அல்லாவின் பார்வையில் பெண்கள்: 3. விவாரத்து

விவாகரத்து செய்யும் வசதி பெண்களுக்கு அவசியம் என்பதிலோ, அதை இஸ்லாம் அங்கீகரித்திருக்கிறது என்பதிலோ மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் அதை ஆண்களுக்கு நிகராக இஸ்லாம் கொடுத்த பெண்களுக்கான உரிமை என்பதில், அதை இஸ்லாம் தான் முதலில் வழங்கியது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமுண்டு. தவிர்க்க முடியாத ஒன்றாக, ஆணாதிக்கப் பார்வையுடன் தான் விவாகரத்து உரிமையை இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருக்கிறது. அதேநேரம் விவாகரத்து எனும் அனுமதி பெண்களுக்கு சரியான அளவில் பலனளிக்க வேண்டுமென்றால் பொருளாதார சுதந்திரம் பெண்களுக்கு இன்றியமையாதது. இஸ்லாம் இதில் பெண்களை ஆண்களுக்கு கீழாகவே வைத்திருக்கிறது என்பது வெளிப்படை.

 

பெண்களுக்கும் விவாகரத்துரிமை என்றதும் ஆண்களைப் போல் ‘தலாக்’ எனும் சொல்லை மும்முறை கூறி பெண்கள் திருமணத்தை ரத்து செய்துவிட முடியாது. ஆண்கள் செய்யும் விவாகரத்திற்கும் பெண்கள் செய்யும் விவாகரத்திற்கும் இடையே நடைமுறையில் வேறுபாடு இருக்கிறது. பெண்களின் விவாகரத்திற்கு ’குலாஃ’ அல்லது ’குலாஉ’ என்று பெயர். விவாகரத்து பெற விரும்பும் பெண் தலைவரிடம் (நீதிமன்றம்) சென்று முறையிட வேண்டும். அவர் கணவனை அழைத்து, திருமணத்தின் போது கணவன் கொடுத்த மணக் கொடையை மனைவி திரும்பக் கொடுத்ததும் இருவருக்கும் இடையிலான திருமணம் முறிந்ததாக கொள்ளப்படும்.

 

இஸ்லாத்திற்கு முன்பு அரேபியாவின் குடும்ப அமைப்பில் ஆணே தலைமைப் பொறுப்பில் இருந்தான் என்றாலும் பெண்ணிற்கான முதன்மைத்தனம் முற்றிலுமாக குலைந்து விடவில்லை. பெண்ணின் மறுமணம், விவாகரத்து போன்றவை அங்கு நடைமுறையாகவே இருந்தது. முகம்மதின் முதல் மனைவி ஹதீஜா என்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால், ஹதீஜாவுக்கு முகம்மது முதல் கணவரல்ல மூன்றாவது கணவர். அமைக்கப்பட்டிருக்கும் கூடாரத்தின் வாசலை ஒரு திசையிலுருந்து வேறொரு திசைக்கு மாற்றி வைப்பதன் மூலம் தன் கணவனை விவாகரத்து செய்து விட்டதாக பெண்கள் ஆண்களுக்கு அறிவிப்பது அங்கு வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த வழியில் தான் இஸ்லாமும் பெண்களுக்கான விவாகரத்தை அங்கீகரித்திருக்கிறது.

 

இங்கு கவனிக்கப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், ஆண்கள் பெண்களை விவாகரத்து செய்வது குறித்து பல வசனங்களில் விரிவாக விளக்கும் குரான், பெண்கள் ஆண்களை விவாகரத்து செய்வது குறித்து எந்த இடத்திலும் தனித்த வசனமாக பேசவில்லை. மாறாக ஓரிரு வசனங்களில் மேம்போக்காக சொல்லிச் செல்கிறது. ஆதலால் குலா விவாகரத்து குறித்து பேசும்போது ஹதீஸ்களை மட்டுமே மேற்கோள் காட்டி பேசுவார்கள்.

 

ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாஸ் அவர்களின் துணைவியார் நபி அவர்களிடம் வந்து ……… தோட்டத்தை ஏற்றுக் கொண்டு ஒரு முறை தலாக் கூறிவிடுங்கள் என்றார்கள். புஹாரி 5273

 

இது போன்று இன்னும் சில ஹதீஸ்களும் இருக்கின்றன. இது குறித்து கூறும் குரான் வசனங்கள்,

 

…….. கணவர்களுக்கு பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று முறைப்படி அவர்கள் மீதும் பெண்களுக்கு உரிமையுண்டு …….. குரான் 2:228

 

……. அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலைநிறுத்த முடியாது என்று அஞ்சினால் அவள் ஏதேனும் ஈடாக கொடுத்து விடுவதில் குற்றமில்லை …….. குரான் 2:229

 

வசனம் 2:229 ல் ஏதேனும் ஈடாக கொடுத்து விடுவது என்பதற்கான பொழிப்புரையாகத் தான் புஹாரி 5273 சுட்டப்படுகிறது.  அதாவது திருமணத்தின் போது பெற்ற மஹரை திருப்பிக் கொடுத்துவிடுவது.

 

ஆண்களின் விவாகரத்தான தலாக்கிற்கும் பெண்களின் விவாகரத்தான குலாவிற்கும் இடையில் வித்தியாசங்கள் இருக்கின்றன.  ஆண்களின் தலாக் மூன்று கட்டங்களாக நிகழ்வது, பெண்களின் குலா ஒரே நேரத்தில் முடிவுக்கு வந்துவிடும். ஆண்களின் தலாக் யாரிடமும் முறையிட வேண்டிய அவசியமின்றி நேரடியாக மனைவியிடமே கூறிவிடலாம், பெண்களின் குலா பொதுவான தலைவரிடம் முறையிட்டே செய்யமுடியும். இவைகளை இஸ்லாம் கூறும் குடும்பவியல் நடைமுறைகளோடு ஒப்பு நோக்கினால் இந்த விவாகரத்து நடைமுறைகள் எந்த நோக்கில் திட்டமிடப்பட்டிருக்கின்றன என்பது தெரியவரும்.

 

ஆண்களுக்கு நான்கு முறைப்படியான மனைவிகளும் கூடவே எத்தனை அடிமைப் பெண்களை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளும் அனுமதி இருக்கிறது. மட்டுமல்லாது தனக்கு கீழ்படிய மறுக்கும் மனைவியை படுக்கையில் விலக்கிவைத்து, அடித்து கட்டுப்படுத்தும் அனுமதியும் கணவனுக்கு இருக்கிறது. இதனோடு இணைந்து தலாக் எனும் விவாகரத்து மனைவியை மிரட்டுவதற்கு வழிவகை செய்து தருகிறது. பொதுவான ஒருவரிடம் முறையிட வேண்டிய தேவையின்றி படிப்படியாக இரண்டு முறை தலாக் கூறினாலும் மீண்டும் இணைந்து கொள்ள முடியும். ஆக, மனைவியை தனக்கு கட்டுப்பட்டவளாக நடக்க வைப்பதற்கான உச்ச கட்ட ஆயுதமாக ஆணுக்கு தலாக் பயன்படுகிறது. (இதை நடைமுறையில் யாரும் காணலாம்) ஒரு மனைவி இறந்தால் அவளின் உடமைகளின் பெரும்பகுதிக்கு கணவனே வாரிசாக இருக்கும் நிலையில், திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட மணக் கொடை கணவனிடம் திரும்பிச் சேர்வதை உறுதி செய்யும் பொருட்டு பொதுவான ஒருவரிடம் முறையிட்டுத்தான் பெண் விவாகரத்து பெற முடியும். அதேநேரம் மனைவி முறையிட்டு கணவனும் ஒப்புக் கொண்டு விட்டால் அந்தக் கணமே விவாகரத்து செயல்பாட்டுக்கு வந்து விடுகிறது. இதுவே ஆணுக்கு தவணை முறையில் செய்யப்படுவதால் அவனுக்கு இருக்கும் அவகாசம் பெண்ணுக்கு இல்லை. எனவே பெண் தனக்கு பிடிக்காத கணவனை விவாகரத்து செய்வது என்பது வேறு வழியில்லாத நிலையில் எதிர்காலம் குறித்த பயத்தையும் மீறித்தான் செய்ய முடியும். இது கணவனின் ஏற்க முடியாத செயல்களையும் கூட சகித்துப் போக வைக்கிறது. இதுவே ஆண் என்றால் தனக்கு கட்டுப்பட மறுப்பவளை தலாக் கூறி மிரட்டி அவள் பணிந்ததும் ஏற்றுக் கொள்ள முடியும்.

