பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 14

பாலும் தேனும் உலகின் அனைத்து இலக்கியங்களிலும் பழமையான நூல்களிலும் சிறந்த உணவுப் பொருட்களாகவும் மருத்துவ குணம் கொண்டவைகளாகவும் சிறப்பிக்கப்பட்டுள்ளன. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மம்மி எகிப்தில் கண்டெடுக்கப்பட்டபோது அதனுடன் தேனும் இருந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பாலும் தேனும் எப்படி உற்பத்தி செய்யப்படுகின்றன? அதாவது கால்நடைகள் அல்லது மாடு தன்னுடைய உடலிலிருந்து பாலை எப்படி பிரித்தெடுக்கிறது? தேனீக்கள் பூக்களில் சேகரிக்கும் திரவத்தை எப்படி தேனாக்குகிறது? என்பது குறித்து பழைய இலக்கிய நூல்களில் இருப்பதாக தெரியவில்லை.(தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்) செயற்கையாக பால் உற்பத்தி, தேன் உற்பத்தி என்று உணவுப்பண்டங்களை வர்த்தகப் பண்டமாக்கும் தேவை அப்போது இருந்திருக்கவில்லை.

தெரியாத விஷயங்களான இவைகளை அல்லா தன்னுடைய வேதத்தில் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருப்பதால், அதாவது அவற்றின் உற்பத்தி குறித்த அறிவியல் வளராத காலத்திலேயே சொல்லியிருப்பதால் இது இறைவனின் வேதம் தான் என்பதற்கு அத்தாட்சியாக உள்ளது. இது மதவாதிகளின் கோணம். பாலும் தேனும் பற்றி என்ன சொல்லியிருக்கிறது குரானில்?

……அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக புகட்டுகிறோம். குரான் 16:66

……அதன் வயிற்றிலிருந்து பலவிதமான நிறங்களையுடைய ஒருவித பானம் வெளியாகிறது…….. குரான் 16:69

வயிற்றிலுள்ள சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து என்பது பால் உற்பத்தியாகும் இடமாக குரான் குறிப்பிடுவது. பால் உற்பத்தியாவது மார்பகங்களிளிருந்து அதாவது மடுக்களிளிருந்து தானே என்பவர்கள் மதவாதிகள் எடுக்கும் அறிவியல் வகுப்புகளையும் கவனிக்கவேண்டும். முன் காலத்தில் இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று மக்கள் நம்பி வந்தனர். உண்ணப்படும் உணவானது கூழாக அரைக்கப்பட்டு அதிலுள்ள சத்துக்கள் குடல்களினால் உறிஞ்சப்பட்டு அது தான் பாலாகவும் இரத்தமாகவும் இன்ன பிற பொருட்களாகவும் மாறுகிறது. அதாவது அரைக்கப்பட்ட உணவுக்கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட நிலையிலிருந்து தான் பால் உற்பத்தியாகிறது. இதுதான் சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து எனும் குரான் வசனத்திற்கு மதவாதிகளின் விளக்கம். இவர்கள் சொல்லும் இந்த அறிவியல் ஓரளவுக்கு சரியானது தான். ஆனால் இது பாலுக்கு மட்டும் அல்ல, உடலின் அனைத்து ஆற்றலும் இந்த பரிமாற்றத்தின் மூலம் தான் கிடைக்கிறது. நடப்பதற்கான சக்தி எங்கிருந்து கிடைக்கிறது? சாணத்திற்கும் இரத்தத்திற்கும்  இடையிலிருந்து கிடைக்கிறது. கறிக்கோழியின் இறைச்சி எப்படிக்கிடைக்கிறது? சாணத்திற்கும் இரத்தத்திற்கும்  இடையிலிருந்து கிடைக்கிறது. சரிதான், உயிரினங்கள் அனைத்திற்கும் அது இயங்குவதற்கு தேவையான அனைத்து ஆற்றல்களையும் அது உண்ணும் உணவிலிருந்து தான் பெற்றுக்கொள்கின்றன. அந்த உணவு வயிற்றில் அரைத்து கூழாக்கப்பட்டு குடல்களினால் சத்துக்கள் உறிஞ்சப்பட்டு தேவைப்படும் ஆற்றல்களாக மாற்றப்படுகின்றன. எஞ்சிய சக்கைகள் கழிவுகளாக வெளித்தள்ளப்படுகின்றன. இது பொதுவான அறிவியல். ஆனால் பால் எப்படி உற்பத்தியாவதாக அறிவியல் கூறுகிறது?

