இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 8

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 08


குருச்சேவ் முதலாளித்துவ மீட்சி நடத்தவே ஸ்டாலினை தூற்றினான்

முதலாளித்துவ மீட்சியை பலப்படுத்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூற்றும் போது ஸ்டாலின் ஒரு கோடாரியைக் கொண்டு தனது அதிகாரத்தை நிலைநிறுத்தினார்” என்றான். அவன் பாட்டாளி வர்க்க ஆட்சியைப்பற்றி குறிப்பிடும் போது, “பயங்கர” ஆட்சி என்றான். மேலும் கூறும் போது அந்தக் காலத்தில் வேலைக்குச் செல்லும் ஒரு மனிதன் அடிக்கடி, மீண்டும் வீட்டுக்குத் திரும்புவோமா, தனது மனைவியையும் குழந்தையையும் மீண்டும் காண்போமா என்பதைப் பற்றி நிச்சயமற்றிருந்தான்” என்றான். இப்படி பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தை தூற்றியவ அதே குருசேவ் தான், 1937 இல் நமது கட்சி, துரோகிகளையும் காட்டிக்கொடுக்கும் கும்பலையும் ஈவு இரக்கமின்றி நசுக்கும். டிராட்ஸ்கிய வலது கழிச்சடைகள் அனைத்தையும் துடைத்தெறியும்.. இதற்கான உத்தரவாதம் நமது மத்திய கமிட்டியின் அசைக்க முடியாத தலைமையாகும். நமது தலைவர் தோழர் ஸ்டாலின் அவர்களின் அசைக்க முடியாத தலைமையாகும்;. நாம் எதிரிகளை முழுவதுமாக கடைசி மனிதன் வரை அழித்தொழித்து அவர்களுடைய சாம்பலை காற்றில் தூவிவிடுவோம்” என்று பிரகடனம் செய்தான், ஆனால் ஸ்டாலின் மறைவுக்கு பின் தூற்றினான். அனைத்தையும் ஸ்டாலின் மேல் சுமத்தினான். டிராட்ஸ்கிகள் குருச்சேவை ஆதரித்தனர். ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி குறிப்பிடும் போது உட்புறத்திலிருந்து கோட்டையைக் கைப்பற்றவது மிகவும் எளிது” என்றார். அது தான் நடந்தது. உள்ளிருந்த மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தான், முதலாளித்துவ மீட்சியை உள்ளிருந்து நடத்தியது.

இந்த முதலாளித்துவ மீட்சியைப் பற்றி யூகோஸ்லாவிய முதலாளித்துவ மீட்சியாளன் டிட்டோ 1956 இல் கூறும் போது இப்போது உள்ள பிரச்சனை இந்த பாதை வெல்லுமா அல்லது மீண்டும் ஸ்டாலின் பாதை வெல்லுமா என்பது தான்” என்று அங்கலாய்த்தான். பாட்டாளி வர்க்கமா அல்லது முதலாளித்துவ வர்க்கமா எது நீடிக்கும்? என்ற கேள்வியை முன்வைத்து தமது நிலையை தெளிவாக்கினர். இதை டிராட்ஸ்கிகள் ஆதரித்தனர். குருசேவ் வர்க்க விசுவாசத்துடன் டிட்டோவை வர்க்கச் சகோதாரன் என்று கூறியதுடன் முன்னனிற்கும் நோக்கங்களின் ஒற்றுமையில் கட்டுண்ட சகோதாரர்னும் உற்ற துணைவனும்” என்றான். அவர் மேலும் யூக்கோஸ்லேவியா பற்றி குறிப்பிடும் போது நமது கருத்து ஒன்றே, நம்மை வழிநடத்துகின்ற கோட்பாடு ஒன்றே” என பிரகடனம் செய்தான்.

