கோள்களும் அதன் விசையும் குரானின் தேற்றங்கள்.

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 13


வானத்திலிருக்கும் பற்பல கோள்களிடையே தொழிற்படும் விசைகள் குறித்து நியூட்டன் விரிவாக விளக்கியிருக்கிறார். நியுட்டனின் தேற்றங்களைப் போல் அவர் அறிந்து வெளிப்படுத்துவதற்கு முன்பே யாருக்கும் அறியாமல் குரான் விளம்பியிருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் குரானின் தேற்றங்களை பாருங்கள்.

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான்……….. குரான் 13:2; 31:10.

இந்த வசனத்தில் கூறப்பட்டிருக்கும் ‘பார்க்கின்ற தூண்களின்றி’ என்பதன் பொருள் தெரியுமா? அதன் பொருள் தான் ஈர்ப்புவிசை. புவி ஈர்ப்பு விசை என்றால் வானத்திற்கும் பூமிக்கும் இடையிலிருக்கும் கண்களால் பார்க்கமுடியாத தூண் என்று பொருள். மேல்நோக்கி எறியப்பட்ட பொருள் ஏன் மீண்டும் புவியை நோக்கி வரவேண்டும் என்று தேவையில்லாமல் சிந்தித்த நியூட்டன் அதற்குப்பதிலாக குரானைப் படித்திருந்தால் இன்னும் சுலபமாக தன்னுடைய விண் பொருட்களுக்கு இடையேயான ஆற்றல்கள் குறித்த அறிவியல் விதிகளை தந்திருக்கலாம்.

அறிவியல் வளராத காலங்களில் அனுபவம் அதிகம் பெற்ற முதியவர்களிடம் தங்கள் ஐயங்களை இளையவர்கள் கேட்ப்பார்கள். நீண்ட தூரம் போனால் என்னவாகும்? பூமி முடிந்து கீழே விழுந்து விடுவோம். காற்று எப்படி வீசுகிறது? பொழுது போகாத தேவதைகள் வானிலிருந்து காற்றை வாயால் ஊதுகிறார்கள். சூரியனும் சந்திரனும் எப்படி அந்தரத்தில் நிற்கின்றன? தூண்கள் தாங்கிக்கொண்டிருக்கின்றன. அப்படி தூண்கள் இருப்பதாக தெரியவில்லையே? என்று சிறுவர்கள் கேட்டால் தலையில் குட்டி வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் முகம்மது பார்க்கமுடியாத தூண்கள் என்று வசனத்தை கட்டி அனுப்பிவிட்டார். இன்றோ அது ஈர்ப்புவிசை எனும் அறிவியல் ஆடை கட்டிக்கொண்டு வந்துநிற்கிறது.

ஒரு கோளின் ஈர்ப்புவிசை என்றால் அது அந்தக்கோளின் எல்லா இடத்திலும் இருக்கும், வானமும் சூழ இருக்கிறது. சூழ இருக்கும் வானத்துடன் எல்லா இடங்களிலும் இணைக்கப்பட்டிருக்கும் ஒன்றை தூண்கள் என்று ஒப்பீடு செய்வது சரியாக இருக்குமா? தூண் என்றால் ஒரு இடத்தில் இருக்கும் இன்னொரு இடத்தில் இருக்காது. ஒன்றை ஒன்று தாங்கிப்பிடிப்பதற்கு எல்லா இடத்திலும் தூண்களாகவே இருக்கவேண்டும்  என்பது அவசியமில்லை. பூமிக்கு புவியீர்ப்பு விசை இருக்கிறது இதைத்தான் குரான் பார்க்கமுடியாத தூண் எனக் குறிப்பிடுகிறது என்றால், இரண்டு தூண்களுக்கிடையே இடைவெளி போல் புவியில் ஈர்ப்புவிசை செயல்படாத இடமும் இருக்கிறதோ?

தாங்கிப்பிடிக்கிறது, விலகிவிடாமல் இருக்க உதவுகிறது என்பதற்கு தூண் எனும் குறியீடு ஓரளவு பொருந்துவதாகவே கொள்வோம். ஆனால் ஈர்ப்புவிசை என்றால் தன்வசம் பொருட்களை ஈர்க்க வேண்டுமே, மேலே எறிந்த பொருள் செலுத்து வேகம் தீர்ந்ததும் திரும்ப வரவேண்டுமே, இதை எப்படி தூண்களோடு ஒப்பிடுவது? இது ஒரு புறமிருக்கட்டும் இதே வசனம்  வேறொரு குரானில் “அவன் வானங்களை தூணின்றியே உயர்த்தியுள்ளான் நீங்கள் அவற்றை பார்க்கிறீர்கள்.” என்று இருக்கிறது.

……..சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்……..குரான் 31:29

முதலில் நியுட்டனின் ஈர்ப்புவிசை இப்போது கோப்பர்நிகஸின் கோள்களின் இயக்கம். குரானில் இருப்பதெல்லாம் அறிவியல் கூறுகள் தான் என்று நிரூபிக்கவேண்டுமென்றால், குரான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம் அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த காலமாக இருக்கவேண்டும். மதவாதிகள் அந்த அடிப்படையில்தான் எல்லாவற்றையும் தொடங்குவார்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவை குறிப்பதற்கு அறியாமைக்காலம் எனும் சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதன்படி அந்தக்கால மக்கள் பூமி தட்டை என நினைத்துக்கொண்டிருந்தார்கள் என்று கூறுவார்கள், ஏனென்றால் குரான் உருண்டை எனக்கூறுவதாக விளக்கினால்தான் அறிவியல் என்று கூறமுடியும். அந்த வழியில்தான் விண்ணின் கோள்கள் எல்லாம் அப்படியே நிலையாக நின்றுகொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருந்த காலத்தில் இப்படி ஒரு வசனத்தை இறக்கியவன் எல்லாம் அறிந்த இறைவனாகத்தானே இருக்கமுடியும்? என்று வியக்கிறார்கள். ஆனால் விண்ணின் கோள்கள் எல்லாம் சுழன்று சுற்றிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு கோள்களின் இடைப்பட்ட தூரங்கள் என்ன என்பதை எல்லாம் அரிஸ்டார்க்கஸ் (கிமு320-250) ஹிப்பார்க்கஸ் (கிமு 190-120) காலத்திலேயே உலகம் அறிந்திருந்தது. ஆனால் இவர்களோ குரான் தான் எல்லாவற்றையும் அறியாமைக்காலத்திலேயே சொல்லிவிட்டதாக கதையளந்து கொண்டிருக்கிறார்கள். மெய்யாகவே இதுபோன்ற வசனங்கள் அறிவியலை கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் உண்மை. எல்லாம் அல்லாவால் படைக்கப்பட்டவை என்பதுதான் அல்லா குறித்த வல்லமை, அதிகாரம், இஸ்லாத்தின் அடிப்படை. நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை.

“சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது” குரான் 36:38 என்றொரு வசனம். இந்த ஒற்றை வசனம் இரண்டு அறிவியல் பேருண்மைகளை உணர்த்துகிறது என்று விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று, பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது எனும் அண்மைகால அறிவியலை தான் இந்த வசனம் சூரியன் சென்றுகொண்டிருப்பதாக சொல்வதன் மூலம் உணர்த்துகிறது. இரண்டு, சூரியனின் ஆயுட்காலம் இன்னும் 300 கோடி ஆண்டுகள் தான் அதன்பின் செம்பூதமாகி, தன் ஆற்றலை படிப்படியாக இழந்துவிடும் இதைத்தான் அதற்குரிய இடத்தை நோக்கி எனும் வார்த்தைகள் மூலம் உணர்த்துகிறது. இப்படி இவர்கள் அந்த வசனம் சுமக்கமுடியாமல் தள்ளாடும் அளவிற்கு அதன் தலையில் அறிவியலை ஏற்றிவைக்க, குரானை எழுதிய முகம்மது இந்த வசனத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு பொருளைச்சொல்கிறார்.