பிரசவ நேரம் நெருங்கியதும் புரோலாக்டின் எனும் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கிறது, இந்த புரோலாக்டின் மடுக்களை அடைந்ததும், ஆரஞ்சு சுளைகளை பிரித்துப்பார்த்தால் அதில் நெருக்கமாக இருக்கும் மொட்டுக்களைப்போல் மடுக்களில் இருக்கும் அல்வியோல் எனும் சுரப்பிகள் ஒரு வித திரவத்தை சுரக்கின்றன. இது தான் காம்புகள் வழியாக வெளியேற்றப்பட்டு பால் என அழைக்கப்படுகிறது. சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இதில் நேரடியாக தொடர்பு ஒன்றுமில்லை. காம்புகளிளிருந்து கரக்கப்படுவது தான் பால் என்பது அனைவரும் அறிந்தது தான், முகம்மதுவும் கூட. அதை வித்தியாசமாக சொல்ல நினைத்த முகம்மது, உடலில் எங்கிருந்தோ உற்பத்தியாகி வருகிறது எனும் நினைப்பில் சாணத்திற்கும் இரத்தத்திற்கும் இடையிலிருந்து என்று பொதுவாக சொல்லி வைத்திருக்கலாம். அறிவியல் பூர்வமாக சொல்லவேண்டும் என்ற தேவை அன்று அவருக்கில்லை. ஆனால் இன்று இருக்கிறது.

தேனீயின் வயிற்றிலிருந்து தேன் வெளிப்படுகிறது. அந்தக்காலத்தில் தேனீ மலர்களிலுள்ள தேனை வாயினால் உறிஞ்சி கொண்டுவந்து அடைகளில் சேர்த்து வைக்கிறது என்று நம்பிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வந்த குரான் வசனமோ வயிற்றிலிருந்து எனும் சொல் மூலம் நீங்கள் நம்பிக்கொண்டிருப்பது உண்மையல்ல என்று அறிவியலை பேசுகிறது. இக்கால அறிவியலும் அதையே நிரூபித்திருக்கிறது என்கிறார்கள் மதவாதிகள். ஆனால் முகம்மதின் குரான் அறிவியலை பேசவும் இல்லை, குரான் சொல்வது போல அறிவியல் சொல்லவும் இல்லை என்பதே உண்மை.

குரான் தேனீயின் வயிற்றிலிருந்து தேன் வெளிப்படுவதாக கூறுகிறது. வயிற்றிலிருந்து வெளிப்படுவதாக இருந்தால் உணவாக உண்டது செரித்து கழிவாக வெளிப்படுவதாக இருக்கும். தேனீ ஏன் தேனை சேமிக்கவேண்டும் எனும் ஆதாரக் கேள்வியோடு இது முரண்படுகிறது. வெயிர்காலங்களில் சுறுசுறுப்பாக செயல்படும் தேனீக்கள், குளிர்காலங்களில் சேமித்த தேனையே உணவாகக் கொள்கிறது. கூட்டிலிருக்கும் ராணித்தேனீ, ஆண் தேனீக்களின் உணவும் தேன் தான், அதாவது வேலைக்காரத் தேனீக்கள் மட்டும்தான் தேனை சேகரிக்கின்றன. ஏனைய தேனீக்கள் அதை உண்கின்றன. என்றால் தேனீக்கள் தங்களின் கழிவுகளையே மீண்டும் உண்கின்றனவா? அவ்வாறல்ல, தேனீக்கள் உணவாக தேனை உண்ணும் போது வயிற்றுக்கும், சேகரிக்கும் போது வேறொரு பையிக்கும் அனுப்புகின்றன. வேலைக்காரத் தேனீயின் உடலில் தேனை செரிப்பதற்கான வயிறும் தேனை சேகரிப்பதற்கான பையும் தனித்தனியே அமைந்திருக்கின்றன. சேகரிப்பதற்கான பை ராணித்தேனீயின் உடலிலோ, ஆண் தேனீயின் உடலிலோ இல்லை. மலர்களிலிருந்து சேகரிக்கப்படும் அமுதம் (நெக்டர்) அந்தப்பையில் பல வேதியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது, இதையே அடைகளில் சேமிக்கிறது. இந்த திரவத்தில் அடைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது, இதன் பெருமளவு நீர்மம் குறைக்கப்பட்டு இறுகிய பின்பே தேனாகிறது. எனவே குரான் வயிற்றிலிருந்து எனக் குறிப்பிடுவது தவறான கூற்றாகும்.

