எழுவர் விடுதலை: சிக்கலும் விடுதலையும் ஒன்றே

mother of perarivalan

ராஜிவ் கொலைக் குற்றவாளிகள்(!) எழுவரின் விடுதலை நீதி மன்றத் தீர்ப்பாலும், ஜெயாவின் அறிவிப்பாலும் மீண்டும் பற்றி எறிந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ், பிஜேபி விடுதலைக்கு எதிராகவும், திமுக சற்றே அடக்கி வாசித்தும், அதிமுக, தமிழினவாதிகள் விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் திமுகவை, கருணாநிதியை திட்டுவது தான் தமிழினவாதிகளின் ஈழ ஆதரவாளர்களின் தொல்காப்பியமாக ஆகியிருக்கிறது. அந்த அடிப்படையில் எழுவர் விடுதலை குறித்த குரல்கள், மெய்யாக அவர்களின் விடுதலை எனும் எல்லையை கடந்து, அதிமுக அமைச்சர்களே (அமைச்சர்கள் என்பது பிறள்பொருள் தந்தால் அடிமைகள் என்று திருத்திக் கொள்ளவும்) நாணிக் குறுகும் அளவுக்கு அதிமுகவிற்கான பாராட்டாக, ஈழத் தாயைத் தவிர வேறு யாராலும் இப்படி ஒன்றை சாதித்திருக்க முடியாது எனும் அழவுக்கு தமிழகத்தில் வழிந்து கொண்டிருக்கிறது. நாற்பதும் நமதே எனும் பாசிசத் தாயின் முழக்கத்திற்கு முட்டுக் கொடுப்பதற்கு முந்திக் கொண்டிருக்கிறது. நாளிதழ்களின் நாணல் முதுகுகள் மட்டும் நிமிர்ந்து நிற்குமா என்ன? தினமணியின் கேலிச் சித்திரம் விடுதலைத் தீர்மானத்திற்காக தமிழகமே வர்க்க பேதம் கடந்து ஜெயாவுக்கு பூச்செண்டு கொடுக்கிறது. அதே நாளின் இன்னொரு கேலிச் சித்திரத்தில் கருணாநிதி முக்காடு போட்டுக் கொண்டு எங்களுக்கும் மகிழ்ச்சி தான் என்கிறார்.

 

இவர்களை ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் என்கிறது அரசும், விடுதலையை எதிர்ப்பவர்களும், ஊடகங்களும். தமிழினவாதிகளோ ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்கிறார்கள். ஆனால் அவர்கள் ராஜிவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டவர்கல் என்பதே சரியானது. இதற்கு ஆதாரமாக பேரறிவாளனின் வாக்குமூலம் திருத்தப்பட்டது என உயரதிகாரி ஒருவரே ஒப்புக் கொண்டிருகிறார். ஏனையோருக்கு இப்படி யாரும் ஒப்புக் கொள்ளவில்லை என்பதால் அவ்வாறான ஐயத்தை புறந்தள்ளி விடவேண்டுமா? ராஜிவ் கொலை வழக்கு எப்படி விசாரணை செய்யப்பட்டிருக்கிறது? ராகுல் காந்தி பிரதமருக்கே நீதி கிடைக்காது என்று சாதாரண மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும் என்று ஏழை மக்களுக்காக உருகுவது போல் தன்னைத்தானே அம்பலப்படுத்தியிருகிறார். ராஜிவ் கொலை வழக்கு விசாரணையில் நடந்த குளறுபடிகள் யாரும் அறியாத ஒன்றா என்ன?

 

ஜெயின் கமிசன் அறிக்கை முக்கிய கூற்றவாளிகளாக கருதிய சுப்பிரமணிய சாமி, சந்திரா சாமி மீது வழக்குப் பதிவு செய்யாத காரணம் என்ன? வர்மா கமிசன் அறிக்கை என்னவானது? குண்டு வெடித்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை எடுத்துக் கொண்டு கொடுக்காமலே மறைத்து விட்டாரே எம்.கே நாராயணன் அவர் மீது என்ன விசாரணை நடத்தப்பட்டது? ஜெயின், வர்மா கமிசன்களின் முக்கிய அறிக்கையை (File No. 1/12014/5/91-IAS/DIII) நரசிம்மராவ் அழித்ததாக கூறப்படுகிறதே அதற்கு விடை என்ன? சுப்பிரமணிய சாமியும் ஒரு வெளிநாட்டு உளவு நிறுவனமும் ரகசிய குறியீடுகள் மூலம் பேசியதாக கூறப்பட்ட ஒலிப்பதிவு பிரதமர் அலுவலகத்தில் வைத்தே காணாமல் போய்விட்டதே எப்படி? அன்றைய உள்துறை அமைச்சர் சவாண் விடுதலைப் புலிகள் தவிர வேறு சில வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கும் ராஜிவ் கொலையில் தொடர்பு உண்டு என்று கூறியிருக்கும்போது புலன் விசாரணை தலைவராக இருந்த கார்த்திகேயன் விடுதலைப் புலிகள் என்ற கோணத்தில் மட்டுமே விசாரணை நடத்தப்பட வேண்டும் என அடம் பிடித்ததன் காரணம் என்ன? இப்படி ஒன்றல்ல இரண்டல்ல பல கேள்விகள் விடை காணப்படாமல் தண்ணீர் ஊற்றி ஈரச் சாக்கில் அமுக்கப்பட்டிருக்ன்றன.

 

ராஜிவ் கொலை செய்யப்பட்டு சில ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பிரபாகரன், ராஜிவ் கொலை குறித்து கேட்கப்பட்ட போது அது ஒரு துன்பியல் நிகழ்ச்சி என்று மட்டுமே கூறினார். அதாவது ஆம் என்று ஏற்கவும் இல்லை. இல்லை என மறுக்கவும் இல்லை. தெளிவாகச் சொன்னால் விடுதலைப் புலிகளே இதில் சிக்க வைக்கப் பட்டிருக்கிறார்கள். ஏதோ காரணத்திற்காக அவர்களும் இணங்கியிருக்கிறார்கள் என்பது தான் பொருத்தமாக இருக்கிறது. விசாரணையின் லட்சணம் இந்த நிலையில் இருக்கும் போது, பேட்டரி வாங்கிக் கொடுத்தார்கள், மெழுகுவர்த்தி வாங்கிக் கொடுத்தார்கள் என்பதற்காக தூக்குத் தண்டனை விதிக்கும் நாடு உலகில் வேறு எங்கேனும் இருக்கிறதா? இந்த வழக்கில் விடுவியுங்கள் என்று கேட்பதே பிச்சை. விடுவிக்கப் போகிறாயா இல்லையா என்று தமிழ் நாடே எழுந்து நின்று போராடுவதே உரிமை.

 

விடுதலை ஒரு பக்கம் இருக்கட்டும், தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று முன்பு கோரிய போது கூட இதை அரசியல் ரீதியாக அணுகாமல், உலகின் பல நாடுகளில் மரண தண்டனையை நீக்கி விட்டார்கள், அகிம்சை நாடான இந்தியாவில் இன்னும் ஏன் வைத்திருக்கிறீர்கள் என்று மனிதாபிமான கோரிக்கையாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக அடைபட்டிருக்கும் அவர்களை சிறுமைப் படுத்தும் விதத்தில் தான் கோரிக்கை வைத்தார்கள் தமிழுணர்வாளர்கள். விடுதலைப் புலிகள் ராஜிவை கொன்றது குற்ற நடவடிக்கை இல்லை, அரசியல் நடவடிக்கை, எதிர்வினை எனும் போது தெரியாமல் பேட்டரி வாங்கிக் கொடுத்தது தூக்குத்தண்டனை விதிக்கும் அளவுக்கான குற்றமா? எனும் கேள்வி யாருக்கும் எழவில்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் தேசத்தின் மனசாட்சி என்ற பெயரில் அப்சல்குருவை கொன்ற போது அமைதி காத்தவர்கள் அல்லவா?

