மரண வியாபாரி

“உங்களது மாமன்னன் ஒரு அயோக்கியக் கொலைகாரன் என்றால், அவனுக்கு முட்டுக் கொடுக்கும் நீங்கள் அதை விடக் கொடூரமான ஈவு இரக்கமற்றக் கொலைகாரர்கள். அதை மறவாதீர்கள்.ஒருவேளை நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம்.”

********

இந்தியா கோவிட்டின் மரணக் கிணறாக மாறி வருகிறது. முற்றிலும் செயலற்ற ஒரு பிரதமரும் அவரைச் சுற்றி இருக்கும் அமைச்சர்களும் எந்தக் குற்றவுணர்வும் இன்றி அடுத்து இந்தியாவின் எந்தப் பொதுத்துறை நிறுவனத்தை அம்பானிக்கும் அதானிக்கும் விற்கலாம் என்று ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

தெற்கு பரவாயில்லை. மக்கள் மீது அக்கறை கொண்ட அரசுகள் மக்களைப் பாதுகாக்கின்றன. வடக்கு சீப்பட்டு செத்துக் கொண்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் கோவிட் பிணங்களை கங்கையில் அப்படியே தூக்கி எறிகிறார்கள். அது பீகாரின் பாக்ஸ்டர் நகரின் கங்கைக் கரையில் கரையொதுங்குகின்றன. ஊதிப் போய் நாற்றமடித்துக் கொண்டிருக்கின்றன. அந்த நகரமே அச்சத்தில் உறைந்திருக்கிறது.

மோடியை விடக் கொடூரமான ரத்த வெறி கொண்ட முதல்வரான ஆதித்யநாத் மோடிக்கு இணையாக தம் சொந்த மக்களைக் கொன்று குவித்துக் கொண்டு வருகிறார்.

இன்னும் ஒரே மாதத்தில் இந்தியாவின் கோவிட் மரண எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தாண்டி விடும் என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள். இல்லை இல்லை. ஏற்கெனவே நாம் பத்து லட்சம் என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டோம். அரசு அறிவிக்கும் மரண எண்ணிக்கையைத் தாண்டி, சிகிச்சையே கிடைக்காமல் கிராமங்களில் மரித்துப் போவோரின் எண்ணிக்கையை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை என்று மற்றொரு சாரார் சொல்கிறார்கள். ஆக, நாடெங்கும் மக்கள் கொத்துக் கொத்தாக மரணம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.

‘லான்செட்’ என்ற வெளிநாட்டு நாளிதழ் இத்தனை மரணங்களுக்கும் மோடிதான் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி இருக்கிறது. இந்தியச் செய்தியாளர் களுக்கு நேர்மையை விட பணமும் உயிரும் முக்கியம். இந்தியாவில் வயரும், ஸ்க்ராலும் மட்டும்தான் தைரியமாக மோடியின் கொடூரங்களைத் தோலுரித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்ற பத்திரிகைகள் அனைவருமே மோடிக்கான பக்க வாத்தியங்களைக் கையிலெடுத்து வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது ஒருபுறம் என்றால் நாடு முழுக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்துத் தட்டுப்பாடு என்று மக்கள் தெருக்களில் அலைந்து நா வறளக் கத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கொலைகார மோடி அரசோ முகத்தை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டு மோடிக்கான மாளிகையைக் கட்டுவதில் கவனமாக இருக்கிறது.

தொடர்ந்து ஆயிரக் கணக்கான மக்கள் செத்து வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது போதாது என்று தற்போது தடுப்பூசிகளின் விலையை மோடி அரசு ஆறு மடங்கு அளவுக்கு உயர்த்தி அறிவித்திருக்கிறது.

உலக நாடுகள் அனைத்தும் என்ன விலை கொடுத்தாவது தடுப்பூசிகளை வாங்கித் தத்தம் மக்களுக்கு இலவசமாகப் போட்டு தம் நாட்டை கோவிட்டில் இருந்து பாதுகாக்க இரவும் பகலுமாக வேலை செய்து கொண்டிருக்க, உள் நாட்டிலேயே தயாராகும் தடுப்பூசிகளின் விலையை ஆறு மடங்கு கூட்டி இருக்கும் இந்தக் கேடு கெட்ட பிரதமர் மரண வியாபாரி அல்லாமல் வேறு யார்..?

குஜராத்தில் தனது என்ட்ரியின் போது கொன்ற இரண்டாயிரம் உயிர்களைப் பார்த்தபோதே இந்த மோடியை நாம் நிராகரித்திருக்க வேண்டும். இந்த இந்துத்துவா முட்டாள் சப்போர்ட்டர்கள் துணையோடு இப்போது அரியணையில் அமர்ந்து தம் சொந்த நாட்டின் மக்களையே கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார் இந்த மரண வியாபாரி.

அஃப் கோர்ஸ் கொன்று விளையாடுவதுதானே இந்தக் கொடூர மன்னனின் பொழுதுபோக்கே..

இன்னும் மோடி மோடி என்று முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் அயோக்கியக் கனவான்களே..

இந்தப் பத்து லட்சத்து சொச்சம் உயிர்களின் ரத்தத்திலும் உங்களது பெயரும் உள்ளது என்பதை மட்டும் மறவாதீர்கள்..

உங்களது மாமன்னன் ஒரு அயோக்கியக் கொலைகாரன் என்றால், அவனுக்கு முட்டுக் கொடுக்கும் நீங்கள் அதை விடக் கொடூரமான ஈவு இரக்கமற்றக் கொலைகாரர்கள். அதை மறவாதீர்கள்.

ஒருவேளை நீங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்க மாட்டோம்..

முதற்பதிவு: நந்தன் சீதரன், முகநூலில்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s