இந்த வசனத்தை முழுமையாக கவனித்தால் வேறொரு உண்மையும் தெரியவரும். “பின் நீ எல்லாவிதமான கனிகளிருந்தும் உணவருந்தி உன் இறைவன் எளிதான வழிகளில் ஒடுங்கிச்செல். அதன் வயிற்றிலிருந்து பலவிதமான நிறங்களையுடைய ஒருவித பானம் வெளியாகிறது. அதில் மனிதர்களுக்கு சிகிச்சை உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது” இது தான் முழுமையான வசனம். இதில் கனிகளிருந்து உணவருந்தி என்று வருகிறது. எந்த தேனீ கனிகளை உணவாக உட்கொள்கிறது? அதிலும் எல்லாவிதமான கனிகளிருந்தும் என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இடத்தில் அரபியில் தமர் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமர் என்றால் பேரீத்தம் பழத்தை குறிக்கும் சொல்லாகும். ஆக முகம்மது சொல்வது தேனீ பேரீத்தம் பழத்தை உணவாக உட்கொள்கிறது என்று. குரான் இறை வேதம் என அடம் பிடிப்பவர்கள் பதில் சொல்லலாம்.

இந்த வசனத்தில் இருக்கும் இன்னொரு விஷயம் தேனீக்களின் நடனம். எளிதான வழிகளில் ஒடுங்கிச்செல் எனும் சொற்களை பிடித்துக்கொண்டு அதற்கு கொடுக்கும் அறிவியல் விளக்கம்தான் தேனீக்களின் நடனம். தேனீக்கள் தேன் கிடைக்குமிடம் பக்கத்தில் இருக்கிறதா தூரமாக இருக்கிறதா என்பதை பிற தேனீக்களுக்கு அறிவிக்க இரண்டு விதமாக பறந்து காண்பிக்கிறது. அருகில் என்றால் வட்டவடிவமாகவும் தூரமாக என்றால் வேறு வடிவிலும் பறக்கிறது. இதை தேனீக்களின் நடனம் என அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த நடனத்தை ஒடுங்கிச்செல் எனும் சொல்லில் ஒட்டவைத்து அறிவியலாக்கி களத்தில் இறக்கிவிட்டார்கள்.

இது இறை வசனம் என்றால், இறைவன் அனைத்தும் அறிந்தவன் என்றால் இப்படி தப்புத்தப்பாக அறிவியல் சொல்லித்தருவது ஏன்? இல்லை முகம்மது தனக்கு தெரிந்தவற்றை வைத்து இப்படி சொல்லிவிட்டு போய்விட்டார் என்றால் எப்போது திருத்தப்போகிறீர்கள் அல்லது திருந்தப் போகிறீர்கள்?

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

38 thoughts on “பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

  1. இவையெல்லாம் நாளைய அறிவியல் உன்மையென கண்டுணரும்… என்று யாராவது வந்து சொல்லுவார் பாருங்களேன்.

  2. சொர்க்கத்தில பேரீட்சம்பழம் மற்றும் சில அரேபிய பழம் மட்டும் கிடைக்கிற ரகசியம் ஏனென்று யாராவது விளக்கினால் நல்லது.

  3. குரானில் தேனீயைப் பற்றிச் சொல்லியிருக்கென்று இந்த இஸ்லாமியர்கள் கொடுக்கிற பில்டப் இருக்கே, சொல்லிமாளாது. என்னவோ எல்லா வியாதிக்கும் தேன் குடிச்சா சரியாப்போய்விடுவதுபோல…என்ன ஒரு சிந்தனையாளர்கள்!

  4. என்னுடைய உறவினர் ஒருவரின் மகள் சளித்தொல்லையினால் அவதிப்பட்டு வந்தார். எனது உறவினரும், குரானிலும், நேர்வழியாளர் முஹம்மதும் தேனீயைப்பற்றி அவ்வளவு சொல்லிய்ருக்கின்றார்களே என்று இவரும் தேனைக் குழைத்து குரானிலுள்ள அனைத்து சூராக்களையும் மாற்றி மாற்றி ஓதி ஊதி ஊதி கொடுத்துபார்த்தார் ..மஹூம்.என்ன பிரயோசனம் சளி நுரையீரலில் செட்டானதுதான் கண்ட பலன்.

  5. செங்கொடி,

    முதல்ல ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். திருக்குர் ஆன் சயின்ஸ் புத்தகமல்ல. மனிதகுல வாழ்வை சிறப்பிக்க வந்த வேதம். அதில் சில அறிவியல் கூறுகள் புள்ளிவைத்து காட்டப்பட்டிருக்கும் அவ்வளவு தான். அதைக்கொண்டு நாம் அவனின் மாட்சிமையை புரிந்துகொள்வதற்காகத்தான் அதுவும். இந்த அம்சத்தை விட்டுவிட்டு விஞ்ஞன கலைச்சொற்களை விளக்கங்களை எல்லாம் எதிர்பார்ப்பது உங்களின் அறியாமையை தான் காட்டுகிறது.