 

தற்போது கூட நீதிமன்றம் அவர்கள் செய்த குற்றத் தன்மையின் அடிப்படையில் விடுவிக்கவில்லை. கருணை மனு நீண்ட காலம் தாமதிக்கப் பட்டிருக்கிறது எனும் அடிப்படையிலேயே விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள். 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் எப்படியாவது விடுவித்தால் போதும் எனும் சுயதிருப்தியில் இல்லை, அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு விலக்கப்பட்டு, குற்றத்தைவிட மிக அதிக காலம் சுதந்திரமாக வாழும் உரிமை மறுக்கப்பட்டவர்கள் எனும் அடிப்படையில் இந்திய அரசு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விடுவிக்க வேண்டும் என்று மக்கள் எழுந்து போராடுவதிலேயே இருக்கிறது சுயமரியாதை.

 

ஆனால் இப்போதும் கூட இது எப்படி திசை திருப்பட்டிருக்கிறது. தமிழர்கள் குறித்து வடமாநிலத்தவர்களுக்கு அக்கரை இல்லை. தமிழர்கள் விடுதலையை எதிர்க்கிறார்கள் என்றே பரப்புரை செய்கிறார்கள். ஏன், இளங்கோவன், நாராயணசாமி, விஜயதாரணி, ஞானதேசிகன் உள்ளிட்ட காங்கிரஸ்காரர்களும், இந்த விசயத்தில் கள்ள மௌனம் சாதிக்கும் தமிழக பாஜக காரர்களும் தமிழர்கள் தானே அவர்களும் எதிர்க்கிறார்களே. ராஜிவ் கொல்லப்பட்டது அரசியில் எதிர்வினை எனும் அடிப்படையில் சரியான செயல். அதற்கு உதவியதாகக் கூறி வாக்குமூலத்தை திருத்தி தூக்குத்தண்டனை விதிப்பது குற்றச் செயல் என்று பேச திராணியற்று அகிம்சை நாட்டில் தூக்குத் தண்டனை இருக்கலாமா? என்று மனிதாபிமானத்தை குழப்பியவர்கள், இப்போது தமிழ் தேசியவாதத்தை குழப்புகிறார்கள். இவர்களை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்யும் நேரம் இது.

 

இப்போது இவைகள் எல்லாவற்ரையும் விட முக்கியமான பிரச்சனையாக எழுந்திருப்பது பாசிச ஜெயாவுக்கு ஓட்டுப் பொறுக்க கிடைத்த வாய்ப்பாக இதை பயன்படுத்துவது தான். விடுதலைப் புலிகள், ஈழ விடுதலை, ராஜீவ் கொலை குறித்து ஜெயாவின் கருதுகோள் என்ன? ராஜிவ் கொலையை பயன்படுத்தி வாகை சூடிய ஜெயா அடுத்த கணமே அதை மறுத்தார், அன்றிலிருந்து இன்றுவரை விடுதலைப் புலிகள் மீதான பீதியை காட்டி மக்களையும் எதிர்க்கட்சிகளையும் ஒடுக்கியதே ஜெயாவின் அரசியல். போர் என்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கூறிவிட்டு, தேர்தல் வந்ததும் ஈழத்தாயாக அவதாரமெடுத்தார். புரட்சி பேசியவர்களெல்லாம் புரட்டுத் தாய்க்கு வாக்குகளைக் காணிக்கையாக்கினார்கள். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார்கள். எதிர்பார்த்த  வெற்றி கிடைக்கவில்லை என்றதும் ஈழத்தை கழிப்பரைக் காகிதத்துக்கு ஈடாகக் கூட மதிக்கவில்லை அம்மையார். இது அடுத்த தேர்தல், ஆனால் பழைய வரலாறு அப்படியே மீண்டும் தொடர்கிறது. சில நாட்களுக்கு முன்னர் நளினியை ஜாமீனில் விட எதிர்ப்பு தெரிவித்த ஜெயா, நீதி மன்றத் தீர்ப்பு வந்தவுடன் விடுதலை தீர்மானம் போட்டார். இதோ அத்தனை வண்ண ஓட்டுக் கட்சிகளும், தமிழினவாதிகளும் ஜெயாவுக்கு லாலி பாடிக் கொண்டிருக்கிறார்கள். அம்மா பிரதமராகிவிட்டால், பிரபாகரனை கொண்டு வந்து தூக்கில் போடவேண்டும் என்று கூறியதை மறந்து ராஜபக்சேவை தூக்கில் போட்டு விடுவாரோ.

 dinamani cartoon

இதன் மூலம் கருணாநிதியை ஆதரிப்பதாக யாரும் கருதிவிடலாகாது. இந்தியாவில் இவர் அளவுக்கு அம்பலப்பட்ட தலைவார்கள் யாரும் இருக்கிறார்களா தெரியவில்லை. ஈழத்தை விட்டுவிடுவோம், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு கூட இவர் மதிப்பளித்ததில்லை. திமுக எனும் சமஸ்தானத்தின் பாத்தியதையை தனக்குப் பின் தன் வாரிசுகளுக்கு பாதிப்பு இல்லாமலும் சேதாரம் இல்லாமலும் எப்படி கடத்துவது என்பதைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படும் நிலையில் அவர் இல்லை. எழுவர் விடுதலைக்காக அவரை கவலைப்படக் கோருவது செத்த பாம்பை படமெடுக்கக் கோருவதற்கு ஒப்பாகும். ஆனால், ஆனால், .. .. .. ஆனால், ஜெயாவையும் கருணவையும் ஒரே தட்டில் நிறுத்த முடியுமா? இன்று ஸ்பெக்ட்ரம் உள்ளிட்டு அவர் எதிர் கொண்டிருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் அவர் செய்ததின் எதிர்வினைகள் தாம் என்றாலும், அதில் பார்ப்பன எதிர்ப்புக்கு அவர் கொடுக்கும் விலை ஊடுநூலைப் போல் ஊடாடியிருக்கிறது என்பதை மறுக்க முடியுமா? ஆனால் இன்றைய ஈழ அரசியல் என்பது தண்ணீர் பாம்பான ஜெயாவுக்கு எதிராக முதுகெலும்பை உருவிப் போட்டுவிட்டு குழைவதும், செத்த பாம்பான கருணவை தடியெடுத்துத் தாக்கிவிட்டு அதையே வீரமாக காட்டிக் கொள்ளும் போக்கும் சகிக்க முடியாததாக இருக்கிறது.

 

துக்ளக் சோ தான் ஜெயாவின் ராஜகுரு என்பது ஒன்றும் சிதம்பர ரகசியமல்ல. சிதம்பரம் வழக்கில் சு.சாமி ஜெயாவுக்கு எப்படி பாராட்டுப் பத்திரம் வாசித்தார் என்பதும் யாரும் அறியாததல்ல. ஆனால் எழுவர் விடுதலை குறித்த தீர்மானத்தில், சு.சாமி ஜெயலலிதா ஒரு நடிகை அவருக்கு சட்டம் தெரியாது என்கிறார். சோவோ தன் மொட்டையை தடவிக் கொண்டே இது குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை என்கிறார். ஏன்? தில்லை கோவில் தீட்சிதர்களுக்கு போனதில் இம்மூவரும் அடிநாதமாக இருந்தது போலவே, இதிலும் அடிக்கொள்ளி இவர்களே. உங்கள் வெற்றி நாங்கள் போட்ட பிச்சை என்று கூறியதற்கு அவதூறு வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கிறார் ஸ்டண்ட் நடிகர். நீ நடிகை உனக்கு சட்டம் தெரியாது என்று கூறிய பின்னும் அதிமுக மகளிர் அணியினர் சேலை உடுத்திக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? ஆனால் இருக்கிறார்களே காரணம் என்ன?

