவன் என்பது என்ன? இதைத்தான் முதல் பின்னூட்டத்திலிருந்து இப்போது வரை கேட்டுக் கொண்டிருக்கிறேன். பதில் சொல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கிறீர்கள். அது என்ன என்று தெரிந்தால் தானே அது பொது உண்மையா? அல்லது புரட்டுத் தனமா? என்று கண்டு பிடிக்க முடியும். ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்?
  \\நான் அறிவியலை மட்டும் தான் நம்ப வேண்டும் என்று நிர் பந்தித்தால் அது என்னிடம் நடக்காது// நீங்கள் இதை நம்ப வேண்டும் இதை நமக் கூடாது என்று உங்களிடம் எதையும் நான் கண்டிப்பு காட்டியதில்லை. அறிவியல் பொது உண்மை அதை விட்டு விடுவோம் வேறு எதை வேண்டுமானாலும் நீங்கள் நம்பிக் கொள்ளலாம். எங்க வீடு மாடியில் ஒரு ஓட்டை இருக்கிறது அதில் நுழைந்தால் ஒரே நொடியில் ஆண்ட்ரோமீடாவுக்கு சென்று விடலாம் என்று கூட நீங்கள் நம்பலாம். ஆனால் அதை நாங்களும் ஏற்கவேண்டும் என்றால் சோதித்துப் பார்க்க வேண்டுமே. அதனால் தான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன். நீங்கள் சொன்னால் தானே அதை ஆய்வு செய்து பார்க்க முடியும். கடவுள் அதைப் படைத்தார், இதைப் படைத்தார், அரிசி புடைத்தார் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே தவிர கடவுள் என்றால் என்ன என்று சொல்ல மறுக்கிறீர்கள். ஏனென்றால் உங்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே அது தெரியாது. பின் எப்படி சொல்வீர்கள். சரி எப்படி நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள் என்று கேட்டால் அதையும் சொல்ல மாட்டீர்கள். ஏனென்றால் உங்களுக்கு எதுவுமே தெரியாது. உங்களுக்கு உங்கள் பெற்றோர் சொன்னார்கள், அவர்களுக்கு அவர்கள் பெற்றோர் இப்படியே போனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யாரோ ஒரு முகம்மது சொன்னார். அவ்வளவு தான். இதை தவிர வேறு ஏதாவது தெரியுமா உங்களுக்கு? கேள்வி கேட்டால் விவாத நேர்மையுடன் பதில் சொல்ல முடியாமல் இருந்து கொண்டு வெற்றுக் கூச்சல்கள் ஏன்?
  \\எல்லோருக்கும் பொதுவான பகுத்தறிவை கொண்டு சிந்தித்தால்// பகுத்தறிவைக் கொண்டு எப்படி நீங்கள் சிந்தித்து இறைவனை அறிந்து கொண்டீர்கள்? இதைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படி பகுத்தறிவைக் கொண்டு சிந்தித்ததால் தானே கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதற்கு சான்றுகளை அடுக்கி இருக்கிறோம், அலசி ஆராய்ந்து வெளிப்படுத்தி இருக்கிறோம். இவற்றில் எதையாவது மறுக்க முடிந்திருக்கிறதா உங்களால்? முடியவில்லை தானே. பகுத்தறிவைக் கொண்டு சிந்தித்து நீங்கள் கடவுளை உணர்ந்தது எப்படி என்று விளக்குங்கள். அப்போது அதை அலசி ஆராய்ந்து அதில் இருக்கும் ஓட்டைகளை உங்கள் முகத்துக்கு நேரே தூக்கிக் காட்டுகிறோம். எப்படி வசதி?

  \\இந்த உலகம் அண்டாராசரங்கள்அதில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் தானாக உருவாகியது என்று சொன்னால் அது நகைப்புக்கு உரிய விசயம் தான்//
  தானாக உருவாகியது என்று கூறியது யார்? ஆத்திகர்களா? நாத்திகர்களா? ஆத்திகர்கள் தான் என்பதை ஏற்கனவே நான் வெளிப்படுத்தி இருக்கிறேன். அதற்கு இன்னும் பதில் கூறாத நீங்கள். இங்கு வந்து நகைப்புக்குறிய விசயம் இல்லையா என்கிறீர்கள். சபையில் யாரோ எழுதிக் கொடுத்த டெம்ப்ளேட் வாசகங்களை விட்டு எப்போது நீங்கள் திருந்துவீர்கள்?
  நண்பர் நாடோடி மன்னன் அவர்களே, விவாத நேர்மையுடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து எதிர்க்கேள்விகள் கேட்டு விவாதத்தை நடத்த முடியும் என்றால் தொடருங்கள். வீணாக உங்கள் நேரத்தையும் என்னுடைய நேரத்தையும் பயனற்ற முறையில் ஏன் செலவு செய்ய வேண்டும்? சிந்தியுங்கள்.

 32. பகுத்தறிவை கொண்டு இறைவனால் அறிய முடியும் என்பதை எளிமையான உதாரணத்துடன் சொல்லி தான் இருக்கிறேன்
  . உங்கள் வசதிக்காக அதை மட்டும் மறைத்து விட்டூ அல்லது மறந்து விட்டு மற்ற தேவை இல்லாத அனைத்தயும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்

 33. சிரிக்க முடியவில்லை நண்பரே, வயிறு வலிக்கிறது. அதாவது தேவையான ஒன்றை மறத்து விட்டு தேவையற்ற அனைத்தையும் எழுதியிருக்கிறேன் என்று எழுதியுள்ளீர்கள். அப்படியென்றால் நீங்கள் முதலில் எழுதியிருந்தது தேவையற்றது தானா. ஏனென்றால் நீங்கள் எழுதியிருந்ததற்குத் தான் நான் வினையாற்றி இருந்தேன். சரி போகட்டும். நான் மறந்து விட்டதாக நீங்கள் குறிப்பிடுவது எதை? படைப்புகள் இருக்கும்பட்சத்தில் படைத்தவன் என்று ஒருவன் இருந்தே ஆக வேண்டும் என்பதையா? ஏற்கனவே இதன் போலித்தனத்தை விளக்கி இருந்தேனே படிக்கவில்லையா? படைப்புக்கு படைப்பவன் இருக்க வேண்டும் என்றால் படைப்பவன் எப்படி தானே உருவாகினான் என்ற கேள்வியும் இருக்கிறதே அதை எப்படி நீங்கள் மறந்தீர்கள். நீங்கள் கூறுவதை கேள்வி கணக்கில்லாம அப்படியே நம்பவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? உங்கள் தலை மண்ணுக்குள் இருப்பதால் உலகம் இருண்டு விட்டதாக கருதிக் கொள்ளாதீர்கள்.