புகாரி ஹதீஸ் எண் 3199 அபூ தர் எனும் முகம்மதின் தோழர் அறிவிக்கிறார்,” நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறையும் நேரத்தில் அது எங்கு செல்கிறது என்று தெரியுமா? என என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்றேன். நபி அவர்கள், அது அர்ஷுக்கு கிழே சஜ்தா செய்வதற்காக செல்கிறது. அங்கு அது மீண்டும் கிழக்கில் உதயமாவதற்கு அனுமதி கேட்கிறது. உடனே அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு நாள் அது சஜ்தா செய்ய அது ஏற்க்கப்படாமல் வந்த வழியே திரும்பிச்சென்றுவிடு என்று கூறப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும். இதைத்தான் சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்கவனின் நிர்ணயமாகும் எனும் 36:38ம் இறைவசனம் குறிக்கிறது என்றார்கள்.

குரானை எழுதிய இவர்களின் நம்பிக்கைப்படி அல்லாவிடமிருந்து மக்களுக்காக குரானை கொண்டுவந்த தூதரின் விளக்கம் இப்படி இருக்கிறது, ஆனால் இவர்களோ குருவி தலையில் பனங்காயை இல்லையில்லை யானையையே ஏற்றி வைக்கிறார்கள்.

அர்ஷ் – இறைவனின் சிம்மாசனம். சஜ்தா – வணக்கம்.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

19 thoughts on “கோள்களும் அதன் விசையும் குரானின் தேற்றங்கள்.

  1. எடை குறைந்த வாயுக்களை பலூனில் நிறப்பி அனுப்பினால் அது வான் நோக்கி செல்கிறதே ஏன்!?

  2. //குரானில் இருப்பதெல்லாம் அறிவியல் கூறுகள் தான் என்று நிரூபிக்கவேண்டுமென்றால், குரான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம் அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த காலமாக இருக்கவேண்டும். மதவாதிகள் அந்த அடிப்படையில்தான் எல்லாவற்றையும் தொடங்குவார்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவை குறிப்பதற்கு அறியாமைக்காலம் எனும் சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள்.//

    இதைத் தான் இந்த கட்டுரையின் முக்கியமான வாக்கியங்களாக நினைக்கிறேன்.

  3. குரானுக்கு முன்னரே இந்தியாவிலும் கிரேக்கத்திலும் பூமி சூரியனை சுற்றுகிறது. சூரியன் பூமியை சுற்றவில்லை என்ற அறிவு வந்துவிட்ட பின்னால், ஏன் அரேபியாவில் அதற்கு பின்னால் வந்த குரான் நேரடியாக சொல்வதில்லை என்பது சிக்கலான கேள்வி.

    காட்டரபிகள் பூமி உருண்டை என்று குரானில் நேரடியாக சொன்னால், நபிகளாரை நம்ப மாட்டார்கள் என்பது காரணமாக சொல்லப்படுகிறது. இறுதி இறைவேதம் என்ற் சொல்லிவிட்டு அதில் உலகம் தட்டை என்றும் பூமியை சூரியன் சுற்றுகிறது. பூமி நிலையாக இருக்கிறது என்றெல்லாம் எழுதி வைத்திருப்பதையும், அதனை தலையை சுற்றி மூக்கை தொடும் விதமாக விளக்கம் கொடுத்து சமாளிப்பதையும் பார்க்க எனக்கு அல்குரானே முகம்மது உருவாக்கியது என்றே தோன்றியது. என் நண்பர்களிடமும், மௌலவிகளிடமும் கேட்டபோது கடுமையாக எச்சரிக்கப்பட்டேன்.

    அதுவும் பிஜே போன்றோர் அரபியில் இல்லாத வார்த்தைகளையெல்லாம் போட்டு கன்னாபின்னாவென்று பொருள் சொல்லுவதை பார்க்கும்போது வாந்திதான் வருகிறது. ஏண்டா முஸ்லீமாக பிறந்தோம் என்று இருக்கிறது.

    ஏதாவது வெளிநாட்டுக்கு போய் ம்தம் மாறிவிடலாம் என்றே தோன்றுகிறது

  4. அன்றைக்கு இருந்த அறிவியல் ஞானத்தை மறுக்கும் விதமாகவும் தெளிவாக ”இல்லை. இப்படித்தான்” என்று அந்த அரபிகளுக்கே அறிவுருத்தும் விதமாகவும் அல்குரான் இருந்திருக்க வேண்டும்.

    உலகம் தட்டை என்றும், சூரியனே பூமியை சுற்றுகிறது என்றும் இன்றும் இமாம்களும், மௌலவிகளும், அரபி தாய்மொழி கொண்டவர்களும் வாதிடும் வண்ணம் இருக்கும் அல்குரானை இன்று 21ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களை உள்ளே நுழைத்து பொருள் கூறி சப்பை கட்டுபவர்கள் உண்மையிலேயே கேவலமானவர்கள். ஏமாற்றுக்காரர்கள். மக்களின் கடவுள் நம்பிக்கையை வைத்து பிழைக்க முயல்பவர்கள்.

    கடவுள் நிச்சயம் இருக்கிறார். ஆனால் அது முகம்மது உருவாக்கிய அல்குரானில் கூறும் அல்லாஹ் அல்ல.
    அல்லாஹ் முகம்மதின் ஒரு கற்பனை பாத்திரம். தனக்கு வேண்டியதை அரபிகளிடம் சாதித்துக்கொள்ள “கடவுள் சொல்கிறார்” என்று சொல்லி ஏமாற்றி பிழைக்க உருவாக்கிய ஒரு கற்பனை பாத்திரம்.

    எந்த வேகத்தில் இதிலிருந்து வெளியேறுகிறோமோ அவ்வளவுக்கு நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் நல்லது.

  5. “”””ஏதாவது வெளிநாட்டுக்கு போய் ம்தம் மாறிவிடலாம் என்றே தோன்றுகிறது””””””

    உங்களுக்கு நான் உதவலாம் என்று எண்ணுகிறேன்.
    நீங்கள் இஸ்ரேலுக்கு சென்று யூதராக மாறினால் அவர்கள் உங்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுப்பார்கள்.
    இதில் உங்களுக்கு விருப்பமில்லையெனில் நம் நாட்டில் நிறைய சர்ச்சுகள் இருக்கிறது.ஏதாவது ஒரு சர்ச்சுக்கு சென்று கிறித்தவராக மாறி ஞானஸ்னானம் செய்துகொள்ளுங்கள்.பாதிரியார்கள் உங்களுக்கு நிறைய உதவிகள் செய்வார்கள்.அவர்கள் உங்களை வெளிநாட்டுக்கும் அனுப்பிவைப்பார்கள்.
    இதிலும் உங்களுக்கு விருப்பமில்லையெனில் புத்த மதத்திற்கு மாறிவிடுங்கள்(அதற்கு எங்கு செல்ல வேண்டும் என்று தெரியவில்லை).
    புத்த மதத்திலும் உங்களுக்கு விருப்பமில்லையெனில் நீங்கள் மீண்டும் இந்து மதத்துக்கே மாறிவிடுங்கள்.

  6. //அல்லாஹ் முகம்மதின் ஒரு கற்பனை பாத்திரம். தனக்கு வேண்டியதை அரபிகளிடம் சாதித்துக்கொள்ள “கடவுள் சொல்கிறார்” என்று சொல்லி ஏமாற்றி பிழைக்க உருவாக்கிய ஒரு கற்பனை பாத்திரம்././

    திரு காதிர்
    கீழே நான் கொடுத்திருக்கும் ஹதீஸ்களை படித்தாலே குரான் எப்படி வந்திருக்கும் என்று புரிந்து கொள்ளலாம்

    (ஹதீஸ், புகாரி 4483

    உமர் ரழியல்லாஹ{ அன்ஹ{ கூறுகிறார்:

    ‘மூன்று விஷயங்களில் நான் அல்லாஹ்வுக்கு இசைவான கருத்துக் கொண்டேன்’ அல்லது ‘என் இறைவன் மூன்று விஷயங்களில் என்னுடன் உடன்பட்டான்.

    1 .’ நான் (நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! இப்ராஹீம்(அலை) அவர்கள் நின்ற இடத்தைத் தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளலாமே!” என்று கேட்டேன். (அவ்வாறே ஆக்கிக்கொள்ளும்படி அல்லாஹ்வும் வசனத்தை அருளினான்.) மேலும்,

    2 .நான், (அவர்களிடம்), ‘இறைத்தூதர் அவர்களே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் (எல்லாவகை மனிதர்களும்) வருகிறார்கள். எனவே, (தங்கள் துணைவியரான) இறைநம்பிக்கையாளர்களின் அன்னயரை பர்தா அணியும் படி தாங்கள் கட்டளையிடலாமே!” என்று கேட்டேன் உடனே, அல்லாஹ் பர்தா(சட்டம்) குறித்த வசனத்தை அருளினான்.

