
செய்தி:
தேசிய தூய்மை மையத்தை டெல்லியில் இன்று திறந்து வைத்த பிரதமர் மோடி, நாட்டின் பல்வேறு பகுதி மாணவர்களுடன் கலந்துரையாடுகையில், மகாத்மா காந்தியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முழு உலகமும் முன்வருகிறது. இன்று வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் நினைவு நாளில், அசுத்தமே வெளியேறு என முழக்கமிடுவோம். கடந்த சில ஆண்டுகளில், காந்திஜியால் ஈர்க்கப்பட்ட நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள், ‘ஸ்வச் பாரத் மிஷன்’ அவர்களின் வாழ்க்கையின் இலக்காக மாற்றியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
செய்தியின் பின்னே:
முதலில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கும் காந்திக்கும் அல்லது காங்கிரசுக்கும் உள்ள தொடர்பு என்ன? 1945 செப்டம்பர் 21 அன்று காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், “அகில இந்தியக் காங்கிரசு கமிட்டியாலோ, காந்திஜியாலோ வெள்ளையனே வெளியேறு இயக்கம் அதிகாரபூர்வமாய்த் தொடங்கப்படவில்லை” எனத் தெளிவாக அறிவித்திருக்கிறது. அதாவது, அந்த இயக்கத்தால் காங்கிரசுக்கு லாபம் வரும் போது காங்கிரஸ் பொறுப்பேற்றுக் கொள்வதும், காங்கிரசுக்கு சிக்கல் வரும் போது இயக்கத்தை கைகழுவி விடுவதும் காங்கிரசுக்கு வழமை. அதேபோல் தனக்கு லாபம் கிடைக்கும் போது காந்தியை பயன்படுத்திக் கொள்வதும், பிற வேளைகளில் கோட்சேவை கொண்டாடுவதும் ஆர்.எஸ்.எஸ், பாஜக வின் வழமை. இதற்கு அப்பாற்பட்டு மோடிகளின் பேச்சுக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை.
அதாகப்பட்டது, “வெள்ளக்குமாத்துக்கு பட்டு குஞ்சம் கட்டினாலும் கூட்டுறது குப்பையத் தாங்கோ” அம்புட்டுதேன்.
செய்திகள் சுவாசிப்பது: 6/2020