 34. படைத்தவன் அவன் படைத்த விதிகளுக்கு அப்பாற்பட்டவன் என்ற பதிலை மறந்து விட்டீர்களா

 35. ஏன் இப்படி இரட்டை நிலைப்பாடாக இருக்கிறீர்கள் என்று கேட்டிருந்ததை மறந்து விட்டீர்களா? ஏதாவது ஒரு பக்கம் நில்லுங்கள். ஒன்று தானே தோன்றாது என்பதில் நில்லுங்கள் அல்லது தானே தோன்ற முடியும் என்பதில் நில்லுங்கள். படைப்புக்கு பொருந்தும் ஒன்று படைப்பாளிக்கு பொருந்தாது என்றால் அது எப்படி பொருந்தாது ஏன் பொருந்தாது என்பதை விளக்குங்கள். கீரல் விழுந்த இசைத்தட்டு போல் இந்த விதி அதற்கு பொருந்தாது அந்த விதி இதற்கு பொருந்தாது என்று மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கப் போகிறீர்களா?

 36. அறிவியலை படைத்த இறைவனை அறிவியலுக்கு ல் நிறுத்தி ஆராய முற்படு கிரீர்கள்
  இங்கே தான் நீங்கள் வெற்றி பெற்ற தாக நினைத்து கொண்டு இருக்கிறீர்கள்
  இந்த ஜனநாயக நாட்டில் சட்டம் அனைவருக்கும் பொது என்று சொல்கிறோம்
  ஆனால் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு அதிக சலுகை கொடுக்கிறோம்
  சாதாரண மனிதர்களே ஒரு மனிதனை விட தனக்கு அதிக சலுகை வேண்டும் என்று நினைக்கும் போது
  அனைத்தையும் படைத்த இறைவன் தனக்கு தனி சட்டங்களை வகுத்து கொள்வதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்

 37. எடுத்துக்காட்டுகள் சொல்லி ஒன்றை விளக்க முடியுமே தவிர, அதை உண்மையாக்கி விட முடியாது நண்பரே, அதாவது, சம நிலையில் இருப்பதில் ஐயம் தோன்றினால் எடுத்துக்காட்டுகள் தந்து அந்த ஐயத்தை விளக்க முடியும். ஆனால் சம நிலையில் இல்லாத ஒன்றில் ஏற்பட்டிருக்கும் ஐயத்தை எடுத்துக்காட்டுகள் மட்டும் கொண்டு விளக்க முடியது.
  நீங்கள் எடுத்துக்காட்டி இருக்கும் எடுத்துக்காட்டின் மூலமே விளக்குகிறேன். உயர் பதவியில் இருப்பவருக்கு அதிக சலுகை தேவை என்றால் இங்கு சலுகை தேவையா இல்லையா என்பது மட்டுமே கேள்வி. ஆனால் அவர்கள் இருவரும் மனிதர்களா இல்லையா என்பதில் எந்தக் கேள்வியோ ஐயமோ இல்லை. இதை விளக்க ஒரு எடுத்துக்காட்டைக் கொடுக்கலாம். ஆனால் இந்த எடுத்துக்காட்டை கொண்டு கடவுள் என்றால் யாரென்றே தெரியாத, கடவுள் என்றால் என்னவென்றே தெரியாத ஒன்றுக்கு அதிகாரம் தேவையா என்பதை விளக்குவதற்கு பயன்படுத்த முடியுமா?
  முதலில் ஒன்றை விளங்கிக் கொள்ளுங்கள், கடவுள் என்றால் என்ன என்பதே இங்கு யாருக்கும் தெரியவில்லை. அப்படி இருக்கும் போது கடவுளுக்கு அதிக அதிகாரம் தேவையா என்ற பிரச்சனையில் எப்படி முடிவெடுக்க முடியும்?
  அனைத்தையும் படைத்த இறைவன் என்று நீங்கள் சொல்வதையே கேள்விக்கு உள்ளாக்கிக் கொண்டு இருக்கிறேன். ஆனால் நீங்களோ அனைத்தையும் படைத்த இறைவனுக்கு அதிக அதிகாரம் வேண்டாமா என்று கேட்கிறீர்கள்.
  அதாவது இது ஒரு மாயச் சுழல் போல இருக்கிறது. எப்படி அவன் இறைவன்? என்றால் அவன் தான் அனைத்தையும் படைத்தான் அதனால் அவன் இறைவன் என்கிறீர்கள். அவன் தான் படைத்தான் என்று எப்படிச் சொல்கிறீர்கள்? என்றால் அவன் இறைவன் எனவே அவன் படைத்தான் என்கிறீர்கள். இந்த கிறுக்குத்தனத்தை எத்தனை முறை தான் சகித்துக் கொள்வது?