 

பொதுவாக விவாகரத்து பெறும் பெண்களுக்கு எதிர்காலம் என்பது இருண்டதாகவே இருக்கும். காரணம், இந்த ஆணாதிக்க உலகில் பெண் எல்லாவிதத்திலும் ஆணைச் சார்ந்தே இருக்க வேண்டியதிருக்கிறது. மண உறவுகள் விலகிவிட சொந்த உறவுகள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவளுக்கு எதிர்காலம். இல்லையென்றால் அவளுக்கு இந்த உலகம் நரகமாகவே இருக்கும். இது தான் பெண்களை கணவன் என்ன செய்தாலும் அதை சகித்துப் போக வைக்கிறது. இது மாற வேண்டுமென்றால் பெண்ணுக்கு பொருளாதாரத்தில் சுதந்திரம் வேண்டும். ஆனுக்கு சமமாக பெண்ணை உலவவிட எந்த மதமும் சம்மதித்ததில்லை, இதில் இஸ்லாமும் விலக்கில் இல்லை.  எனும்போது பெண்ணை ஆணுக்கு கீழானவளாக இருத்தி வைத்துவிட்டு விவாகரத்து உரிமை வழங்கியிருக்கிறோம் என்பதில் எந்தப் பொருளும் இருக்க முடியாது.

 

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

37. அல்லாவின் பார்வையில் பெண்கள் 2. சொத்துரிமை

36. அல்லாவின் பார்வையில் பெண்கள் 1. புர்கா

35. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4

34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3

33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2

32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1

31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும்

30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ்

29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா

28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா?

27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள்

26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள்

25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

56 thoughts on “அல்லாவின் பார்வையில் பெண்கள்: 3. விவாரத்து

  1. இயற்கையை புரிந்து கொண்டால் மட்டுமே இறைவனை புரிந்து கொள்ள முடியும்.
    இறைவனை புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இறை கட்டளைகளை புரிந்து கொள்ள முடியும்.
    இந்த இரண்டையும் தெரிந்தவனால் மட்டுமே உயிர்களை புரிந்து கொள்ள முடியும்.
    உயிர்களை புரிந்தவனால் மட்டுமே மனிதத்தையும் புரிந்து கொள்ள முடியும்.

    இதில் ஏதேனும் ஒன்று பற்றி புரிந்தால் மட்டுமே
    அதுபற்றி காரணமாக விவரமாக விமர்சிக்க முடியும்.

    சொந்த வாழ்வில் லட்சியம் இல்லாமல்
    சொந்த வாழ்வில் குறிக்கோள் இல்லாமல்
    சொந்த வாழ்வின் ஆரம்பமும் முடிவும் தெரியாமல்
    உளறுகின்றவர்கள் உளறல்களின் வெளிப்பாடாகவே உங்களின் வாதத்தை எடுத்துக்கொள்ளமுடியும்.

    விமர்சிப்பதற்கு வரை முறை தேவை இல்லை.
    விமர்சிப்பதற்கு விவரம் தேவை இல்லை.
    விமர்சிப்பதற்கு அதிபுத்தி தேவை இல்லை.
    மாறாக விமர்சிப்பதற்கு
    கண்களும் வாயும் மட்டும் போதும்.

  2. இதையும் படியுங்கள்.

    சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

    **** பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே? அதற்கான காரணத்தை பார்ப்போம். *****

    **** பெண்களுக்கு மோட்சம் கிடையாது. உடலுறவுக்கு தேவடியாள்கள் விரும்பிய ஸ்த்ரிகள் நிறைய பேரை மோட்சலோகத்தில் அங்கு போனவன் படைத்துக் கொள்வான். *****

    **** உடலுறவுக்கு மோட்சத்தில் கட்டுபாடில்லை. தட்டுபாடில்லை. வேண்டும் எண்ணிக்கைகளில் உனக்கு அனுபவிக்க தேவடியாள்கள் வேண்டுமா? நீ விரும்பிய பெண்கள் வேண்டுமா? *****

    **** வித‌வைகளுக்கு மொட்டையடி. விதவைகளின் மறுமணம் விபசாரம்? *****

    ***8 பெண்களுக்கு கல்வி கூடாது. வெளியில் செல்லவும் கூடாது. *****

    **** ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அருந்து????..ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை நீ வீணாக்காமல் அருந்த வேண்டும்.

    **** தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, ‘மகன்’கள் சொல்கிறார்கள். *****

    **** இறந்த கணவனுடன் அவன் சிதையிலேயே மனைவியையும் உயிருடன் எரித்துவிடு.? வேதம் *****

    **** உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க ஆபாச திருமண மந்திரங்கள். *****

    **** நான் அவளோடு உடலுறவு கொள்ளும் பொழுது தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும். திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம் *****

    **** மாதவிடாய் பெண்களை விலக்கிவையுங்கள். ப்ரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

    **** ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து? ஓடிப்போயீடுவா…!!!. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு. *****

  3. என்னுடைய இந்தக் கட்டுரை சமூக அக்கறையுள்ள ஒரு எழுத்தாளனின் ஆதங்கம் மட்டும்தான்; ஊர் அமைப்புகளுக்கு அறிவுரை சொல்வதல்ல! இஸ்லாமிய கோட்பாடு களின் அடிப்படை சார்ந்து வாழ்ந்துகொண்டிருப்பதாக நாம் சொல்லிக்கொள்வதால் இதற்கெதிரான நம்முடைய செயல்பாடுகளையும் மற்றவர்கள் கோட்பாடுகளின் அடிப்படையில்தான் புரிந்துகொள்கிறார்கள். இதன் காரணமாக பல்வேறு மௌனங் களை அனுபவித்தவன் என்பதால் இதை எழுதியிருக்கிறேன்.

    வரங்களை சாபமாக மாற்றும்
    மோடிமஸ்தான்கள்

    :குளச்சல் மு. யூசுப்

    அண்மையில், என்னை மிகவும் பாதித்த சம்பவத்தைப் பற்றிய தகவல் இது. ஏறத்தாழ மூன்று வருடங்களுக்கு முன் திருமணமான ஒரு தம்பதியருக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டது. அவர்களுக்குள் இப்படியான மனவேறுபாடு இருப்பது எதிர் வீட்டிலிருப்பவர் களுக்குக்கூட தெரியாது என்பதிலிருந்து இது, மாமியார் – மருமகளுக்கிடையிலான, மிகச் சிறு அளவிலான பிரச்சினைதான் என்பதையும் இதுதான் தம்பதியர் களுக்கிடையில் மனவிரிசலை உருவாக்கியிருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம். மட்டுமல்ல, அந்த மணமகன் வெளிநாட்டில் பணி புரிந்து வருபவர்.

    இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இரண்டு மாத விடுமுறையில் ஊருக்கு வருகிற அந்த மணமகன், தன்னுடைய வாழ்க்கைத் துணைவியுடன் வாழ்ந்த காலம், அதிகபட்சமாக இரண்டே மாதங்கள் மட்டும்தான். கணவன் வெளிநாட்டிலி ருந்து வருவதற்கு சில நாட்களுக்கு முன் மனைவி, பிறந்த வீட்டுக்குப் போயிருந்தாள். மாமியார் – மருமகளுக்கிடையில் ஏற்கனவே இருந்த முரண்பாடுகளும் மருமகள் தாய் வீட்டுக்குப் போயிருந்ததுமாகச் சேர்ந்து கணவன், ஊருக்கு வந்த ஒரு மாதத்தினுள் ஃபஸ்க் சொல்கிற அளவுக்குக் கொண்டுபோய் விட்டு விட்டது என்பதுதான் அந்தச் சம்பவத்தின் உச்சபட்சக் கொடுமை.

    மணமுறிவு நடந்த அன்று மணமகன் இல்லத்தைச் சேர்ந்த ஜமாஅத்தாரிடம் கொடுப்பதற்காக மணப்பெண்ணின் ஆட்கள் தயார் செய்து கொண்டு வந்த ஒரு குறிப்பை தற்செயலாக வாசிக்க நேர்ந்தது. அதில்: இரு தரப்பு சம்மதத்தின்பேரில் இந்த நிக்காஹ் மணமுறிவாக முடிவுக்குக்கொண்டு வரப் பட்டிருக்கிறது என்றும், மணமகள் ஃபஸ்க்? செய்து மணமகனின் ஜமா அத்திற்குக் கொடுத்திருப்பதாகவும் ஆகவே, இது சம்பந்தமாக இரு சாராரும் இனி சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கோ ஜமாஅத்துகள் மூலமாகவோ எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டோம் என்றும் எட்டு சாட்சிகள் முன்னிலையில் கையெழுத்திட்டுக் கொடுப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மணமுறிவைப் பற்றி நியாயமான, சட்டபூர்வமான விவாதங்களைத் தவிர்த்துப் பார்த்தாலும்கூட இந்தச் சம்பவத்தின் பின்னணியில் நடைபெற்ற அவசரகோல நடவடிக்கையைப் பற்றி சற்று தீவிரமாக யோசிக்க வேண்டியதிருக்கிறது. தம்பதியர் இணைவதற்கான சிறு இடைவெளிகூட ஏற்பட்டு விடாமல் எல்லாப் பக்கத்திலுமுள்ள கதவுகளை உடனடியாக இழுத்து மூடுவதற் கான தேவை, ஜமாஅத்துகளுக்கு என்ன வந்தது?