  6. ஐயா அப்துல் காதர்,

    1400 வருஷத்துக்கு முன்னாலேயே அறிவியல புட்டு புட்டு வச்சிருக்குன்னு புருடா உடுவீங்க. அதுக்கு விளக்கம் கொடுத்தா, “சயின்ஸ் புத்தகமல்ல” ன்னு பல்டி அடிப்பிங்க. நல்ல கதையா கீதே.

  7. ஐயா அப்துல் காதர்,
    முதலில் pj வையும் அவரது சீடர்களையும் முதலில் மூடச்சொல்லுங்கள். பிறகு ”மனிதகுல வாழ்வை சிறப்பிக்க வந்த வேதம்” குர்ஆனா என்பதனைப் பற்றி விவாதிக்கலாம்.

  8. அறிவியல் கட்டுரைகள் எழுதுவதற்கு முன்னர் அறிவியல் கூறுகளின் வித்தியாசங்களை அறிந்திருக்க வேண்டும் குறித்த ஒரு விடையம் தொடர்பாக அறிவியல் கண்டு பிடிப்பு அடுக்குகள் என்று ஒன்று உண்டு -fact versions- அடுக்குகள் ஒன்றை ஒன்று மறுப்பதும் ஏற்பதுமான முனைப்பை கொண்டவை இந்த முறைசார் அறிவியல் பற்றிய போதுமான அறிவு இல்லாமல் இரண்டு படங்களை கோப்பி அன்ட் பாஸ்ட் copy and past செய்து தமிழில் சில வசனங்களை எழுதுவதால் அறிவியல் கட்டுரையாகி விடாது என்பதை பணிவாக கூறுவதுடன் அறிவியல் துறைசார் இஸ்லாமிய அமைப்புகளை தொடர்பு கொண்டு-http://www.harunyahya.com/- உங்களின் அறிவை மேலுவும் அறிவியல் -படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள் – நன்றி

  9. நண்பர் S.M.Mazahim,

    பாலும் தேனும் குறித்து எழுதப்பட்டுள்ள இந்த கட்டுரையின் அறிவியல் கூறுகளை மறுக்கும் “fact versions” களை நீங்கள் இங்கு எடுத்து வைக்கலாமே. அறிவியல் துறைசார் இஸ்லாமிய அமைப்புளின் விளக்கங்களை தான் நான் மறுத்து எழுதிவருகிறேன். மீண்டும் அதுபோன்ற அமைப்புகளிடம் என்ன கேட்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் நீங்கள் விளக்கிச் சொல்லலாம். ஹாருன் யஹ்யா குறித்து முன்பே ஒரு கட்டுரை எழுதியுள்ளேன், படித்துப்பார்த்துவிட்டு பின்னூட்டமிடுங்கள், உங்களுக்கு வேண்டிய விளக்கங்கள் தருகிறேன்.

    https://senkodi.wordpress.com/2009/01/09/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/

    தோழமையுடன்
    செங்கொடி.

  10. நிறைய பாலூட்டி விலங்குகளை போல மனிதனும் ஒருவன், அவனுக்கு மட்டும் ஏன் வேதப்புத்தகம்! மற்ற விலங்குகளுக்கு வேத புத்தகம் எப்போது தருவார் கடவுள்! அவர்களுக்கு தாடி வைத்த தூதர் வருவாரா!?

  11. செங்கொடி,
    அப்துல் காதிர்S.M.Mazahim மாதிரி சிந்திக்க கற்றுக்கொள்ளுங்கள்.

    உலகத்தில் இப்போது கண்டுபிடித்தாலும் அது ஏற்கெனவே முகம்மது குரானில் சொல்லிவிட்டார் என்று எடுத்து விடவேண்டும்.
    அதில் அறிவியல் குறைகள் இருப்பதாக யாரேனும் எழுதினால், குரான் அறிவியல் புத்தகம் அல்ல வாழ்வியல் வழிகாட்டி என்று அள்ள வேண்டும்.

    குரானில் அறிவியல் இருக்கிறது என்று நினைத்தால் அது உங்களின் அறிவீனம் என்று அப்துல் காதிர் சரியாகத்தான் சொல்கிறார்