    3 .நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரில் சிலர் மீது அதிருப்தி அடைந்திருப்பதாக எனக்குச் செய்தி எட்டியது. எனவே, அவர்களிடம் நான் சென்று, ‘நீங்கள் (நபி(ஸல்) அவர்களுக்குச் சங்கடம் ஏற்படுத்துவதை) நிறுத்திக்கொள்ளவேண்டும்! இல்லையென்றால், அல்லாஹ் தன் தூதருக்கு உங்களைவிடச் சிறந்தவர்களை (உங்களுக்கு) பதிலாகத் தருவான்” என்று சொன்னேன். இந்நிலையில் அவர்களின் துணைவியரில் ஒருவரிடம் நான் சென்றபோது, ‘உமரே! தம் துணைவியருக்கு உபதேசம் செய்ய இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஏன் எங்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும்!” என்று கேட்டார். அப்போது அல்லாஹ், ‘இறைத்தூதர் உங்களை விவாக ரத்து செய்தால், உங்களைவிடச் சிறந்த முஸ்லிமான துணைவியரை (உங்களுக்கு பதிலாக) அல்லாஹ் அவருக்கு வழங்கலாம்” எனும் (திருக்குர்ஆன் 66:5வது) வசனத்தை அருளினான். )

    முகம்மதுவிற்கு எப்போதெல்லாம் காரியம் ஆகவேண்டுமோ அப்போதெல்லாம் கடவுள் இறங்குவார். ஏனென்றால் கடவுள் முகம்மதுவின் பக்கத்துக்கு வீட்டில் தான் வாடகைக்கு இருந்தார்.

  7. சலாம்.செங்கொடி அவர்களே உங்கள் இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே என்ற கட்டுரையை வாசித்து வருகிறேன்.அப்போது ஓன்று மட்டும் விளங்கியது.எத்தனையோ பேர் குரானை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் அறிவியலை மறுக்கும் நிலையை அவர்களாகவே ஏற்படுத்தி கொண்டது போல் நீங்களும் அந்த நிலையை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள்.இப்போது ஈர்ப்பு விசை சம்மந்தமான உங்கள் வாதத்திற்கு பதில் தரலாம் என்று நினைக்கிறேன்.

    உங்கள் வாதம்:ஒரு கோளின் ஈர்ப்புவிசை என்றால் அது அந்தக்கோளின் எல்லா இடத்திலும் இருக்கும், வானமும் சூழ இருக்கிறது. சூழ இருக்கும் வானத்துடன் எல்லா இடங்களிலும் இணைக்கப்பட்டிருக்கும் ஒன்றை தூண்கள் என்று ஒப்பீடு செய்வது சரியாக இருக்குமா? தூண் என்றால் ஒரு இடத்தில் இருக்கும் இன்னொரு இடத்தில் இருக்காது. ஒன்றை ஒன்று தாங்கிப்பிடிப்பதற்கு எல்லா இடத்திலும் தூண்களாகவே இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை. பூமிக்கு புவியீர்ப்பு விசை இருக்கிறது இதைத்தான் குரான் பார்க்கமுடியாத தூண் எனக் குறிப்பிடுகிறது என்றால், இரண்டு தூண்களுக்கிடையே இடைவெளி போல் புவியில் ஈர்ப்புவிசை செயல்படாத இடமும் இருக்கிறதோ?

    பதில்:முதலில் தூண் என்பதற்கு நீங்கள் கொடுத்த விளக்கமே உங்கள் அறியாமையை வெளிபடுத்துகிறது.பொதுவாக தாங்கி பிடிக்கும் பொருளை தூண் என்று கூறுவோம்.அது எந்த வடிவத்தில் இருந்தால் என்ன……. இப்போது கண் கொண்டு எந்த தூணை பார்கிரீர்களோ அதை மட்டும்தான் தூண் என்று குறிப்பிடுவீர்களோ.தகப்பனார் ஒரு குடும்பத்திற்கு தூனாவார் என்று யாராவது கூறினால்,உங்களை போல் உள்ள ஆட்கள் வந்து ‘இல்லை,இல்லை, தகப்பனார் வேறு,தூண் வேறு’ என்று கூறுவீர்கள் போலும்.தூண் என்பது ஒரு பொருளையும் குறிக்கும்.ஒரு பொருளின் செயலையும் குறிக்கும்.இந்த வகையில்தான் இந்த மொத்த பூமியும் ஈர்ப்பு விசை என்ற தூணினால் தாங்கி பிடிக்க பட்டு இருப்பதால் குரான் தூண் என்ற அற்புதமான வார்த்தையை கொண்டு குறிப்புடுகிறது.ஆக இந்த விஷயத்தில் உங்கள் ஆராயிசியின் லட்சணம் வெளிபடுகிறது.

    உங்கள் வாதம்:தாங்கிப்பிடிக்கிறது, விலகிவிடாமல் இருக்க உதவுகிறது என்பதற்கு தூண் எனும் குறியீடு ஓரளவு பொருந்துவதாகவே கொள்வோம். ஆனால் ஈர்ப்புவிசை என்றால் தன்வசம் பொருட்களை ஈர்க்க வேண்டுமே, மேலே எறிந்த பொருள் செலுத்து வேகம் தீர்ந்ததும் திரும்ப வரவேண்டுமே, இதை எப்படி தூண்களோடு ஒப்பிடுவது? இது ஒரு புறமிருக்கட்டும் இதே வசனம் வேறொரு குரானில் “அவன் வானங்களை தூணின்றியே உயர்த்தியுள்ளான் நீங்கள் அவற்றை பார்க்கிறீர்கள்.” என்று இருக்கிறது.

    பதில்:இதிலும் உங்கள் அறியாமைதான் வெளிபடுகிறது.ஒரு குடும்பத்தின் தலைவனை அந்த குடும்பத்தின் தூண் என்று குறிப்பிட்டால் ‘அது எப்படி..அவர் நடக்கிறார் …..தூண் நடக்காதே.’என்று நீங்கள் வாதம் செய்வீர்களா.தூண் என்றால் அவருடைய மொத்த பொறுப்பை கூறுவது.நடப்பதும்,ஓடுவதும் அவருடைய செயல்பாடுகள்.இரண்டும் வெவ்வேறு விஷயத்தை குறிக்கிறது.அது போல்தான் ஒரு பொருளை மேல் ஏறி செல்ல அனுமதித்து குறிப்பிட்ட தூரம் ஆனதும்(எடைக்கு ஏற்ப) அதை கீழ் இழுப்பது ஈர்ப்பு விசையின் செயல்பாடு.அதாவது தூணாக இருக்கும் ஈர்ப்பு விசையின் செயல்.இதில்தான் மூடத்தனமாக முரண்பாட்டை கர்ப்பிகிரீர்கள்.நீங்கள் பார்கின்ற தூண்கள் இன்றி என்று மற்ற வசனங்களில் வருவதை வசமாக மறைத்து கூறி உள்ளீர்கள்.

    உங்கள் வாதம்:..சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்……..குரான் 31:29

    முதலில் நியுட்டனின் ஈர்ப்புவிசை இப்போது கோப்பர்நிகஸின் கோள்களின் இயக்கம்.அந்த வழியில்தான் விண்ணின் கோள்கள் எல்லாம் அப்படியே நிலையாக நின்றுகொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டிருந்த காலத்தில் இப்படி ஒரு வசனத்தை இறக்கியவன் எல்லாம் அறிந்த இறைவனாகத்தானே இருக்கமுடியும்? என்று வியக்கிறார்கள். ஆனால் விண்ணின் கோள்கள் எல்லாம் சுழன்று சுற்றிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு கோள்களின் இடைப்பட்ட தூரங்கள் என்ன என்பதை எல்லாம் அரிஸ்டார்க்கஸ் (கிமு320-250) ஹிப்பார்க்கஸ் (கிமு 190-120) காலத்திலேயே உலகம் அறிந்திருந்தது. ஆனால் இவர்களோ குரான் தான் எல்லாவற்றையும் அறியாமைக்காலத்திலேயே சொல்லிவிட்டதாக கதையளந்து கொண்டிருக்கிறார்கள். மெய்யாகவே இதுபோன்ற வசனங்கள் அறிவியலை கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் உண்மை. எல்லாம் அல்லாவால் படைக்கப்பட்டவை என்பதுதான் அல்லா குறித்த வல்லமை, அதிகாரம், இஸ்லாத்தின் அடிப்படை. நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை.