 38. மனிதர்கள் அனைவரும் சமம் தான் என்றாலும் சலுகை தேவையா என்பதை அவர்கள் வகிக்கும் பதவி தான் முடிவு செய்கிறது
  பதவி யின் தரம் அடிப்படையில் சலுகை கள் மாரு படலாம்
  ஆனால் சலுகை கண்டிப்பாக தேவை படுகிறது
  தானாக எதுவும் இங்கே உருவாக வில்லை
  அப்படி உருவாகி இருந்தால்
  நீங்கள் உங்கள் வீட்டில் உபயோகிக்கும் பொருள் எதையும் விலை கொடுத்து வாங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை
  உருவாக்கியவன் ஒருவன் உருவாக்கி இருப்பதால் தான் நீங்கள் விலை கொடுத்து வாங்கி இருக்கிறீர்கள்
  உங்கள் வீட்டில் பொருள்கள் இருப்பது உண்மை என்றால்
  அதை உருவாக்கிய வணும் இருக்கிறான் என்பது தான் உண்மை
  உதாரணம் என்பது ஒரு விசயத்தை விளங்குவதற்கு சொல்ல படுவது
  அதில் இருக்கும் உண்மைகளை சிந்தித்து தான் அறிந்து கொள்ள வேண்டும்

 39. இதை இன்னும் எத்தனை முறை தான் விளக்குவது என்று தெரியவில்லை. ஒன்றில் இருக்கும் உண்மைகளை சிந்தித்து அறிந்து கொள்ளலாம். ஆனால் அந்த ஒன்று இருக்கிறதா இல்லையா என்பதை சிந்தித்து அறிய முடியாது சோதித்து தான் அறிய முடியும். இந்த வித்தியாசம் புரிகிறதா இல்லையா?

 40. இடி மின்னல் இதை எல்லாம் கையில் பிடித்து ஆராய்ச்சி செய்யுங்கள் முதலில்
  பிறகு
  அதை படைத்த இறைவனை பற்றி ஆராயலாம்

 41. இந்த விவாதம் இடிமின்னலை ஆய்வு செய்வது பற்றி தொடங்கப்பட்டதா? அல்லது இறைவனை பற்றி ஆய்வு செய்ய தொடங்கப்பட்டதா? இறைவ்னை நீரூபிப்பதற்காகத் தானே விவாதத்திற்கு வந்தீர்கள், அப்புறம் என்ன இறைவனைப் பற்றி பிறகு ஆராயலாம்…? பதில் சொல்ல முடியவில்லை என்றால் அதை நேர்மையாக ஒப்புக் கொள்ள பழகுங்கள் முதலில், பிறகு விவாதத்துக்கு வரலாம். அடுத்த முறை வரும் போது விவரம் தெரிந்த யாரையாவது அழைத்து வருங்கள்.

 42. இடியும் மின்னலும் மனிதனால் உருவாக்க முடியாது அதை தொடவும் முடியாது
  உங்கள் அறிவியல் கருவிகளால் அதை அடக்கி வைக்கவும் தடுக்கவும் முடியாது
  இதுவும் இறைவனின் ஆற்றலை தான் வெளி படுத்துகிறது
  இறைவனின் ஆற்றலை பரி சோதனை செய்ய முடியாத அறிவியல் எப்படி இறைவனை சோதனை செய்ய முடியும்

 43. \\இதுவும் இறைவனின் ஆற்றலை தான் வெளி படுத்துகிறது// இறைவன் தான் இடி மின்னலை உருவாக்கினான் என்பதற்கான மேனுஃபாக்சர் சர்டிஃபிகேட்டை திரு நாடோடி மன்னர் அவர்கள் இப்போது வழங்குவார்கள் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. \\இறைவனின் ஆற்றலை பரி சோதனை செய்ய முடியாத அறிவியல் எப்படி இறைவனை சோதனை செய்ய முடியும்// முதலில் நீங்கள் இறைவனை காட்டுங்கள். அவனை எப்படி பரிசோதனை செய்வது என்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

 44. முதலில் இறைவன் படைத்த அவனுடைய ஆற்றலை பரி சோதனை செய்யுங்கள்
  முடிந்தால்

 45. அறிவியல் இறைவன் இல்லை என்று சொன்னதற்கு சான்று தாருங்கள்

 46. இதைக் கேட்பதற்கு இவ்வளவு நேரம் காத்திருப்பானேன்? கட்டுரையின் இறுதியில் அறிவியல் காரணங்கள் என்ற தலைப்பில் முன்னமே கொடுத்து விட்டேனே. சீக்கிரம் சென்று பாருங்கள்.

 47. அது ஆதரமில்லை
  உங்களின் கருத்து

 48. அப்படியா? அது எப்படி அறிவியலாக இல்லாமல் என்னுடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கிறது என்பதை விளக்குங்கள்.

 49. அறிவியல் என்பது ஒருவரின் கருத்துக்களை எழுதி வைத்த புத்தகம் தானே

 50. அறிவியல் என்றால் என்னவென்றே தெரியாமல் தான் உங்கள் அறிவியல் எங்களுக்கு வேண்டாம் என்றீர்களா? அறிவியல் என்றால் என்னவென்று எழுத்தில் உங்களுக்கு சொல்வது கொஞ்சம் கடினம் தான். எனவே, பக்கத்தில் தெரிந்தவர் யாரேனும் இருந்தால் கேட்டு, தெளிந்து பின் அழைக்கவும்.

 51. மனிதன் நிகழ் காலத்தில் நடைமுறையில் பயன் படுத்தி கொண்டு இருக்கும் அறிவியல் பற்றி விளக்குவது உங்களுக்கு கடினம் என்றால்
  நீங்கள் இறைவனை பற்றி மட்டும் எப்படி உடனே அறிந்து கொள்ள முடியும்

 52. கவனிக்கவும், விளக்குவது கடினம் என்று குறிப்பிடவில்லை. உங்களுக்கு விளக்குவது கடினம் என்று குறிப்பிட்டுள்ளேன். ஏற்கனவே இருக்கும் ஒன்றைப்பற்றி என்றால் எளிதாக தெரிந்து கொண்டிருக்க முடியுமே? இல்லாத ஒன்று என்பதால் தான் கடினமாக இருக்கிறது. அதிலும் கூட கடவுளை வாழ வைத்துக் கொண்டிருக்கும் உங்களைப் போன்றோர் யார் என்றே சொல்ல மாட்டேன் என்னவென்றே சொல்லமாட்டேன் என்று அடம் பிடிக்கும் போது நான் எப்படி ……? கடினம் தானே.