 

நீதிமன்ற தீர்ப்பு தெளிவாகவே இருக்கிறது. தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது. மூவரின் விடுதலை குறித்து மாநில அரசு தீர்மானித்துக் கொள்ளலாம். கூடவே, மத்திய அரசின் கருத்தையும் அறிந்து கொள்ளவும் கூறப்பட்டிருக்கிறது. இதன்படி எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி மூவரையும் விடுதலை செய்து விடலாம். மீதி நால்வர் கூட சற்றே தாமதமாக வெளியில் அனுப்பிவிட முடியும். அவ்வாறு செய்யாமல், ஒரே தீர்மானத்தில் ஏழு பேரையும் ஒன்றாக இணைத்தது ஏன்? மைய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் மூன்று நாட்களுக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும் என்று கெடு விதித்தது ஏன்? இங்கு தான் அவர்களின் கள்ளக்கூட்டு வருகிறது. இதற்கு முன் எத்தனை தீர்மானங்களை அனுப்பியிருக்கிறார். அனுப்பும் தீர்மானங்கள் பிரதமர் அலுவலகத்தின் குப்பைத் கூடைக்குத்தான் போகும் என்பது ஜெயா அறியாததா? அதனால் தான் வழக்கம் போல் தீர்மானம் அனுப்பிவைத்தார். உடனே ஈழத்தாய் பட்டத்தை தூசு தட்டிக் கொண்டுவந்து விடுவார்கள் அப்பரசண்டிகள் என்பது ஜெயாவுக்குத் தெரியும். பாராளுமன்றத் தேர்தலின் நாற்பதுக்கு அது உதவும். அதேநேரம் ஏழுபேரையும் ஒன்றாய் இணைத்ததன் மூலமும், மூன்று நாட்கள் கெடு விதித்ததன் மூலமும் தூக்கத்திலிருந்து விழித்து காங்கிரஸ் அதற்கு எதிராக ஏதாவது செய்யும். அதாவது விடுதலை செய்யக்கூடாது எனும் சொந்த ஆசையும் நிறைவேறிவிடும், அதேநேரம் அதையும் நாற்பதுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆக பார்ப்பன பாசிச நோக்கத்தின்படிதான் இதுவரை அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. அனால் இந்த நச்சை புரிந்து கொள்ளாமல் தமிழக சுவர்களிலெல்லாம் நன்றி சுவரொட்டிகள் அப்பியிருக்கின்றன.

 

மானமும் அறிவும் மனிதர்களுக்கு அழகு என்றார் தந்தை பெரியார். பிரச்சனைகளை அரசியில் ரீதியில் பகுத்து அறிந்து கொள்ள முன்வராமல் உணர்ச்சியால் அடித்துச் செல்லப்படுவது என்றுமே சரியான தீர்வைத் தராது. ஈழம் குறித்தும், அது தொடர்பாகவும் கடந்த முப்பது ஆண்டுகளாக ஓட்டுப் பொறுக்கிகளும், தமிழினவாதிகளும் கூறிவந்த அத்தனையும் கற்பனைகள் என்பதை காலம் முகத்தில் அறைந்து கூறியிருக்கிறது. நக்சல்பாரி புரட்சியாளர்கள் கூறியவை அப்பட்டமான உண்மைகள் ஆகியிருக்கின்றன. உணர்ச்சி வேக முடிவுகள் உங்களுக்கு விருப்பமானவைகளாக இருக்கலாம். ஆனால் உண்மைகளை மட்டுமே காலம் கணக்கில் வைத்துக் கொள்ளும். வாருங்கள்! புரட்சிகர அரசியல் உங்களை வரித்துக் கொள்ள ஆயத்தமாக இருக்கிறது. அது மட்டுமே ஈழப் பிரச்சனைக்கும் ஏனைய அனைத்திற்கும் சரியான தீர்வைத் தரும்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

24 thoughts on “எழுவர் விடுதலை: சிக்கலும் விடுதலையும் ஒன்றே

  1. வழக்கில் குளறுபடுகள் உள்ளன என்ற காரணத்தின் அடிப்படையில் 7 பேர்களின் தண்டனை குறைக்கப்படலாம் அல்லது ரத்துச் செய்யப்படலாம்.ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதி மன்றத்தால் தீர்ப்பாணை அளிக்கப்பட்டப்பின் ” ஜனாதிபதி” அலுவலகததில் தாமதம் என்று ஒரு முட்டாள்தனமாக காரணம் காட்டி விடுதலை செய்வது முட்டாள்தனம். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளை ரத்து செய்து விடுமா ?
    நீதி பதிகள் எல்லை தாண்டிச் செயல்படுவது இதுவல்ல முதல் தடவை.உள்நாட்டு நிர்வாகத்தையே நீதி மன்றம் நடத்தக் கூடாது. ஆனால் அடிக்கடி அப்படித்தான் செயல்படுகிறது.

  2. ஒரு ஹிந்து பிரதமரைக் கொன்ற கிருத்துவரின் விடுதலைக்கு ஏனிந்த கொண்டாட்டம்?:

    எழுவரும் கிருத்துவர். பிரபாகரன் உட்பட ராஜீவ் காந்தியைக் கொன்ற விடுதலைப்புலி இயக்கம் ஒரு உயர்ஜாதி கிருத்தவ இயக்கம்.

    தமிழீழம் உருவானால் அது ஒரு ஜீஸஸ்தானாகத்தான் மாறும். இதனை வளரவிட்டால், பிள்ளை, வன்னியர் போன்ற உயர்சாதியினர் ஒட்டுமொத்தமாக கிருத்துவ மதத்துக்கு மாறி ஹிந்து மதம் தமிழகத்தில் அழிந்து விடும் அபாயம் உருவாகிறது. ஆகையால்தான் “ஈழத்தை போட் தள்ளு” என பார்ப்பன உயர்ஜாதி ஹிந்து தலைமைச் செயலகம் இந்திய ராணுவத்தை இலங்கைக்கு ஆதரவாக அனுப்பியது.

    அதாவது கிருத்துவ ஈழத்தை ஒட்டுமொத்தமாக ஹிந்து தமிழ்த்தேசியம் கபளீகரம் செய்ய வசதியாக இருக்கிறது இந்த எழுவரின் விடுதலை.
    ஆக இந்த எழுவரின் விடுதலை தமிழ்த்தேசியத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகத்தான் கருதப்படும். இந்த கொண்டாட்டம், சோவியத் யூனியன் போல் இந்தியா உடைந்து சிதறுவதற்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

    ஸ்டைலாக கால் மேல் கால் போட்டுக்கொண்டு, சுருட்டை ஊதிய வண்ணம் பார்ப்பானுக்கு ஆப்படித்து இஸ்லாமிய அணுசக்தி பாக்கிஸ்தானை உருவாக்கி குருட்டுக்கிழவி பாரதமாதாவை மண்டியிட வைத்த மாவீரர் ஜின்னாவை இந்த தமிழ்த்தேசிய தலைவர்களுடன் ஒப்பிட்டால் “மாட்டு மூத்திரத்தை குடித்து விட்டு முழு மாட்டை முசல்மானுக்கு தாரைவார்க்கும் முட்டாள்கள்” எனும் பாக்கிஸ்தானின் நையாண்டிதான் நினைவுக்கு வருகிறது.

  3. ஏன் உயர்ஜாதி தமிழ் ஹிந்து தலைவர்கள் ஈழத்தை போட் தள்ள இந்திய ராணுவத்துக்கு உதவினர்?:

    விடுதலைப் புலி இயக்கம்(LTTE) மேலிருந்து கீழ் வரை கிருத்துவ பிள்ளைமார், கிருத்துவ வன்னியர் ஜாதியின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிரபாகரன் முதல் சாந்தன், முருகன், பேரறிவாளன் வரை ராஜீவ் காந்தியை போட் தள்ளிய அனைவருமே உயர்ஜாதி கிருத்துவர்தான்.

    ஆக ஒரு வேளை தமிழீழம் உருவாகியிருந்தால், அது ஒரு தமிழ் ஜீஸஸ்தனாகத்தான் (JESUSTAN) உருவெடுத்திருக்கும். பிள்ளைமார் வன்னியர் சமூகம் ஒட்டுமொத்தமாக கிருத்துவத்தை தழுவியிருப்பர். ஆகையால்தான், பார்ப்பானுக்கு கூஜா தூக்கும் உயர்ஜாதி தமிழ் ஹிந்து தலைவர்கள் ஈழத்தையும் பிரபாகரனையும் போட் தள்ள இந்திய ராணுவத்துக்கு உதவினர்.

