செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 18

பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு

 

தெளிவாக இருக்கும் ஒன்றை எப்படி குழப்பிக் காண்பிப்பது என்பது குறித்து யாரும் அறிய வேண்டுமானால் அவர்கள் தாராளமாக நண்பர் இஹ்சாஸை அணுகலாம். அந்த அளவுக்கு குழப்பியிருக்கிறார், அதாவது பழப்பிக் காட்ட முயற்சித்து முடியாமல் பரிதாப முகம் காட்டி நிற்கிறார். பாலும் தேனும் எப்படி உருவாகிறது என்பதை குறிப்பிட்ட வசனங்கள் சுட்டிக்காட்டுவதாய் மதவாதிகள் கூறுகிறார்கள். ஆனால் மதவாதிகள் கூறுவது போல் அல்லது குரான் வசனங்களில் இருப்பது போல் அவை உற்பத்தியாகும் இடங்கள் அறிவியல் அடிப்படையில் இல்லை. எப்படி?

 

பால் மடுவிலிருந்து உற்பத்தியாகிறது, இதில் இரத்திற்கோ, செரிக்கப்பட்ட உணவிற்கோ, இரண்டுக்கும் இடைப்பட்ட ஏதோ ஒன்றுக்கோ நேரடியாக ஒரு தொடர்பும் இல்லை. யாருக்கும் தெரியாத ஒரு அறிவியல் விளக்கத்தைக் கூறுவதாக இருந்தால் சரியாக எங்கிருந்து உற்பத்தியாகிறதோ அதைச் சரியாக கூற வேண்டும், சோதிடன் கூறுவதைப் போல் கூறக் கூடாது. பால் மடுவின் வழியாக வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அது எங்கு உற்பத்தியாகிறது? சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்தா உற்பத்தியாகிறது? சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையில் என்றால் அதன் பொருள் என்ன? அது ஒரு உறுப்பா? சாணம் என்றால் கழிவு, இரத்தம் உலலின் அனைத்து இடங்களுக்கும் உண்ணும் உணவிலிருந்து பிரித்தெடுக்கப்படும் சத்துப் பொருட்களை கடத்த உதவும் ஒரு திரவம். பால் எங்கிருந்து உற்பத்தியாகிறது எனும் கேள்விக்கு இந்த இரண்டுக்கும் இடையில் என்பது எந்த விதத்தில் பதிலாக அமைந்திருக்கிறது? எந்த விதத்திலும் அந்தக் கேள்விக்கான பதிலாக இது இருக்க முடியாது. ஆனால் அப்படி விட்டுவிட முடியாதே. ஏனென்றால் குரான் ஆண்டவனின் வாக்கு என்று ஜல்லியடித்தாகிவிட்டது. எனவே அதைச் சரிக்கட்டுவதற்க்காக மதவாதிகள் விளக்கம் ஒன்றை வலிந்து கூறுகிறார்கள்.

 

அதாவது, உண்ணும் உணவு செரித்து குடல்களின் நுண்குழல்களால் அதன் சத்துப் பொருட்கள் உட்கொள்ளப்பட்டு இரத்தத்தில் ஏறி உடலெங்கும் பயணிக்கின்றன. அப்படி பயணிக்கும் சத்துப் பொருட்கள் தாம் பால் உற்பத்தியாவதற்கான மூலப்பொருளாகிறது. இதைத்தான் குரான் சாணத்திற்கும் இரத்திற்கும் இடையில் எனும் சொற்களால் குறிப்பிடுகிறது என்பது மதவாதிகளின் அந்த சரிக்கட்டல். ஆனால் இந்த சரிக்கட்டல் இரண்டு விதங்களில் தவறானது. ஒன்று, மெய்யாகவே இந்த அறிவியல் விளக்கத்தைத்தான் குரான் கூற விரும்பியது என்றால் அது, சாணத்திற்கும் இரத்தத்தில் பயணிப்பதற்கும் இடையில் என்று கூறியிருக்க வேண்டும். ஏனென்றால் இரத்தம் உணவின் சத்துப் பொருட்களைக் கடத்தும் ஒரு கருவி தான். அதை விடுத்து பாலின் உற்பத்தியில் இரத்தத்தின் பங்கு ஒன்றுமில்லை. இரண்டு, பால் எப்படி உற்பத்தியாகிறது என்பதற்கு வேண்டுமானால் இது தோராயமான பதிலாக அமையலாம். ஆனால் பால் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பதற்கு இது பதிலில்லை. ஏன் தோராயமான பதில் என்று குறிப்பிடுகிறேன் என்றால் மேற்குறிப்பிட்டவை பொதுவானவை. உடலில் ஏற்படும் அனைத்து மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் இவை பொதுவானவை. குறிப்பான ஒன்றுக்கு இதை பதிலாக கூற முடியாது. குப்பாம்பட்டியிலிருந்து சுப்பாம்பட்டிக்கு எப்படிப் போவது என்றால் இரண்டுமே தமிழ்நாட்டுக்குள்ளே தான் இருக்கின்றன என்று கூறினால் அது எப்படி கேள்விக்கேற்ற பதிலாக இருக்காதோ அது போலத்தான் சாணத்துக்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து என்பது சரியான பதிலாக இல்லை.