    பதில்:அரிஸ்டார்க்கஸ் ,ஹிப்பார்க்கஸ் இவர்களின் அறிவியல் உண்மை என்ன என்பதை கூட தெரிந்து கொள்ள நேரம் இல்லாமல் குரானை பொய்களை கூறி பொய்ப்பிபதில் உங்கள் நேரத்தை செலவிட்டு இருக்கிறீர்கள் என்பதை உங்கள் வார்த்தைகளில் இருந்து அறிய முடிகிறது.அறிச்டாற்சாஸ்,ஹிப்பார்கஸ் கூறியதெல்லாம் பூமி சூரியனை சுற்றுகின்றன என்ற சூரிய மைய கொட்பாடுதானே தவிர கோள்களின் ஓட்டம் அல்ல.ஆனால் குரான் என்ன சொல்கிறது.ஒவ்வொன்றும் சென்று கொண்டு இருக்கின்றன என்ற மாபெரும் அறிவியல் உண்மை. ஆராயிவது தவறல்ல.அது நேர்மையான ஆராயிசியாக இருக்க வேண்டும்.அதுதான் முக்கியம்.அனால் குரானை நேர்மையாக ஆராயிந்தால் நிச்சயம் அதன்படி ஈர்க்க படுவீர்கள்.இன்ஷா அல்லாஹ்.

    உங்கள் வாதம்: குரானில் இருப்பதெல்லாம் அறிவியல் கூறுகள் தான் என்று நிரூபிக்கவேண்டுமென்றால், குரான் எழுதப்பட்டுக் கொண்டிருந்த காலம் அறியாமை இருளில் மூழ்கிக் கிடந்த காலமாக இருக்கவேண்டும். மதவாதிகள் அந்த அடிப்படையில்தான் எல்லாவற்றையும் தொடங்குவார்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அரேபியாவை குறிப்பதற்கு அறியாமைக்காலம் எனும் சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதன்படி அந்தக்கால மக்கள் பூமி தட்டை என நினைத்துக்கொண்டிருந்தார்கள் என்று கூறுவார்கள், ஏனென்றால் குரான் உருண்டை எனக்கூறுவதாக விளக்கினால்தான் அறிவியல் என்று கூறமுடியும்.

    நமது பதில்:அறியாமை காலம் என்று அந்த நபிகள் நாயகம் காலத்தை குறிப்பிடுவது கற்பனையாகவா அல்லது வரலாற்று சான்றா….தாய்க்கும்,தாரதிர்க்கும் வித்தியாசம் தெரியாத ஒரு காலத்தை,அறிவியல் அறிவுக்கு பொருள் தெரியாத காலத்தை,எப்படி குறிபிடுவது செங்கடி அவர்களே……உங்கள் கற்பனை குதுரையை தட்டி விட்டால் அந்த கால வரலாறை மாற்றி அமைத்து விட முடியுமா……. இப்படியும் ஒரு அறியாமை கால மக்களா என்று அந்த கால அரபு மக்களை பார்த்து உலகமே மூக்கில் விரலை வைக்கிறது.ஆனால் நீங்கள் அது அறிவியல் அரபு மேதைகள் வாழ்ந்த காலம் போல் காட்ட பார்க்கிறீர்கள்.ஒரு பேச்சுக்கு அறிச்டார்ச்சசும்,அறிச்டர்சிலும் அந்த அரேபியாவிலே பிறந்து வளர்ந்து இருந்தால் கூட அந்த மக்களுக்கு அந்த அறிவியல் எல்லாம் தண்ணீரில் நனைந்த காகிதம் போல்தான் என்பதை வரலாறு நிரூபித்து கொண்டு இருக்கிறது.அதனால்தான் இந்த குரானை ஆராயிந்த அதனை ஆராய்ச்சியாளர்களும் ஆச்சர்யத்தின் எல்லையை தொட்டார்கள்.அதில் பலர் இஸ்லாத்தையும் ஏற்றார்கள்.

    உங்கள் வாதம்:மெய்யாகவே இதுபோன்ற வசனங்கள் அறிவியலை கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் உண்மை. எல்லாம் அல்லாவால் படைக்கப்பட்டவை என்பதுதான் அல்லா குறித்த வல்லமை, அதிகாரம், இஸ்லாத்தின் அடிப்படை. நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை.

    நமது பதில்:இஸ்லாம்தான் உண்மை மார்க்கம் என்பதை அறிவியல் நிரூபித்து விட்ட பிறகு ‘ இங்கு அறிவியலுக்கு இடம் இல்லை ‘எனபது நிச்சயம் நகைப்பிற்கு உரிய வாதம்.’ “குறிப்பிட்ட காலம் வரை செல்லும்” என்பதையும் அறிவியல் மறுக்க வில்லை.இந்த உலகம் அழிய தாயாராக இருக்கிறது என்பதுதான் சமீபத்திய அறிவியல்.அனால் என்று என்பதைத்தான் அது அறியாது. அது இறைவனுக்கு மட்டும் தெரிந்த உண்மை.

    உங்கள் வாதம்:“சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது” குரான் 36:38 என்றொரு வசனம். இந்த ஒற்றை வசனம் இரண்டு அறிவியல் பேருண்மைகளை உணர்த்துகிறது என்று விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள். ஒன்று, பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருக்கிறது எனும் அண்மைகால அறிவியலை தான் இந்த வசனம் சூரியன் சென்றுகொண்டிருப்பதாக சொல்வதன் மூலம் உணர்த்துகிறது. இரண்டு, சூரியனின் ஆயுட்காலம் இன்னும் 300 கோடி ஆண்டுகள் தான் அதன்பின் செம்பூதமாகி, தன் ஆற்றலை படிப்படியாக இழந்துவிடும் இதைத்தான் அதற்குரிய இடத்தை நோக்கி எனும் வார்த்தைகள் மூலம் உணர்த்துகிறது. இப்படி இவர்கள் அந்த வசனம் சுமக்கமுடியாமல் தள்ளாடும் அளவிற்கு அதன் தலையில் அறிவியலை ஏற்றிவைக்க, குரானை எழுதிய முகம்மது இந்த வசனத்திற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு பொருளைச்சொல்கிறார்.

    புகாரி ஹதீஸ் எண் 3199 அபூ தர் எனும் முகம்மதின் தோழர் அறிவிக்கிறார்,” நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறையும் நேரத்தில் அது எங்கு செல்கிறது என்று தெரியுமா? என என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் என்றேன். நபி அவர்கள், அது அர்ஷுக்கு கிழே சஜ்தா செய்வதற்காக செல்கிறது. அங்கு அது மீண்டும் கிழக்கில் உதயமாவதற்கு அனுமதி கேட்கிறது. உடனே அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு நாள் அது சஜ்தா செய்ய அது ஏற்க்கப்படாமல் வந்த வழியே திரும்பிச்சென்றுவிடு என்று கூறப்படும். அதன்படி அது மேற்கிலிருந்து உதயமாகும். இதைத்தான் சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது. அது பேரறிவாளனான வல்லமை மிக்கவனின் நிர்ணயமாகும் எனும் 36:38ம் இறைவசனம் குறிக்கிறது என்றார்கள்.

    குரானை எழுதிய இவர்களின் நம்பிக்கைப்படி அல்லாவிடமிருந்து மக்களுக்காக குரானை கொண்டுவந்த தூதரின் விளக்கம் இப்படி இருக்கிறது, ஆனால் இவர்களோ குருவி தலையில் பனங்காயை இல்லையில்லை யானையையே ஏற்றி வைக்கிறார்கள்.