    தொப்புள் கொடி உறவுகளுக்காக கதறும் தமிழினத்தலைவர் கூட்டம்தான் முள்ளிவாய்க்காலின் பின்கதவை திறந்து விட்டு தொப்புள் கொடி உறவை அறுக்க சிங்களனுக்கு கத்தியை எடுத்துக் கொடுத்தனர்.

    இது தவிர, பாக்கிஸ்தான் சீனாவுக்கு முன்னால் சுய இன்பம் கூட அனுபவிக்க முடியாத ஒரு வக்கத்த முடவனின் நிலைக்கு இந்திய ராணுவம் வந்துவிட்டதென்பது ஊரறிந்த ரகசியம்.

    இதுதான் சிதம்பர ரகசியம். புரிஞ்சுதோன்னா?

  4. ஒரு அப்பாவி பார்ப்பன பிரதமரைக் கொன்ற கிருத்துவ தீவீரவாதிகளை விடுவிக்க ஏன் பார்ப்பன முதலமைச்சர் ஆலாய்ப் பறக்கிறார்?

    இந்த தரித்திரியம் பிடித்த நாட்டில் இனி பிழைக்க முடியாதென்று கிருத்துவ அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள லட்சக்கணக்கான பார்ப்பனரைக் காப்பாற்றவா?.
    ——

    உண்மையை சொல்லப் போனால், எப்பேற்பட்ட உத்தமர் முதலமைச்சரானாலும், பிரதமரானாலும் வருடத்துக்கு 3 கோடியாக கட்டுக்கடங்காமல் பல்கிப்பெருகும் 128 கோடி மக்கள் தொகை, ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடம், வறுமை, லஞ்சம், ஊழல், சுருட்டல், கொலை, கொள்ளை, கற்பழிப்பென்று பலவிதமான பிரச்னைகளை தீர்க்க முடியுமா என்பது கேள்விக்குறி.

    நாம் அனைவரும் சேர்ந்து இந்த தரித்திரியம் பிடித்த நாட்டை “தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், தலித்துஸ்தான், திராவிட நாடு, நக்ஸல்புரி, ஆரியவர்த்தா, பிராமணஸ்தான், இஸ்லாமிஸ்தான்” என உடைத்தால், 120 கோடி மக்களுக்கு நல்வாழ்வு மலரும். அவரவர் தேசத்தில் அவரவர் நிம்மதியாக வாழலாம்.

    இல்லாவிட்டால், நாமனைவரும் அடித்துக் கொண்டு சாக வேண்டியதுதான்.

  5. நீதிமன்ற தீர்ப்பு தெளிவாகவே இருக்கிறது. தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது. மூவரின் விடுதலை குறித்து மாநில அரசு தீர்மானித்துக் கொள்ளலாம்

    23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை.

    காங்கிரஸ்காரர்களுக்கு, உணர்ச்சி வேக முடிவுகள் உங்களுக்கு விருப்பமானவைகளாக இருக்கலாம். ஆனால்
    குற்றத்தைவிட மிக அதிக காலம் சுதந்திரமாக வாழும் உரிமை மறுக்கப்பட்டவர்கள் எனும் அடிப்படையில் மக்கள் எழுந்து போராடுவதிலேயே இருக்கிறது சுயமரியாதை.

    காங்கிரஸ்காரர்களும், இந்த விசயத்தில் கள்ள மௌனம் சாதிக்கும் தமிழக பாஜக காரர்களும் தமிழர்கள் தானே.

    இவர்களை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்யும் நேரம் இது..

  6. நஞ்சுண்ட மூர்த்தி அவர்களே,
    உங்களின் மற்ற மறு மொழிகள் ஈழம், தமிழகம் கிருத்துவம் இசுலாம் பற்றிய ஒரு புதிய பார்வையை தருகின்றது.

    ஆனாலும் ஒரு கேள்வி, நீங்கள் சொல்வது சரியானால், கிருத்துவர் சோனியாவும் கிருத்துவர் ராஜபக்ஷவும் வெற்றிபெற ஏன் உயர் ஜாதி ஹிந்து தலைமை செயலகம் துணை நின்றது ?

    ஆனால் நான் உங்களின் மற்ற மறு மொழியில் வேறுபடுகின்றேண்.
    // நாம் அனைவரும் சேர்ந்து இந்த தரித்திரியம் பிடித்த நாட்டை “தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், தலித்துஸ்தான், திராவிட நாடு, நக்ஸல்புரி, ஆரியவர்த்தா, பிராமணஸ்தான், இஸ்லாமிஸ்தான்” என உடைத்தால், 120 கோடி மக்களுக்கு நல்வாழ்வு மலரும். அவரவர் தேசத்தில் அவரவர் நிம்மதியாக வாழலாம். //

    என்னை பொறுத்தவரை பிரிவினை தீர்வை தராது. சுருக்கமாக..

    வினவில் ஸ்டொனன் பற்றிய பதிவுக்கு இட்ட மறு மொழி…

    http://www.vinavu.com/2013/06/11/snowden-interview-video-text/
    ===================
    ஆமெரிக்க கூட்டரசு, (USA) ரசிய கூட்டரசு (USSR) போல… இந்தியா பாக்கிஸ்தான் ஆப்கன் சீனா மலேசிய சிஙக்ப்பூர் ஜப்பான் போன்ற ஆசிய நாடுகள் எல்லாம் தனி தனி அரசை, ராணுவத்தை கலைத்துவிட்டு ஒரெ ஆசிய கூட்டமைப்பு நாடானால் (Asian Democratic Republic) .. அனைத்து நாடுகளும் அதன் மாநிலங்களாக இருக்கலாம். அப்ப்டி மட்டும் நடந்தால் ..USA மற்றும் எல்லா ஐரோப்பிய நாடுகளூமே நம் பூட்சின் கீழ் இருக்கும் கரப்பான் பூச்சிகள் தான்..

    இது நடந்தால் அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு உலகை ஆளும், தனியரசாக ஆள்வது அதுவாகத்தான் இருக்கும்.

    ==================================

    மானிலத்தை பிரித்தால் செலவு இரண்டு மடங்காகும் தனி நாடக்கினால் பயனடைபவர் ஆயுத வியாபரிகளே, மக்கள் மேலும் தரித்திரதை தவிர வேறேதுவும் பெற மாட்டர்.

    உங்கள் பதிலேயே ” நாம் அனைவரும் சேர்ந்து… ” சேர்ந்த பின் ஏன் பிரிக்க வேண்டும் ?

    //உண்மையை சொல்லப் போனால், எப்பேற்பட்ட உத்தமர் முதலமைச்சரானாலும், பிரதமரானாலும் வருடத்துக்கு 3 கோடியாக கட்டுக்கடங்காமல் பல்கிப்பெருகும் 128 கோடி மக்கள் தொகை, ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடம், வறுமை, லஞ்சம், ஊழல், சுருட்டல், கொலை, கொள்ளை, கற்பழிப்பென்று பலவிதமான பிரச்னைகளை தீர்க்க முடியுமா என்பது கேள்விக்குறி. //

    மிக சுலபமாக தீர்வு காணக்கூடிய விஷயங்களே இவை. ஆனால் அறுதி பெரும்பான்மையுன்டன் கூடிய அரசு தான் தேவை. ராஜிவுக்கு அமைந்தது போல் 430 + இடங்களுடன் அரசு அமைந்தால் இவை எல்லாம் ஒன்றும் இல்லை.

    மக்கள் தொகை பெருக்கத்தை சாபமாக பார்க்காதீர். அனைவரும் உண்ன ஒரு வாயுடன் மட்டும் பிறக்கவில்லை,, உழைக்க இரண்டு கையுடனும் தான் இருக்கின்றனர். மக்கள் தொகை ஒரு வரம்.

  7. உங்கள் மறு மொழி மீது இன்னொறு கேள்வி,
    கிருத்துவரான அன்றைய யூனியன் கார்பைடு , இன்றைய டவ் கெமிக்கல்சின் ஆண்டர்சனை போபால் விஷ வாயு கசிவினால் பல லட்சம் ஹிந்துகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதால் ஏற்படும் சட்ட சமூக விளைவுகளில் இருந்து உயர் ஜாதி ஹிந்து பிரதமர் ராஜிவ் காப்பற்றினார் ?

