மண்சோறு, தீமிதி, அலகு குத்தல் காட்சிகள் எவ்வளவு ஆபாசமாக இருந்ததோ, அதைவிட பலமடங்கு ஆபாசமாக இருக்கிறது இன்றைய ஜெயா விடுதலைக்கு பின்னான நீதி வென்றது என்பன போன்ற அலட்டல்கள். இது போன்றே முடிச்சுகள் அவிழ்ந்து விட்டனவா? வாங்கப்பட்ட தீர்ப்பு, கருப்பு நாள் போன்றவையும் ஆபாசமாகவே தெரிகின்றன. இன்று மகிழ்ச்சியில் கூத்தாடும், அல்லது கூத்தாடுவது போல் நடித்துக் கொண்டிருக்கும் அனைவருக்குமே தெரியும் ஜெயா ஊழல் குற்றவாளிதான் என்பது. ஜெயா கும்பலும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறது. பதினெட்டு ஆண்டுகளாக வழக்கை இழுத்தடிக்க செய்த முயற்சிகளும், குன்ஹா தீர்ப்பின் பிறகு நான் வயது முதிர்ந்தவராக, நோய்வாய்ப்பட்டவராக இருப்பதினால் தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஜெயா மேல்முறையீட்டு மனுவில் கூறியதுமே இதற்கான ஆதாரங்கள். பின் குமாரசாமியின் இந்த தீர்ப்பில் வெளிப்படுவது என்ன?
சட்டம் என்றால் என்ன? நீதி என்பது எத்தன்மை கொண்டது? நீதி மன்றங்கள் யாருக்கானவை? என்பனவற்றை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்துவதே இந்தத் தீர்ப்பு. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று பொதுவாகச் சொல்வார்கள். சட்டத்தின் கடமை என்ன எனும் கேள்வி யாருக்கும் எழாது. பெருமுதலாளிகளையும் அவர்களின் சொத்தையும், ஆளும் வர்க்கத்தினரையும் அவர்களின் அதிகாரங்களையும் பாதுகாப்பது தான் சட்டத்தின் கடமை. மக்களைக் காப்பதற்காக அது ஒருபோதும் முன்னின்றதில்லை.
கீழ்வெண்மணி, கயர்லாஞ்சி வேதனைகளின் போது இந்த நீதி மன்றங்கள் கூறிய தீர்ப்பு நினைவில் இருக்கிறதா? உயர்ஜாதியை சேர்ந்தவர்கள் இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டார்கள் என்று தீர்ப்பு கூறியது. அப்சல்குரு விவகாரத்தில் வந்த தீர்ப்பு நினைவிருக்கிறதா? எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் தேசத்தின் மனசாட்சியை காப்பதற்காக மரண தண்டனை விதிக்கிறோம் என்று தீர்ப்பு கூறியது. கடந்த வாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எடுத்துப்பார்க்கலாமா? ஹாஸிம்புரா, மலியானா கிராமங்களில் நடந்த படுகொலைகளை அரசுத்தரப்பு நிரூபிக்கவில்லை, ஆதாரமில்லை என்று தள்ளுபடி செய்து குற்றவாளிகளை விடுவித்திருக்கிறது. சல்மான்கான் பணக்கொழுப்பெடுத்து குடித்துக் காரோட்டி ஒருவரை கொன்று பலரை படுகாயமாக்கிய பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்த வழக்கில் சிறைக்குச் செல்லாமலேயே இரண்டே நாளில் ஜாமீன் வழங்கியது. சத்யம் ராஜுவுக்கு ஜாமீன். அத்தனையிலும் வெளிப்படுவது என்ன? மக்கள் எங்கள் மயிருக்கு சமானம் என்பது தான் நீதிமன்றங்கள் சொல்லும் செய்தி.
இந்தச் செய்தியிலிருந்து மக்களாகிய நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? நீதிமன்றங்களையும் அதன் தீர்ப்புகளையும் யார் மதித்து நடந்திருக்கிறார்கள்? யார் குப்பைக் கூடையில் வீசி எறிந்திருக்கிறார்கள்? காவிரி முல்லைப் பெரியாறுகளில் வழங்கிய நீதி மன்ற தீர்ப்புகள் என்னானது? ஆளும் அதிகாரவர்க்கங்கள் தமக்கெதிரான தீர்ப்புகளை எங்கேனும் செயல்படுத்தி இருக்கிறதா? காலங்களை புறட்டிப் பார்த்தால் ஆயிரமாயிரம் சான்றுகள் உறைந்து கிடக்கின்றன.