    மணமகள் தரப்பிலிருந்து கூறப்படுகிற, தொலைபேசியில் ஆபாசமாகப் பேசுகிறான் என்ற குற்றச்சாட்டை நீண்ட நாட்களாக மனைவியைப் பிரிந்து வாழும் ஒரு இளைஞனின் தரப்பில் நின்று உளவியல்ரீதியாக அணுகிப்பார்க்கும் முயற்சியை ஜமாஅத் தரப்பில் யாராவது மேற்கொண்டார்களா? தமது இணைகளின் குரலை தொலைபேசியில் மட்டுமே கேட்கும் நிலையில் இளம் தம்பதியரின் மனவுணர்வு குறிப்பாக, ஆணின் மனவுணர்வு எப்படிச் செயல்படும் என்பதை ஜமாஅத்தார்கள் உணர்ந்திருந்தால் இந்த மணமுறிவு நிகழ்ந்திருக்குமா? ஜமாஅத்துகளின் பணிகளா இதெல்லாம் என்று கேட்பவர்கள் மன்னிக்க வேண்டும்; என்னிடம் பதில் இல்லை!

    இரு மனுதாரருமே மணமுறிவைக் கோரும்போது நாங்கள் என்ன செய்ய முடியும் என்று ஜமாஅத்தார் கேட்கலாம். சரிஅத் சட்டத்தின் அடிப்படையில்தான் மணமுறிவை அனுமதிக்க முடியும் என்று சொல்லியிருக்கலாம்; குறைந்த பட்சமாக சம்பந்தப்பட்ட இரண்டு சாராருக்கும் யோசிப்பதற்கான கால அவகாசத்தை வழங்கியிருக்கலாம்; உங்கள் பிரச்சினையை நீங்கள் காவல்துறையோ நீதிமன்றமோ மூலம்தான் தீர்க்க வேண்டியதிருக்கும் என்று சற்றுக் கடுமையாகப் ‘பேசியிருந்தா’லே பிரச்சினை வேறு மாதிரி ஆகியிருக்கும். ஜமாஅத்தார் இப்படி எதையாவது செய்தார்களா?

    தம்பதியருக்குக் குழந்தையில்லை என்பதை முக்கியப் பிரச்சினையாக எடுத்துக்கொண்ட பெற்றோர்களும் அதை ஏற்றுக் கொண்ட ஜமாஅத்துகளும் ஒருவேளை திருமணம் நடந்த காலகட்டத்தைக் கணக்கில் கொண்டிருக்கலாம்; அவர்கள் கூடி வாழ்ந்த ஓரிரு மாதங்களினுள்ளிருக்கும் உயிர் உற்பத்திக்கான மணித்துளிகளைக் கணக்கில் கொண்டார்களா? இந்த மணித்துளிகள் விரல் களுக்குள் அடங்கி விடுமே? செய்தார்களா?

    மீண்டும் ஒருவேளை இந்தத் தம்பதியர் இணைந்து விடும்பட்சத்தில் குழந்தைப் பேறுக்கான வாய்ப்பு உருவாகி விடுமென்பதும் பிறகு பிரித்து வைக்கும் வேலை (கர்ப்பிணியாக இருந்தால் இத்தா காலம் நீளும்.) சிரமமாகிவிடும் என்பதால் இந்த அவசர மணமுறிவு நிகழ்ந்திருக்கலாம். அப்படியென்றால் சிறுசிறு மனஸ்தாபங்களுக்கு மணமுறிவுகள் மட்டும்தான் தீர்வா?

    தாம்பத்ய சரடின் தொடக்க நிலையில் வந்து விழும் இந்தச் சிடுக்குகள், மற்றவர்களின் தலையீட்டைத் தவிர்த்த கண்காணிப்பிலும், உடல்தேவை களின் அடிப்படையிலும் மிக எளிதாக அவிழ்ந்து விடக்கூடியவை என்பதை இவர்கள் அறிவார்களா?

    நாங்கள் சேர்த்து வைக்கத்தான் முயற்சி செய்கிறோம் என்று ஜமாஅத்துகள் சொல்லுமென்றால் இவர்களது முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியைத் தழுவுவதற்கான காரணம் என்ன? ஒருதடவை பேசி விட்டோம் இனி பேச்சு வார்த்தைகள் இருக்கக்கூடாது என்று முடிவாகச் சொல்லி விடும் இந்த ஊர் அமைப்புகள் இறுக்கத்திலிருந்து தங்களை சற்றாவது நெகிழ்த்திக் கொள்ளுமா? ஜமாஅத்தை வழி நடத்தும் வசதிபடைத்தவர்கள் வீட்டுப் பிரச்சினைகளிலும், இதே இறுக்கத்துடன்தான் நடந்துகொள்கின்றனவா?

    மணமக்கள் பரஸ்பரம் புரிந்துகொள்வதற்கான கால அவகாசமில்லாத இந்தத் திருமணங்களை அவ்வளவு சீக்கிரம் மணமுறிவாக அறிவித்துக்கொள்வதில் ஜமாஅத்துகளுக்கு அப்படி என்ன அவசரம்? இரு தரப்பு குற்றச்சாட்டுகளையும் முன்வைப்பவர்கள் தம்பதியரா, அவர்களது குடும்பத்தினரா? ஒருமணி நேரமாவது தம்பதியர்களை பரஸ்பரம் சந்திக்க வைத்து அவர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துவதற்கான அடிப்படையான சிறு முயற்சிகளையாவது இந்த ஜமாஅத்து கள் மேற்கொள்கின்றனவா? ஸைத்தான் என்று நாம் சொல்வோமே, அந்த மனக் குரங்கின் சேட்டைகளை சற்று உளவியல்பூர்வமாக அணுகத் தெரிந்த யாரையாவது இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது பயன்படுத்திக்கொள்ளலாமே? பெண்களின் பிரச்சினைகளை ஆண்கள் மட்டுமே கூடி முடிவு செய்யும் பட்சத்தில் பெண்களை யும் இதில் பங்குபெற செய்யலாமே?

    இரு வேறுபட்ட ஜமாஅத்தைச் சார்ந்த குடும்பங் களினிடையில்தான் முரண்பாடுகள் ஏற்படும் பெரும்பாலான திருமண உறவுகளும் முடிவுக்கு வருகின்றன. ஒரே ஜமாஅத்தைச் சேர்ந்த திருமண உறவுகளில் இவை மிக அபூர்வமாகவே நிகழுகின்றன. அப்படி யென்றால் மணமுறிவுகளின் உற்பத்தி மையம் சம்பந்தப்பட்ட ஜமாஅத்துக்களுக் கிடையிலான புரிதலின்மையா? பெரியண்ணன் மனோபாவமா?

    பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட இரு குடும்பத்தினர்களது மனநிலையும் சிக்கலுக்குள்ளாகி, தம்பதிகளைப் பிரிப்பதுதான் நோக்கமென்று அவர் கள் கச்சைக் கட்டி நிற்கும்போது இது அவரவர் விருப்பம் என்று விட்டு விடுகிற வேலையை ஜமாஅத் செய்யலாமா?

    வேறுபட்ட வளர்ப்பு முறைகள், குடும்பப் பின்னணிகளுடன் தாம்பத்திய வாழ்க்கைக்குள் நுழைகிறபோது தம்பதியருக்குள் சிறு முரண்பாடுகள் எழுவது இயல்பான விஷயம் என்பதையும் இந்த முரண்பாடுகளில் பெருமளவும் பெரியவர் களினிடையே உருவாகும் தன்முனைப்பு சம்பந்தமானது என்பதையும் பெரும் பாலான தலாக்குகளும் இந்தக் காலகட்டத்தில்தான் நிகழ்கிறது என்பதையும் ஜமாஅத்துக்கள் உணர்ந்திருக்கின்றனவா?

    மக்களின் முறையீட்டுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஊர் அமைப்புகள் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்படலாமா? தலாக் பிரச்சினைகளை தாம்பத்திய வாழ்க்கை சார்ந்தும் உளவியல்கூறுகள் சார்ந்தும் சரீஅத் சட்டத்தின் அடிப்படையிலும் ஜமாஅத்துகள் அணுகுகின்றனவா?

    இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக வாழும் இந்தியாபோன்ற நாடுகளில் மதம் சார்ந்த தங்களுடைய குடிமையியல் விவகாரங்களுக்காக நீதிமன் றத்தை நாடுவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. ஆகவே, இந்த இடத்தில் ஜமாஅத்துக்களின் பொறுப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்த மாபெரும் பொறுப்பை ஜமாஅத்தினர் உணர்ந்திருக்கிறார்களா?

    ஜமாஅத்துகளின் கணக்குப் புத்தகத்தில் முடிவுக்கு வந்து விடும் உறவுகள், பிறகு, குடும்பப் பகைகளாகவும் மன ரணங்களாகவும் மாறி சமூக உறவுகளையும், நல்லெண்ணங்களையும், கல்வியையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்பதை நம்மால் ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை. தலாக் சொல்லிப் பிரிந்த தம்பதியரின் குழந்தைகள் ஆரோக்கியமான ஒரு பிரஜையாக உருவாவதில் ஏற்படுகிற உளவியல் சிக்கல் மிகப்பெரிய சமூகப் பிரச்சினையல்லவா?

    ஆன்மிக சிந்தனைகள் சார்ந்து மட்டுமே கருத்துப் பரிமாற்றங்களையும் விவாதங்களையும் முன்னெடுத்துச் செல்கிற, குடும்பம், வாழ்க்கைபோன்ற விஷயங்களை விவாதிப்பதில் நம்பிக்கையில்லாத ஒரு சமூகத்தின் எதிர்காலம் ஆரோக்கியமாக இருக்க முடியாதென்பதை நாம் மறந்து கொண்டிருக்கிறோமா? இஸ்லாம் என்பதே வாழ்வியல் சார்ந்த ஆன்மிகமல்லவா?