    எனக்கு தெரிந்து ஒரே காரணம் தான். அது என்னானா…

  8. /// நீங்கள் சொல்வது சரியானால், கிருத்துவர் சோனியாவும் கிருத்துவர் ராஜபக்ஷவும் வெற்றிபெற ஏன் உயர் ஜாதி ஹிந்து தலைமை செயலகம் துணை நின்றது ? ///

    உயர்ஜாதி ஹிந்து, பார்ப்பான் சுருட்டிய பணமெல்லாம் அமெரிக்காவிலும் அரேபியாவிலும் இருக்கிறது.

    ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்திய முஸ்லிம்களுக்கும் கிருத்துவருக்கும் இவர்கள் எதிரிகள். இந்தியாவுக்கு வெளியே பணக்கார முஸ்லிம், கிருத்துவ நாடுகளுக்கு இவர்கள் வப்பாட்டிகள்.

    ஆக நீங்கள் விடியோவில் சொல்லும் காசு பணம் துட்டு மணிக்காக சொந்த இனத்தையே போட் தள்ளூவார்கள், என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

  9. /// மிக சுலபமாக தீர்வு காணக்கூடிய விஷயங்களே இவை. ஆனால் அறுதி பெரும்பான்மையுன்டன் கூடிய அரசு தான் தேவை. ///

    நீங்கள் பிரதமரானால் எப்படி ஜாதியை ஒழிப்பீர் என்பதை மட்டும் சொல்ல முடியுமா?

  10. காந்திய ஏன் சார் பிராமணர் கோட்சே போட் தள்னாரு?

    இந்திரா காந்திய ஏன் சார் சீக்கியர் போட் தள்னாரு?

    ராஜீவ் காந்திய ஏன் சார் தமிழன் போட் தள்ளினான்?

    தாவூத் இப்ராஹிம் பாய் ஏன் சார் குண்டு வச்சாரு?

  11. ஜாதிக்கு பிரிவினைக்கு அடிப்படை பிரிவினையால் பயன் பெறும் தலைவர்களே… மக்கள் பிரச்சனை அடிப்படையில் இல்லாமல், சாதி அடிப்படையிலான அனைத்து அமைப்புகளையும் பிரிவினை அமைப்பால அறிவித்து தடை செய்து , அதன் தலைவர் ஒருங்கினைப்பாளர்களை தேச துரோக குற்றசாட்டில் ஆயுள் தண்டனை வழக்கு பதிவு செய்தால்… கொஞ்ச நாளைக்கு ஜாதி சங்கங்கள் தலை மறைவு கூட்டம் நடத்த வேண்டி வரும். தகவல் தருவோருக்கு சன்மானம் அளித்தால். பின் அதுவும் நின்று போகும்.

    மதப்பிரச்சனை இதைவிடவும் ரொம்ப சுலபம்.
    ==============================================
    http://kannimaralibrary.co.in/?p=1252

    அனைத்து மதங்களின் அடிப்படை அன்பே. அனைவரிடமும் அன்பு காட்டவும் அனைவருக்கும் உரிமை உண்டு.

    ஆனால் கோவில் கட்டு, அதில் இவ்வளவு வசூல் செய் என்று எந்த மதமும் குறிப்பிடவில்லை. எனவே அனைத்து வழிபாட்டு தளங்களையும் அரசுடைமாக்கி , அதில் வழிபட அந்தந்த சமய மக்களுக்கு முன் உரிமை உண்டு அனைத்து மக்களுக்கும் உரிமை உண்டு என்று ஒரு சட்டமும்.

    அனைத்து சொத்து , மற்றும் வசூல் அரசின் கணக்கில் கட்டபட வேண்டும், அதில் இருந்து யாருக்கும் 1 பைசா கூட கிடையாது.

    கடவுளுக்கு ஊழியம் செய்ய நினைக்கும் தீட்சிதர்கள் ஆனாலும் சர்ச் பாதிரியரானலும் மசுதியின் இமான்கள் ஆனாலும், தங்கள் சுய சம்பாத்தியல் வாழ்ந்து கொண்டு கடவுளுக்கு நேரம் கிடைக்கும்போது வருமானம் எதிர்பார்க்காமல் சேவை செய்யட்டும்.

    அதற்கு பரிசாக எதேனும் மக்கள் கொடுத்தாலும் அதையும் அரசிடமே ஒப்படைக்கவேண்டும். என்றும் ஒரு சட்டம் வந்தால் போதும்.

    5 வருசம் கழித்து பிறக்கும் தலைமுறைக்கு மதப்பிரச்சனை என்ற ஒன்றே இருன்தது தெரியாது. இன்றைக்கு 1- வயதில் இருக்கும் தலைமுறைக்கு தொலைபேசி என்ற ஒன்று இல்லாமல் இருந்தது என்பதையும் அது இல்லாமல் வாழ்ந்தோம் என்பதையும் நம்மால் விளக்க முடியாது போல்,

    மததிற்கேல்லாம் கலவரம் செய்வரா ? மனதிற்கு பிடித்து காதலித்தால் மததை காட்டி மறுப்பரா…

    இப்படிப்பட்ட காட்டு மிராண்டிகள நம் முன்னோர் என்று சொல்லும் நினைக்கும் அளவிகு நாடு மாறும்
    ======================================
    ஆனால் .. ஜாதி மதங்கள் பிரிவினை மக்களை வேறு (பொருளாதார ) திசையில் சிந்திக்கவிடாமல் செய்கின்றது.

    ஜாதி மத பேதமற்ற மக்கள் தாங்களாவே ஒன்றூ பட்டு விலைவாசி உயர்வுக்கும் சிலரில் அபார சொத்து குவிப்புக்கும் , மேலும் இயற்கை வள சுரண்டலுக்கும் எதிராக போராடுவர்.

    அப்போது அதனால் பயனடையும் இன்ற அதிகார, முதலாளி வர்க்கம் தூக்கி எறியப்படும்.

    அதை தவிர்க்கவே அதிகார, முதலாளி வர்க்கம் அரசை பயன்படுத்தி, சாதி மதங்களை உயிருன் வைத்துள்ளது.

  12. /// சாதி அடிப்படையிலான அனைத்து அமைப்புகளையும் பிரிவினை அமைப்பால அறிவித்து தடை செய்து , அதன் தலைவர் ஒருங்கினைப்பாளர்களை தேச துரோக குற்றசாட்டில் ஆயுள் தண்டனை வழக்கு பதிவு செய்தால்…///

    போலீஸ், ராணுவம், சட்டம் அனைத்தும் உயர்ஜாதி ஹிந்துக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. சாதித்தலைவர்களை தேசத்துரோக வழக்கில் கைது செய்தால், உங்களுடைய அமைச்சர்களே உங்களை தண்டவாளத்தில் ரெண்டு துண்டாக வெட்டியெறிந்து விடுவார்கள்.

    எந்த ஜென்மத்திலும் சாதியை ஒழிக்கவே முடியாது. சாதியை விட்டு வெளியேற ஒரே வழி இஸ்லாம் மட்டுமே.

  13. ஐயா…
    நீங்கள் சொல்வது உண்மையே.. நேரடியாக இங்கே எழுதியுள்ளபடி இதை செய்தால் இப்படி தான் ஆகு.

    அரசு என்பது நடக்க மக்களிடம் வரி வாங்க வேண்டும் அதாவது, அமைச்சர்களூம் , அரசு அதிகாரிகளும் ஏசி காரிலும் விமானத்திலும் செல்ல , ஏழையினும் ஏழை மக்களும் தங்கள் பங்குக்கு வரி பணம் தர வேண்டும்.

    ஆனால் இதை இப்படி நேராக கேட்டல் கொடுப்பரா? இதற்கு தான் நேரடி வரி, வரி விலக்கு வருமானவரி, விறப்னை வரி பெட்ரோல்விலை என பல நெளிவு சுளிவுகளூடன் திட்டம் வைத்திருக்கின்றனர்.

    இதன்படி, அடுத்த வேளை சோற்றுக்கில்லாத ஏழை குழந்தைக்கு வாங்கும் பால் விலையிலும் போக்கு வரத்து செலவு பிளாஸ்டிக் கவர், இவற்றில் பெட்ரோல் டீசல் விலை, விற்பனை வரி என அரசுக்கு வருமானம் வருகிறதா இல்லையா? அரசின் சுகபோக வாழ்க்கை நடக்கிறதா இல்லையா ?