 53. பாத்தால் தான் நம்புவேன் என்று சொல்பவர் களிடத்தில் கடவுளை புரிய வைப்பது கடினம்
  பகுத்தறிவை கொண்டு உணர வேண்டிய விசயத்தை பார்த்து நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை

 54. எப்படியாவது தெரியவை என்று சொல்பவனை, பார்த்தால் தான் நம்புவேன் என்று சொல்கிறான் என்று ஒருவன் புழுகினால், அவன் எதையோ மறைக்கிறான் என்று அர்த்தம் அல்லது இல்லாததை இருக்கு என்று சொல்கிறான் என்று அர்த்தம்.

 55. இல்லாததை இருக்கு என்று சொல்வதற்கு இங்கே யாரும் பைத்தியம் பிடித்து அழைய வில்லை
  எதிராளியின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து சிந்தித்து பார்ப்பது தான் அறிவுடையார் செயல்

 56. பரிதாபம். என்னுடைய கருத்துக்கு நீங்கள் மதிப்பளித்திருந்தால் என்னுடைய கேள்விகளுக்கு குறைந்தபட்சம் பதில் கூறவாவது முயன்றிருப்பீர்களே.

 57. உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்க போய் தான் தொடர்ந்து பதிலை சொல்லி கொண்டு இருக்கிறேன்
  சிந்தித்து

 58. நீங்கள் வெறுமனே பதிலளிக்கிறீர்கள். விவாத நேர்மையுடன் பதிலளிக்கவில்லை என்பதைத் தான் ஏற்கனவே நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். நீங்கள் கூறியது கூறலை தொடர்ந்ததால் தான், நானும் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாமே என்று எண்ணினேன். இப்போதும் உங்கள் பதில்கள் தொடர்பற்றதாக முரண்பட்டதாக, முனைப்பற்றதாக இருக்கின்றன என்று பட்டியலிட முடியும். ஆனால் உங்களைக் காயப்படுத்துவது என் நோக்கமில்லை. உணர வைக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

 59. உங்களால் என்னை காய படுத்த முடியாது
  முகநூலில் நிறைய விமர்சனங்களை பார்த்தாகி விட்டது
  நான் பேசும் உண்மைகள் சிலரை சுடும்
  அதற்காக நான் பொய் பேச முடியாது
  இறைவன் தான் மனிதனை படைத்தான் என்பதற்கு அறிவியல் ரீதியாக ஆதாரம் தந்து விட்ட பிறகும்
  சப்பை கட்டு கட்டி கொண்டு இருக்கிறீர்கள்
  உங்கள் அறியாமையை நினைத்து பரிதாபப் பட தான் முடியும்

 60. அப்பட்டமாக பொய் சொல்லாதீர்கள் \\இறைவன் தான் மனிதனை படைத்தான் என்பதற்கு அறிவியல் ரீதியாக ஆதாரம் தந்து விட்ட பிறகும்// என்ன ஆதாரம் தந்தீர்கள்? உங்கள் பதிவுகளிலிருந்து எடுத்துக் காட்டவும்.

 61. இறைவன் மனிதனை மணல் மற்றும் களி மண் கலந்து உருவாக்கினான்
  ஒரு மனிதனின் உடலை பகுப்பாய்வு செய்தால் அதில் மணல் மற்றும் களி மண்ணில் உள்ள அனைத்து மூல பொருள்களும் இருப்பதை அறியலாம்
  இது ஒன்றே போதும் இறைவன் தான் மனிதனை படைத்தான் என்பதற்கு சான்று
  இதை இஸ்லாம் 1444 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டது
  உங்கள் அறிவியல் இப்போது தான் கண்டு பிடித்து இருக்கிறது

 62. \\இறைவன் தான் மனிதனை படைத்தான் என்பதற்கு அறிவியல் ரீதியாக ஆதாரம் தந்து விட்ட பிறகும்// இது தான் நீங்கள் கூறியது. \\என்ன ஆதாரம் தந்தீர்கள்? உங்கள் பதிவுகளிலிருந்து எடுத்துக் காட்டவும்// இது என்னுடைய கேள்வி. ஆனால் நீங்கள் பதிவிலிருந்து எடுத்துக் காட்டாமல் புதிதாக ஏதோ சொல்லி இருக்கிறீர்கள். அப்படி என்றால் நீங்கள் முதலில் சொன்னது பொய் தானே.

 63. நண்பர் நடோடி மன்னன்,
  இரண்டு நாட்கள் ஆகி விட்டன. விரைந்து பதில் சொல்லுங்கள். அதன் பிறகு தானே நீங்கள் கூறிய மண்ணால் படைத்ததை அடித்து நொறுக்க முடியும்.

 64. நண்பர்களே,
  நாடோடி மன்னன் இதன் பிறகு வரவில்லை. ஆனால் மண்ணும் களிமண்ணும் கலந்து கடவுள் மனிதனை படைத்ததாக கூறப்படும் ’அந்த’ உருட்டை அடித்து நொறுக்க வேண்டும் அல்லவா? அதை புதிதாக செய்ய வேண்டியதில்லை. நாடோடி மன்னன் 2022ல் எழுப்பி இருக்கும் அந்தக் கேள்வியை 2008லேயே அடித்து துவைத்து காயப் போட்டு விட்டாயிற்று. தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளவர்கள் கீழ்கண்ட பதிவில் படித்துக் கொள்ளலாம்

  நண்பர் டென்தாராவுக்கு மறுப்பு

 65. வணக்கம் ஜெயபாரதன் ஐயா,

  பதிலெழுத நீண்ட நாட்களாகி விட்டது. பொறுத்துக் கொள்க.