மார்க்சிய லெனினியம் கைவிடப்பட்டது. பட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அழிக்கப்பட்டு முதாலளித்துவ சர்வாதிகார‌ம் அவ்விடத்தில் மாற்றி வைக்கப்பட்டது. இதன் மூலம் சோவியத் ஒரு சமூக எகாதிபத்தியமாகியது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்ட குருசேவின் நிலையை ஏகாதிபத்தியங்கள் வாழ்த்தி வரவேற்று தொடர்ச்சியாக கொண்டாடின. அமெரிக்காவின் அரசு செயலாளர் குருச்சேவின் பணியைப் பாராட்டி “… நல்ல சாப்பாடு, இரண்டாவது கால்சராய் இத்தகைய விசயங்கள் இன்று ரசியாவில் எந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளவையாகி விட்டனவோ அந்த அளவுக்கு மிதவாதம் செல்வாக்கைச் செலுத்தும் நிலமை எற்பட்டுள்ளது எனக் கருதுகின்றேன்” என்று போற்றினர். இந்நிலையில் “ஸ்டாலினிசத்தின் ஏகாதிகபத்தியத்துடனான அரசியலுக்கு ஆதரவாக டிமிட்ரோவ் போன்றோரும் களம் இறக்கப்பட்டனர்” என்று தூற்றுவது, டிராட்ஸ்கியத்தின் கடைந்தெடுத்த அவதூறூகும். டிமிட்ரோவ் சர்வதேச கம்யூனிச இயக்கதினை வழிநடத்துவதில் வகித்த‌ பொறுப்பான பங்களிப்பை சிறுமைப்படுத்துவதாகும். ஏன் அன்று டிராட்ஸ்கிகள் இந்த டிமிட்ரோவ்வை ஸ்ரானிசத்தின் பிரதிநிதி என்று தூற்றினர்? டிமிட்ரோவுக்கும், சர்வதேச கம்யூனிச இயக்கத்துக்கும் எதிராகவே அன்று அவர்கள் இயங்கினர் என்பதே உண்மை.

ஸ்டாலின் காலத்தை வெறுத்த எகாதிபத்தியங்கள், குருச்சேவ் காலத்தை போற்றின. ஏகாதிபத்திய பத்திரிகையான நீயூஸ்வீக், ஸ்டாலின் காலத்து அய்க்கியப்பட்ட முகாமை நிகிதா குருச்சேவ் மீட்க முடியாதவாறு அழித்துவிட்டார். இது கம்யூனிசத்திற்கு அல்ல, மேற்கத்திய உலகத்துக்கு குருச்சேவ் செய்த மாபெரும் சேவையாகும்” என்று எழுதியது. ஆனால் டிராட்ஸ்சிகள் அங்கு சோசலிசம் முன்னேறுவதாகவும், ஸ்டாலினின் அதிகாரம் நொறுக்கப் படுவதாகவும் விளக்கம் அளித்து ஆதரித்தன. அமெரிக்க செய்தித்துறை எஜென்சியின் இயக்குனர் ஸ்டாலினுக்கு எதிரான குருச்சேவின் அவதுறை குறிப்பிட்டு நம்முடைய நோக்கங்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்று” என்று 1956 இல் அறிவித்தார். ஸ்டாலின் தூற்றப்பட்டு மார்க்சியத்தை கழுவில் எற்றி கொன்ற போது, சுற்றி நின்று தத்தம் தூப்பாக்கிகளால் வானை நோக்கி சுட்டு தத்தமது மகிழ்ச்சிகளை ஏகாதிபத்தியங்கள் தெரிவித்தன. இதற்கு டிராட்ஸ்கிகள் ‘ஆகா என்ன மகிழ்ச்சி’ என்று குதுகலித்தபடி, தர்பாரைச் சுற்றி நின்று ஜோராக கைதட்டினர். அதை இன்று ஒரு மகழ்ச்சிகரமான நிகழ்ச்சியாக கொண்டாடத் தயங்கவில்லை. ஸ்டாலினையும் மார்க்சியத்தையும் கழுவில் எற்றிய குருச்சேவ் கும்பல் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாக காட்டிக் கொண்டது.