    ஒவ்வொரு தலாக் பிரச்சினையும் அதற்கான நியாயங்களுடன்தான் முன்வைக்கப்படுகின்றன என்பதையும் இறுதித் தீர்வான மணமுறிவு என்பதனுள் எந்த நியாயங்களுமில்லாத பிரிவுதான் மிச்சமாகிறது என்பதையும், ஏற்கனவே நாம் சமூகம், அரசியல் மற்றும் சமூக வாழ்வு சார்ந்து எதிர்கொள்கிற பிரச்சினைகளை இது மேலும் தீவிரப்படுத்தும் என்பதையும் ஜமாஅத்துகள் உணர்ந்திருக்கின்றவா?

    1939ஆம் வருடம் ஜின்னாவின் தலைமையில் முஸ்லிம் பெண்களின் நலனை முன்வைத்து அடைந்த ஃபஸ்க் உரிமையைக் கூட நாமிப்போது தவறாகப் பயன்படுத்துகிறோம். மணமகளின் ஒப்புதலில்லாமல் பெற்றோர்கள் அவளை திருமணம் செய்து கொடுத்திருந்தாலோ, மனைவிக்கான உரிமைகளை கணவன் மறுக்கும்பட்சத்திலோ, அல்லது, சரீஅத் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி மனைவியை தலாக் சொல்வதிலிருந்து வேண்டுமென்றே காலதாமதம் செய்தாலோ உபயோகிப்பதற்கான சட்டம் இது. மட்டுமல்ல, இந்தப் பிரிவு குடிமைச் சட்டம் சார்ந்தது. ஆகவே, இது நீதிமன்றம் மூலம்தான் அணுகப்பட வேண்டும். குறிப்பிட்ட பிரச்சினையில் மணமகன் வெளிநாட்டில் இருந்த நிலையில் பெண்ணின் உரிமைகள் இயல்பாகவே மறுக்கப்பட்டிருப்பதாக ஜமாஅத் கருதியதா? அப்படியென்றால் இந்தத் திருமணத்தை முதலில் எப்படி ஜமாஅத் அங்கீகரித்தது? தன்னுடைய அனுமதியில்லாமல் இந்த நிக்காஹ் நடந்திருப்பதாக மணப்பெண் முறையிட்டாரா? இப்படி, சட்டத்திற்குப் புறம்பான ஒரு அறிக்கையை மணமகனின் ஜமாஅத்தார் எப்படி ஃபஸ்க்காக ஏற்றுக் கொண்டார்கள்?

    சரி, குறைந்தபட்சம் சரீஅத் சட்டத்தின் அடிப்படையிலாவது இந்த மணமுறிவுகள் நிகழ்கின்றனவா என்றால் நாமறிந்த வகையில் சொல்லிக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இல்லவே இல்லை!

    பரஸ்பரம் இனி ஒத்துப்போகவே முடியாது என்ற முடிவுக்கு வரும் தம்பதியர்கள், குடும்பத்திலுள்ளவர்களிடம் இதை நிரூபிக்க வேண்டும். இவர்கள் தங்களது குடும்பங்களிலுள்ள இரண்டு பேர்களைக்கொண்ட ஒரு குழுவில் இந்தப் பிரச்சினையை முன்வைக்க வேண்டும். இவர்கள் தலையிட்டு சமரசம் செய்து வைக்க வேண்டும். பிரச்சினை, இதன் பிறகும் முடிவுக்கு வரவில்லையென்றால் கணவன், முதல் தலாக்கைச் சொல்லலாம். இப்படி, தலாக் சொல்லப்பட்ட மனைவி, கணவன் வீட்டிலேயே மூன்று மாத காலம் வாழ வேண்டும். இந்த இத்தா காலமென்பது, அவர்களினிடையே மீண்டும் இணக்கம் ஏற்படுவதற்கான, மனைவி கர்ப்பமாக இருக்கிறாளா என்பதை அறிந்துகொள்வதற்கான ஒரு ஏற்பாடு. இந்நிலையில் அவர்களுக்குள் இணக்கம் ஏற்பட்டால் அவர்கள் முன்போல் கூடி வாழலாம். கர்ப்பிணியாக இருந்தால் இந்த இத்தா காலம் மேலும் நீளும். அதாவது கர்ப்பிணியாக இருப்பதால் இணக்கத்திற்கான கால அவகாசம் கர்ப்பக் காலம் வரை நீட்டிக்கப்படுகிறது. திரும்ப ஏற்றுக்கொள்ளவும் விரும்பாமல் இத்தா காலமும் முடிந்து விட்டால் அவர்களினிடையிலான உறவு முடிந்துபோய் விடுகிறது. அதோடு அவள் அன்னியமாகி விடுகிறாள். பிறகு, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மற்ற இரண்டு தலாக்குகளையும் சொல்லி பரஸ்பரம் பிரிந்து விடலாம்.

    ஒரு பெண் தனக்கு, மணமுறிவுதான் ஆறுதலைத் தரும் என்று நம்புகிற பட்சத்தில் சற்று தாமதமானாலும்கூட இதன்மூலம் அவளுக்கு விவாகரத்து கிடைத்து விடுகிறது. விவாகரத்தே வேண்டாம் என்று தம்பதியர் முடிவு செய்கிற பட்சத்திலும் இது உதவியாக இருக்கிறது.

    இந்தக் கால இடைவெளிகளைப் பற்றி சிற்சில முரண்பாடுகளிருந்தாலும் முத்தலாக்கையும் ஒரே நேரத்தில் சொல்வதற்கான அனுமதி சரிஅத்தில் இல்லையென்பதாகவே பெரும்பாலான மத அறிஞர்களும் ஒப்புக்கொள்கிறார்கள். இப்படி எல்லாமே சரியாக இருக்கும்போது தவறு எங்கிருந்து உருவாகிறது என்பதை நாம் சிந்தித்தே ஆகவேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம்.

    முத்தலாக்கையும் ஒரே நேரத்தில் சொல்கிற நடைமுறை, உலகில் இஸ்லாமிய புரட்சி நடந்த ஒரே நாடான ஈரான்; இஸ்லாமியர்களுக்கென்றே உருவான பாகிஸ்தான் உட்பட பல்வேறு இஸ்லாமிய நாடுகளில்கூட கிடையாதென்பதுவும் அவர்கள் இம்மாதிரி விஷயங்களுக்கு நீதிமன்றத்தைத்தான் அணுகுகிறார்கள் என்பதுவும் குறிப்பிட வேண்டிய அம்சங்கள். இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் இந்த இடத்தில் ஜமாஅத்துக்கள் தங்களுடைய பொறுப்பை, ‘….(இதைப்பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவு செய்து கொள்ளுங்கள்.’ எனும், அல் குர்ஆன் 65ஆம் அத்தியாயம், ஸூரத்துத் தலாஃக், 6ஆவது வசனத்தைச் சொல்வதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

    *********************************************************************************

  4. சீனாவில் வீழ்ந்தது கம்யூனிஷம்…http://suvanappiriyan.blogspot.com/2011/12/blog-post_08.html

    கம்யூனிஷ ஆட்சியாளர்களால் இது நாள் வரை மத உரிமைகள் மறுக்கப்பட்ட பல சீனர்கள் வேலை நிமித்தமாக சவூதி வந்துள்ளனர். அதிலும் ஜெத்தா-மெககா-மெதீனா மெட்ரோ ரயில் திட்ட காண்ட்ராக்டும் தற்போது சைனாவுக்கே கிடைத்துள்ளது. 5000க்கும் மேற்பட்ட டெக்னீசியன்களும் தொழிலாளர்களும தற்போது சவுதி வந்துள்ளனர். கடவுள் என்றால் யார்? இறை தியானம் எப்படி இருக்கும்? மன அமைதியை இறை தியானத்தில் பெறுவது எப்படி என்றெல்லாம் தெரியாமலேயே வெறும் கார்ல் மாக்ஸை மட்டுமே படித்த இந்த இளைஞர்கள் இன்று இறை மார்க்கத்தால் கவரப்பட்டு அதிகமதிகம் இஸ்லாத்தை ஏற்கின்றனர்.

    தொடர்ந்து படிக்க…http://suvanappiriyan.blogspot.com/2011/12/blog-post_08.html

  5. கம்யுனிஸம் என்பது பற்றி சுவனப்பிரியனின் புரிதல் என்ன?

    சந்தை பொருளாதரத்தின் தலைவனாக இருந்து வரும் சீன பின்பற்றுவது கம்யுனிஸ பொருளாதாரமா?சீன கம்யுனிஸ அரசு என்றால் தலிபான்கள்தான் உண்மையான முஸ்லிம்கள்.