  12. //அறிவியல் கட்டுரைகள் எழுதுவதற்கு முன்னர் அறிவியல் கூறுகளின் வித்தியாசங்களை அறிந்திருக்க வேண்டும் குறித்த ஒரு விடையம் தொடர்பாக அறிவியல் கண்டு பிடிப்பு அடுக்குகள் என்று ஒன்று உண்டு -fact versions- அடுக்குகள் ஒன்றை ஒன்று மறுப்பதும் ஏற்பதுமான முனைப்பை கொண்டவை இந்த முறைசார் அறிவியல் பற்றிய போதுமான அறிவு இல்லாமல் இரண்டு படங்களை கோப்பி அன்ட் பாஸ்ட் copy and past செய்து தமிழில் சில வசனங்களை எழுதுவதால் அறிவியல் கட்டுரையாகி விடாது என்பதை பணிவாக கூறுவதுடன் அறிவியல் துறைசார் இஸ்லாமிய அமைப்புகளை தொடர்பு கொண்டு-http://www.harunyahya.com/- உங்களின் அறிவை மேலுவும் அறிவியல் -படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள் //

    ஐயா S.M.Mazahiம், முகமது என்ன phD பண்ணிட்டா குரான் எழுதினார். இந்தக் கேள்வியை அங்க கேளுங்க.

  13. அன்பின் செங்கொடி,
    //…அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக புகட்டுகிறோம். குரான் 16:66//

    இது ஒரு சுவாரஸியமான குரான் வசனம். இதிலிருந்தே இது முகம்மதின் கையாக்கம் என்பதை தெரிந்துகொண்டுவிடலாம்.

    பால் இரத்துக்கோ அல்லது மலத்துக்கோ சம்பந்தமில்லாத ஒன்று என்று இப்போது தெரிகிறது. ஆனால்,. ஏன் இந்த வரி குரானில் இருக்கிறது?

    காரணம், பால் எப்படிப்பட்ட பொருள் என்று அந்த காலத்தில் அந்த கால மருத்துவர்களிடம் நிலவிவந்த ஒரு விவாதம்

    ஒரு சாரார் அது கழிவுப்பொருள் என்று கருதினார்கள். மற்றொரு சாரார் அதனை இரத்ததிலிருந்து உருவாவது என்று கருதினார்கள்.

    உதாரணமாக அரிஸ்டாட்டில் எழுதுகிறார்

    http://ebooks.adelaide.edu.au/a/aristotle/generation/book4.html

    That milk has the same nature as the secretion from which each animal is formed is plain, and has been stated previously. For the material which nourishes is the same as that from which Nature forms the animal in generation. Now this is the sanguineous liquid in the sanguinea, and milk is blood concocted (not corrupted; Empedocles either mistook the fact or made a bad metaphor when he composed the line: ‘On the tenth day of the eighth month the milk comes into being, a white pus’, for putrefaction and concoction are opposite things, and pus is a kind of putrefaction but milk is concocted).

    பாலை வெள்ளைநிற சீழ் என்று எழுதியதை அரிஸ்டாட்டில் மறுக்கிறார்.
    ஆகவே முகம்மதுவுக்கு சிக்கல். அது இரத்தமாக இருந்தால் என்ன செய்வது? அல்லது கழிவுப்பொருளாக இருந்தால் என்ன செய்வது? ஆகவே இரண்டுக்கும் இடையே என்று சொல்லி சமாளிக்கிறார்.
    இந்த வசனம் முகம்மதுவின் காலத்தில் விவாதிக்கப்பட்டதிலிருந்து ஒரு இஞ்ச் கூட மேலே நகரவில்லை. இங்கே நடப்பது முகம்மதுவின் சமாளிப்பு. அவ்வளவுதான்.
    பாலுக்கும் மலத்துக்கும் ஒரு சிறிதும் சம்பந்தமில்லை. பாலுக்கும் இரத்தத்துக்கும் ஒரு சிறிதும் சம்பந்தமில்லை. நம் உடலில் இருக்கும் பல்வேறு சுரப்பிகளில் அதுவும் ஒன்று. நம் வியர்வை சுரப்பிகள், தைராய்டு சுரப்பிகள், போல அதுவும் ஒன்று.
    ஆனால், இரத்தத்திலிருந்துதான் பால் வருகிறது என்ற நினைப்பினால், ரத்த சொந்தத்தையும் பால்குடி சொந்தத்தையும் குழப்பிக்கொண்ட ஒரு போக்கு இஸ்லாமில் இன்றும் உண்டு. அதுவும் அறியாமையே.