 

தெளிவாகச் சொன்னால் செரிக்கப்பட்ட உணவு சாணமாவதற்கு முன்னர் பிரித்தெடுத்து அனுப்பப்படும் சத்துப் பொருட்களால் தான் உடலின் அனைத்து செயல்கலும் நடைபெறுவதற்கான ஆற்றல் கிடைக்கிறது. மனிதன் நடப்பதற்கான ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது என்றால் சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து கிடைக்கிறது என்று கூற முடியும். கறிக் கோழியின் இறைச்சி எப்படி கிடைக்கிறது என்றால் சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து கிடைக்கிறது என்று கூற முடியும். ஆனால் இப்படி பொதுவாய் கூறமுடிகிறது என்பதாலேயே அது குறிப்பான பதிலாக இருக்க முடியுமா? ஒருபோதும் முடியாது.

 

இதைத்தான் நான் அந்தப் பதிவில் கூறியிருந்தேன். கூர்மையாக இதை எதிர்கொள்ள முடியாமல் தான் நான் குழப்பியிருப்பதாக நடித்து தப்பிச் சென்றிருக்கிறார். அவர் நேர்மையானவராக இருந்திருந்தால் அந்த வசனத்திலிருப்பது அறிவியல் கூற்றுதான் என்பதையல்லவா விளக்கமாக நிருவியிருக்க வேண்டும். அதை விடுத்து ஏதேதோ கதையளந்திருக்கிறாரே அது ஏன்?

 

அடுத்து தேன். தேன் குறித்து நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதையும், அவர் என்ன எழுதியிருக்கிறார் என்பதையும் நண்பர் இஹ்சாஸ் சுயநினைவோடு படித்துப் பார்த்திருக்க மாட்டார் என்றே நான் கருதுகிறேன். ஏனென்றால் சுயநினைவோடு படித்துப் பார்க்கும் யாரும். தெரிந்து கொண்டே இப்படி அசடு வழிய முடியாது. தேனீயின் வயிற்றிலிருந்து தேன் வெளிப்படுகிறது என்று குரான் கூறுகிறது. வயிற்றிலிருந்தல்ல அதற்கென இருக்கும் பையிலிருந்து வெளிவருகிறது என நான் கூறுகிறேன். தைரியமிருந்தால் தேனீயின் வயிற்றிலிருந்து தான் தேன் வெளிப்படுகிறது என நிரூபிக்க முடியுமா? யோக்கியர்கள் செய்யும் அதை மட்டும் நண்பர் இஹ்சாஸ் செய்ய மாட்டார். அதை மறைப்பதற்குத்தான் ஒரே பத்தியில் நான் முரண்பட்டு எழுதியிருப்பதாக புழுகியிருக்கிறார். எலுமிச்சம் பழத்தை தலையில் தேய்த்துக் குளித்து தலைக்கு ஏறியிருக்கும் மதப்பித்தை கொஞ்சமேனும் குறைத்து விட்டு அதன் பிறகு ஒருமுறை என்ன எழுதியிருக்கிறேன் என்பதை படித்துப் பார்க்கட்டும் அப்போதாவது புரிகிறதா என்று பார்க்கலாம்.