    சவுதியில் பணியாற்ற வந்த சில சீனர்கள் சவுதி அரசு மதத்தில் இணைந்தார்கள்.இதே போல் நாளை எண்ணெய் தீர்ந்த பிறகு இந்தியாவில் கூலி வேலை செய்ய வரு சவுதிகள் இந்து மதத்தையும் ஏற்பார்கள்.இதெல்லாம் அரசியலில் சகஜம் சவுதி மதத்தில் இருந்து வெளியேறிய சவுதிகள் சிலரை காட்டினால் சவுதி மதம் வீழ்ந்தது என்றா கூறுவீர்கள்?

    சவுதியில் வங்கிகளில் வட்டிக்கு கடன் கொடுக்கப்படுகிறது.அவ்வாறு செய்பவர்களை என்னவோ செய்ததாக சவுதி மதத்தினர் கூறுவர்.அப்படியெனில் சவுதி மதம் வீழ்ச்சி அடைந்ததா?

    சென்ற பதிவில் ஒரு பிலிப்பைன்ஸ் நடிகை சவுதி மதத்தை ஏற்றார் என்றால் முஸ்லிமாக் இருந்து கொண்டு கவர்சிக்கன்னிகளாக விளங்கும் ஷகிலா,ஜீனத் அம்மன்,கத்ரினா கைஃப் போன்றவ்ரகள் சவுதி மதம் சரியில்லை என்று முடிவு செய்து விட்டார்கள் என்று கூறலாம.

    சவுதிக்காரன் கொடுக்கும் காசுக்கு ரொம்ப்த்தான் கூவுறே வாத்யாரே!!!!!!!!
    நீயே இந்தியாவில் இருந்தா ஒரு பதிவும் எழுதாமே பிழைப்பை பார்த்துக் கொண்டுருப்பே.இந்தியாவில் 600 வருடம் சவுதி மத ஆட்சி இருந்தும் இந்தியா முழுதும் சவுதி மதமாகவில்லை.அப்ப இந்து மதம் சவுதி மதத்தை விட சிறந்ததா!!!!!!!!!!

    காசு இருக்கிறதை சேர்த்து வைக்கத் தெரியாம ஊதாரித்தனமா சவுதிக்காரன் செலவு செய்ரான் அதை தமிழன் ,பாகிஸ்தான் சீனர் எல்லாம் அனுபவிங்க!!!! காசு தீர்ந்தா அவனை கை கழுவி விட்டுடனும்

  6. கம்யுனிஸம் என்பது பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டது.இறை மறுப்பு அதில் ஒரு சிறு பகுதி.
    இஸ்லாமிய பொருளாதாரத்தில் வட்டி இல்லை வட்டி வாங்கினால் ஏதையோ செய்வதாக கூறுவதும் ஈமானுள்ள சவுதி மதத்தினர் கூறுவது வழக்கம்.

    இஸ்லாமியர்களின் புண்ணிய பூமியான சவுதியில் வட்டி வங்கிகளில் வழங்கப்படுகின்றது என்றால் சவுதியில் இஸ்லாம் வீழ்ந்தது என்றுதானே அர்த்தம்.
    Calculate interest rate

    http://www.alrajhibank.com.sa/en/personal/personal-finance/pages/personal-finance.aspx

    http://www.bebas-hutang.com/personal-loan-with-al-rajhi-bank/

    பிச்சை எடுப்பது இஸ்லாமின் படி தவறு என்றால் சவுதியில் பிச்சை எடுப்பது (பெண்கள் அதிகமாக்)எல்லா இடங்களிலும் உள்ளதை அனைவரும் அறிவோம்.
    பல ஹஜ் செல்லும் பயணிகளே செலவை ஈடு கட்ட அங்கேயே பிச்சை எடுப்பதாக்வும் கேள்வி.ஆக‌வே சவுதியில் இஸ்லாம் வீழ்ந்தது என்றுதானே அர்த்தம்.
    Despite laws, begging on the rise
    By MD HUMAIDAN | ARAB NEWS
    Published: Jul 21, 2011 00:25 Updated: Jul 21, 2011 00:25
    JEDDAH: The number of beggars in the country exceeds the estimated figure of 150,000 quoted by government statistics, researchers say.

    http://www.arabnews.com/saudiarabia/article475414.ece

    ஒரு பிலிப்பைன்ஸ் நடிகை ஹிஜாப் அணிந்தால் அல்லாவுக்கு வெற்றி என்றால் கவர்ச்சிக்கன்னி முஸ்லிமாக்களான ஷகிலா ஷர்மிலி,கத்ரினா கைஃப்,குஷ்பு,…ஆகியோரால் அலாவுக்கு தோல்விதானே?
    ஷகிலா ஹிஜாப் அணிந்தால் தடுப்பது ஏன்?அவரும் முஸ்லிமா ஆக துஆ செய்யுங்கள்.

    இரஹ்மான் ஒரு தர்காவாசி ஆகவே அவர் சவுதி மதம் சேர்ந்தவர் அல்ல‌

    சேஷாசல பெரியார்தாச சித்தார்த்த அப்துல்லா இன்னும் தன் இணை வைக்கும் மனைவியோடு வாழ்வது இஸ்லாமின் படி தவறு.ஆகவே அவரும் நரக வாசியே.மண விலக்கு செய்து நபி வழியில் ஒரு (சிறு வயது )முஸ்லிமாவை மண முடித்து அவரை முஸ்லிம் ஆக்குங்கள்

  7. ஒரு பெண்ணை அனுபவிப்பதற்கு ஒரு ஆண் அந்த பெண்ணுக்கு தரும் பணம்தான் மெஹர்.

    அதிர்ச்சியாக இருந்தாலும் இதுதான் உண்மை.

    இந்த அசிங்கத்தை மறைக்க, மெஹர் என்பது பெண்ணை கண்ணியப்படுத்த அல்லாஹ் செய்த வழிமுறை, அந்த பெண்ணை பாதுகாக்க ஆண் கொடுக்கும் பணம் என்றெல்லாம் பீலா விடுவார்கள் நமது மூஃமின்கள்.

    ஆனால் அல்குரான் மெஹரை ஏன் திரும்ப எடுத்துகொள்ளக்கூடாது என்பதற்கான காரணத்தை தெளிவாக சொல்லுகிறது.

    4:20 நீங்கள் ஒரு மனைவி(யை விலக்கி விட்டு அவளு)க்கு பதிலாக மற்றொரு மனைவியை (மணந்து கொள்ள) நாடினால், முந்தைய மனைவிக்கு ஒரு பொருட்குவியலையே கொடுத்திருந்த போதிலும், அதிலிருந்து எதையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள் – அபாண்டமாகவும், பகிரங்கமாகப் பாவகரமாகவும், அதனை நீங்கள் (திரும்பி) எடுக்கிறீர்களா?

    4:21 அதனை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்வீர்கள்? உங்களிடமிருந்து அவள் உறுதியான வாக்குறுதி பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே!

    ஒரு பெண்ணோடு கலந்துவிட்டதுதான் காரணம். அதற்காகத்தான் அந்த மெஹர் திரும்ப பெறக்கூடாது. அந்த கலப்புக்கு கொடுக்கும் விலைதான் மெஹர். இதற்கு பெயர் விபச்சாரம். திருமணம் அல்ல.

  8. முஹம்மதுவிற்கு அனேக மனைவிகள் இருந்தார்கள். இருந்தபோதிலும் அவருக்கு தொடர்ந்து திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் (அ) ஆசை இருந்துக்கொண்டே இருந்தது. எந்த பெண்ணாவது முஹம்மதுவை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தால், முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளலாம். இது உலகத்தில் எந்த ஒரு இஸ்லாமியருக்கும் இல்லாத தனிப்பட்ட சலுகை முஹம்மதுவிற்கு மட்டும் அல்லாஹ் கொடுத்துள்ளார்.

    ஆனால், துரதிஷ்டவசமாக முஹம்மது சில பெண்களை விரும்பிய பின்னரும் அப்பெண்கள் முஹம்மதுவை திருமணம் செய்ய மறுத்துள்ளனர்.

    கீழ்கண்ட புகாரி ஹதீஸை படிக்கவும், அதன் கீழே சில கேள்விகள் இஸ்லாமியர்களுக்காக கேட்கப்படுகிறது.

    பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5255
    அபூ உசைத் மாலிக் இப்னு ரபீஆ அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்

    நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (மதீனாவிலுள்ள) ‘அஷ்ஷவ்த்’ (அல்லது ‘அஷ்ஷவ்ழ்’) என்றழைக்கப்படும் ஒரு தோட்டத்தை நோக்கி நடந்தோம். (அதனருகில் இருந்த வேறு) இரண்டு தோட்டங்களை அடைந்து, அந்த இரண்டிற்கும் இடையே அமர்ந்தோம்.

    அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இங்கேயே அமர்ந்திருங்கள்’ என்று சொல்லிவிட்டுத் தோட்டதிற்குள்ளே சென்றார்கள். (அங்கு) அல்ஜவ்ன் குலத்துப் பெண் அழைத்து வரப்பட்டுப் பேரீச்சந் தோட்டத்திலிருந்த ஒரு வீட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அப்பெண்(ணின் பெயர்) உமைமா பின்த் நுஅமான் இப்னி ஷராஹீல் (என்பதாகும்). அவருடன் அவரை வளர்த்த செவிலித் தாயும் இருந்தார். (அப்பெண்ணுக்கும் நபியவர்களுக்கும் முன்பே திருமண ஒப்பந்தம் முடிந்திருந்ததால்) அப்பெண் இருந்த வீட்டிற்குள் நபி(ஸல்) அவர்கள் நுழைந்து ‘உன்னை எனக்கு அன்பளிப்புச் செய்!’ என்று கூறினார்கள். அந்தப்பெண் ‘ஓர் அரசி, தன்னை இடையருக்கெல்லாம் அன்பளிப்புச் செய்வாளா?’ என்று கேட்டார். அவரை அமைதிப்படுத்துவதற்காக நபி(ஸல்) அவர்கள் தங்களின் கரத்தை அவரின் மீது வைக்கப் போனார்கள். உடனே அவர் ‘உங்களிடமிருந்து நான் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை நோக்கி ‘கண்ணியமான (இறை) வனிடம் தான் நீ பாதுகாப்புக் கோரியிருக்கிறாய்’ என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து வெளியேறி எங்களிடம் வந்தார்கள். மேலும், ‘அபூ உசைதே! இரண்டு வெண்ணிறச் சணல் ஆடைகளை அவளுக்கு அளித்து, அவளை அவளுடைய குடும்பத்தாரிடம் கொண்டுபோய்விட்டு விடு’ என்று கூறினார்கள்

    இஸ்லாமியர்களுக்கு சில கேள்விகள்:

    1) தோட்டத்திற்குள் முஹம்மது ஏன் சென்றார்?

    2) அந்த தோட்டத்திற்குள் ஒரு அறைக்குள் இருந்தது யார்?

    3) ஏன் அந்த பெண் அந்த தோட்டத்தில் இருந்த அறையில் கொண்டு வரப்பட்டாள்?

    4) முஹம்மது அப்பெண்ணிடம் என்ன கூறினார்?

    5) அவருக்கு பதிலாக அந்தப் பெண் என்ன கூறினாள்?

    6) மேற்கண்ட ஹதீஸில் அந்தப்பெண் முஹம்மதுவை என்னவென்று குறிப்பாகச் கேவலமாக சொன்னாள்?

    7) அரசி யார்? இடையன் யார்?

    8) தன்னை இடையன் என்றுச் சொல்லிய பிறகும் முஹம்மது என்ன செய்தார்?

    9) அந்த பெண் முஹம்மதுவிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள யாரிடம் பாதுகாப்பு கோரினாள்?

    10) ஒரு வேளை அந்தப்பெண் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனிடம் பாதுகாப்பு கோரியிருந்தால் என்ன நடந்துஇருக்கும்?

    11) முஹம்மது அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள ஒப்பந்தம் புரிந்திருந்தாரா?

    12) திருமண ஒப்பந்தம் புரியும் போதும் மணப்பெண்ணுடைய விருப்பம் தெரிவிக்க வேண்டியது அவசியமா இல்லையா?

    13) திருமணத்திற்கு “ஆம்” சொல்லி அந்தப் பெண் சொல்லியிருந்தால், இப்போது மட்டும் ஏன் “முஹம்மதுவை இடையன்” என்றுச் சொல்லி மறுக்கிறாள்?

    14) திருமண ஒப்பந்தம் முறைப்படி நடந்திருந்தால், இந்தப்பெண் அதற்கு ஒப்புதல் அளித்து இருந்திருந்தால், இப்போது மட்டும் ஏன் அப்பெண் முஹம்மது தன்னைத் தொடவும் அனுமதி அளிக்கவில்லை?

    15) திருமண ஒப்பந்தம் செய்த முஹம்மது ஏன் இந்தப்பெண்ணை தன் சொந்த வீட்டில் தங்க வைக்காமல், ஏதோ ஊருக்கு வெளியே அல்லது ஒரு தோட்டத்திற்குள்ளே தனியாக தங்க வைத்தார்? (பெரிய பணக்காரர்கள் தங்கள் வைப்பாட்டிகளை லாட்ஜில் தங்க வைப்பதுப் போல).

    16) நியாயமான திருமணம் என்று இதனை முடிவு செய்தால், குறைந்த பட்சம், பெண் வீட்டிலாவது தங்க வைத்து இருந்திருக்கவேண்டுமே?

    17) முஹம்மதுவின் இதர மனைவிகள் தங்கும் இடத்தில் (அ) வீட்டில் ஏன் இந்த பெண் தங்க வைக்கப்படவில்லை?

    18) ஏதோ தவறு செய்வது போல, ஊருக்கு வெளியே அதுவும் ஒரு பெண்ணை கடத்திக்கொண்டு வந்து ஒரு தனி அறையில் அடைத்து வைப்பது போல ஒரு நபி ஏன் இந்த பெண்ணை தங்க வைத்திருந்தார்?

    19) இந்த பெண் குறிப்பாக அந்த தோட்டத்தில் ஒரு அறையில், முஹம்மது வருவார் என்று சொல்லி வைத்தாற் போல தங்கவைக்கப்பட்டு இருக்கிறாள் என்பது இதன் மூலம் விளங்குகிறதல்லவா?

    20) இந்த பெண் புத்திசாலித்தனமாக “முஹம்மது தன்னை தொடக்கூடாது என்றுச் சொல்லி, அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பு கோரியதால்” முஹம்மது அடிபணிந்து அவளை விட்டுவிட்டார். ஒரு வேளை அல்லாஹ் அல்லாத வேறு இறைவன் பெயரைச் சொல்லி அவள் பாதுகாப்பு கோரியிருந்தால், அந்த அறையில் என்ன நடந்து இருந்திருக்கும்?

    21) தன் வலிமையை பயன்படுத்தி பெற்றோர்களை பயப்படவைப்பது, உன் பெண்ணை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொல்லி ஒப்பந்தம் ஒன்று போடுவது, அந்த பெண்ணை தனியே எங்கேயோ ஒரு அறையில் தங்க வைக்கச் சொல்வது, பிறகு அந்த பெண்ணோடு உடலுறவு கொள்ள அங்குச் செல்வது, அப்பெண் மறுத்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரினால், உடனே விவாகரத்துச் செய்துவிட்டு சென்றுவிடுவது. இது தான் ஒரு நபிக்கு இருக்கவேண்டிய குணமா? இது தான் உலக மக்கள் பின்பற்றத் தகுந்த ஒரு நல்ல நடத்தையா?

    22) திருமணம் என்றுச் சொன்னால், பெண்ணை கேட்காமல் திருமண ஒப்பந்தம் போடுவது, பிறகு உடலுறவிற்கு அப்பெண்ணிடம் செல்வது இதுதான் முஹம்மதுவைப் பொறுத்தமட்டில் திருமணமா?

    23) முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும், ஒரு நியாயமான காரணம் இருக்கும், மற்றவர்களின் நன்மை அடங்கியிருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் இந்த மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்ட திருமண ஒப்பந்தம் மூலமாக, எந்த நன்மை யாருக்கு உண்டாகி இருந்தது என்று விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்?

    24) அல்லாஹ்வின் மிகப்பெரிய நபி, அதுவும் கடைசி நபியைப் பார்த்து “நான் ஒரு அரசி, நீ ஒரு இடையன்” உன்னைப்போல உள்ள நபருக்கு ஒரு அரசி அன்பளிப்பாக தருவாளா என்று ஒரு பெண் சொல்லும் படி நடந்துக்கொண்டாரே, இதனை கண்டித்து அல்லாஹ் வசனம் எதுவும் இறக்கவில்லையோ? அல்லது இது என் நபிக்கு சர்வ சாதாரணமான விஷயம் தானே என்று அல்லாஹ் விட்டுவிட்டாரா?

    25) அந்த இடத்தில், அந்த குறிப்பிட்ட தோட்டத்தில் அந்த அறையில் தங்க வை, நான் அந்த மணித்துளியில் வந்து என் வேலையை முடித்துக்கொள்கிறேன் என்றுசொல்லி வைத்தாற் போல, தன் தோழர்களை வேறு இடத்தில் உட்கார வைத்துவிட்டு, உடலுறவு கொள்வதற்கு முஹம்மது வந்துள்ளார், இது ஒரு நல்ல மனிதருக்கு அல்லது ஆன்மீக தலைவருக்கு தகுதியான செயலாக தெரியவில்லையே! இஸ்லாமியர்களே உங்களுக்கு இப்படி தோன்றவில்லையா?

    இந்த திருமண ஒப்பந்தம், மற்றும் முஹம்மதுவின் மேற்கண்ட நிகழ்ச்சி எந்த வகையில் இஸ்லாமுக்கு நன்மை செய்கிறது அல்லது இது பின்பற்றத்தகுந்த ஒரு நடத்தையா? முஹம்மது நடந்துக்கொண்டது போல, இந்த ஹதீஸை படிக்கும் இஸ்லாமியர்களின் தந்தை, ஒரு பெண்ணைப் பற்றி அவர்களின் பெற்றோர்களிடம் பேசி, ஒப்பந்தம் போட்டு, அந்தபெண்ணை ஒரு லாட்ஜில் ஒரு அறையில் தங்க வைத்துவிட்டு, பிறகு அவளிடம் சென்று, உன்னை எனக்கு அன்பளிப்பாக கொடு என்றுச் சொல்லும் போது, அந்த பெண் நீ ஒரு இடையன் நான் ஒரு அரசி உனக்கு இது தகுதியில்லை என்றுச் சொன்னால், உங்கள் தந்தையைப் பற்றி பெருமித்தோடு தலை நிமிர்ந்து நடந்துச் செல்வீர்களா?http://periyarnaathigan.blogspot.com/

    சிந்தியுங்கள்….
    உங்கள் இஸ்லாமிய ஆதாரமாகிய சஹீஹ் புகாரி ஹதீஸிலிருந்து ஒரு துகள் இது…

    இவரையா பின்பற்றவேண்டும் என்று சொல்கிறீர்கள்…?