    உங்கள் கேள்விக்கு நான் கூறியது நேரடி பதில், அரசு வருமானம் மக்கள் வரியால் என்பது போல.

    இதை செய்ய பல வழி முறைகளை செய்யவேண்டும்.

    இதை பாருங்கள் http://kannimaralibrary.co.in/?p=1265

    சாகும் சாதியம் என்று பதிவிட்டுள்ளேன்.

    இசுலாத்தால் சாதியம் சாகாது. வேறு பெயரில் திரும்பும் அவ்வளவே.

    இசுலாம் மட்டுமல்ல எந்த மதமும் சாதியத்தை வேரறுக்காது.

  14. கண்டிப்பாக அறுதி பெரும்பான்மையுடன் உள்ள ஆட்சியாளர் நினைத்தால் ஜாதி, மதத்தை நாட்டை விட்டு ஓட்ட முடியும்.

    இன்றைக்கு சதி என்ற கணவன் உடலுடன் மனைவியை கொளுத்தும் பழக்கம் மறைந்ததா இல்லையா. தேவ தாசி முறை மறைந்தா இல்லையா..

    அதே போல் சாதி மதம் அனைத்தையும் இல்லதொழிக்க முடியும்.

  15. எந்த ஜென்மத்திலும் தமிழனால் தமிழ்த் தேசத்தையோ, ஹிந்துவால் ஹிந்து தேசத்தையோ உருவாக்கவே முடியாது. ஏன்?:

    இஸ்லாம், கிருத்துவம், பௌத்தம் என அனைவருக்கும் பல நாடுகள் உள்ளன. அனைத்து மதங்களின் தாயான ஹிந்து மதத்துக்கென்று ஒரு நாடில்லியே, அய்யகோ.

    வெறுங்கையோடு வந்த பாபர், கஜினி முகமதுவெல்லாம் இந்த நாட்டை ஆண்டு அனுபவித்து கூறு போட்டு பாக்கிஸ்தான் பங்களாதேஷ் என முஸ்லிம் நாடுகளை உருவாக்கி விட்டான். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி 90 கோடி ஹிந்துக்களுக்கு அவர்களது ஒரே நாடான ஹிந்துஸ்தானை ஹிந்து நாடு என்று சொல்லக்கூட அருகதையில்லையா?.

    தூய ஹிந்து நாட்டை உருவாக்கினால், அதிலே 15% உயர்ஜாதியும் 85% சூத்திரனும் இருப்பான். ஆட்சி அதிகாரமெல்லாம் சூத்திரனின் கைவசம் வந்துவிடும். தலித் பிரதமர், தலித் ஜனாதிபதி, தலித் முதலமைச்சர், தலித் சங்கராச்சாரி ஆகிவிடுவான்.

    ஆகையால்தான், எத்துனை ஜென்மமெடுத்தாலும் முசல்மானுக்கோ கிருத்துவருக்கோ நீ கூஜா தூக்கித்தான் வாழ வேண்டும். முசல்மான் இல்லாவிட்டால், ஈழத்தில் உனது தொப்புள்கொடி உறவுகளை நீ இன அழிவு செய்தது போல், உனது இனத்தை நீயே அழித்து விடுவாய். உனது இனத்தின் பெரிய சாபக்கேடு நீதான்.

    ஒரு காரியம் செய். அடுத்த பாக்கிஸ்தானை முசல்மான் உருவாக்கும் வரை அமைதியாக இரு. அதற்கப்புறம் அடுத்த பாக்கிஸ்தான், அடுத்த பாக்கிஸ்தான், அடுத்த பாக்கிஸ்தான் …

    இல்லாவிட்டால் அரேபியாவுக்கோ அமெரிக்காவுக்கோ துண்டைக் காணோம் துணியைக் காணோமென ஓடு. தேசமற்ற இனத்துரோகியே, வேறென்ன செய்ய முடியும் உன்னால்?

  16. /// இசுலாத்தால் சாதியம் சாகாது. வேறு பெயரில் திரும்பும் அவ்வளவே. ///
    ——–

    ஒரு தலித்தால் வேதத்தை தொட முடியாது. சங்கராச்சாரியாராக முடியாது. ஆனால் திருக்குரானை மனனம் செய்யமுடியும். இமாம் ஆகமுடியும். ராவுத்தார், லெப்பை, மரக்காயர், தக்னி என்று சில பிரிவுகள் முஸ்லிம்களில் இருந்தாலும் கூட, பள்ளிவாசலில் நுழைந்தால் அங்கே தொழுகை நடத்தும் இமாமின் ஜாதி, இனம், குலம், கோத்திரம் என்னவென்று எந்த முஸ்லிமுக்கும் தெரியாது. பேரரசன் கூட அந்த இமாமை பின் தொடர்ந்துதான் தொழவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை.

    இறைவனை வணங்காத நாத்திகர்கள் கூட ஜாதியென்று வந்துவிட்டால் வரிந்து கட்டிக்கொண்டு கோதாவில் இறங்குகிறார்கள். ஜாதியை விட்டு வெளியேறுவதற்கு இஸ்லாத்தை தவிர வேறு எதாவது மார்க்கத்தை. மனித இனத்தால் சிந்திக்க முடியுமா?. 1400 வருடங்களாக சிந்தித்தவரெல்லாம் இஸ்லாத்துக்கு வந்துவிட்டனர் அல்லது படுதோல்வியடைந்து போய் சேர்ந்துவிட்டனர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.

  17. ஒரு முஸ்லிமிடம் போய், உன் ஜாதியென்னவென்று கேளுங்கள். முழிப்பார். ஷியா, சன்னி, லெப்பை, மரக்காயர், தக்கினியென்று ஒரு சில பிரிவுகள் இருக்கின்றன. ஆனால் இது ஒரு ஜாதிக்கு மேல் ஜாதி எனும் அடுக்குமுறையல்ல. ஒரு முஸ்லிம் துப்புரவு தொழிலாளி இமாமாக முன்னின்று தொழுகை நடத்தினால், ஜனாதிபதி அப்துல் கலாமும் அந்த இமாமை பின்தொடர்ந்து தொழுவார். இமாமின் ஜாதியென்னவென்று எந்த முஸ்லிமுக்கும் தெரியாது.

    இதை ஜாதியென்று கருதினால், உங்களுக்கு பிடித்த எந்த ஜாதிப்பெயரை வேண்டுமானாலும் எடுத்து ஒட்டிக்கொள்ளுங்கள். எந்த முசல்மானும் அருவாளை தூக்கிக்கொண்டு விரட்டமாட்டான்.
    ————-

    பெருவாரியான இந்திய முஸ்லிம்களுக்கு ஷியா யார் சன்னி யார் என்பதே தெரியாது. வடக்கே லக்னோ போன்ற நகரங்களில் ஷியா சன்னி இருந்தாலும் ஒரு நாள் கூட அடித்துக் கொண்டது கிடையாது. பள்ளிவாசலுக்கு ஷியாவும் சன்னியும் சேர்ந்து வருகின்றனர். சில சமயம் தனித்தனி இமாமின் பின் அமைதியாக தொழுது விட்டு அண்ணன் தம்பிகளாக சேர்ந்து செல்கின்றனர்.

    பாக்கிஸ்தானிலும் 1947 பிரிவினைக்கு முன்பு, ஒன்று பட்ட இந்தியாவில் இந்த பிரச்னை அறவே இருந்ததில்லை. காபிர்களோடு சேர்ந்து வாழ்ந்த போது இல்லாத ஷியா சன்னி பிரச்னை, ஏன் பாக்கிஸ்தான் தனி இஸ்லாமிய நாடானதும் தலைதூக்கி விட்டது?

    காபிர் இந்தியாவில் ஏன் ஷியா, சன்னி, அஹ்மதியா பிரச்னை இல்லை?