    நமது பதில்:இதிலும் உங்கள் அறியாமை வெளிபடுகிறது.ஒரு விஷயத்தை பற்றி விமர்சிக்கும் பொது அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.நீங்கள் சுட்டி காட்டிய ஹதீஸ் குரானுக்கு முரண்படுவதால் இதை அறிஞர்கள் “நிறுத்தி வைக்க பட்ட ஹதீஸ்” என்று அறிவித்து உள்ளார்கள்.அதாவது இறை தூதரின் வார்த்தை குரானுக்கு முரண் படாது என்ற அடிபடையில் இந்த ஹதீஸை அவ்வாறு அறிவித்து உள்ளார்கள்.எனவே முடிந்தால் உருப்படியான ஆதாரங்களை வையுங்கள்.

    மொத்தத்தில் குரானை பற்றிய உங்கள் அறிவும் பூஜ்யம்.அறிவியலை பற்றிய உங்கள் அறிவும் பூஜ்யம் எனபது உங்கள் எழுத்துகளாலேயே நிரூபணம் ஆகி கொண்டு இருக்கிறது.இனியாவது உருப்படியான ஆராயிசியை மேற்கொள்ளுங்கள்.உங்களுக்கு நேர் வழியை காட்ட அந்த வல்ல நாயனிடம் இறைஞ்சுகிறேன்.

  8. நண்பர் ziath rahiman,

    மீண்டும் ஒருமுறை கட்டுரையையும், உங்கள் பின்னூட்டத்தையும் அமைதியாக இருந்து படித்துப்பாருங்கள்.

    உங்கள் பின்னூட்டத்தில் பதில் கூறுவதற்கோ, விளக்கமளிப்பதற்கோ உரியதாக ஒன்றுமில்லை.

    செங்கொடி

  9. சலாம்.செங்கொடி அவர்களே ஏன் பதிலில் என்ன தவறு என்பதை வரிக்கு வரி சுட்டி காட்டினால் திருத்தி கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும்.அதை விடுத்து ‘உங்கள் பின்னூட்டத்தில் பதில் கூறுவதற்கோ, விளக்கமளிப்பதற்கோ உரியதாக ஒன்றுமில்லை’ என்று கூறினால் அது பதிலாகுமா…

  10. நண்பர் ஸியாத்ரஹிமான்,

    தூண் என்பது உதாரணம், ஈர்ப்புவிசை என்பது ஆதாரம் இரண்டையும் குளப்பிக்கொள்ளக் கூடாது. குறிப்பிட்ட அந்த வசனத்தில் ஆதாரம் இல்லை, உதாரணம் மட்டுமே இருக்கிறது. அந்த உதாரணத்தை மட்டுமே வைத்து ஆதாரமான அறிவியல் விளக்கங்கள் சொல்லப்படுவதால், உதாரணம் எப்படி பொருந்தாமல் போகிறது என்பதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் நீங்களோ உதாரணத்தையே ஆதாரமாக விளக்குகிறீர்கள். தூண் என்பது தாங்குவதற்கு உதவும் ஒரு கருவி. அதற்கு வேறு செயற்பாடுகள் இல்லை. எந்த விதத்திலும் ஒரு பொருளை ஈர்ப்பதற்கு தூண் பயன்படாது. எனவே அந்த வசனத்தின் தூண் உதாரணம் ஈர்ப்பு விசையை குறிக்கிறது என்று ஒரு வாதத்திற்கு கொண்டாலும், ஈர்ப்பு விசையை குறிக்க தூண் என்பது பொருந்தாத உதாரணம். ஒரு குடும்பத்தலைவனை குடும்பத்தை தாங்கும் தூண் என்று குறிப்பிட்டால் அது தாங்கும் செயலை மட்டும் தான் குறிக்கும். அவனின் மற்ற செயல்களை தூண் எனும் உதாரணம் குறிக்காது. எடுத்துக்காட்டாக விமானத்தை உலோகப் பறவை எனும் உதாரணத்தால் குறிக்கிறார்கள் என்றால் அது பறக்கும் செயலை மட்டும்தான் குறிக்கும். பறவை மரக்கிளைகளில் அமர்கிறது, இனப்பெருக்கம் செய்கிறது போன்ற செயல்களையெல்லாம் பறவை எனும் உதாரணம் குறிக்காது. இதில் நான் பதிவில் குறிப்பிட மறந்த இன்னொரு விசயமும் இருக்கிறது. அந்த வசனம் பார்க்கின்ற தூன்களின்றியே வானத்தை உயர்த்தியதாக குறிப்பிடுகிறது. அதாவது அந்த வசனத்தின்படி தூண் எனும் உதாரணத்தின் மூலம் வானம் உயர்த்தப்படுகிறது. இந்த இடத்தில் நிலைப்பொருளாக பூமி கருதப்படுகிறது என்பதை கவனிக்கவேண்டும். அதாவது பூமியின் மீதுள்ள பார்க்கமுடியாத தூண்களால் வானம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் அறிவியல் கூறு இருப்பதாக கருதுகிறீர்களா நீங்கள்? ஒரு மொழி பெயர்ப்பில் பார்கின்ற தூண்களின்றி, வேறொரு மொழிபெயர்ப்பில் தூன்களின்றியே உயர்த்தியுள்ளான். இரண்டில் எதை எடுத்துக்கொள்வது? எது அறிவியலோடு பொருந்தி வருகிறதோ அதையா?

    அரிஸ்டார்க்கஸ் ,ஹிப்பார்க்கஸ் சூரியமையக் கோட்பாட்டை சொன்னதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். கொஞ்சம் அறிவியலையும் தெரிந்து கொள்ளுங்கள். சூரியமையக் கோட்பாட்டை கொண்டுவந்தது கோப்பர்நிகஸ். மேற்குறிப்பிட்ட இருவர் கோள்களின் தூரங்களை அளக்க முயன்றவர்கள். எல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றன, குறிப்பிட்ட காலம் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது மறுமை காலம் குறித்தான ஆன்மீகம் தானேயன்றி அறிவியலல்ல.

    குரானில் அறிவியல் இருக்கிறது என்று காண்பிப்பதற்குத்தான் அறியாமைக்காலம் எனும் சொல் பயன்படுகிறது. அந்தக்கால அரபிகள் மொழியியலில் சிறந்து விளங்கியதாக குரானே குறிப்பிடுகிறது. யாத்ரிப் நகரின் விவசாயமுறை முகம்மது அறிந்திருந்த விவசாயமுறையை விட சிறந்தது என்று ஒரு ஹதீஸ் குறிப்பிடுகிறது. உலகின் கடல் வணிகத்தின் பெரும்பகுதியை அரபிகள் தங்கள் பிடிக்குள் வைத்திருந்தனர். வானியலில் சிறப்பை அரபிகள் அடைந்திருந்தனர். யேமனில் சிறப்பான அரச நிர்வாகம் செயல்பட்டுக்கொண்டிருந்தது. இவ்வளவு சிறப்புகளும் அறியாமைக் காலத்திற்குள் அடங்குமா? இன்றும் கூட இந்தியாவில் பெண்குழந்தைகள் கொல்லப்படுகின்றனர், இதைக் கொண்டு இந்தியாவை அறியாமைக்காலம் எனக் கொள்ளலாமா?

    \\இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்று அறிவியல் நிரூபித்துவிட்ட பிறகு// ஒரு விஷயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும்போது நகைச்சுவையை கலப்பது அதன் வீரியத்தை குலைத்துவிடும். அறிக.

    ஒரு ஹதீஸ் மெய்யானதா, இட்டுக்கட்டப்பட்டதா என்பதை தீர்மானிக்க ஹதீஸ் ஆசிரியர்கள் சில விதிமுறைகளை வகுத்துள்ளனர். அதில் உள்ளீடு அடங்காது என்பதை அறியவும். எதுவெல்லாம் காலத்தால் கழிக்கப்படுகிறதோ அதையெல்லாம் விலக்கப்பட்டதாக அறிவித்துவிட்டால் பிரச்சனை தோன்றாதல்லவா? ஹதீஸை பொருத்தவரை அறிவிப்பாளர் வரிசை, நம்பகத்தன்மை போன்றவைகள் தான் விதிகளே தவிர அந்த ஹதீஸில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதல்ல. எந்த அறிஞர்கள்? எப்போது? எந்த அடிப்படையில்? அந்த ஹதீஸை நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவித்தார்கள் என்று கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன் நானும் தெரிந்து கொள்கிறேன்.