  நிரந்தரப் படைப்பாளி என்ற ஒன்று இந்தப் பேரண்டத்தில் இருக்க முடியுமா? கணிதத்தில் விடை தெரியாத மதிப்புக்கு ‘எக்ஸ்’ என்று பெயரிடுவது போல, நம்முடைய கற்பனைக்கு ஏற்ப ஏதாவது பெயர் வைத்துக் கொண்டு, அதிலிருந்து நடப்பு உலகின் நாம் அறியும் முரண்பாடுகளை விளங்கிக் கொள்ள பயன்படுத்தலாம். இதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் அந்தக் கற்பனைகளை உண்மை என எண்ணி பொதுவெளியில் அதற்கு இணங்கி அனைவரும் செயல்பட வேண்டும் என எதிர்ப்பார்ப்பது பொறுப்பான மனிதர்களின் எதிர்பார்ப்பாக இருக்க முடியாது.

  இரண்டு தொப்புள் கொடி, நிரந்தர படைப்பாளி, உயிரினங்களின் சிறப்புத் தகுதிகள் இறைவனால் திட்டமிடப்பட்டவை, ஆன்மா உள்ளிட்ட அனைத்தும் மேற்கண்டவாறான கற்பனைகளே என்பதே என் கருத்து.

  அறிவியலுக்கு உடன்படாத, அறிவியலுடன் முரண்படும் எவற்றிலிருந்தும் விலகி நிற்கவே நான் எண்ணுகிறேன். அது சரி என்றும் ஏற்கிறேன். கடவுள் ஏற்பு, மறுப்பு என்பது நீண்ட கால சிக்கல். சான்றுகளிலிருந்து வெற்று நம்பிக்கைகளுக்கு எதிராக நிற்பதும், தலைமுறை வழியிலான நம்பிக்கை என்பதால் (கடவுள் வகையில் மட்டும்) அறிவியலை விலக்கி வைப்பதும் மிக நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும் ஒன்று.

  உங்களின் கருத்துகளை நான் இந்த அடிப்படையிலேயே பார்க்கிறேன். நாம் விவாதிக்க வேண்டும் என்றால் குறிப்பான கேள்விகளை முன்வைத்து தொடங்கலாம். நான் ஆயத்தமாகவே இருக்கிறேன். ஆனால், வானியல் குறித்தும், வெளியை உளவும் செயற்கைக் கோள்கள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவரும் உங்களுடைய நேரத்தை வீணடிக்க வேண்டாமே என்பதும் என் கருத்தாக தயக்கமாக இருக்கிறது.

  நீங்கள் நினைத்தவாறு செயல்படலாம். பின்னூட்டமிட்டமைக்கு நன்றி ஐயா.

 66. நண்பர் செங்கொடி,

  பிரபஞ்சம் எப்படித் தோன்றியது என்று விஞ்ஞானிகள் தற்போது கூறும் பெருவெடிப்பு
  நியதி முழுக்க மனித யூகிப்பே. உலகமும், உயிரினமும் எப்படி தோன்றின என்று
  தெரிந்தால் சொல்வீர். நானும் கற்றுக் கொள்கிறேன்.

  உங்கள் மகனார் என்ன பட்டதாரி ?

  சி. ஜெயபாரதன்.

 67. வணக்கம் ஐயா,

  உங்களைப் போன்ற அறிவியலாளர்க்ளுக்கு நான் கற்றுத்தர முடியுமா? அது உங்களின் பெருந்தன்மையாக எடுத்துக் கொள்கிறேன். என்னுடைய கருத்தைக் கூறுகிறேன். தவறு என எண்ணுவதை சுட்டிக் காட்டுங்கள். விவாதிப்போம். சரியானதை இருவருமே ஏற்றுக் கொள்ளலாம், தவறானதை இருவருமே தள்ளி வைக்கலாம்.

  என்னுடைய மகன் Msc Physics முடித்து விட்டு தற்போது Phdக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

  பெருவெடிப்பு நியதி என்பது யூகம் தான். அது உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என்பது உண்மைதான். பல விவாதங்களில் இதை நானும் வெளிப்படுத்தி இருக்கிறேன். ஆனால் அது வெறுமனே மல்லாந்து படுத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்து செய்த யூகம் அல்ல. அதற்கும் அடிப்படை இருக்கிறது. பேரண்டம் முழுதும் பரவி இருக்கும் வெப்பம், அகச் சிவப்பு கதிர். பருப் பொருட்களின் விரைவு உள்ளிட்டவைகளை கணக்கிட்டு செய்யப்பட்டிருக்கும் யூகம். எனவே அதை வெறுமனே மனித யூகம் என்று மட்டும் கூற முடியாது. ஏனென்றால் மனித யூகம் எனும் சொல்லுக்கு இங்கு வேறு பொருள் நிலவுகிறது. எனவே, பெருவெடிப்பு நியதி என்பதை அறிவியல் யூகம் என்று கொள்ளலாம்.

  புவி எப்படி தோன்றியது என்பதற்கு உங்களுக்கு தெரியாத எதையும் என்னால் கூறிவிட முடியாது. எனவே, உயிரினம் எப்படி தோன்றியது என்பதில் எனக்குள்ள புரிதலை மட்டும் கூறுகிறேன். அதுவும் புதிதாக அல்ல, 2008ல் நான் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து எடுத்து தருகிறேன்.

  நண்பர் டென்தாரா ஹாரூன் யஹ்யாவின் நூலில் இடம்பெற்றிருக்கும் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார். அதாவது மனிதன் பரிணாம வளர்ச்சியின் மூலம் படிப்படியாக மாறிவந்தானென்றால் முதல் உயிர் எப்படி தோன்றியது? ஒரு உயிரினத்திலிருந்து தானே இன்னொரு உயிர் தோன்றமுடியும். எந்த உயிரினமும் இல்லாமல் பூமி மண்ணும் கல்லும் மலையுமாய் இருக்கையில் உயிரற்ற பொருட்களிலிருந்து உயிருள்ள ஒன்று எப்படி தோன்றியிருக்க முடியும்? என்பது அந்தக்கேள்வி?

