மரண ஜோதியை தரிசித்த மகர ஜோதி

அறிவியல் முன்னோக்கி பயணிக்க, பயணிக்க அதன் கடைக்கம்பியை பிடித்து தொத்திக்கொண்டு ஆன்மீகமும் நேர்மையற்று கூடவே வந்துவிடுகிறது. அறிவியலின் வேகத்தைவிட இப்படி ‘தொத்திக்கொண்டு’ பயணிப்பது ஒரு சாகசமாக பார்க்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் அடிக்கடி கிழித்துக்கொண்டு வெளிவந்துவிடுகின்றன. சாஸ்தா வாழவைப்பார் என்றும், மகர ஜோதி அதிசயம் என்றும் நம்பும் அப்பாவி பக்தர்களின் பாமரத்தனமான நம்பிக்கை அவர்களின் வாழ்வை அவநம்பிக்கையாக்கி விடுகிறது. இதை ஆண்டவனின் அருளில் ஏற்பட்ட பிழை என்பதா? ஆள்பவர்களின் அலட்சியம் என்பதா?

 

மகரஜோதி தரிசனம்(!) முடிந்து திரும்பியவர்கள் நெரிசலில் சிக்கி 109 பேர் இறந்துவிட்டிருக்கிறார்கள். உடனே ‘உள்ளேன் ஐயா’ வுக்காக பலர் அதிர்ச்சி தெரிவித்தார்கள், கவலைப்பட்டார்கள், ஆள்பவர்கள் இழப்பீடுகளை அறிவித்தார்கள். இனி வேறொரு மதத்தில், பிரிதொரு இடத்தில், மற்றுமோர் இழப்பு ஏற்படுவது வரை இந்தப் பேச்சுக்கள் மறைந்து போகும். ஆனாலும், மதங்களின் அதிசயங்கள், அற்புதங்கள் மட்டும் எந்தக் கேள்விக்கும் உட்படுத்தப்படாமல் தொடர்ந்துகொண்டே இருக்கும். இதே சபரிமலையில் கூட 1952 ல் 66 பேரும் 1999 ல் 53 பேரும் பலியாகியுள்ளார்கள்.

 

எல்லா மதங்களிலும் அற்புதங்கள் நிறைந்தே காணப்படுகின்றன. இறையியலும், சட்டமுறைகளும் மட்டுமே பக்தர்களுக்கு எப்போதும் போதுமானதாகிவிடுவதில்லை. மக்களை தொடர்ந்து நம்பிக்கையில் நீட்டித்து வைத்திருக்க அதிசயங்களும் அற்புதங்களும் தேவைப்படுகின்றன. அந்த வகையில் ஐயப்ப பக்தர்களுக்கு மகரஜோதி. எந்த ஒருவரையும் தொடர்ச்சியாக, குறிப்பிட்ட ஒரு நாளில், குறிப்பிட்ட ஒரு நேரத்தில், குறிப்பிட்ட ஒரு நிகழ்சிக்குப் பிறகு தன்னிச்சையாக எந்த ஒரு புறத்தூண்டுதலும் இல்லாமல் நெருப்பு எரிந்து அடங்க முடியுமா எனக்கேட்டால் முடியாது என மிகத்தெளிவாக பதிலளிப்பர். இதற்கு எந்த அறிவியல் தெளிவும், கல்வியறிவும் அவசியமில்லை. ஆனால் அதுவே மகரஜோதி எனும் பெயரில் ஏமாற்றினால் லட்சக்கணக்கானவர்கள் எல்லாவித சிரமங்களையும் தாங்கிக்கொண்டு அதை கண்டுகளிக்க சித்தமாகி விடுகிறார்கள்.

 

1925 க்கு முன்னர் மகர விளக்கு காட்சியளித்ததாக யாரும் காணவும் இல்லை, கூறவும் இல்லை. 1940 களிலேயே இது பிரபலமாகி பரவத்தொடங்கியது, அதன் பிறகுதான் ஐயப்பனின் ஆண்டு வருமானமும் கூடியது. 70களின் பிறகு பலர் இது மனிதக்கரங்களால் ஏற்றப்படும் நெருப்புதான் என்பதை பலமுறை நிரூபித்தபின்னரும் மகர விளக்கு மகரஜோதியாய் சுடர் முடிந்திருக்கிறது என்றால், “இதயமில்லா உலகின் இதயமாக இருக்கிறது மதம்” எனும் மார்க்ஸின் கூற்று எத்தமை உண்மையாக இருக்கிறது. பகுத்தறிவாளர்கள் மகர ஜோதி ஏற்றப்படும் பொன்னம்பல மேட்டை நோக்கி உண்மை விளக்கப் பேரணியை நடத்தி மகர ஜோதியை தடுத்து நிறுத்துகிறோம், மக்களுக்கு அப்போது உண்மை விளங்கும் என புறப்பட்ட போது, “மகரஜோதியை தேவசம் போர்டுதான் ஏற்பாடு செய்கிறது என்று நான் அறிவிக்கிறேன். பகுத்தறிவாளர்கள் மகரஜோதியை தடுக்க வேண்டாம்” என்று பகுத்தறிவாளர்களை தடுத்த ஈகே நாயனாரும் தன்னை கம்மூனுஸ்ட் என்று தான் கூறிக்கொண்டார்.