  9. “ஒரு பெண்ணை அனுபவிப்பதற்கு ஒரு ஆண் அந்த பெண்ணுக்கு தரும் பணம்தான் மெஹர்.

    ஒரு பெண்ணோடு கலந்துவிட்டதுதான் காரணம். அதற்காகத்தான் அந்த மெஹர் திரும்ப பெறக்கூடாது. அந்த கலப்புக்கு கொடுக்கும் விலைதான் மெஹர். இதற்கு பெயர் விபச்சாரம். திருமணம் அல்ல.”

    நாத்திக அண்ணாச்சி, ஏதோ ஒரு பகடு எடுத்த வாந்தியை சாப்பிட்டு, மீண்டும் வாந்தியா!!??

    ஒரு ஆணை அனுபவிப்பதற்கு ஒரு பெண் அந்த ஆணுக்கு தரும் பணம்தான் வரதட்சனை.

    வரதட்சனையும் கொடுத்து, தனது மகளையும், கொடுக்கும் அந்த அப்பன், மாமாவா? அல்லது மாமனாரா?

    இதற்கு பெயர் விபச்சாரமா??. திருமணமா??

    சட்டென சொல்லுங்க நாத்திகண்ணாச்சி.

  10. இந்த கூத்தை கேளுங்கள்.
    முகமது இறந்த பிறகு அவருடைய மனைவிகளை மணக்க கூடாது என்று அல்லாவே கூறிவிடார்..
    33:53. முஃமின்களே! (உங்களுடைய நபி) உங்களை உணவு அருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர்கள்; ஆனால், நீங்கள் அழைக்கப்பட்டீர்களானால் (அங்கே) பிரவேசியுங்கள்; அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய் விடுங்கள்; பேச்சுகளில் மனங்கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்து விடாதீர்கள்; நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும்; இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார்; ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை; நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள். அதுவே உங்கள் இருதயங்களையும் அவர்கள் இருதயங்களையும் தூய்மையாக்கி வைக்கும்; அல்லாஹ்வின் தூதரை நோவினை செய்வது உங்களுக்கு தகுமானதல்ல; அன்றியும் அவருடைய மனைவிகளை அவருக்குப் பின்னர் நீங்கள் மணப்பது ஒருபோதும் கூடாது; நிச்சயமாக இது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் (பாவ) காரியமாகும்
    இதில் முகமதுவின் சந்தேக புத்தி தெளிவாக புரிகிறது. அது ஏன் என்று ஒரு விளக்கம் பண்ணைக்காரன் கொடுத்த இணைப்பில் இருந்தது. அது என்ன படியுங்கள்
    Allah’s Messenger (pbuh) said: ‘[In the Paradise,] a woman will be with her last husband.’ (Tabaqaat Abu Shaikh p.270. Albani classified it as Sahih in Silsala Sahiha H. 1281)
    அதாவது சொர்க்கத்தில் முஸ்லிமாக்கள் தங்கள் இறுதி கணவருடன்(ஒரே ஆள்தான்) இருப்பார்களாம்.முகமதுவுடன் இருக்க விரும்பிய அவர் மனைவிகள் வேறு திருமணம் செய்யவில்லையாம்.இது அனைத்து முஸ்லிமாக்களுக்கும் பொருந்தும்.

    Huzaifa (Prophet’s Companion) said to his wife, ‘If you wish to be my wife in the Heaven do not marry anyone after me for a woman will be with last of his husbands and for this reason Allah forbade it for the wives of the Messenger (pbuh) to remarry after him.’ (Mushkil Al-Athaar 2/147 Hadith 552)

    http://www.letmeturnthetables.com/2009/10/why-were-wives-of-holy-prophet-pbuh-not.html#comment-form

    ஆகவே மறுமணம் செய்யும் முஸ்லிமாக்கள் தங்கள் இறந்த கணவருடன் சொர்க்கத்தில் இருக்க விரும்பாதவர்களே.

    அல்லது தங்கள் இறந்த கணவரை வெறுக்கும் பெண்கள் மட்டுமே மறுமணம் புரியலாம்.வாழ்க இஸ்லாமின் பெண்ணுரிமை super

  11. தவ்ஹித்வாதி என்ற பெயரில் உளரும் லூசு ,சி.பி.கனி வேண்டாம் .நானே அதற்கு தீர்வு சொல்லியுள்ளேன் அதற்கு ஒசங்காச்சாவை அழைத்து வந்தால் போதும்