  இதற்கு விளக்கம் சொல்லுமுன் உயிர் என்றால் என்ன? என்பதைப்பற்றி சரியான தெளிவான புரிதல்களை ஏற்படுத்தியாகவேண்டும். உயிர் என்பதற்கு மதவாதிகள் மிகப்பிரமாண்டமாய், மிக அரிதான ஒன்றாய், தெய்வீகத்தன்மையுடையதாய் புனைவுகளை ஏற்படுத்திவைத்திருக்கிறார்கள். உயிருள்ள மனிதனாய் இருப்பது இறைவனின் மிகப்பெரிய கருணை எனவே நீ அவனை வணங்கவேண்டும்.கடவுள் நம்பிக்கையின் அடித்தளமே உயிர் பற்றிய சிறப்பான மிகைப்படுத்தப்பட்ட கற்பனையில் தான் அமைந்திருக்கிறது. உன்னை அவன் மண்ணாக படைத்திருக்க முடியும் ஆனால் மனிதனாக படைத்திருக்கிறானே அதற்கு நீ நன்றி செலுத்து. இப்படி உலகிலுள்ள பெரும்பாலான மனிதர்கள் ஆத்தீகர்களானாலும், நாத்தீகர்களானாலும் உயிர் பற்றிய மிகைமதிப்பிலேயே இருக்கின்றனர் ஆனால் உண்மையில் மண்ணுக்கும் மனிதனுக்கும் பெரிய வெறுபாடு ஒன்றுமில்லை. உலகிலுள்ள எந்தப்பொருளை எடுத்துக்கொண்டாலும் உயிருள்ளதானாலும் உயிரற்றதானாலும் அவை அணுக்களாலேயே அக்கப்பட்டிருக்கின்றன. ஒரு அணுவை எடுத்துக்கொண்டால் அணுவுக்குள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் என்ற மூன்று பொருட்கள் இருக்கின்றன. இதில் புரோட்டானையும் நியூட்ரானையும் எலக்ட்ரான்கள் சுற்றிவருகின்றன. இது தான் அணுவின் அமைப்பு. இந்த அணுதான் மண்ணிலும் இருக்கிறது மனிதனிலும் இருக்கிறது. உயிருள்ள பொருளிலும் அதேஅணுதான் உயிரற்ற பொருளிலும் அதே அணுதான். இரண்டுவகை பொருட்களின் அணுவிலுமே புரோட்டானையும் நியூட்ரானையும் எலக்ட்ரான்கள் சுற்றிவருகின்றன. என்றால் உயிரற்ற பொருட்களுக்கும் உயிருள்ள பொருட்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? அசைவு. உயிருள்ள பொருட்கள் அசைகின்றன, வளர்ச்சியடைகின்றன, இனப்பெருக்கம் செய்கின்றன இதுதான் உயிர் என்பதன் பொருள். ஆனால் உயிரற்ற பொருட்கள் இதை செய்வதில்லையா? அவைகளும் இதை செய்கின்றன. எப்படி? தண்ணீர் ஒரு உயிரற்ற பொருள் தான் அதை ஒரு இடத்தில் வைத்தால், வைத்த இடத்தில் அது அப்படியே இருக்கிறதா? பள்ளமான இடத்தை நோக்கி அசைகிறது இடம் பெயர்கிறது. காற்று உயிரற்ற பொருள்தான் அது அசைவற்றா இருக்கிறது? வெற்றிடத்தை நோக்கி வீசிக்கொண்டே இருக்கிறது. ஒரு இரும்புத்துண்டை எடுத்துக்கொள்வோம் வெயிலில் அதை போட்டுவைத்திருந்தால் அது நீட்சியடைகிறது. ஓரிரு மில்லிமீட்டர்கள் வளர்ச்சியடைகிறது. காற்றடைத்த பலூனை லேசாக சூடாக்குங்கள் (பலூனுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம்) பலூன் வெடித்துவிடும் ஏன்? காற்றானது பெருக்கமடைகிறது. உப்பை எடுத்துக்கொள்ளுங்கள் சோடியம், ஆக்ஸிஜன், குளோரின் இந்த மூன்று பொருளும் ஒன்றுகூடி சோடியத்தின் பண்பும் இல்லாத, குளோரினின் பண்பும் இல்லாத, ஆக்ஸிஜனின் பண்பும் இல்லாத சோடியம் குளோரைடு என்ற புதிய பொருள் அதாவது உப்பு என்ற புதிய பொருள் பிறக்கிறது. இவைகளெல்லாம் நாம் அன்றாடம் பார்க்கும் விசயங்கள். உயிருள்ளவைகளை போலவே உயிரற்றவையும் செயல் படுகின்றன. சரி, மனிதனுக்கு வருவோம். காலில் முள் குத்தியதும் வலிக்கிறது. இதில் நடைபெரும் செயல் என்ன? தோலில் தூண்டப்படும் உணர்வுகள் நரம்பு அணுக்கள் வழியாக மூளைக்கு கடத்தப்படுகிறது. எப்படி ஒரு கம்பியின் ஒரு முனையை சூடாக்கினால் மறுமுனைக்கு சூடு கடத்தப்படுகிறதோ அதே அடிப்படையில். ஆசை, கோபம், சிந்தனை நினைவு போன்ற மூளையின் செயல்பாடுகள் எப்படி நடைபெறுகின்றன? வேதியியல் வினைமாற்றங்கள் தான். மூளையில் வேதிவினைமாற்றங்கள் செய்வதன் மூலம் மனிதனின் மனோபாவத்தை மாற்ற முடியும். கவலையாக இருந்தால் தூக்கமாத்திரை உட்கொண்டு தூங்குகிறோம். அது என்ன செய்கிறது? செயற்கையாக தூக்கத்திற்கான வேதிவினையை மூளையில் நிகழ்த்துகிறது. அதனால் தான் தூக்கம் வருகிறது உடனே. மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு மனிதனை மூளையின் குறிப்பிட்ட பகுதியை காந்த ஊசியால் நிரடுவதன் மூலம் எந்த இழப்பும் இல்லாமலேயே சோகத்தில் தள்ளமுடியும். அப்படியென்றால் என்னதான் வித்தியாசம் உயிரற்றவைகளுக்கும் உயிருள்ளவைகளுக்கும்? உயிரற்றவை ஒரு குறிப்பிட்ட வரையரைக்குள் செயல் படுகின்றன, உயிருள்ளவை வரையரைகளுக்கு அப்பாற்பட்டு செயல்படுகின்றன. இதுதான் உயிரற்றவைகளுக்கும் உயிருள்ளவைகளுக்கும் இடையிலுள்ள வித்தியாசம். இதை புரிந்து கொள்ளாததுதான். இதை சரிவர உள்வாங்காமல் உயிர்பற்றிய மிகை மதிப்பு இருப்பதால் தான் நண்பர் டென்தாரா (அல்லது ஹாரூன் யஹ்யா) ஒரு உயிர்னத்திலிருந்து தானே இன்னொரு உயிர் வரமுடியும். அப்படியிருக்கும் போது உயிரில்லாத பொருட்களிலிருந்து உயிர் எப்படி தோன்றமுடியும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஒருவகையில் அவர்களின் கேள்வியும் சரியானதுதான். ஒரு உயிரினத்திலிருந்து தான் இன்னொரு உயிர் பிறக்கமுடியும். ஒரு குதிரையிலிருந்து இன்னொரு குதிரைதான் பிறக்கமுடியும். யானையிலிருந்து யானை தான் பிறக்குமேயல்லாது கரடி பிறக்காது. அப்படி இருக்கும் போது குரங்கிலிருந்து மனிதன் எப்படி உருவாகமுடியும்? இங்கு தான் பரிணாமத்தின் பங்களிப்பு வருகிறது.