 

மக்களின் மூட நம்பிக்கைகள் ஒருபுறமிருக்கட்டும்; இப்படி ஒரு நெரிசல் ஏற்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் மரணமடையக் காரணம் மக்களின் தவறு தானாம். பக்தர்கள் வந்த ஒரு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்தில் மோதி விபத்துக்குள்ளானனதும், மிரண்டு போன மக்கள் நடைபாதைக் கடைகளில் நுழைந்ததை கடை உரிமையாளர்கள் தடிகொண்டு அடித்து விரட்டியதுதான் நெரிசல் ஏற்படக் காரணம். இதை முறையாக விசாரித்து உரியவர்களுக்கு தண்டனை வாங்கித்தரவேண்டும் என நாளிதழ்கள் தீர்ப்பெழுதுகின்றன.

 

சபரிமலை சுற்றுலா ஆண்டுக்கு நூறு கோடிக்கும் அதிகமாக வருமானம் ஈட்டித்தரும் இடமாகும். இதற்காக தேவசம் போர்டு என தனி அமைச்சரவையையே வைத்திருக்கும் கேரள அரசு மக்களின் வசதிக்காக செய்ததென்ன? முறையான போக்குவரத்து வசதிகளோ, தங்குமிடங்களோ, பாதுகாப்பு ஏற்பாடுகளோ உரிய அளவில் ஏற்பாடு செய்யாதது யாருடைய குறை? முழுமையான மலைப்பகுதியாக இருப்பதால்தான் அதிகமான வசதிகளை செய்து கொடுக்க இயலவில்லை என அமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார். பணக்கார முதலாளிகளின் தனித்தனி ரிசார்ட்டுகளுக்கும், உல்லாச விடுதிகளுக்கும் அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்திருக்கும் போது மக்கள் கூடும் இடங்களுக்கு அது போன்ற வசதிகளை ஏன் செய்துகொடுக்க முடியாது?

 

ஒருபுறம் அரசே முன்னின்று காவல்துறை பாதுகாப்புடன் மக்களை ஏமாற்றுகிறது, அந்த ஏமாற்றத்தின் பலனை கோடிகளில் அறுவடை செய்கிறது. மறுபக்கம் அந்த மக்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்காமல் அதனால் அவர்கள் செத்து மடிவதை அலட்சியம் செய்கிறது. யாரிடம் பணத்தை வசூல் செய்கிறதோ அவர்களுக்கு வேண்டியதை செய்துகொடுக்க மறுப்பதுதான் அரசின் பொதுவான குணமாக இருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் வளைகுடாவில் இரத்தம் சிந்தி அனுப்பும் பணத்தில் செலவாணியை ஈட்டும் அரசு, அவர்களின் துயர்களை கண்டுகொள்ள மறுக்கும் அரசு, ஆஸ்திரேலியாவில் சிலர் இறந்ததற்காக கண்ணீர் விடுகிறது. நாட்டில் கோடிகணக்கான மக்கள் வறுமையில் வாடினாலும் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பலவிதங்களில் வரி வசூலிக்கும் அரசு, அவர்களுக்கு கொடுக்கும் அற்ப மானியங்களையும் வெட்டிக்குறைத்துவிட்டு கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்யும் முதலாளிகளுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்குகிறது. எதை எடுத்துக்கொண்டு பார்த்தாலும் இதுதான் அரசின் பொதுக்குணமாக இருக்கிறது.