    செங்கொடி

  11. சலாம்.பின்னோடதிர்க்கு பதில் அளித்தமைக்கு நன்றி.
    நீங்கள் எழுதியது:தூண் என்பது உதாரணம், ஈர்ப்புவிசை என்பது ஆதாரம் இரண்டையும் குளப்பிக்கொள்ளக் கூடாது. குறிப்பிட்ட அந்த வசனத்தில் ஆதாரம் இல்லை, உதாரணம் மட்டுமே இருக்கிறது. அந்த உதாரணத்தை மட்டுமே வைத்து ஆதாரமான அறிவியல் விளக்கங்கள் சொல்லப்படுவதால், உதாரணம் எப்படி பொருந்தாமல் போகிறது என்பதை நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் நீங்களோ உதாரணத்தையே ஆதாரமாக விளக்குகிறீர்கள். தூண் என்பது தாங்குவதற்கு உதவும் ஒரு கருவி. அதற்கு வேறு செயற்பாடுகள் இல்லை. எந்த விதத்திலும் ஒரு பொருளை ஈர்ப்பதற்கு தூண் பயன்படாது. எனவே அந்த வசனத்தின் தூண் உதாரணம் ஈர்ப்பு விசையை குறிக்கிறது என்று ஒரு வாதத்திற்கு கொண்டாலும், ஈர்ப்பு விசையை குறிக்க தூண் என்பது பொருந்தாத உதாரணம். ஒரு குடும்பத்தலைவனை குடும்பத்தை தாங்கும் தூண் என்று குறிப்பிட்டால் அது தாங்கும் செயலை மட்டும் தான் குறிக்கும். அவனின் மற்ற செயல்களை தூண் எனும் உதாரணம் குறிக்காது. எடுத்துக்காட்டாக விமானத்தை உலோகப் பறவை எனும் உதாரணத்தால் குறிக்கிறார்கள் என்றால் அது பறக்கும் செயலை மட்டும்தான் குறிக்கும். பறவை மரக்கிளைகளில் அமர்கிறது, இனப்பெருக்கம் செய்கிறது போன்ற செயல்களையெல்லாம் பறவை எனும் உதாரணம் குறிக்காது. இதில் நான் பதிவில் குறிப்பிட மறந்த இன்னொரு விசயமும் இருக்கிறது. அந்த வசனம் பார்க்கின்ற தூன்களின்றியே வானத்தை உயர்த்தியதாக குறிப்பிடுகிறது. அதாவது அந்த வசனத்தின்படி தூண் எனும் உதாரணத்தின் மூலம் வானம் உயர்த்தப்படுகிறது. இந்த இடத்தில் நிலைப்பொருளாக பூமி கருதப்படுகிறது என்பதை கவனிக்கவேண்டும். அதாவது பூமியின் மீதுள்ள பார்க்கமுடியாத தூண்களால் வானம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் அறிவியல் கூறு இருப்பதாக கருதுகிறீர்களா நீங்கள்? ஒரு மொழி பெயர்ப்பில் பார்கின்ற தூண்களின்றி, வேறொரு மொழிபெயர்ப்பில் தூன்களின்றியே உயர்த்தியுள்ளான். இரண்டில் எதை எடுத்துக்கொள்வது? எது அறிவியலோடு பொருந்தி வருகிறதோ அதையா?
    நம் பதில்:செங்கொடி அவர்களே,முதலில் விமானத்தை பறவை என்று நாம் அழைத்தால் அது தவறா?நிச்சயமாக இல்லை.பறக்கும் செயலை செய்யும் அத்தனை பொருள்களையும் பறவை என்று குறிப்பிடலாம்.நாம் ஏன் அவ்வாறு குரிபதில்லை என்றால் ஒவ்வொன்றுக்கும் தனி,தனி அடையாளம் வேண்டும்.அதனால்தான்.அதுபோல்தான் ,ஈர்ப்பு விசையை இழுக்கும் விசை,இழுத்து பிடித்து கொண்டிருக்கும் விசை அல்லது அதற்க்கு பொருத்தமான வேறு பெயர்கள் இருந்தால் அந்த பேர்களை வைத்து குறிபிடுவதும் தவறல்ல.அதுபோல்தான் குடும்ப தலைவனும் எந்த செயலை செய்தால் தன் குடும்பம் ஆட்டம் காணாதோ அதுபோன்ற செயல்களை செய்து தன குடும்பத்தை தாங்கி பிடிகின்றான்.எனவே அவனை தூண் என்று குறிப்பிடலாம்.நீங்கள் கூறுவது போல் தன் தலைக்கு மேல் குடும்பத்தை வைத்து தாங்கி கொண்டு இருகின்றான் என்று நான் கூறவில்லை.
    அதுபோல்தான் ஈர்ப்பு விசையும்.எந்த கணக்கில் மனிதனை மற்றும் மற்ற உயிரினங்களையும்,பொருள்களையும் ஈர்த்தால் அதுவெல்லாம் மண்ணோடு,மண்ணாக ஆகாதோ அந்த கணக்கில் அந்த பொருள்களை ஈர்த்து கொண்டு இருக்கிறது.அது மட்டு இல்லாமல் அனைத்து கோள்களையும் அதன் சுழற்சி வேகங்களுக்கு ஈடு கொடுத்து ஈர்க்கிறது.எத்தனையோ லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் சற்றி சுழன்று கொண்டிருக்கும் பூமியில் துளி அளவு கூட அந்த உணர்வு இல்லாமல் நாம் வாழ்வதற்கு முக்கிய காரணமாய் இருப்பது ஈர்ப்பு விசை.இன்னும் அது எவ்வாறெல்லாம் இந்த பிரபஞ்சத்தை தூணாக தாங்கி கொண்டு இருக்கிறது என்பதை அறிவியல் அடுக்கி கொண்டேதான் போகிறது.தூண் என்ற வார்த்தை உதாரண வார்த்தைதான்.ஆனால் ஈர்ப்பு விசை என்ற வார்த்தையை விட தூண் என்ற வார்த்தை பொருந்தி போகிறதா என்பதைத்தான் பார்க்க வேண்டும்.இதை எல்லாம் தெரிந்துதான் ஈர்ப்பு விசைக்கு தூண் என்ற அடை மொழி சரிதானா என்ற ரீதியில் உங்கள் கேள்வி அமைந்து இருக்கிறது.என்ன செய்ய? குரானை பொய்பிக்க,அறிவியலையும் பொய்பிப்பேன் என்று கூறுகிறீர்கள்.
    அடுத்து பூமி நிலை பொருளாக இருபதாக கூறுகிறீர்கள்.முதலில் வானம் என்று குரானில் குறிப்பிடபடும் சொல் அண்ட சராசரங்களையும் குறிக்கும் சொல்.அண்ட சராசரங்களையும் பார்க்க முடியாத தூண் தாங்கி நிற்கிறது என்றால் அதில் பூமி அடங்காதா?பூமியை நிலை பொருளாக வைத்து எல்லாம் உயர்த்த பட்டிருகின்றன என்ற உங்கள் கூற்றை நீங்களே மறுபரிசீலனை செய்து பாருங்கள்.
    அடுத்து “ஒரு வசனத்தில்,பார்க்க கூடிய தூண்களின்றி என்று வருகிறது,மற்றொரு வசனத்தில் தூண்களின்றி என்று மட்டும் வருகிறது.இது முரண்பாடு”எனபது போல் கூறி உள்ளீர்கள்.என்ன ஒரு ஆய்வு செங்கொடி அவர்களே! நான் ‘செங்கொடி சாபிட்டார் ‘ என்று ஒருவரிடம் கூறுகிறேன்.மற்றொருவரிடம் ‘செங்கொடி என்ன சாபிட்டார்’என்றும் சேர்த்து கூறுகிறேன்.இது முரண்பாடா அல்லது கூடுதல் தகவலா.குரான் பார்கின்ற தூண்கள் அன்றி என்று கூறிவிட்டு மற்றொரு வசனத்தில் பார்கின்ற தூன்களினால் என்று கூறினால் நீங்கள் குறிபிடுவது போன்ற முரண் பாடு வரும்.ஆனால் திருமறை குரானோ ஒரு வசனத்தில் தூண்களின்றி என்று கூறிவிட்டு மற்றொரு வசனத்தில் அதற்க்கு விளக்கமாக அது எப்படிப்பட்ட தூண்கள் என்பதையும் விளக்குகிறது.இதுதான் உங்கள் பார்வையில் அதி பயங்கர முரண்பாடா?குரானில் குறிபிட்டுள்ள அறிவியலை மறுக்க முடியாமல்,அதில் முரண் பாடை கற்பிக்க நீங்கள் முயன்றதன் விளைவு இவ்வளவு பெரிய அறியாமையில் கொண்டு வந்து விட்டு இருக்கிறது.
    நீங்கள் எழுதியது:அரிஸ்டார்க்கஸ் ,ஹிப்பார்க்கஸ் சூரியமையக் கோட்பாட்டை சொன்னதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். கொஞ்சம் அறிவியலையும் தெரிந்து கொள்ளுங்கள். சூரியமையக் கோட்பாட்டை கொண்டுவந்தது கோப்பர்நிகஸ். மேற்குறிப்பிட்ட இருவர் கோள்களின் தூரங்களை அளக்க முயன்றவர்கள். எல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றன, குறிப்பிட்ட காலம் என்றெல்லாம் குறிப்பிடப்படுவது மறுமை காலம் குறித்தான ஆன்மீகம் தானேயன்றி அறிவியலல்ல.