  18. ஒரு பிராமணரோ, தலித்தோ, நாடாரோ, வன்னியரோ, தேவரோ, முதலியாரோ இஸ்லாத்தை தழுவி அப்துல்லாஹ் ஆகி விட்டார். அவருடையை ஜாதி என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலம?.

    பெரியார்தாசன் அப்துல்லாஹ் ஆகிவிட்டார். அவருடைய முஸ்லிம் ஜாதியென்ன?.

  19. குருடும்குருடும் செவிடும் செவிடும் பேசிக் கொண்டால் எப்படியிருக்கும் என்பதற்கு நஞ்சுண்ட மூர்த்தி மற்றும் விநோத் ஆகியோர்களின் கடிதங்கள் சாட்சி.மனநோயாளிகள் நல்ல மருத்துவரைப் பார்த்து சிகிட்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு திருமணம் ஆகாத 23 வயதுப் பெண்ணை என்னிடம் அழைத்து வந்தனர்.அப்பெண் தனக்கு திருமணம் ஆகி 7 குழந்தைகள் உள்ளன என்றும் சந்தேகம் இருந்தால்எனது உடலை பரிசோதனை செய்யகொள்ளலாம் என்றார். ஒரு 20 வயது இளைஞரை சிகிட்சைக்கு அழைத்து வந்தனர். காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் போலீஸ்
    தன்னை புலனாய்வு செய்ய நியமித்துள்ளது என்று ஆணித்தரமாக அடித்து பேசுகின்றார். இதுபோலதான் மேற்படி கடிதங்கள் உள்ளன. மனநோயாளிகள் எழுதும் வலைதளமாக செங்கொடி மாறிவிடக் கூடாது.

  20. /// மனநோயாளிகள் எழுதும் வலைதளமாக செங்கொடி மாறிவிடக் கூடாது. //

    உனது சாம தான பேத தண்டங்கள் எல்லாம் தவிடு பொடியாகி விட்டன. பெரிய ஞானபண்டிதன், அறிவு ஜீவியென என நினைத்துக் கொண்டிருந்தாய்.

    உன்னை ஒரு முசல்மான் இப்படி ஆப்படிப்பான் என நீ கனவிலும் நினைக்கவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல், மன நோயாளிகளை பேச விடாதே என மாரடிக்கிறாய்.

    மாட்டு மூத்திரம் குடிக்கும் மூடனை விடவா பெரிய மனநோயாளி இவ்வுலகில் இருக்கமுடியும்?

  21. @அன்புராஜ்

    //குருடும்குருடும் செவிடும் செவிடும் பேசிக் கொண்டால் எப்படியிருக்கும் என்பதற்கு நஞ்சுண்ட மூர்த்தி மற்றும் விநோத் ஆகியோர்களின் கடிதங்கள் சாட்சி.//
    லாஜிக் இடிக்கின்றதே …..

    “குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி;
    குருடும் குருடும் குழிவிழு மாறே”
    http://thirumanthiram54.blogspot.in/2013/01/blog-post.html

    இது தான் நீங்கள் குறிப்பிடும் திருமந்திரம் பொருள் தெளிவாக உள்ளது.
    குருடும் குருடும் சேர்ந்து ஆடினால்/ விளையாடினால் குழியில் விழவும் வேண்டிவரும் என்பது நேர் பொருள்.

    புத்தர் போன்ற மகான்கள் சொல்வது உலக மக்கள் உறக்கதில் அறியாமையில் இருக்கின்றனர் என்பதே.
    அப்படி இருக்கும் ஆணும் பெண்ணும் காதல் திருமணம் என கிடைத்தற்கறிய மானிட பிறவியை வீணடித்து வாழ்கின்றனர் இது என்பது அடுத்த பொருள்.

    சரி செவிடும் செவிடும் எப்படி பேச முடியும்.
    பேசுவதில் Tranmit – Wait Receipt – acknowledge என ஒரு வட்டம் உள்ளதே.
    http://www.slideshare.net/MazharIftikhar/communication-cycle-notes
    http://quizlet.com/1716947/speech-communication-cycle-vocab-flash-cards/

    இதில் ரிசீவிங் வேலை செய்யவில்லை என்றால் இருவரும் புலம்ப மட்டுமே முடியும், இது எப்படி ‘பேச்சு’ ஆகும் ?

    // ஒரு திருமணம் ஆகாத …. என்று ஆணித்தரமாக அடித்து பேசுகின்றார். //

    இதற்கும் இங்கே பேசப்படுவதற்கும் என்ன சம்பந்தம் ?
    ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சியால் ராஜிவ் கொலை சரியாக விசாரிக்கபடவில்லை, கையில் கிடைத்தவரை தூக்கிலிட்டு வழக்கை முடிக்க நினைக்கின்றனர். ஆனால் தமிழகத்தில் அது உணர்வுப்பூர்வமாக பார்க்கப்படுவதாலும் , ஏற்கவே தூக்கில் போட்ட அப்சல் குரு மற்றும் அஜ்மல் கசாப் பற்றிய சர்ச்சைகளாலும் அதை செய்யவில்லை. விசாரிக்கப்டவேண்டிய சாமி & கோ சுதந்திரமாக இருக்கின்றனர்.

    அப்பாவிகள் கொல்லப்பட கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்தினோம்.

    “வழக்கில் குளறுபடுகள் உள்ளன என்ற காரணத்தின் அடிப்படையில் 7 பேர்களின் தண்டனை குறைக்கப்படலாம் அல்லது ரத்துச் செய்யப்படலாம்.ஆனால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதி மன்றத்தால் தீர்ப்பாணை அளிக்கப்பட்டப்பின் ” ஜனாதிபதி” அலுவலகததில் தாமதம் என்று ஒரு முட்டாள்தனமாக காரணம் காட்டி விடுதலை செய்வது முட்டாள்தனம். ” என்ற உங்கள் கருத்து சரியானதே.

    ” ஒரு ஹிந்து பிரதமரைக் கொன்ற கிருத்துவரின் விடுதலைக்கு ஏனிந்த கொண்டாட்டம்?:

    எழுவரும் கிருத்துவர். பிரபாகரன் உட்பட ராஜீவ் காந்தியைக் கொன்ற விடுதலைப்புலி இயக்கம் ஒரு உயர்ஜாதி கிருத்தவ இயக்கம். ”
    என இதில் இருக்கும் ஜாதி மத அரசியலை சொன்னார் நஞ்சுண்ட மூர்த்தி. அதனால் இந்த நாடு ஒன்றாக இருக்கமுடியாது, பிரிவதே சரி என்றார்.

    பிரிவினை பிரச்சனையை கூட்டும் என்றேன் நான். எல்லா பிரிவினை களையும் ஜாதி மத வேறுபாடுகளையும் ஒழிக்கவெண்டும் என்பதே விருப்பம்.

    அதை வலுவான அரசு மட்டுமே செய்யமுடியும் என்றேன் நான்.
    எப்படி செய்வீர் என்பதற்கு அதற்கான வழிமுறையை கூறினென்

    இதூ தான் இங்கிருக்கும் 19 பதில் களின் சாரம். சரி, இதில் மன நிலை பிறழ்வு எங்கே வந்தது ??

    கிட்டத்தட்ட 20 கடிதங்களை 15 பக்கத்துக்கும் அதிகமாக படித்தும் உங்களூக்கு ஒன்றூம் புரியவில்லை என்றால், உங்கள் மூளை வளர்ச்சி குறைவுக்கு யார் என்ன செய்வது. எல்லாம் இறைவன் செயல்.

    //மனநோயாளிகள் நல்ல மருத்துவரைப் பார்த்து சிகிட்சை எடுத்துக் கொள்ள வேண்டும். //

    வடிவேலு… ஜாக்கிரத…. நான் என்னை சொன்னேன் என்பாரே..
    அதே போல் உங்களுக்கு நீங்கள் சொல்வதா இது ?

    // ஒரு திருமணம் ஆகாத 23 வயதுப் பெண்ணை என்னிடம் அழைத்து வந்தனர்.அப்பெண் தனக்கு திருமணம் ஆகி 7 குழந்தைகள் உள்ளன என்றும் சந்தேகம் இருந்தால்எனது உடலை பரிசோதனை செய்யகொள்ளலாம் என்றார். //

    திருமணம் ஆகாத பெண்ணுக்கு 7 குழந்தை வருவதற்கு நீங்கள் செய்தது என்ன? உங்கள் பெயர் பரிசுத்த ஆவியா திரு அன்புராஜ் அவர்களே? இது குறித்து முழு தகவல் தாருங்கள், அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு பிரதி கொடுத்து பார்ப்போம்.