  14. தேனின் மருத்துவ குணமும் இப்படிப்பட்ட தவறான அறிவியலே. எல்லா பொருள்களிலும் மருத்துவ குணமும் உண்டு. அழிவுக்குணமும் உண்டு. (தமிழில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழியே உண்டு)
    http://en.wikipedia.org/wiki/Honey#Potential_health_hazards(தேனை குழந்தைகள் சாப்பிட்டால் இறந்துவிடலாம். அதில் பாட்டுலிஸம் என்ற கிருமி உண்டு)
    மருத்துவம் சம்பந்தப்பட்ட அனைத்தும் கேலன் Galen என்னும் கிரேக்க மருத்துவரின் படைப்புகளில் பார்க்கலாம். குரானில் இருக்கும் கர்ப்பம் என்பது blood clot போன்ற கருத்துக்கள் கேலனின் தவறான கருத்துக்களிலிருந்து பெறப்பட்டவை. 40ஆம் நாளுக்குப் பிறகுதான் ஆணா பெண்ணா என்று ஆகிறது என்பதும் கேலனின் தவறான கருத்துக்களால் வந்தவை. நமக்கு இப்போது கரு ஆன உடனேயே அது ஆணா பெண்ணா என்பது நிச்சயமாகிவிட்டது என்று தெரியும். ஆனால், முகம்மது தவறாக 40ம் நாளில்தான் ஆணா பெண்ணா என்பது முடிவு செய்யப்படுகிறது என்று கூறுகிறார்.

  15. அறிவியல் என்பது மாறிக்கொண்டே இருப்பது. இன்று ஒன்றைச் சொல்வார்கள் , நாளை அதனை மறுத்துவிட்டு வேறொன்றைச் சொல்வார்கள். அதனால் இவர்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ள முடியாது. குர்ஆனில் உள்ளதே உண்மையான அறிவியல் என்று கொஞ்சம்கூட இசுலாமியர்களை சிந்திக்கவிடாமல் அதன் தலைவர்கள் மயிரைப் பிளக்கும் விளக்கங்களை கூறி முட்டாளாக்குகின்றனர். தான் கண்டு, கேட்டு, படித்துணர்ந்தவற்றிலிருந்து ஒரு கோட்பாட்டினை உருவாக்குவது,அக்கோட்பாட்டினை ஆய்வு செய்வது, அதனடிப்படையில் ஒரு முடிவுக்கு வருவது, அதனை ஆய்வுக்கூடத்திற்கு வெளியே நடைமுறைப்படுத்துவது, அதில் ஏற்படும் நலன் மற்றும் பிழைகளை கண்டுணர்ந்து மேலும் ஆய்வுக்கு உட்படுத்தி செழுமைப்படுத்துவது என்ற திசைவழியைக்கொண்டது அறிவியல். இவற்றில் தீர்கமான முடிவு உடனே எட்டப்படலாம் அல்லது நீண்டகாலமாக தள்ளிக்கொண்டே செலல்லாம். அதுபோல் முடிவு தவறாகவும் போய்விடலாம்.. முடிவு எட்டப்படாதவைகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் தீர்க்கப்பட்ட கோட்பாடுகள் இலட்சக்கணக்காணவை. எடுத்துக்காட்டாக டைனமோ, மின்சாரம், மின்மாற்றிகள், விளக்குகள், மினமோட்டார்கள், மின்னணு, மின்ணனுப் பொருள்கள்……என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இவைகளெல்லாம் நாளை பொய்யாகிவிடுமா? பொய்யாகிவிடும் என்றுச் சொல்பவர்களை கிறுக்கர்கள் என்றுதான் சொல்லவேண்டும். Devoloping, improving, additional sourcing, போன்றவகைகளைக்கூட பழையவைகள் பொய்யாகிவிட்டது என்று இவர்கள் விவாதிப்பது இவர்களின் அறியாமையைக்காட்டவில்லை. குர்ஆனின். அறிவியலை உண்மைபடுத்தவேண்டும் என்ற வெறியைத்தான் வெளிப்படுத்துகின்றனர்.

  16. u r not strong. u r still fearful person. onlinepj.com has announced PAHIRANGA VIVAATHA ALAIPU . islathai patri thavaraaha kooruvoruku pahiranga vivaatha alaipu viduhirathu.

    muslim yaarum vivaadathuku alaikaavital dhaan vimarsanam seyyalam . but pahiranga vivaatha alaipu viduhiraangal. y u not debate face to face.

    MORAL: nee oru koalai. so only u write continously. neena indha web(??) site ku different name la comments kuduthitu iruka.

  17. “””””””””muslim yaarum vivaadathuku alaikaavital dhaan vimarsanam seyyalam . but pahiranga vivaatha alaipu viduhiraangal. y u not debate face to face.””””””””””””””””””

    அஸ்ஸலாமு அலைக்கும்,

    அன்பு சகோதரர் ஹஸன் அவர்களே தாங்கள் செங்கொடியின் தளத்தை பார்வையிடுவது இதுதான் முதன் முறை என்று நினைக்கிறேன்.