    பதில்:சூரியன் பூமியை சுற்றி வருகிறது என்ற புவி மைய கோட்பாட்டை அரிஸ்டாட்டில் கூறினார்.இது உண்மை என்று சில காலம் கருத பட்டு வந்தது.அதன் பின்பு அறிச்டாற்சாஸ் அதை தத்துவ ரீதியாக மறுத்தார்.சூரிய மைய கோட்பாடுதான் மெய் என்றார்.கோபர் நிக்கஸ் சூரிய மைய கோட்பாட்டை மெயபடுத்தி கோள்களின் ஓட்டத்தையும் மெய்படுதினார்.அதனால் பல துன்பங்களுக்கும் ஆளானார்.அதைதான் நான் பின்னூடத்திலே மறுத்தேன்.
    பின்னர் குறிப்பிட்ட காலம் வரை செல்லும் என்பதை ஆன்மிகம் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்.இன்றைய அறிவியல், உலக அழிவை பற்றி கூறும்போது இந்த வார்த்தையை கூறி இருக்கிறதா,இல்லையா.கொஞ்சம் update ஆக இருபது நல்லது.

    நீங்கள் எழுதியது:குரானில் அறிவியல் இருக்கிறது என்று காண்பிப்பதற்குத்தான் அறியாமைக்காலம் எனும் சொல் பயன்படுகிறது. அந்தக்கால அரபிகள் மொழியியலில் சிறந்து விளங்கியதாக குரானே குறிப்பிடுகிறது. யாத்ரிப் நகரின் விவசாயமுறை முகம்மது அறிந்திருந்த விவசாயமுறையை விட சிறந்தது என்று ஒரு ஹதீஸ் குறிப்பிடுகிறது. உலகின் கடல் வணிகத்தின் பெரும்பகுதியை அரபிகள் தங்கள் பிடிக்குள் வைத்திருந்தனர். வானியலில் சிறப்பை அரபிகள் அடைந்திருந்தனர். யேமனில் சிறப்பான அரச நிர்வாகம் செயல்பட்டுக்கொண்டிருந்தது. இவ்வளவு சிறப்புகளும் அறியாமைக் காலத்திற்குள் அடங்குமா? இன்றும் கூட இந்தியாவில் பெண்குழந்தைகள் கொல்லப்படுகின்றனர், இதைக் கொண்டு இந்தியாவை அறியாமைக்காலம் எனக் கொள்ளலாமா?

    நம் பதில்:உண்மைதான்.இந்தியாவில் பெண் குழந்தைகள் கொல்ல படுகிறார்கள் என்பதற்காக இந்தியாவை அறியாமை காலம் என்றுகொள்ள முடியாது.நாம் அந்த காலத்தில் மூட நம்பிக்கைகள் இருந்தன என்ற காரணத்திற்க்காக மட்டும் அந்த காலத்தை அறியாமை காலம் என்று குறிப்பிடுவதில்லை.அந்த மூட நம்பிக்கைகளில் மக்களுக்கு இருந்த வெறித்தனமான ஈர்ப்பு அதை தாண்டிய விஷயங்களுக்கு இடம் கொடுக்க வில்லை என்பதே அந்த காலத்தை அறியாமை காலம் என்று கூறுவதன் பொருளாகும்.அதுபோல் நீங்கள் குறிப்பிடும் கடல் வாணிகத்தில் அரபிகள் சிறந்து விளங்கியது,யத்ரீப் நகரின் விவசாயமுறை,வானியலின் சிறப்பை அரபிகள் அறிந்து இருந்தது,ஏமனில் சிறப்பான அரசு நிர்வாகம், இவை எல்லாம் இஸ்லாம் வளந்த பிறகு அவர்களின் சிந்தனையில் ஏற்பட்ட வளர்ச்சி.அது போல் நபிகள் நாயகம் காலத்தில் அவர்களுக்கு இருந்த அறிவும், அவர்கள் அறிந்து வைத்திருந்தவற்றை தங்கள் பிழைப்புக்காக அவர்கள் செய்தார்களே தவிர அதுவெல்லாம் அறிவியல் புரட்சி ஒன்றும் இல்லை.
    இப்போது நம் கேள்வி என்ன என்றால், புவி ஈர்ப்பு விசை என்ற அறிவியலையும்,நீங்கள் அரபுகள் செய்ததாக கூறிய அறிவியலையும் எந்த அடிபடையில் இணைக்க போகிறீர்கள்?மலையையும்,மடுவையும் இணைக்கும் திட்டமா?பதில் கூறுங்கள்.

    நீங்கள் எழுதியது:\\இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்று அறிவியல் நிரூபித்துவிட்ட பிறகு// ஒரு விஷயத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும்போது நகைச்சுவையை கலப்பது அதன் வீரியத்தை குலைத்துவிடும். அறிக.

    நம் பதில்:நீங்கள் கேட்ட கேள்வி என்ன?அதற்க்கு நான் கொடுத்த பதில் என்ன? என்பதை பற்றி எல்லாம் கவலை படாமல் உங்களுக்கு அந்த நிமிடத்தில் என்ன தோன்றுகிறதோ அதை எழுதுவது உங்கள் வழக்கமாக ஆகி விட்டது.நான் எதற்காக அப்படி ஒரு பதிலை கொடுத்தேன்?இதோ உங்கள் பின்னூட்டம்,
    \\மெய்யாகவே இதுபோன்ற வசனங்கள் அறிவியலை கொண்டிருக்கிறதா என்றால் இல்லை என்பது தான் உண்மை. எல்லாம் அல்லாவால் படைக்கப்பட்டவை என்பதுதான் அல்லா குறித்த வல்லமை, அதிகாரம், இஸ்லாத்தின் அடிப்படை. நியாயத்தீர்ப்பு நாளில் எல்லாவற்றையும் அழித்து மனிதர்களை உயிரோடு எழுப்புதல் எனும் மதக்கற்பனையைத்தான் ‘குறிப்பிட்ட காலக்கெடுவரை சென்று கொண்டிருக்கும்’ என்பனபோன்ற வாக்கியங்கள் சொல்கின்றனவேயன்றி, இங்கு அறிவியலுக்கு ஒரு இடமும் இல்லை.\\.
    இதுதான் உங்கள் பின்னூட்டம். நீங்கள் வதம்,பிரதிவாதங்கள் முடியும்முன்பே உங்கள் முடிவை கூறி திணித்து இருந்தீர்கள்.எனவே நானும் என் முடிவை திணிக்க வேண்டி வந்தது.இப்போது கூறுங்கள் நகைசுவைதிருப்பது நானா?நீங்களா?