 

எந்த ஒளிவுமறைவும் இன்றி முதலாளிகளுக்கு சேவை செய்யும் அரசை ஜனநாயக அரசு, மக்களாட்சி என்று நம்புவது எந்த அளவுக்கு மடமையோ, அது போன்ற மடமை தான் கடவுள் என்ற ஒன்றால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பது வெளிப்படையாக தெரிந்தபின்பும் அது மக்களைக் காக்கும், அற்புதங்கள் செய்து பிரமிக்க வைக்கும் என நம்புவதும். இரண்டுவித மடமைகளிலிருந்தும் மக்கள் வெளியேறும் போது தான் தங்களின் மெய்யான மதிப்பும், உயிரின் இழப்பும் என்னவென்று புரியும்.

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

7 thoughts on “மரண ஜோதியை தரிசித்த மகர ஜோதி

  1. விப்த்தில் இறந்த அப்பாவிகளுக்கு ஆழ்ந்த அனுதாபமும் ,அஞ்சலியும் செலுத்துகிறேன்.

    மக்களை பத்தியின் பெயரால் தன்ள் கோவிலில் இந்த நேரத்தில் மட்டுமே கடவுள் தெரிவார் என்பதும்,அதை கேட்டு கூடிய கூட்ட நெரிசலில் பல அடிக்கடி இறப்பதும் வன்மையாக கண்டிக்க தக்கது.அவர்கள் கூறும் பலவிதம்மான கட்டுக் கதைகளுக்கு ஆதாரம் உண்டா என்று அப்பாவி பக்தனுக்கு தெரியாது.

    ஐயப்ப வழிபாடு பிரபலமானது இந்த 50 வருடங்களில் என்றாலும் அது எப்போது ஆரம்பித்தது என்பது சரியாக கூறப்படுவது இல்லை.

    ஒரு கேரள மன்னனின் கதை மிகை படுத்தி சொல்லப்படுவதாக கொள்ளலாம். ஐயப்பனின் நண்பராக ஒரு இஸ்லாமியரும்(வாவர்) கூறப்படுவதால் அய்யப்பன் என்றழைக்கப்படும் மன்னன் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கலாம்.

    இந்த ஐயப்ப வழிபாடு பற்றி சொல்லப் படும் கதைகளுல் ஒன்று விஷ்னுவின் மோகினி அவதாரமும் சிவனும் சேர்ந்து பிறந்தவர் என்று கூறப்படுகிறது.

    இதனை பற்றி கொஞ்ச விஷயங்கள் தெரிந்து கொள்வோம்.

    விஷ்னு அசுரர்களில் குலகுரு சிக்கிராச்சாரியாரின் தாய் காவ்யா தேவியின் சாபத்தாலேயே அவதாரங்கள் எடுக்க வேண்டி இருந்தது.

    அ) மோகினி விஷ்னுவின் அவதாரமா?

    விஷ்னுவின் பத்து(தச) அவதாரங்கள்.

    விஷ்னுவின் அவதாரங்களாக 1:மச்ச(மீன்),2:கூர்ம(ஆமை),3:வராக(பன்றி),4:நரசிம்மம்,5:வாமனன்,6:பரசு ராமன்,7:இராமன்,8:பல ராமன் ,9:கிருஷ்னன் ,10:கல்கி.

    இதில் கல்கி மட்டும் பாக்கி.மொத்தம் பத்து என்பதால் மோகினி விஷ்னு அவதாரம் என்பது சந்தேகமே.
    _________________________
    (இதனை பற்றி இன்னும் பார்ப்போம்)

  2. அன்புத் தோழர் செங்கொடிக்கு: வணக்கம். நன்றி . பொதுவாகவே நான் என்ன கருத்து கொண்டிருக்கிறேனோ அதே பதிவு. உங்களிடமிருந்தும் வந்து விடுகிறது. எனவே நான் எழுதுவதில்லை; அந்த கருப் பொருளில். எனினினும் நான் எழுதுவதும் நீங்கள் எழுதுவதும் ஒன்றல்ல. இதை ஒவ்வொருவராலும் உணரமுடியும் ஒரு சிறு தகவல்: சபரிமலை தேவசம் போர்டின் தற்போதைய தலைமை ஒரு கம்யூனிஸ்ட் லீடர்தான். அவர் நாளிதழில் தெரிவித்துவிட்டார்: டன் கணக்கில் ட்ரக்குகளில் எடுத்துச் செல்லப்படும் கற்பூரம்தான் அங்கு கொட்டி எரியூட்டப்படுகிறது என. அது மின்னி எரிவதற்காக அதன் மேல் ஈரச் சாக்கு போடப்படுகிறதாம். இது: மகர விளக்காம்; மகர ஜோதி அன்று விண்ணில் இருக்கும் ஒரு நட்சத்திரம் என மற்றொரு கோயில் அர்ச்சகர்/பூசாரி; கடவுள் பணியாளர் எனச் சொல்பவர் அடுத்த நாளில் பேட்டிக் கொடுத்துள்ளார்.
    எப்படி ஆனாலும்; கும்பகோண மகாமகம்; காசி கங்கைக் குளியல்; சபரிமலை; திருப்பதி; கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் என பக்தியை மக்கள் கூட்டத்தை வைத்து மலினப்படுத்தி உயிரை எடுத்து வருகிறார்கள்
    மக்களும் மாக்களாக மாண்டுபோகவே செல்லுகின்றன . ஒன்றும் திருந்துவதாகக் காணோம்.ஊதுகிற சங்கை ஊதி வைப்போம்.
    இவண் கவிஞர் தணிகை. வணக்கம். நன்றி.