    செங்கொடி அவர்கள் விவாதத்தில் கலந்துகொள்வதாக ஒப்புகொண்டார்.அவர் ஒப்பு கொண்டு ஒன்றரை மாதம் முடிந்துவிட்டது.இன்னும் நாலரை மாதம் வரை பொறுக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
    விவாதம் எங்கு எப்போதென்பது இன்னும் சில நாட்களில் வெளியாகும்.
    முஸ்லிம்கள் விவாதத்துக்கு தயாராக இருந்தாலும் தயாராக இல்லாமல் போனாலும் எழுதுவது என்பது அவர்களுடைய உரிமை அதை தடுக்க நமக்கு உரிமையில்லை.

  18. i am sorry mr.senkodi.. ungalala evalavu doubt ketka mudiyuma kelunga.. ithu engalukum rmba usefulaa iruku quranai patri naangalum nalla sindhichi paarka usefulla iruku.. write more doubt.. once again sorry.. ithu ungal urimai. ennai sindhika vaithadharku mikka nandri.. iraivan ungal meethu saanthi samaathanamum polivanaha

  19. நண்பர் இஹ்சாஸின் முயற்சி பாராட்ட தக்கது . அவருடைய பதிவுகளை பார்க்கும் செங்கொடியை செம காமடி என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்று தான் தோன்றுகிறது. நண்பர் இஹ்சாஸ் மற்ற இஸ்லாமிய நண்பர்களை போல் அல்லாமல் தனி வலை தளத்தில் பதில் அளிப்பது மிகவும் நல்ல முயற்சி. காரணம் இந்த வலைதளத்தில் வாதம் புரிபவரும் நீதி பதியும் அவரே . அனைத்து நண்பர்களும் இந்த முறையை பின்பற்றிநாள் மிகவும் நல்லதாக இருக்கும்.

    அன்புடன்,
    மனித நேயன்

  20. //செங்கொடியை செம காமடி என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்று தான் தோன்றுகிறது. //

    இந்த ஹதிதை படிக்கவும்.

    தேனி கருவேல மரத்தில் அமர்ந்து (தேனை உறிஞ்சி)விட்டு வந்ததால் தேன் வாடை அடிக்குமா?

    அந்த தேனை அருந்திய முகமதுவின் மீது வாடை வருவதாக மனைவிகள் கூற முகமது அதை நம்பி விடுகிநார்.

    யார் செம காமெடியன் என்பதை படிக்கும் நண்பர்களின் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.
    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍_‍‍‍‍‍‍‍‍‍
    6972. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
    இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு இனிப்பு தேனும் விருப்பமானவையாக இருந்தன. நபி(ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையை முடித்ததும் தம் துணைவியரிடம் வந்து பகல்பொழுதைக் கழிப்பார்கள்; அவர்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். இவ்வாறு (ஒரு நாள்) ஹஃப்ஸா(ரலி) அவர்களிடம் சென்ற நபியவர்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக நேரம் இருந்துவிட்டார்கள். அது குறித்து நான் விசாரித்தேன். அப்போது ஹஃப்ஸாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் அவருக்கு (தாயிஃப் நகர சுத்த)த் தேன் உள்ள ஒரு தோல்பையை அன்பளிப்பாக வழங்கினாள் என்றும், அதிலிருந்து தயாரித்த பானத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸா புகட்டினார் என்றும் என்னிடம் கூறப்பட்டது. உடனே நான் ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இதை நிறுத்துவதற்காக இதோ ஒரு தந்திரம் செய்வோம்’ என்று கூறிக்கொண்டு, (நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா(ரலி) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறி, ‘நபி(ஸல்) அவர்கள் உங்களிடம் வரும்போது உங்களை நெருங்குவார்கள். அப்போது, இறைத்தூதர் அவர்களே! கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று கேளுங்கள். ‘இல்லை’ என்று நபியவர்கள் கூறுவார்கள். உடனே இது என்ன வாடை? என்று அவர்களிடம் கேளுங்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மிடமிருந்து (துர்) வாடை வீசுவதைக் கடுமையாகக் கருதுவார்கள். எனவே, ‘எனக்கு ஹஃப்ஸா தேன் பானம் புகட்டினார்’ என்று கூறுவார்கள். உடனே நீங்கள் ‘இதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேனை உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம். (எனவேதான் வாடை வருகிறது)’ என்று சொல்லுங்கள். நானும் இவ்வாறே சொல்வேன். ஸஃபிய்யாவே! நீங்களும் இவ்வாறே சொல்லுங்கள் என்று (மற்றொரு துணைவியாரான ஸஃபிய்யாவிடமும்) சொன்னேன்.
    நபி(ஸல்) அவர்கள் சவ்தா(ரலி) அவர்களிடம் சென்றபோது (நான் சொன்னபடி செய்துவிட்டு) சவ்தா (என்னிடம்) கூறினார்கள்: எவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனுமில்லையோ அத்தகைய (இறை)வன் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் என் வீட்டு வாசலில் இருந்தபோது உங்களுக்கு பயந்து நீங்கள் என்னிடம் சொன்னபடி நபியவர்களிடம் சொல்ல விரைந்தேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (என்னை) நெருங்கியதும் அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கருவேலம் பிசினைச் சாப்பிட்டீர்களா?’ என்று கேட்டேன். அவர்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். ‘அப்படியானால், (இது என்ன வாடை?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘ஹஃப்ஸா எனக்குத் தேன் பானம் புகட்டினார்’ என்றார்கள். நான், ‘அதன் தேனீக்கள் கருவேல மரத்தில் அமர்ந்து (தேன் உறிஞ்சி)விட்டு வந்திருக்கலாம் (எனவேதான் தேனில் வாடை ஏற்பட்டுவிட்டது போலும்)’ என்று சொன்னேன்.
    (தொடர்ந்து ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) என்னிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தபோது அதைப் போன்றே நானும் சொன்னேன். ஸஃபிய்யாவிடம் நபி(ஸல்) அவர்கள் சென்றபோது அவரும் அதைப் போன்றே தெரிவித்தார். பிறகு (மறுநாள்) நபி(ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவிடம் சென்றபோது நபியவர்களிடம் அவர், ‘இறைத்தூதர் அவர்களே! அருந்துவதற்கு தங்களுக்குச் சிறிது தேன் தரட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘அது எனக்குத் தேவையில்லை’ என்று கூறினார்கள்.
    (இது குறித்து) சவ்தா(ரலி) அவர்கள், ‘அல்லாஹ் தூயவன்! நபி(ஸல்) அவர்களை அதை அருந்தவிடாமல் நாம் தடுத்து விட்டோமே!’ என்று (வருத்தத்துடன்) கூறுவார்கள். நான் அவரிடம், ‘சும்மா இருங்கள்! (விஷயம் பரவிவிடப்போகிறது)’ என்று சொல்வேன்.26
    Volume :7 Book :90