  நெருப்புக்கோளங்களிலிருந்து வெளிப்பட்ட பூமி, கொஞ்சம் கொஞ்சமாய் குளிர்ந்த போது அதன் விளைவால் வாயுக்கள் தோன்றின, வாயுக்கள் நெருக்கத்தால் ஒன்றுகூடி நீர் உருவாகி மழையாகி ஆறுகளும் கடல்களும் உருவாயின. ஆறுகளின் வேகத்தல் பாறைகள் உடைபட்டு கடலோரங்களில் மணலாய் சேர்ந்தது. மணலிலுள்ள சிலிகானும் பாஸ்பரசும் மின்னலின் மின்சாரத்தால் வினையூக்கப்பட்டு அசைவைப்பெற்றது. இது தான் முதல் உயிர். இப்படி தொடங்கியது தான் பூமியின் உயிர்களின் பயணம்.

  எப்படி மனிதன் உயிர்பற்றி மிகை மதிப்பு கொண்டிருக்கிறானோ அதுபோலவே பரிணாமம் பற்றி குறை மதிப்பு கொண்டிருக்கிறான். ஓர் உயிரிலிருந்து மற்றொரு உயிர் பிறந்து வந்ததாய் கற்பனையிலிருக்கிறான். ஆனால் பரிணாம வளர்ச்சி என்பது அப்படியானதல்ல. கருவறை நிலைபாடு டார்வினிசமா?……… என்ற கட்டுரையில் நான் குறிப்பிட்டிருப்பது போல, ஒரு உயிரிலிருந்து பிரிதொரு உயிர் வரும்போது. டிஎன்ஏ மரபணு ஏணிகளில் அதற்கான செய்திகள் பதிந்திருக்கும். புதிய உயிரின் உருவ உறுப்புகளின் அமைப்பை இது தான் தீர்மானிக்கிறது. இப்படி கடத்தப்படும் செய்திகளில் தற்செயல் வாய்ப்பாக ஏதேனும் தவறுகள் நேர்ந்துவிட்டால் அப்பொது புதிய உயிர் தாய் உயிரிலிருந்து ஒரு மாறுதலான அம்சத்தைப்பெறும். எடுத்துக்காட்டாக தாயின் கழுத்தைவிட சற்று நீளம் கூடுதலான செய்தி புதிய உயிரின் டிஎன்ஏ மரபணு ஏணிகளில் பதிவாகிவிட்டால் தாயைவிட குட்டிக்கு கழுத்து கொஞ்சம் நீளமாக இருக்கும். அடுத்து இந்த மாறுதலானது சமூக உயிர்ப்பிற்கு, தகவமைதலுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு காட்டு எருதை எடுத்துக்கொள்வோம் அது ஈனும் குட்டியின் மரபணுவில் பிளவுபட்ட குளம்பு என்பதற்குப்பதிலாக பிளவுபடாத குளம்பு என்று ஆகுமாயின் பிறக்கும் குட்டி எருதாகத்தான் இருக்கும் ஆனால் காலில் ஒரு குளம்புடன் இருக்கும். எருதுகளை விட விரைவாக ஓடுவதற்கு பயன்பட்டால் அது நிலைத்திருக்கும் மாறாக தட்டையான கால்களுடன் ஓடுவதற்கு இடையூறாக இருந்தால் அது நீடிக்காது அழிந்துவிடும். இப்போது அந்த ஒற்றைக்குளம்பு எருது தேவையான மாற்றம் அமையப்பெற்றிருப்பதால் தாயை விட பரிணாம வள்ர்ச்சியில் ஒருபடி மேலோங்கியிருக்கும். (இது போன்ற மரபணு மாற்றங்கள் இப்போதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வயிற்றில் காலுடன் பிறந்த மாடு ஒன்றின் படம் எல்லா தினசரிகளிலும் வெளியானது. மூன்று கைகளுடன் குழந்தை, மூக்கு நீண்ட பன்றி என உலகில் ஆயிரக்கணக்கில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இது போன்ற மரபணு செய்தியின் தவறுகளுக்கு படைப்புவாதிகள் முடிந்தால் விளக்கம் சொல்லட்டும்)இப்படி ஏற்படும் மாற்றம் மேலும் மேலும் தொடரும் சூழல் அமைந்தால் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப்பிறகு ஒற்றைக்குளம்புடன் கூடிய புதிய எருதுவகை ஒன்று பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும். இதைபோன்ற வளர்ச்சியினூடாகத்தான் ஒலிகோஸீன் காலகட்டத்தில் அதாவது இன்றைக்கு நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் வாலில்லாத குரங்கின் வகையிலிருந்து பரிணாமவளர்ச்சியின் மூலம் மனிதன் உருவாக ஆரம்பித்தான். அதிலிருந்து தற்கால மனிதனின் உருவ அமைப்பை பெற்றது ஹோலோஸீன் காலகட்டத்தில் தான் அதாவது இன்றைக்கு இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு.