  3. //எப்படி ஆனாலும்; கும்பகோண மகாமகம்; காசி கங்கைக் குளியல்; சபரிமலை; திருப்பதி; கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் என பக்தியை மக்கள் கூட்டத்தை வைத்து மலினப்படுத்தி உயிரை எடுத்து வருகிறார்கள்//

    ஏலீ ஏலீ லாமா சபக்தானீ /

    மெக்காவை ஏன் விட்டுவிட்டீர் தணிகையாரே ?

  4. தமிழில் எழுதியமைக்கு நன்றி கவிஞர். தணிகை அவர்களே!

  5. Very good article செங்கொடி I truly appreciate it – our governments are using the temples as a source of Income, I request all Hindus not to put any money on temple charity box – rather that money can be used to educate a poor kids…

    Also செங்கொடி could show some light on other worshiping places death traps…
    Source: Wikipedia – Incidents during the Hajj
    1). Stampedes:
    Sometimes the surging crowds, trekking from one station of the pilgrimage to the next, cause a stampede. Panic spreads, pilgrims jostle to avoid being trampled, and hundreds of deaths can result. The Stoning of the Devil ceremony is particularly crowded and dangerous.

    Plains of Arafat on the day of Hajj
    July 2, 1990 : A stampede inside a pedestrian tunnel (Al-Ma’aisim tunnel) leading out from Mecca towards Mina, Saudi Arabia and the Plains of Arafat led to the deaths of 1,426 pilgrims.
    May 23, 1994 : A stampede killed at least 270 pilgrims at the stoning of the Devil ritual.
    April 9, 1998: at least 118 pilgrims were trampled to death and 180 injured in an incident on Jamarat Bridge.[2]
    March 5, 2001: Thirty five pilgrims were trampled to death in a stampede during the stoning of the Devil ritual.[3]
    February 11, 2003: The stoning of the Devil ritual claimed 14 pilgrims’ lives.[4]
    February 1, 2004: 251 pilgrims were killed and another 244 injured in a stampede during the stoning ritual in Mina.[5]
    Wikinews has related news: Hundreds dead in Hajj stampede
    January 12, 2006: A stampede during the ritual ramy al-jamarāt on the last day of the Hajj in Mina killed at least 346 pilgrims and injured at least 289 more. The incident occurred shortly after 13:00 local time, when a busload of travellers arrived together at the eastern access ramps to the Jamarat Bridge. This caused pilgrims to trip, rapidly resulting in a lethal crush. An estimated two million people were performing the ritual at the time.

    II). Fires:
    December 1975: An exploding gas cylinder caused a fire in a tent colony and resulted in the deaths of 200 pilgrims.[6]
    April 15, 1997: 343 pilgrims were killed and 1,500 injured in a tent fire in MINA on 8 zillhijja between 10 am to 12 pm.

    III) Protests and Violence
    November 20, 1979: A group of about 200 militants occupied the Grand Mosque, and later were expelled by Pakistani and French forces (three Frenchmen, reportedly, who were converts to Islam.[7]), leaving about 250 dead, and 600 wounded.
    July 31, 1987: Iranian pilgrims rioted, causing the deaths of over 400 people.
    July 9, 1989: Two bombs exploded, killing 1 pilgrim and wounding another 16. Saudi authorities executed 16 Kuwaiti Shia Muslims for the bombings after originally suspecting Iranian terrorists.

  6. DAI NAI KALA SERUPALA ADIPEN..AYYAPANAI PATHI PESA UNGALUKU ENNA YOKITHAI IRUKU…POMBALAIYUM ,, BEER PATALUM KEDACHA POTHUM ,,KUUTHUM KUMALAM ADIPINGA …NEENGA AYYANAI PATHI PESATHATHINGADA NAI KALA

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்