இந்த சோசலிசம் வர்க்க மோதலற்ற சமுதாயமாக திகழும் என்றான். வர்க்க மோதலற்ற உலகத்தையும், சமாதான சக வாழ்வையும் கொண்ட கட்சியை கட்டும் என்றான். ஸ்டாலின் சொந்த நாட்டில் இருந்து உலகம் வரை வர்க்கம் என்ற கோடாரியைக் கொண்டு உலகை பிளந்து வைத்திருந்த ஒரு கொடுங்கோலன்” என்றான். குருச்சேவ் வர்க்கம் என்ற அடிப்படையைத் தகர்க்க நாம் (ரசியாவும், அமெரிக்காவும்) உலகிலேயே மிக வலிமை வாய்ந்த நாடுகள். நாம் சமாதனத்திற்காக இணைந்தால் எந்த யுத்தமும் நடக்காது. பின் எந்தப் பைத்தியக்காரனாவது போரை விரும்பினால் அவனை எச்சரிப்பதற்காக நாம் விரல்களை அசைத்தால் போதும்” என்றான். உலகை நாங்கள் இருவரும் பங்கிட்டு கொண்ட அடக்கியாள முடியும் என்றான். உலக சமாதானம் என்பது, சுரண்டலை வலிமையாக நடத்துவதும் அடக்கியாள்வது தான் என்றான். நாம் இதில் இணைந்து விட்டால் எதையும் யாரும் எதுவும் செய்து விடமுடியாது என்றான். இதை மறுத்த ஸ்டாலின் தூற்றப்பட்டார். உலக சமாதனத்துக்கு தடைக் கல்லாக இருந்த ஒரு முட்டாளின் ஆட்சி” என்றான். இரண்டு சமுதாய அமைப்புகளுக்கு இடையிலான தவிர்க்க இயலாத போராட்டம் முற்றிலும் கருத்துப் போராட்டம் என்ற வடிவத்தை மட்டும் மேற்கொள்ளச் செய்ய வேண்டும்..” என்று கூறி வர்க்க சமரசத்தை, எதார்த்தத்தில் பேணும் வழி வகையைப்பற்றி தத்துவ விளக்கம் வழங்கினான். கருத்து போராட்டம் மட்டும் போதுமானது என்று, மார்க்சியத்தை பிரமுகர்தனத்தின் எல்லைக்குள் சிறைமைப்படுத்தி சிறைவைத்தான்.   ஸ்டாலின் இதற்கு எதிராக இருந்தார். “அமெரிக்கா மற்றும் மற்றயை நாடுகளின் தொழிலாளர் இயக்கங்களின் விடுதலைப் போராட்டங்களை ஆதாரிப்பதை சோவியத்யூனியன் கைவிட்டால், முரண்பாடுகளை இலகுவாக கையாள முடியும் தானே என்று ஸ்டாலினிடம் கேட்ட போது, ஸ்டாலின் கூறினார் “.. நமக்கு நாமே நேர்மையற்றவர்களாக மாறாமல், நாம் இந்த அல்லது இது போன்ற சலுகைகளை அளிக்க சம்மதிக்க முடியாது” என்றார்.