 

தேனீக்கள் பழங்களை உண்கிறதா? இந்த இடத்தில் நான் சுய விமர்சனம் செய்து கொள்கிறேன். எனக்கு அரபு எழுதவோ வாசிக்கவோ தெரியாது. ஆனால் பேசத் தெரியும். தமர் என்றால் பேரீச்சம் பழம் தான். ஆனால் குரானின் அந்த வசனத்தில் தமர் என்று இருக்கிறதா? சமர் என்று இருக்கிறதா? இஹ்சாஸ் அரபு மொழியில் புலமை பெற்றிருக்கக் கூடும் எனும் அடிப்படையிலேயே அணுகலாம். நான் குரான் வசனங்களை சொல் பிரித்து அறிந்து கொள்ள கார்பஸ் குரான், ஓபன் புர்கான் எனும் இரண்டு தளங்களைப் பயன்படுத்துகிறேன். அந்த இரண்டு தளங்களிலுமே அந்தச் சொல்லை தமர் என்றே உச்சரித்திருக்கிறார்கள். தமர் என்று உச்சரித்து பழங்கள் என்று பொருள் தந்திருக்கிறார்கள். அதை மேற்காணும் திரைக் காட்சிப் படத்தில் தெரிந்து கொள்ளலாம். போகட்டும் இஹ்சாஸ் கூறுவது போல அது சமர் ஆகவே இருந்துவிட்டுப் போகட்டும். பேரீத்தம் பழம் என்றால் என்ன? பழம் என்றால் என்ன அதனால் ஒன்றும் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை. ஆனால் தேனீ கனிகளை உண்ணுமா? என்பது தான் பதிலளிக்கப்பட வேண்டிய முதன்மையான கேள்வி. இதற்கு இஹ்சாஸ் \\\சில தேனீக்கள் பழங்களிலிருந்தும் குளுக்கோசை சாப்பிடுகின்றன/// என்று பட்டும் படாமல் நழுவியிருக்கிறார். பிஜே மொழிபெயர்ப்பில் \\\ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு/// என்று மொழிபெயர்த்திருக்கிறார். ஜான் டிரஸ்ட் மொழிபெயர்ப்பிலோ \\\எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி/// என்று மலர் எனும் இல்லாத சொல்லை புகுத்தியிருக்கிறார்கள். எந்தத் தேனீயும் கனிகளை உண்பதில்லை. கனிகளை உண்ணும் அளவுக்கு அதற்கு உறுப்புகள் அமையப் பெறவும் இல்லை. இந்த இடத்தில் குரான் தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை சேகரிக்கின்றன என்றோ உண்கின்றன என்றோ கூறவே இல்லை. மாறாக எல்லாவிதமான கனிகளிலிருந்தும் உண் என்றுதான் கூறுகிறது (அட! என்னே ஒற்றுமை பாருங்கள். எல்லாவிதமான கனிகள் என்றால் அதில் பேரீத்தம் பழமும் அடக்கம் தானே). அதாவது தேனீக்கள் கனிகளை உண்கின்றன என்று பொதுவாகக் கூறுகிறது. பொதுவாக எனும் போது எல்லா வகையான தேனீக்களும் அல்லது பெரும்பாலான வகை தேனீக்கள் பழங்களை உண்ண வேண்டும். இது உண்மைக்கு மாறான தகவல் பொய்யான தகவல் இந்த பொய்யான தகவலை குரான் கூறியிருக்கிறது. இது சரியா தவறா? என்று அணுகுவதற்குப் பதிலாக எப்படி சமாளிக்கலாம் என்பதில் தான் குறியாக இருக்கிறார்கள். யார் கண்டது! நாளை தேனீ கனிகளை உண்பது போல் வரைகலையில் ஒரு படத்தை உருவாக்கிப் போட்டு ஆதாரம் காட்டிவிட்டதாய் தங்கள் முதுகில் தாங்களே தட்டிக் கொள்ளவும் கூடும் யார் கண்டது!

 

தேனீக்களின் நடனம் குறித்து நான் குரான் கூறியிருப்பதை ஆதரிப்பதாகவும் எழுதியிருக்கிறார். குரான் கூறியிருப்பதற்கும் தேனீக்களின் நடனத்திற்கும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை. இதற்குமேல் புளி போட்டு விளக்குவதற்கு அந்த வசனத்தில் ஒன்றுமில்லை.

 

நண்பர் இஹ்சாஸ் எனக்கு பெயர் ஒன்றை சூட்டியிருக்கிறார். பெயர் தானே யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் சூட்டி தனக்குத்தானே மகிழ்ந்து கொள்ளலாம். ஆனால் அதில் உண்மை இருக்கின்றதா என்பதையல்லவா கவனிக்க வேண்டும். நண்பர் இதுவரை எழுதி இருப்பதை வைத்துக் கூற வேண்டுமென்றால் இஹ்சாஸ் என்பதற்கு ‘இற்றுப்போன பொய்களின் சாறு’ என்று கூட பொருள் கூறலாம். ஆனால் அப்படி அருஞ்சொற்பொருள் கூறிக் கொண்டிருப்பது என்னுடைய வேலை இல்லையே. 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 1