 68. நியூட்டன் புற இயக்கி

  சி. ஜெயபாரதன், கனடா.

  இமயத் தொட்டிலை ஆட்டி
  எப்படி  எழும் பூகம்பம் ?
  பசிபிக் தீவுகளில்
  குப்பென
  எப்படிக் குமுறிடும்
  எரிமலை ?
  பூமியின் உட்கருவிலே
  தீக்குழம்பை
  ஈர்ப்புக்கு எதிராய்
  பல்லாயிரம் மைல் வெளித் தள்ளும்
  அசுர அணு உலை ஒன்று
  எப்படி உருவானது ?
  ஆழ்கடல் அடியில் பன்னூறு
  அணுகுண்டு வெடித்து
  அசுரச் சுனாமிப் படை
  அலைகள்
  எப்படிக் கரையேறி
  அழிக்கும் ?

  தாயின் கர்ப்ப பையில்
  அற்புதச்  சிசு
  எப்படி உருவாகுது,
  பத்து மாதம் வளர்ந்து ?
  மாங்கனி, பலா, வாழை,  ஆப்பிள்
  தேங்காய், கரும்பு, திராட்சை,
  மாதுளை, பீச்சு, பேர்
  கனிகளில்
  எப்படி தனித்தனி சுவைதரும்  
  இனிப்புச் சார் சுரக்குது ?
  பற்பல வண்ணளில்
  வானில்
  பறக்கும் புல்லினம்
  எப்படித் தோன்றின ?

  நியூட்டன்
  புற இயக்கி இன்றி, இவ்வகை
  எல்லா
  அக இயக்கிகள்
  தனியாக எப்படி தமது
  வினையாற்றும் ?

  **********************

  சி.ஜெயபாரதன்

  அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியல் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா, கனடாவில் அனுபவம் பெற்று, இப்போது ஓய்வில் தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960ஆம் ஆண்டு முதல் இவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. இவரது ஆக்க வினைகளுக்கு அணுசக்தி நூல் 1964இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைப் பதிவுகள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த 20 ஆண்டுகளாக 1000க்கும் மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் பற்பல அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை, வல்லமை போன்ற வலைத் தளங்களில் பல்லாண்டுகள் வந்துள்ளன. இவரது நீண்ட தமிழ் நாடகங்கள், மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன.

  இதுவரை 28 நூல்கள் வெளிவந்துள்ளன: ஆக்க வினைகளுக்கு அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், அணுசக்தி, தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி, அணுவின் ஆற்றல், இந்திய விஞ்ஞான மேதைகள், சீதாயண நாடகம், சீதாயணம் படக்கதை, கீதாஞ்சலி, ஆபிரஹாம் லிங்கன், சாக்ரடிஸ், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க், முக்கோணக் கிளிகள் படக்கதை, கலீல் கிப்ரான் கவிதைகள், விண்வெளி வெற்றிகள், அணுமின்சக்தி பிரச்சனைகள், மெய்ப்பாடுகள், அணுசக்தியே இனி ஆதார சக்தி, நைல் நதி நாகரீகம், உலகிலே உன்னத பொறியியற் சாதனைகள், எழிலரசி கிளியோபாத்ரா, காதல் நாற்பது, உன்னத மனிதன், பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் (தொகுப்பு 1 & 2), அண்டவெளிப் பயணங்கள். Echo of Nature [English Translation of Environmental Poems (வைகைச்செல்வி வெளியீடு]. ஏழ்மைக் காப்பணிச் சேவகி நாடகம் [பெர்னாட் ஷாவின் மேஜர் பார்பரா மின்னூல்].

  ******************

 69. கடவுள் என்பது வெறும் ஒரு நம்பிக்கை இல்லை. படைப்பாளி இல்லாது படைப்புக்கள் ஏது ? காரண காரணியான கடவுள் நிரந்தர
  ஒற்றை இருப்பு.

  அகர முதன்மை மானிடத்துக்கு .

  அகரத்துக்கு முன்பு ஓர் எழுத்தில்லை.

  சி. ஜெயபாரதன், கனடா

 70. பிரபஞ்ச தோற்றக் கோட்பாடான நவீன யூகிப்பு ” பெரு வெடிப்பு நியதி ” நியூட்டனின் புற இயக்க இருப்பு நியதிக்கு முரணாக உள்ளது.
  Newton first law of dynamics is THE LAW of CREATION.

  அதுவின்றி அணு அசையாது, மூலகம் அமையாது, மூலக்கூறு தோன்றாது, பயிரினம் விளையாது. மரபணு உயிரினம் பிறக்காது. அகிலமும் விரியாது

  மனிதர் ஓர் ஆப்பத்தைச் சுட்டுத் தின்ன முதலில் ஒரு பிரபஞ்சம் தோன்ற வேண்டும்.

  S. Jatabarathan, Canada

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s