இதற்கு நேர் மாறாக நேர்மையற்றவராக மாறி, அமெரிக்காவின் வலைப் பிடிக்க, எல்லா ஸ்டாலின் எதிர்ப்பளர்களும் ஒருவர் வாலில் ஒருவர் தொங்கினர். டிராட்ஸ்கிகள் யூகோஸ்லாவிய பற்றி கூறும் போது ஸ்டாலினால் டிட்டோவுக்கு சூட்டப்பட்ட பட்டங்கள் மறைந்து, யூகோஸ்லாவியா சோசலிச நாடு என்று எற்கப்பட்டது என்றனர். டிட்டோ கும்பலோ அமெரிக்கா உற்பத்தியை சோசலிச பொருளாதாரம் என்றனர். குருச்சேவ் அமெரிக்கா சாதனைகளை “எப்போதும் உயர்வாக கருதவதாக” கூறினார். அதை வருணிக்கும் போது அமெரிக்கர்களின் சாதனைகளைக் கண்டு சந்தோசம் அடையும் பொழுது சில சமயங்களில் பொறாமை கூடப் படுகின்றேன்” என்றான். அதை நோக்கி நாம் முன்னேற வேண்டும்” என்றான். அதை நியாப்படுத்த அமெரிக்க மக்கள் “மோசமாக வாழவில்லை” என்றான். அமெரிக்கர்கள் மோசமாக வாழாமல் இருக்க, உலகளவில் காலனிய மக்கள் தங்கள் முதுகுத் தோலையே அமெரிக்கர்களின் செருப்பு தோலாக மாற்ற வேண்டியிருந்தது. உலகில் பலமான ஏகாதிபத்தியமாக, பொருளாதாரத்தில் முன்னணி நாடாக அமெரிக்கா நீடிக்க, உலகையே ஒட்டு மொத்தமாக கொள்ளையடித்தனர். இந்தப் பாதையில் நாம் செல்ல வேண்டும் என்றான் குருச்சேவ். அப்போது தான் ரூசியா முதலாளிகள் உருவாக்கவும், மற்றவர்கள் அமெரிக்காவைப் போல் எம்மைப் பார்த்து பொறமைப்பட முடியும் என்றான். இந்த பாதையில் ரூசியா ஒரு சமூக எகாதிபத்தியமாகியது. ஸ்ராடலின் தூற்றுப்பட்டார். ஸ்டாலின் மறுக்கப்பட்டார். ஆனால் ஸ்டாலின் 1952 இல் என்ன சொன்னார். நமது புரட்சிகர கொள்கையை கைவிட்டு சர்வதேச மூலதனத்திற்கு பல சலுகைகளை அளிக்க சம்மதித்தால் அந்த நிலைமையில், நமது சோசலிச நாட்டை ‘நல்ல’ முதலாளித்துவ குடியரசாக மாற்ற உதவி செய்வதற்கு சர்வதேச மூலதனத்திற்கு சந்தேகத்திகிடமின்றி எவ்வித ஆட்சேபனையும் இருக்காது” என்றார். ஸ்டாலினை மறுத்த குருச்சேவ் நாட்டை முன்னேற்ற சாத்தனிடமிருந்து கூடக் கடன் வாங்கத் தயாராக இருப்பாதாக பலமுறை பிரகடனம் செய்தான். இதை மறுத்த ஸ்டாலினை ஒரு ‘முட்டாள்’, ‘கொலைகாரன்’, ‘மடையன்’, என்றான்.

ஆயுதங்கள் அற்ற, ஆயுதப்படைகள் அற்ற போர்கள் அற்ற உலகை நாம் படைக்க முடியும் என்று டிட்டோவும், குருச்சேவும் கூறத் தவறவில்லை. முனைப்பான சமாதான சகவாழ்வுதான் யூகோஸ்லாவியா வெளிவுறக் கொள்கை என்று பிரகடனம் செய்ய, குருச்சேவ் சமதான சகவாழ்வே அயல்துறைப் பொது வழி என்ற கூறி வர்க்கப் போராட்டத்தையே உலகளவில் மறுத்தான். இதை மறுப்பதாயின் ஸ்டாலின் மறுக்கப்பட வேண்டும். ஆகவே இருவருமே ஸ்டாலினை மறுத்தனர். ஸ்டாலினைத் தூற்றினர். மார்க்சியத்தை அதன் அடிப்படையில் இருந்தே மறுத்தனர். ஆனால் ஸ்டாலின் என்ன கூறினார் ஏகாதிபத்தியத்தின் எமாற்றுத்தனமான அமைதிக் கோட்பாடு உழைக்கும் வர்க்கத்தினுள் ஊடுருவுவதற்கான பிரதான ஏஜெண்ட சமூக ஜனநாயகமே. மேலும் யுத்தங்கள் மற்றும் ஊடுருவலுக்கான தயாரிப்பில் முதலாளித்துவத்தை ஆதரிப்பதற்கு உழைக்கும் வர்க்கத்தின் மத்தியில் உள்ள முக்கிய சக்தி இதுவே” என்றார். அமைதிக் கோட்பாடு, சமாதன சக வாழ்வு என அனைத்தும் எகாதிபத்தியத்தின் மிக மோசமான எமாற்றுடன் கூடிய சரக்கையே குருச்சேவ் – டிட்டோ கும்பல் விற்பனைக்கு விட்டது. அதையே ஆகா ஒகோ என்று கூறி, தம் கொள்கைகள் என்பதால் டிராட்ஸ்கியம் இலவச விளம்பரம் செய்தது. ஸ்டாலினை மிதித்து நடத்திய முதலாளித்துவ மீட்சியை பாதுகாக்க பரஸ்பரம் தம்மைத் தாம் தொழுதனர். குருசேவ் யூகோஸ்லாவியாவை “சோசலிச நாடு” என்றார். டிட்டோ கும்பலை “அரசு என்னும் கப்பலின் சுங்கானை பிடித்திருக்கும் சகோதரக் கட்சி” என்று கூறினான். குருச்சேவ் யூகோஸ்லாவியா பற்றி “முன்னேறிய” சோசலிச நாடு என்றும், அங்கே சோசலிசம் பற்றி வம்பளப்பது இல்லை என்றான். சோசலிச அமைப்பு உள்ளபடியே கட்டியெழுப்பப்படுவதைக் காணலாம் என்றான். இந்த வளர்ச்சி உலகளாவிய புரட்சிகரத் தொழிலாளர் இயக்கத்துக்கு பருண்மையான பங்களிப்பு என்றான்.