யாரை பாதுகாப்பதை தன்னுடைய கடமையாக கொண்டுள்ளதோ அவர்களுக்கு எதிராக தவிரக்க முடியாத பொழுதுகளில் நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பைக்கூட கழிப்பறை காகிதமாகத்தான் அந்த ஆளும் அதிகார வர்க்கங்கள் பயன்படுத்துகின்றன. நாமோ இரண்டு நாள் பேசிவிட்டு களைத்துப் போய் மறந்து விடுகிறோம்.
மக்கள் நீதி மன்றங்களின் மீது வைத்திருக்கும் மூடநம்பிக்கையை குலைத்து விடக்கூடாது என்பதற்காகக் கூட சில நேரங்களில் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. அப்படியான தீர்ப்புகளும் கூட லல்லூ போன்றவர்களைத்தான் குறிவைக்குமேயன்றி ஜெயா போன்றவர்களை நெருங்காது. அது அரசு எந்திரங்களின் உயிர்நாடியாக இருக்கும் பார்ப்பனிய பாசம். கீழ்வெண்மணி, கயர்லாஞ்சி தீர்ப்புகளில் வழியும் கொழுப்பை உற்று நோக்குங்கள், அதில் தெரிவது தான் பார்ப்பனிய பாசம்.
எனவே, இங்கு நாம் பேச வேண்டியது ஜெயா கும்பல் தமிழகத்தை கொள்ளையடித்ததா இல்லையா? என்பது குறித்தல்ல. அது அடிமைகள் கழக தொண்டர்களுக்கும் கூட நன்கு தெரிந்த ஒன்றுதான். தீர்ப்பில் என்ன சட்ட நுணுக்கங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பன குறித்தும் அல்ல. சட்டத்தின் சந்து பொந்துகள் எங்கெல்லாம் சென்று திரும்பும் என்பது உப்புமா நீதிமன்றங்களின் தேங்காய் மூடி வழக்குறைஞர்களுக்குக் கூட தெரியும். நாம் பேச வேண்டிய விசயம் ஒன்றே ஒன்றுதான். சட்டம் நமக்கானதாக இல்லை எனும் போது அதற்கெதிராக நாம் என்ன செய்ய வேண்டும்? என்பது தான். பதில் மிக எளிமையானது,
நம்மை மதிக்காத சட்டத்தை நாம் ஏன் மதிக்க வேண்டும்?
edu arivala podu 4 pera,
yes you are right.thanks to this post.https://marubadiyumpookkum.wordpress.com/2015/05/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/
இது தான் தற்போது ஊழல் மன்றங்களில் உள்ள உண்மை நிலை. கொடுத்து தான் வாங்க வேண்டும் என்ற நிலை அன்பழகன் குழுவிற்க்கு அலைகற்றை வழக்கின் வழி நன்கு தெறியும். இருப்பினும் இதில் எதையும் கொடுக்காமல் நீதியை எதிர்பாத்தது எந்த விதத்தில்? என்று தெரியவில்லை. 18 ஆண்டாக வழங்கு நடந்து தீர்ப்பு வழங்கபட்டு தண்டனை அறிவிக்கப்பட்டபோது அதன் மேல் முறையீட்டில் ஜாமீன் வழங்குவதா அல்லது இல்லையா என்பதை கூறுதை மட்டுமல்லாமல் மேல் முறையீட்டை மூன்று மாதற்திற்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது உச்ச ஊழல் மன்றத்தின் தொடக்கம் அதை பின்பற்றுவதை தவிர உயர் ஊழல் மன்றத்திற்கு வழியில்லை. இதே மூன்று மாதம் மேலும் அப்பீல் செய்ய வழங்கடுமா? ஒரு நீதிபதி எதிர்கட்சிகாரரை கடுமையாக விமர்சித்தால் (எதிர்தரப்பு) போரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் இறுதியில் தீர்ப்பு நமக்கு ஆப்பாக அமையும் என்பதையும் ஊழல் மன்ற மொழியில் புரிந்து கொள்ள வேண்டும். ஊழலுக்கு துணைபோன பாஜக வால் ஊழல் அற்ற ஆட்சியை தர இயலாது. பிராமணன் 10% ஊழல் செய்யலாம். இனி ஒரு விதி செய்வோம்.