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 2

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 3

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 4

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 5

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 6

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 7

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 8

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 9

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 10

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 11

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 12

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 13

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 14

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 15

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 16

செங்கொடியல்ல, இஸ்லாமே கற்பனைகளின் களம் 17

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

12 thoughts on “செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 18

  1. நீங்களும் என்னென்னவோ பதில் கொடுத்து பாக்குறீங்க, ஆனா அசைய மாட்டோம்ல நாங்க அப்டின்னு மூமினுங்க முரண்டு பிடிக்கிறத பாருங்க அண்ணா!
    உங்ககிட்ட விவாதம் பண்ணி பதில் எழுதுனா ஈமான் பறிபோயடும்னு நிறைய பேரு சொல்றாங்க,அப்டியா ?
    உங்களுக்கு பயங்கர நரக நெருப்பு தயாரா இருக்குனும் சொல்றாங்க பாத்து சாக்கிரதை!

  2. அது மகமத் காலத்தில் வாழ்ந்த தேனீகள் பழங்களை சாப்பிட்டது. பின் பரிணாம வளர்சியில் அதன் குடல் சுருங்கி இப்போதைய தேனீக்கள், பூக்களில் உள்ள தேனை உறிஞ்சி காலத்தை கழிக்கிறது. ஆனாலும் ஒரு நன்மை, இதன் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெற்று பூக்கள் பிறப்புக்கு வழிவகுக்கிரது. பழங்களை மட்டும் சாப்பிடால் இது நடக்காது.

  3. யாருப்பா அது சகோதரன்,

    எழுத்து விவாதத்துக்கு தயார்ன்னு செங்கொடிய கூப்பிட்டு மாசக்கணக்கா ஆகுது. சைலண்டா எஸ்கேப் ஆகிட்டாரு. இவரு இங்க பில்டப் கொடுக்கிறாரு. தோத்து ஒடுங்கிக் கிடக்கும் செங்கொடிக்கு கண்ணீரை துடைக்க கைக்குட்டை வாங்கிக் கொடுங்க. அத வுட்டுட்டு ஈமான் பறி போய்டும்ன்னு பயப்புடுறாங்களாம். நல்லா வந்துறும் வாய்ல‌

  4. சகோ நல்லூர் முபாரக்
    //எழுத்து விவாதத்துக்கு தயார்ன்னு செங்கொடிய கூப்பிட்டு மாசக்கணக்கா ஆகுது. சைலண்டா எஸ்கேப் ஆகிட்டாரு. இவரு இங்க பில்டப் கொடுக்கிறாரு//
    எழுத்து விவாதத்திற்கு தயார் என்று சென்கொடிக்கு ஆதரவாகவும் அதில்லாமலும் நான் எதுவும் எந்த இடத்திலும் சொல்லவில்லை,மாறாக அவர் அளிக்கும் கட்டுரைகளுக்கு என்னுடைய விமர்சனத்தை பதிவு செய்தேன் அவ்வளவே! உங்களுக்கு என்ன கோபம் அப்படி ஈமான் பறிபோகுதுன்னு சொன்னா?ஒட்டு மொத்த குத்தகை எடுத்துள்ளீர்களா ஈமானாக்கு?