    நோய் முற்றியுள்ளது என்ற சர்டிபிகேட் கொடுத்தால் ஜெயிலுக்கு பதில் இல்லம் கிடைக்கலாம்.

    //ஒரு 20 வயது இளைஞரை சிகிட்சைக்கு அழைத்து வந்தனர். காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் போலீஸ் தன்னை புலனாய்வு செய்ய நியமித்துள்ளது என்று ஆணித்தரமாக அடித்து பேசுகின்றார். //

    உங்களிடம் வந்தால் வேறு எப்படி பேச முடியும் ?

    அன்றைக்கு பேசாமல் உங்கள் அப்பா 2 ஷோ சினிமாவுக்கு போய் இருந்தால் இன்றைக்கு பலர் இப்படி பேச வேண்டி இருந்திருக்காது.

    //மனநோயாளிகள் எழுதும் வலைதளமாக செங்கொடி மாறிவிடக் கூடாது.//
    இதையும் உங்களூக்கு நீங்களே தான் சொல்லிக்கொள்ளவேண்டும். அப்படியானல் நீங்கள் எழுத கூடாது தானே?

    ஆள் காட்டி விரலை அடுத்தவரை நோக்கி நீட்டும்போது எஞ்சியுள்ள மூன்று விரல்கள் நம்மை தான் சுட்டிகாட்டும். இதை புரிந்து கொள்ளுமளவுக்கு எதேனும் கொஞ்சமாவது அறிவை உங்களுக்கு தர இறைவனை வேண்டுகிறேன். எல்லாம் வல்ல இறைவன் இறங்கி உஙகளுக்கு அருள் புரியட்டும்.
    ============================================
    @நஞ்சுண்டமூர்த்தி
    கருத்து மோதல் இருக்கலாம், இருக்க வேண்டும், ஆனால் தனி நபர் தாக்குதல் கூடாது நஞ்சுண்ட மூர்த்தி அவர்களே. எதிர் கருத்துடையர் எதிரிகள் அல்ல. மரியாதை குறைவாக பேசுவது சபை நாகரீகம் அல்ல.

  22. திரு.வினோத் அவர்களே நஞ்சுண்ட மூர்த்தியை நினைத்துக் கொண்டு தவறுதலாக தங்களின் பெயரையும் சேர்த்துக் எழுதிவிட்டேன்..எனது தவறுக்கு மன்னிக்க வேண்டுகின்றேன்.

  23. இசுலாமிய மதம் ஒரு அரேபிய வல்லாதிக்க இயக்கம்.முகம்மது ஒரு அரேபியன்.அவர் பல 100 பிரிவுகளாய் பிரிந்து வாழ்ந்து கொண்டிருந்த அரேபிய மக்கள் கூட்டத்தை ஒரே பிரிவாக்கி அகண்ட அரேபிஸ்தான் என்ற பேரரசை நிறுவ முயன்றார். அரேயியா உலகை வெல்ல வேண்டும் என்பது அவரது உள்நோக்கம். தன்னை சுற்றி இருந்த பல குழுவினரை படு பயங்கரமான கொடுமைக்ளுகு ஆளாக்கி அவர் மேற்படி காரியத்தைச் செய்யமுயன்றார். ஆனால் இரத்தக்களறி யைத்தான் அன்னார் துவக்கி வைத்தார். அவர் இறந்த உடனே முகம்மதுவின் குடும்பத்தாருக்கும் சொர்க்கத்தின் வாரிசுகள் என்று சிலாகிக்கப்பட்ட நபி தோழர்கள் என்று அதிகார போட்டி ஏற்பட்டது. உமர் உதுமான் படுகொலைகள் ஒட்டகப்போர் என்று மீண்டும் இரத்தக்களறி ஆரம்பமானது.முகம்மதுவின் மருமகள் உதுமான் கொல்லப்பட்டார். பேரன் கொல்லப்பட்டார். இன்றும் அரபு நாடுகள் சிறு சிறு நாடுகளாய் உள்ளனவே ஏன் ? முகம்மதுவை பின்பற்றி ஏன் ஒரே அரசியல் ஆட்சியின் கீழ் வரவில்லை. இந்தியாவைப் பாருங்கள். பலகலாச்சாரக் கூட்டம் பல மொழி பல கால நிலை எவ்வளவு வேறுபாடுகள் இத்தனையையும் சகித்துக் கொண்டு 120 கோடி மக்கள் நியாயமாக ஒரே ஆட்சியின் கீழ் வட்டார மாநில சுதங்திரத்தோடு வாழ்ந்து வருகின்றோம.
    சாதி என்பது வேத காலத்தில் இல்லை. சாதிகள் சதா ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது.புதிய சாதிகள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றது.இதுதான் உண்மை. சாதிகளுக்குள் அன்பை ஏற்படுத்த புத்தர் திருவள்ளுவர் சித்தர்கள் என்று லட்சக்கணக்கான வர்கள் மக்களுக்கு நல்வழிகாட்டி வருகின்றனர் .முகம்மது காட்டும் சகோதரபாசம் என்பது தனது ஜமாத் காரனிடம் மட்டும்தான்.பிறர் என்றால் வெட்டு கொல் என்பதுதான்.அதுவும் சிலை வணக்கம் செய்பவர்கள் என்றால் கொலை செய்வது தவம் என்று முகம்மது கூறுகின்றார்.காபீர் பெண்களை யுத்தத்தில்கைப்றிற வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளுங்கள என்று சொல்லும் ஒரே காட்டுமிராண்டி புத்தகம் குரான் மட்டுமே.

    செங்கொடியும் இறையில்லா இசுலாமும் அலிசேனாவும் அரேபிய மத காடையர்கள் குறித்து ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.அதற்கு பதில் அளிக்க இயலாத நஞ்சுண்ட மூர்த்தி பெரியார்தாசனின் சாதி என்ன என்று கேட்கிறார்.

    சியா சுன்னி என்று 73 பிரிவுகள் உள்ளன். வெட்டும் கொலை சர்வ சாதாரணமாக பிற நாடுகளில் நடைபெறுகிறது. இந்துக்ளின் மத்தியில் வாழ்வதால் கொஞ்சம் நல்லபுத்தி இந்து (ய) முஸ்லீம்களுக்கு உள்ளது.எனவே சண்டை குறைவு. அஹ்லே ஜமாத் என்று கூட ஒரு பிரிவு உள்ளது. இவர்கள் குரானை மட்டும்ஒப்புக் கொள்வார்கள்.நபி மொழிகள் ஹதிஸ் போன்ற அரேபிய குப்பைகளை குப்பை தொட்டிக்கு அனுப்பி விட்டார்கள்.

    பெரியார்தாசனின் பிணம் ஏன் மருத்துவமனைக்குப் போனது? மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதை மனம் உவந்து இந்து மனைவி ஏற்றுக் கொண்டார்.
    ஆனால் அரேபிய மத ஜமாத் ஏற்றுக் கொண்டதா?
    பெரியார் தாசனின் அடக்கத்திற்குச் சென்ற அரெபிய வல்லதிக்க அடிமைகள் மனம் வெறுத்து திரும்பினார்கள்.
    மருத்துவ கல்லூரிக்கு பிணம் கொடுக்கப்பட்டால்தானே மருத்துவ அறிவை மாணவர்கள் பெற முடியும். சிறந்த தொண்டாக இந்து மனைவி நினைத்து இந்துவாக இருந்த போது, நல்ல புத்தி இருந்தபோது செய்த கணவன் உறுதிமொழியை இந்து மனைவி நிறைவேற்றினாள். ஏண்டா நீ உன் உடலை மருத்துவ கல்லூரிக்கு கொடுப்பாயா? கப்ரூ வேதனை என்று உளறிய மனநோயாளி முகம்மதுவின் போதனைகளை குப்பையில் போடு

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s