ஏகாதிபத்தியங்களுடன் கூடிக் கூலாவிய படி சொந்த நாட்டு உற்பத்தியை முதலாளித்துவமாக மீட்டபடி யூகோஸ்லாவியா எப்படி மாறியது என்பதை மேலே விரிவாக பார்த்திருந்தோம். ஆனால் குருச்சேவ், டிராட்ஸ்கிய வாதிகள் அங்கு சோசலிசம் முன்னேறுவதாகவும், அதுபற்றி அங்கு வம்பளப்பதில்லை என்று கூறி, வர்க்கப் போராட்டத்தையே அரசியலில் இருந்து கழுவேற்றினர். அதுவே ஸ்டாலின் தூற்றுப்பட்டு மார்க்சியத்தை கழுவில் எற்றுவதில் இவர்களை ஒன்றுபடுத்தியது.

இந்நூலின் முந்தைய பகுதிக‌ள்

1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1

2. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 2

3. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 3

4. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி –  4

5. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 5

6. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 6

7. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 7

மின்னூலாக(பிடிஎஃப்) தரவிறக்க‌


7 thoughts on “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 8

 1. Dear brother,

  Let me know your “Project Report “regarding construction of Paradise with Red Bricks.
  Capitalist Royals already built CASINO(paradise)throughout the world.
  How communists plan to erect the paradise without money because majority of your concerns are very poor.

  Regards,
  quranist@aol.com

 2. நண்பரே,

  இந்தத்தளத்தின் வலது பக்கப் பட்டையில் இருக்கும் ‘தமிழ் எழுதி’யை உபயோகித்து, உங்கள் கருத்துக்களை தமிழில் எழுதுங்கள்.

  செங்கொடி

 3. அன்பு தோழரே,

  கொலைகளவு தலைவர்களான திரு.ஜோசப் ஸ்டாலின் மற்றும் ருஷ்ய கயவர்களை தங்கள் கட்டுரைகளில் இடம் பெற செய்யலாமே?

 4. அன்பு ருஷ்யதமிழரே

  ஆயிரம் ரூபாய் கொடுத்தால் தமிழ் கிழவியும் காட்டுமே கருணாநிதி படத்தை

  செம்மொழியில் எழுதினால்தான் பிடிக்குமோ செங்கொடியாருக்கு

  quranist@aol.com

 5. Dear Comrade,

  ஒரு BIG BANG உருவாக்க நினையா சுவனத்தை ஒரு MILITARY BAND

  வாத்தியம் கொண்டு உருவாக்க முடியுமா?

  Wish you all the Best.

  quranist@aol.com

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s