    சிரிப்புதான் வருது போங்க

  5. //ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு//
    இது உலகறிந்த இலக்கண ரீதியாக சரிஎன்று நிரூபித்த PJ யின் ஆதரவாளர்கள் கூறிய குரானின் தமிழாக்கம் !
    //எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி//
    இது PJ வந்ததுக்கு அப்புறம்தான் தமிழகத்தில் குழப்ப நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள் என்று கூவும் ஜமாத்தார்கள் கூறும் புலம்பல்!
    இது போக நம்மூரு ஹஜ்ரத் ஒருவர் ,பூக்களில் மட்டுமா தேனீ சாப்பிட சேகரிக்கும்? நன்னாரி சர்பத் பாட்டிலிலும் தேனீ உக்காந்து இனிப்பை சாப்பிடும் உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டு நமைச்சலை கிளப்பினார்!
    இது சம்மந்தமாக மேடையும் மைக்கும் கிடைத்து விட்டால் புடுக்கு தெறிக்க கத்தி ,’கலிமா’ வை கூறும்போதே எதிரணியினரை கதிகலங்க செய்யும் உமரி முப்டி அவர்களிடம் கேள்வி எழுப்பியபோது “ஆரம்பத்தில் நல்லாதாங்க இருந்திச்சி மூமினாக்களுக்கு சந்தேகம் என்பது இல்லாமல் நாம் சொல்வதை எல்லாம் கேட்டார்கள் இந்த PJ வந்துதான் எல்லாவற்றையும் கெடுத்து விட்டார் “, என்று புலம்பி விட்டு அடிமைகளில் இருந்து ,தேனீ வரை ,புதிது புதிதாக விளக்கம் அளித்தார் ! அடிமை என்பது உதாரணமாக கூறப்பட்டது என்றும் ,தேனீக்கள் விஷயத்தில் தமர் அல்ல சமர் என்றும் அதற்க்கு இப்படியும் மொழிபெயர்க்கலாம் என்று எங்களை சிறிது நேரம் பெயர்த்து எடுத்தார்!
    ஆனால் இந்த சப்பைக்கட்டு விஷயத்தில் கொஞ்சமாவது அண்ணன் pj வை பாராட்டியே ஆகவேண்டும் ஏனென்றால், அறிவியலாவது ,அறிவார்ந்த வாதமாவது எனக்கு தெரிந்ததெல்லாம் அல்லாஹ்வின் வார்த்தைகளை அப்படியே பின்னி பேர்த்து எடுப்பேன் என்று தைரியமாக ‘அடிமைகளுடன் உடலுறவு’ என்பதை விளக்கம் கொடுத்து அதனையும் விற்பனை செய்தார்!
    காபிர்களுக்கு இந்த எளிமையான விளக்கத்தையே கொடுத்து தாவா பண்ணலாம் என்றும் கூறி நம்ம ஊருல ஒரு காபிருக்கு குரானை கொடுத்து அவர் என்னிடம் வந்து என்னிடம் , என்னங்க அடிமைகளுடன் திருமண பந்தம் இல்லாம உடலுறவு அப்டின்னு சொல்றாரு உங்காளு? என்றும் விளக்கம் சொன்ன தாவா மூமின் அது அந்த காலம் என்றும் கூறுகிறார் அப்டின்னு கொதித்துபோய் கேட்டார் .
    நான் என்னத்த சொல்ல? இதத்தாங்க நானும் மர்கஸ்ல கேட்டேன் ,அதற்கு என்னிடத்தில் ஷைத்தான் ஊசலாட்டம் பண்றான்,சிலம்பாட்டம் பண்றான்னு ஒதுக்கி வெச்சிட்டானுங்க என்றேன் !

  6. ஹலோ சகோதரன் “உங்ககிட்ட விவாதம் பண்ணி பதில் எழுதுனா ஈமான் பறிபோயடும்னு நிறைய பேரு சொல்றாங்க,அப்டியா ?” இப்படி சொன்னது நீங்க தானே. அப்புறம் என்ன எதுவும் எந்த இடத்திலும் சொல்லவில்லைன்னு ரீல் விடுறீங்க. இந்த சீன் காட்டும் வேலையெல்லாம் நம்ம கிட்ட வேண்டாம்.

  7. சகோ முபாரக்
    //எழுத்து விவாதத்திற்கு தயார் என்று சென்கொடிக்கு ஆதரவாகவும் அதில்லாமலும் நான் எதுவும் எந்த இடத்திலும் சொல்லவில்லை//
    இதுக்கு என்ன அர்த்தம் ? எழுத்து விவாதம் சம்பந்தமாக நான் பதிவு செய்யவில்லை என்று அர்த்தம் !
    //அவர் அளிக்கும் கட்டுரைகளுக்கு என்னுடைய விமர்சனத்தை பதிவு செய்தேன் அவ்வளவே//
    இதுக்கு என்ன அர்த்தம்? மற்றவை என்னுடைய விமர்சனம் அல்லது கருத்து என்பதாகும்.என்ன புரியுதா? சகோதரரே !
    அதென்ன ரீல் விடுவது,சீன் காட்டுவது அப்டின்னு?
    (அதெல்லாம் மூமினாக்களை நம்பவைக்க மார்க்கவாதிகள் செய்யும் செயலாக இருக்கும்னு நினைக்கிறேன்)