    நீங்கள் எழுதியது:ஒரு ஹதீஸ் மெய்யானதா, இட்டுக்கட்டப்பட்டதா என்பதை தீர்மானிக்க ஹதீஸ் ஆசிரியர்கள் சில விதிமுறைகளை வகுத்துள்ளனர். அதில் உள்ளீடு அடங்காது என்பதை அறியவும். எதுவெல்லாம் காலத்தால் கழிக்கப்படுகிறதோ அதையெல்லாம் விலக்கப்பட்டதாக அறிவித்துவிட்டால் பிரச்சனை தோன்றாதல்லவா? ஹதீஸை பொருத்தவரை அறிவிப்பாளர் வரிசை, நம்பகத்தன்மை போன்றவைகள் தான் விதிகளே தவிர அந்த ஹதீஸில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதல்ல. எந்த அறிஞர்கள்? எப்போது? எந்த அடிப்படையில்? அந்த ஹதீஸை நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவித்தார்கள் என்று கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன் நானும் தெரிந்து கொள்கிறேன்.

    நம் பதில்:ஏன் அவசர படுகிறீர்கள்?ஹதீஸை பற்றி விவாதம் வரும்போது அதை பற்றி நிச்சயம் பேசலாம். விவாதிக்கலாம்.அதற்குள் நீங்களாக’எதுவெல்லாம் காலத்தால் கழிக்கப்படுகிறதோ அதையெல்லாம் விலக்கப்பட்டதாக அறிவித்துவிட்டால் பிரச்சனை தோன்றாதல்லவா?’என்று முடிவெடுத்து விட்டால் அது நேர்மையாகுமா?குரானுக்கு முரண்படும் ஹதீஸ்களை ஏற்பதா?வேண்டாமா?என்பது விவாதிக்க வேண்டும் என்றால் முதலில் குரானை பற்றிய விவாதம் முடிய வேண்டும்.எனவே அவசரபட வேண்டாம்.அந்த ஹதீஸை நிறுத்தி வைக்க பட்டதை அறிவித்தது யார் என்று கூறினால் அதை ஏற்று கொள்வீர்களா?ஏன் இந்த பிதற்றல்கள்.சரி,கூறுகிறேன் ஆலிம்கள் கூடி குரானுக்கு இது முரண்படுவதால் இதை நிறுத்திவைக்க பட்டது என்று அறிவித்து உள்ளார்கள்.

  12. முஹம்மதின் தோழர் அபூதர் கூறிய ஹதீஸ் என் 3199. நிறுத்திவைக்கப்பட்டது என்று கூறுவது பொய்யானது. நான் விசாரித்த வகையில் அந்த ஹதீஸ் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறியமுடியவில்லை. மேலும் இந்த ஹதீஸை கூறிய அபூதர் என்பவர் குரான் தொகுக்கப்பட உதவியர்களில் முக்கியமானவர் ஆவார். இவரின் மீதோ அல்லது இவ் ஹதீஸின் நம்பகத்தன்மை மீதோ கேள்வி எழுப்பப்பட்டால் இவர் கூறிய குரான் வசனங்களின் மீதும் அவ்வாறு கேள்வி எழுப்பவேண்டும்.

    மேலும் இந்த ஹதீஸிற்கு ஆதாரமாக துல்கர்னைன் பற்றிய குரான் வசனங்களையும் சேர்த்துக்கொள்ளலாம். அதில் , ”சூரியன் மறையிமிடத்தை அவர் அடைந்தபோது” என்றும் ”சூரியன் உதயமாகும் இடத்தை அவர் அடைந்தபோது” என்றும் வருகின்றன. பூமி உருண்டை எனும்போது சூரியன் மறையுமிடத்திற்கோ அல்லது உதிக்குமிடத்திற்கோ யாரும் போகமுடியாது. ஏனென்றால் சூரியன் உலகில் எங்கும் மறையவுமில்லை,உதிக்கவுமில்லை.

    ”அது சுருட்டப்படும்போது”, “சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச்சென்று கொண்டிருக்கிறது”, பூமியை விரித்திருக்கிறேன்”, மலைகளை முளைகளாக நட்டியிருக்கின்றேன்”, பூமியின் ஓரங்கள் குறைக்கப்படும்” போன்ற வசன வாக்கியங்கள் பூமி தட்டை என்பதையே குறிக்கின்றன.

  13. இங்கு துல்கர்னைன் வசனம் பற்றி பீஜே விட்ட பீலாவையும் கூறவேண்டும்.

    ”அதாவது, இவ்வசனத்தில் வரும் “பிறகு ஒரு வழியில் சென்றார்” என்பதை “மேலும் அவ்வழியிலேயே சென்றார்” என்பதாக புரட்டி, இவ்வாறு ஒரே திசையில் சென்ற அவர் சூரியன் உதிப்பதையும் மறைவதையும் கண்டார் என்கிறார். அதாவது, பூமியின் அரைவட்டம் வரை கிழக்குத் திசை நோக்கி சென்ற அவரின் பயணம் மற்றுமொரு அரைவட்டத்திற்கு பயணிக்கும்போது மேற்கு நோக்கியதாக மாறிவிடும். எனவே அவர் சூரியன் உதிப்பதையும், மறைவதையும் காணலாம். இதன் மூலம் பூமி உருண்டை என்பதையே குரான் விளக்குகிறது. இது போன்ற அறிவியல் அறிவெல்லாம் உம்மி நபிக்கு கிடையாது என்பதினால் இந்த குரான் கடவுளிடமிருந்துதான் வந்தது என்பது தெள்ளத்தெளிவாகிறது என்று விலாவாரியாக வெலக்குகிறார்.”

    பூமியில் சூரியன் உதிக்கும் திசையை வைத்தே கிழக்கு என்றும் சூரியன் மறையும் திசையை வைத்தே மேற்கு என்றும் கூறுகிறோம். உதாரணமாக இந்தியாவிற்கு மேற்கு அமெரிக்காவிற்கு கிழக்காக இருக்கும்
    பூமியில் ஏதேனும் ஒரு இடத்திலிருந்து ஏதேனும் ஒரு திசை நோக்கி செல்வோமானால், உதாரணமாக கிழக்கு நோக்கியே செல்வோமானால் சூரியன் உதிப்பதை மட்டுமே காணமுடியும், மேற்கு நோக்கியே செல்வோமானால் சூரியன் மறைவதை மட்டுமே காணமுடியும்.

    அவருதான் உம்மிநபி பாவம் அவருக்கு ஒன்னும் தெரியாது தப்பா இருந்தால் பிரச்சினையில்லை அல்லா மேல பாரத்த போட்டுறலாம். பீஜேவும் ஒருவேளை உம்மியோ! இல்லியே! நம்ம மேலூர்காரரு,பள்ளபட்டிகாரரு,கீழக்கரைகாரரு,பாண்டிச்சேரிகாரரு,கடையநல்லூர்காரரு…காரர்களெல்லாம் இந்த தொண்டிக்காரருட்ட வாதம் செய்ய வா..வா..ன்னுல கூப்பிடறாங்க! பீஜேவின் இவ்விளக்கத்தை இந்த ஊர்க்காரர்களெல்லாம் மூக்கு மேல் விரலை வச்சு ஒஹோன்னு புகழ்ந்தா அவரு அறிவியல் அறிவாலிதான்!

  14. Intha irandu variyil avar yirppu visayai patri kuripidavillai. antha kalathil vanam en idinthu vizhavillai enru yaravathu kettu tholaithirupargal atharkku parvaiyil theriyatha thunn vanathai thangai pidithirrukkum enru solliyiruppar. atharkku ivalavu periya ariviyal vilakkam thevai illai. Manithargalal miga sirantha allathu nutpamana vizhayangalai araynthu atharkana vithikalaiyum, avatrirgana formulavaiyum tharum pozhuthu, kadavulin thutharkalakku athai arulalathu yeno. than muulaiyai adagu vaithu verum puthaga puzhuvaga allathu veramane athai kadipidipathal adaiyum payan ennavo? manithanin aaravathu arivirkku velai koduthal matham sampanthapatta poli muulai salavai seiyum puthagakangalin mugathirai kizhiyum. Onrum illatha vasanathai ippothu ulla ariviyaling uthaviyal thukki pidipathu thannudaiya arivai adutha nilaikku eduthhu sellamal irrukkum somberithanathai kurikirathu.

  15. “நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி”, இதற்கு பொருள் “பார்க்கின்ற தூண்கள் அல்லாமல்” , “பார்க்க முடியாத தூண்கள் அல்ல”

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்