
வறுமையின் தத்துவம் என்ற தலைப்பில் ஒரு நூலை புருதோன் எழுதினார். மார்க்ஸ் இதை மறுத்து விளக்கி எழுதிய நூலுக்கு வைத்த தலைப்பு தத்துவத்தின் வறுமை. கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை மார்க்ஸ் ஏங்கல்ஸ் எழுதிய போது ஐரோப்பாவை ஒரு பூதம் பிடித்து ஆட்டுகிறது, கம்யூனிசம் எனும் பூதம் என்று எழுதினார்கள். இப்படி மார்க்சிய எழுத்துகளில் ஊடாடிக் கிடக்கும் அழகியலை சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரு படைப்பின் இலக்கிய மதிப்பு எங்கிருந்து வருகிறது? சொற்கோர்ப்பால் உண்டாகும் அழகியலில் இருந்து மட்டுமா? இல்லை ஒரு படைப்புக்கான உச்ச மதிப்பு, அது யாருக்காக பங்களிக்கிறதோ அதனோடு நடப்பில் இணைந்திருப்பதாகும். பெரும்பான்மை மக்களோடு இணைந்து வாழச் சொல்லும் ஒரு தத்துவம் மார்க்சியத்தை தவிர வேறொன்று இருக்கிறதா? மட்டுமல்லாது இது வரட்டு சூத்திரமல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது. என்றால் இலக்கிய நயம் என்பது மார்க்சியத்தில் அல்லவா நிறைவடையும்.
வாசகசாலை ஏற்பாடு செய்திருந்த எழுத்தாளர் மார்க்ஸ் எனும் அரங்கில் மார்க்சியமும் இலக்கியமும் என்ற தலைப்பில் தோழர் துரை சண்முகம் ஆற்றிய உரை இது.
சமூக ஊடகங்களில் பகிரும் வசதிக்காக இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது.
கேளுங்கள் பரப்புங்கள்.
பின்குறிப்பு: இந்த ஒலிக் கோப்பு தேவைப்படுவோர் இரண்டு கோப்பாகவோ அல்லது இணைந்த ஒரே கோப்பாகவோ வேண்டுவோர் அதைக் குறிப்பிட்டு senkodi002@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் வாட்ஸ் ஆப் இலக்கத்தை அளித்தால் அனுப்பி வைக்கப்படும்.