  21. சங்கர் தூதுத்துவம் இல்லாத சமயங்களில் முகம்மது நபி[ஸல்] அவர்கள் ஒரு சாதாரண மனிதராகவே தோன்றுகிறார்.இப்படி சின்ன விசயங்களில் விபரம் இல்லாத அவரால் இன்றைய உலகையும் ஆட்சி செய்யும் பல்வேறு துறைகளுக்கும் தேவையான சட்டங்களையும் வழி காட்டுதல்களையும் கூற முடிந்தது? நிச்சயம் அவர் ஒரு இறைதூதராகவே இருக்கவேண்டும் என்பதற்கு இது ஒரு ஆதாரம் அல்லவா?

  22. Thambi senkodi,

    History will Move and no of Sengodi will come and disappear.But truth will remain

  23. செங்கொடிக்கு இந்த பதிவில் பதிலெழுதி, அல்லாஹ்வின் சான்றுகளை மெய்ப்பித்து அல்குரான் அல்லாஹ் எறக்கியதுதான். நபிஹள் நாயஹம் உட்ட உடான்ஸ் அல்ல என்று நிரூபித்துள்ளேன்.
    காபிர் தேனீக்கள் மூலம் சான்றுகளை அளிக்கும் அல்லாஹ்!

  24. //1400 வருஷத்துக்கு முன்னாலேயே அறிவியல புட்டு புட்டு வச்சிருக்குன்னு புருடா உடுவீங்க. அதுக்கு விளக்கம் கொடுத்தா, “சயின்ஸ் புத்தகமல்ல” ன்னு பல்டி அடிப்பிங்க. நல்ல கதையா கீதே.//

    உண்மைதான். A quick response often given by my Muslim friends is “The Quran is not a book of science, but a book of signs”….! And yet… and yet… they keep on producing verses which are twisted and misinterpreted to extract science out of them.

  25. செங்கொடி என்னா ஆச்சு எப்பொழது குர்ஆன் விடும் சவாலை ஏற்க போகிறீர்கள். எத்தனை வருடம் கால அவகாசம் வேண்டும். உங்கள் ஆயுள் முழுவதும் தேவைபட்டாலும் எடுத்துக் கொள்ளுங்கள் அப்படி முயன்றாலும் நீ தோற்றுவிடுவாய்

  26. யப்பா காதரு,

    2009லேயே குரானின் சவாலை ஏற்று பதில் வசனம் ஒன்றும் கொடுத்தாகி விட்டது.
    குரானின் சவாலுக்கு பதில்
    https://senkodi.wordpress.com/2009/10/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/
    திராணி இருந்தால் பதில் கூறுங்கள்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்