  8. நாம் எத்தனை மறுப்புகளை எழுதினாலும் மறுபடியும், மறுபடியும் சிறிதுகூட கூச்சமில்லாமல் மீண்டும், மீண்டும் குர் ஆனில் அறிவியல் இருக்கிறது, புவியியல் இருக்கிறது, கணக்கியல் இருக்கிறது புளுகுவார்கள்.
    நேற்றைய முன்தினம்கூட எங்களது பகுதியில் உள்ள பள்ளியில் இந்த தேன்கதையை விளம்பிக் கொண்டிருந்தனர்.
    அயல் மகரந்தச் சேர்க்கை என்றால் என்வென்றுகூட அறியாத முஹம்மது, மதீனாவாசிகளிடம் அசடுவழிய நின்ற கதையை ஹதீஸ்கள் கூறுகின்றன. குர்ஆனில் அறிவியலைத் தேடும் மூளை செத்த ஆலீம்களை நினைத்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

  9. சகோ தஜ்ஜால்
    இதுவாவது பரவாயில்லை தேன்கதை!
    மதினத்து அன்சாரிகள் தனது மனைவிகளை விவாகரத்து செய்து பின்னர் மக்கத்து தோழர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர் என்பதையும் மேலும் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கு பிடித்தமானவர்களை விவாகரத்துக்கு உட்படுத்தி திருமண பந்தத்தையே கேளிக்கூத்தாக்கியதை பெருமையாக எங்கள் ஊரில் இந்த ஹஜ்ஜிபெருநாளில் கூட சிலாகித்து சிலிர்த்துகொண்டார்கள் என்றால் அதை என்னவென்று சொல்ல!
    இதில் என்ன ஒழுக்கம் என்று எனக்கு புரியவில்லை,முகமது பிறர் மனை நோக்காதவர் என்பதையும் உறுதிமொழி எடுத்தபோது கூட பெண்களின் கையை தொடாதவர் என்று பெருமை பட எழுதி வைத்து படிக்கின்றனர்!
    முபாரக்,இப்ராகிம் போன்ற சகோதரர்கள் இதனை கண்டு நாமும் இப்படி இருப்போம் நபி வழி வாழ்வோம் என்று ஆசைப்படுகின்றனர் என்றால் சந்தோஷம்! ஆனால், இப்படி கூறிய முஹம்மது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படும்போது அதனை ஆய்வு செய்து நடுநிலை வகிக்கவேண்டுமே தவிர ,அது அப்படியல்ல நீங்கள் தவறாக புரிந்துகொண்டீர்கள் முஹம்மது 100 சதம் சரியான உலக மானிடர்களில் சிறந்தவர் என்று கூறும்போதும் மற்ற மதங்கள் கூறுபவை எல்லாம் மனிதகரங்கள் எழுதி வைத்து அல்லாவை ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்லும்போது தான் பிரச்னை ஆரம்பிக்கின்றது!
    என்றைக்கு சிந்தனை செயலாக்கம் பெறப்போகும்?

  10. “பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியை பிளந்து மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்” குரான் 17:37. பிஜே அவர்களின் மொழிபெயர்ப்பு இப்படிக்கூறுகிறது. ஆனால் இதே வசனம் ஜான் டிரஸ்ட் வெளியீட்டில் இப்படி இருக்கிறதா? “நீர் பூமியில் பெருமையாய் நடக்கவேண்டாம். நிச்சயமாக நீர் பூமியை பிளந்துவிட முடியாது. மலையின் உச்சிக்கு உயர்ந்து விடவும் முடியாது.” இரண்டுக்கும் இடையில் எவ்வளவு வித்தியாசம்? கர்வம் பிடித்தலையும் மனிதர்களுக்கு குரானின் அறிவுரை இது பூமியை பிளந்துவிட முடியுமா? மலையின் உச்சிக்கு சென்றுவிட முடியுமா? எனவே உன்னை பெரிதாய் நினைத்து கர்வத்துடன் நடக்காதே. இதுதான் குரான் வாயிலாக முகம்மது சொல்லவருவது. ஒரு ஒப்பீட்டுக்காக கூறுவது. பின்னர் மனிதர்கள் மலையின் உச்சியை அடைந்து விடுவார்கள், பூமியை பிளந்து விடுவார்கள் (பிளப்பது என்றால் இரண்டு துண்டுகளாகவா?) என்பதெல்லாம் முகம்மதுவிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் இதை எப்படி திரித்துவிட்டார்கள்.

  11. கடவுள் இல்லை அல்லா தான் இருக்கிறான் அல்லா என்றால் அறிவியல் தான். அறிவியலை நம்பியவன் ஒரு போதும் கடவுளை நம்பி மோசம் போகமாட்டன் அரபில் -அல்லா தமிழில்-அறிவியல் ஆங்கிலத்தில்-சயின்ஸ்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s