வெகுஜனங்களிடையே கட்சியின் பணி

தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் வள்ர்ச்சிக்கும், அரசியல் நிறுவன ஒழுங்கமைப்புக்கும் உதவுவது தான் நமது முதன்மையான அடிப்படையான பணி. இந்தப் பணியைப் பின்னுக்குத் தள்ளுகிறவர்கள், எல்லாத் தனிப்பட்ட பணிகளையும் குறிப்பிட்ட போராட்ட முறைகளையும் இதற்கு கீழ்ப்படுத்த மறுப்பவர்கள் தவறான பாதையில் செல்கிறவர்களாவர். இயக்கத்துக்கு பெருந்தீங்கு இழைப்பவர்களாவர். .. .. ..  

.. .. .. அரசியல், பிரச்சாரம், கிளர்ச்சி, நிறுவன ஒழுங்கமைப்பு இவற்றின் உள்ளடக்கத்தையும் வீச்சையும் குறுகச் செய்து விடுவோராலும் தொழிலாளர்களுடைய வாழ்க்கையில் விதிவிலக்கான சில தருணங்களில் மட்டும், விசேச சந்தர்ப்பங்களில் மட்டும் அவர்களுக்கு அரசியலை தெரியப்படுத்துவது தான் சரியானது, பொருத்தமானது என நினைப்போராலும், எதேசதிகாரத்துக்கு எதிரான அரசியல் போராட்டத்துக்குப் பதிலாக எதேச்சதிகாரத்திடமிருந்து தனிப்பட்ட சலுகைகள் சிலவற்றைப் பெறுவதற்கான கோரிக்கைகளைப் பரிவுடன் மேற்கொள்வோராலும், இந்த தனிப்பட்ட சலுகைகளுக்கான கோரிக்கைகள் எதேச்சதிகாரத்துக்கு எதிரான புரட்சிகர தொழிலாளர் கட்சியின் முறையான, விட்டுக் கொடுக்காத போராட்டத்தின் நிலைக்கு உயரும் படி உறுதி செய்வதற்கு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இருப்போராலும் இப்பணி பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

படியுங்கள் .. .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. .. பரப்புங்கள்

நூலை மின்னூலாக (பி.டி.எஃப்) பதிவிறக்க

10 thoughts on “வெகுஜனங்களிடையே கட்சியின் பணி

  1. இந்தியாவில் தொழிலாளிகள் (பாட்டாளிகள்) எத்தனை சதவீதம் உள்ளனர்.

  2. தம்மவேல் இந்த புள்ளிவிவரத்தை ஏன் கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இந்தியாவில் பதிவு செய்த தொழிலாளர்கள் தோராயமாக 48 கோடி. துல்லியமான தரவுகள் தெரியவில்லை.

  3. சும்மா தெரிஞ்சிக்க கேட்டேன். குழந்தைகள் முதியவர்கள் நீங்கலாக…
    48கோடி நிரந்தர தொழிலாளர்கள் (பாட்டாளிகள்) இருக்கிறார்கள் என்றால் இந்தியாவில் புரட்சியை விரைவில் எதிர்பார்க்கலாம்.

  4. எண்ணிக்கையை வைத்து புரட்சி வருவதில்லை என்பதை உங்களைப் போன்ற தொழிலாளர்கள் உணர்ந்திருக்கிறீர்களோ இல்லையோ, ஆனால் பாட்டாளிகள் உணர்ந்து வருகிறார்கள், உணர்த்தி வருகிறார்கள். எனவே உங்களுக்கும் சேர்த்து விரைவில் புரட்சியை எதிர்பாருங்கள்.

  5. நான் தொழிலாளர் இல்லையே தோழர், உதிரிதொழிலாளி வர்க்கம் தான் தோழர்.
    குறைந்தபட்சம் 50ஆயிரம் ஊதியம் பெருகிற இந்திய நிரந்தர தொழிலாளர்கள் 48கோடி நபர்கள் விரைவில் கிளைமாக்ஸை ஏற்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

  6. \\குறைந்தபட்சம் 50ஆயிரம் ஊதியம் பெருகிற இந்திய நிரந்தர தொழிலாளர்கள் 48கோடி நபர்கள்// நல்ல புரிதல். வாழ்த்துகள்

  7. எந்த நிரந்தர ஊழியர் 50k 40k வுக்கு குறைவாக வாங்குகிறார். ஒப்பந்த ஊழியரே 30k 20k வாங்குறாங்க.

  8. நான் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் என்று தான் எழுதியுள்ளேன். நிரந்தர தொழிலாளர்கள் என்று எழுதவில்லை.

  9. நான் பாட்டாளிகள் (தொழிலாளர்கள்) என்று தானே கேட்டேன்.
    Neem/ CL ./ தொழிற்சங்கத்திலேயே சேர்க்கப்பட மாட்டார்களே. அவர்கள் தொழிலாளி வர்க்கம் அல்லது பாட்டாளி வர்க்க வரையறைக்குள் வருவார்களா தோழர். தெளிவுபடுத்துங்க.
    வரமாட்டார்கள் என்றால்;
    இந்தியாவின் பாட்டாளி வர்க்கத்தின் எண்ணிக்கை எவ்வளவு என்று சொல்லுங்க.
    அவர்களின் ஊதியம் வாழ்நிலை குறித்து பின்னர் பேசலாம்.

  10. பதிவு தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடுங்கள். வேறு ஐயங்கள் இருந்தால் தனியாக கேட்கவும். அல்லது நீங்கள் கேட்டிருப்பது தொடர்பான உங்கள் எண்ண ஓட்டங்களை முழுமையாக முன்வைத்தால் தனி கட்டுரையாகவே எழுதுகிறேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்