    ) தோட்டத்திற்குள் முஹம்மது ஏன் சென்றார்?
    தனது மனைவியை சந்திக்க ,
    2) அந்த தோட்டத்திற்குள் ஒரு அறைக்குள் இருந்தது யார்?
    மணமகளின் தாதி
    3) ஏன் அந்த பெண் அந்த தோட்டத்தில் இருந்த அறையில் கொண்டு வரப்பட்டாள்?
    புது மனைவிக்காக ஒதுக்கப்பட்ட வீடு தான் அது.
    4) முஹம்மது அப்பெண்ணிடம் என்ன கூறினார்?
    தன்னை மணந்து கொள்ள சம்மதமா?என்ற அர்த்தம் தரும் கேள்வியை கேட்கிறார்.
    5) அவருக்கு பதிலாக அந்தப் பெண் என்ன கூறினாள்?
    அவரை வர்க்க ரீதியாக சாடினாள்.
    6) மேற்கண்ட ஹதீஸில் அந்தப்பெண் முஹம்மதுவை என்னவென்று குறிப்பாகச் கேவலமாக சொன்னாள்?
    ஆடு மேய்க்கும் தொழிலை கேவலமாக சொன்னாள்.
    7) அரசி யார்? இடையன் யார்?
    அரசி ,அந்த பெண் .இடையர் முஹம்மது நபி[ஸல்]
    தன்னை இடையன் என்றுச் சொல்லிய பிறகும் முஹம்மது என்ன செய்தார்?
    ஸ்டாலின்,மாவோ போன்று சுட்டுத் தள்ளாமல் ,இரு ஆடைகளை பரிசாக வழங்கி அவரது தந்தையிடம் பாதுகாவலுடன் அனுப்பினார்.
    9) அந்த பெண் முஹம்மதுவிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள யாரிடம் பாதுகாப்பு கோரினாள்?
    அந்த பெண்ணுக்கு அல்லாஹ்வை பற்றி தெரியாதவராக இருந்தது.பொறாமை குணம் உள்ள பெண் நபி[ஸல்]மனைவியாகி இவள் பெருமை அடைந்து விடக்கூடாது என்பதற்காக அதை தடுக்க அவள் சொல்லி கொடுத்த வார்த்தையின் படி அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரினாள்.
    10) ஒரு வேளை அந்தப்பெண் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனிடம் பாதுகாப்பு கோரியிருந்தால் என்ன நடந்துஇருக்கும்?
    வாய்ப்புகள் இல்லை .ஏனெனில் அவளுக்கு அவ்வாறே சொல்லிகொடுக்கப்பட்டது.
    11) முஹம்மது அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள ஒப்பந்தம் புரிந்திருந்தாரா?
    அவர் தந்தை அவருக்கு வலி [பொறுப்பாளர்].அவர் முதலில் தனது மகளின் சம்மதத்துடன் ஒப்பந்த பண்ணியிருக்கிறார்.அதன் பிறகு பெண்ணின் சம்மதம் நேரில் கேட்காப்டுகிறது
    12) திருமண ஒப்பந்தம் புரியும் போதும் மணப்பெண்ணுடைய விருப்பம் தெரிவிக்க வேண்டியது அவசியமா இல்லையா?
    அவசியம் .அதைத்தான் அங்கு செய்திருக்கிறார்.
    13) திருமணத்திற்கு “ஆம்” சொல்லி அந்தப் பெண் சொல்லியிருந்தால், இப்போது மட்டும் ஏன் “முஹம்மதுவை இடையன்” என்றுச் சொல்லி மறுக்கிறாள்?
    அந்த பெண்ணை பார்க்க வந்த சிலரின் சொல்லை கேட்டு மறுக்கிறார்.
    14) திருமண ஒப்பந்தம் முறைப்படி நடந்திருந்தால், இந்தப்பெண் அதற்கு ஒப்புதல் அளித்து இருந்திருந்தால், இப்போது மட்டும் ஏன் அப்பெண் முஹம்மது தன்னைத் தொடவும் அனுமதி அளிக்கவில்லை?
    அவளது தந்தை நபி[ஸல்] அவர்கள் பற்றி அப்பெண்ணுக்கு ,மதினா நகரின் தலைவர் என்று அவளிடம் சொல்லியிருப்பார். தலைவர் என்றால் தனது தந்தையைப்போல் மாடமாளிகையில் இருப்பார் என்று நம்பி ஒப்புதல் அளித்திருக்கலாம் .அதன் பின்னர் அவளது வீடு இதுதான் என்று சொல்லப்பட்டிருக்கும். இந்த ஒரு ஆட்டுமந்தை தோட்டத்திலுள்ள ஒரு சிறிய அரை தான் தனது வீடு என்பதை அறிந்து அவரின் மானம் மாறியிருக்கலாம்.
    15) திருமண ஒப்பந்தம் செய்த முஹம்மது ஏன் இந்தப்பெண்ணை தன் சொந்த வீட்டில் தங்க வைக்காமல், ஏதோ ஊருக்கு வெளியே அல்லது ஒரு தோட்டத்திற்குள்ளே தனியாக தங்க வைத்தார்? (பெரிய பணக்காரர்கள் தங்கள் வைப்பாட்டிகளை லாட்ஜில் தங்க வைப்பதுப் போல).
    அந்த பெண்ணின் சம்மதம் பெற்று அதன் பிறகு வீடு ஏற்பாடு செய்யலாம் என்ற காரணத்திற்க்காக இருக்கலாம்.மேலும் அந்த பெண் வந்ததை அறிந்து மதீனாவிலுள்ள மக்கள் எல்லாம் பார்க்க வந்தனர்.அதனால் இது நா.நா வின் அற்ப குற்றச்சாட்டு.
    16) நியாயமான திருமணம் என்று இதனை முடிவு செய்தால், குறைந்த பட்சம், பெண் வீட்டிலாவது தங்க வைத்து இருந்திருக்கவேண்டுமே?
    நியாயமான திருமணம் என்பதால் தான் கணவர் இடத்திற்கு அழைக்கப்பட்டார்.அவர் வந்தும் அநேக பெண்கள் அவரை பார்க்க வந்தனர்.
    17) முஹம்மதுவின் இதர மனைவிகள் தங்கும் இடத்தில் (அ) வீட்டில் ஏன் இந்த பெண் தங்க வைக்கப்படவில்லை?
    இதரமனைவிகள் அனைவரும் ஒரே வீட்டில் தங்கவில்லை.
    18) ஏதோ தவறு செய்வது போல, ஊருக்கு வெளியே அதுவும் ஒரு பெண்ணை கடத்திக்கொண்டு வந்து ஒரு தனி அறையில் அடைத்து வைப்பது போல ஒரு நபி ஏன் இந்த பெண்ணை தங்க வைத்திருந்தார்?
    ஊருக்கு வெளியே இருந்தால் அனைத்து பெண்களும் அவரை பார்க்க வந்திருப்பார்களா?
    19) இந்த பெண் குறிப்பாக அந்த தோட்டத்தில் ஒரு அறையில், முஹம்மது வருவார் என்று சொல்லி வைத்தாற் போல தங்கவைக்கப்பட்டு இருக்கிறாள் என்பது இதன் மூலம் விளங்குகிறதல்லவா?
    அவருடைய சம்மதம் கேட்க வருவார் என்று ஏற்கனவே அந்த பெண்ணை பார்க்க வந்த பெண்கள் சொல்லியிருக்கலாம்.
    20) இந்த பெண் புத்திசாலித்தனமாக “முஹம்மது தன்னை தொடக்கூடாது என்றுச் சொல்லி, அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பு கோரியதால்” முஹம்மது அடிபணிந்து அவளை விட்டுவிட்டார். ஒரு வேளை அல்லாஹ் அல்லாத வேறு இறைவன் பெயரைச் சொல்லி அவள் பாதுகாப்பு கோரியிருந்தால், அந்த அறையில் என்ன நடந்து இருந்திருக்கும்?
    அந்த பெண் முஸ்லிம் இல்லை என்று அறிந்து .அவளது தந்தை முஸ்லிம் என்று பொய் சொன்னதற்க்கான விளக்கம் கேட்டிருக்கக்கூடும் ..
    21) தன் வலிமையை பயன்படுத்தி பெற்றோர்களை பயப்படவைப்பது, உன் பெண்ணை நான் திருமணம் செய்துக்கொள்கிறேன் என்றுச் சொல்லி ஒப்பந்தம் ஒன்று போடுவது, அந்த பெண்ணை தனியே எங்கேயோ ஒரு அறையில் தங்க வைக்கச் சொல்வது, பிறகு அந்த பெண்ணோடு உடலுறவு கொள்ள அங்குச் செல்வது, அப்பெண் மறுத்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு கோரினால், உடனே விவாகரத்துச் செய்துவிட்டு சென்றுவிடுவது. இது தான் ஒரு நபிக்கு இருக்கவேண்டிய குணமா? இது தான் உலக மக்கள் பின்பற்றத் தகுந்த ஒரு நல்ல நடத்தையா?
    இது முற்றிலும் நான் நாத்திகனின் இஸ்லாமிய அவதூறு வெறியை காட்டுகிறது .அந்த சுட்டியில் பார்த்து உண்மையை தெரிந்து கொள்ளாம்.யூதர்களின் இணையதளத்தை பார்த்து இஸ்லாம் பற்றி விமர்சிப்பது ஜெயா டிவி பார்த்து திமுக பற்றி தெரிந்து கொள்வது போல்.
    22) திருமணம் என்றுச் சொன்னால், பெண்ணை கேட்காமல் திருமண ஒப்பந்தம் போடுவது, பிறகு உடலுறவிற்கு அப்பெண்ணிடம் செல்வது இதுதான் முஹம்மதுவைப் பொறுத்தமட்டில் திருமணமா?
    திருமணம் என்று சொன்னால்,அவளது தந்தை சொல்லை நம்பி திருமணம் செய்வது ,மனைவியான பிறகுதான் அவளை சந்திக்க முடியும் என்பதால் ,உண்மை நிலையை அறிந்து கொள்ளுதல்/
    ஒரு ஹதித் ;இது போன்று ஒரு பெண்ணுக்கு அவரது தந்தை திருமணம் செய்து வைத்தார்.அந்த பெண் நபி[ஸல்] அவர்களிடம் முறையிடுகிறார். தனது தந்தை தனது சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து வைத்துவிட்டார் என்பதை தெரிவிக்கிறார்.உடன் அந்த திருமணத்தை ரத்து செய்துவிடுமாறு நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள் என்ற ஒரு நபிவழி தொகுப்பு செய்தி சொல்லுகிறது.
    23) முஹம்மதுவின் ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு நல்ல காரணம் இருக்கும், ஒரு நியாயமான காரணம் இருக்கும், மற்றவர்களின் நன்மை அடங்கியிருக்கும் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள் இந்த மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்ட திருமண ஒப்பந்தம் மூலமாக, எந்த நன்மை யாருக்கு உண்டாகி இருந்தது என்று விளக்க கடமைப்பட்டுள்ளார்கள்?

    அந்த திருமணம்தான் நடைபெறவில்லையே .இதிலும் மணமகள் சம்மதம் இல்லாமல் திருமணம் நடக்கக் கூடாது என்பதும் சில தந்தையர்கள் அவ்வாறு ஏமாற்றி இருந்தாலும் மணமகள் சம்மதம் பெறாமல் திருமண முதல் நடவடிக்கையை துவங்கிடக் கூடாது என்பதை அறிய முடிகிறது.மேலும் அப்பெண் சம்மதம் இல்லை என்று சொல்லிவிட்டால் கோபம் கொள்ளாமல் அந்த பெண்ணுக்கு ஏதாவது வெகுமதி கொடுத்து பாதுகாப்புடன் அவளது தந்தை இடம் அனுப்பி வைத்துவிட வேண்டும் என்பதை அறிய முடிகிறது.

    24) அல்லாஹ்வின் மிகப்பெரிய நபி, அதுவும் கடைசி நபியைப் பார்த்து “நான் ஒரு அரசி, நீ ஒரு இடையன்” உன்னைப்போல உள்ள நபருக்கு ஒரு அரசி அன்பளிப்பாக தருவாளா என்று ஒரு பெண் சொல்லும் படி நடந்துக்கொண்டாரே, இதனை கண்டித்து அல்லாஹ் வசனம் எதுவும் இறக்கவில்லையோ? அல்லது இது என் நபிக்கு சர்வ சாதாரணமான விஷயம் தானே என்று அல்லாஹ் விட்டுவிட்டாரா?
    அந்த பெண் தன்னை யாரென்று அறியாதவளாக இருக்கிறாள் .இஸ்லாத்தினப் பற்றியோ .நபிகள் பற்றியோ ஏதும் அவள் அறிந்திருக்கவில்லை என்பது தெளிவாக புரிகிறது.அதனால் அவள் நிலைக்கு வருந்தி இரண்டு ஆடைகளை பரிசாக வழங்கி அன்ப்பியுள்ளார்.அவரை காம வெறியர் என்று சொல்லும் நான் நாத்திகன் போன்ற அவதூறு பேர்வழிகளுக்கு நத்தியடியாக உள்ளது.ஸ்டாலின் ,மாவோ போன்றவர்களை இப்படி சொன்னால் என்ன நடந்திருக்கும் என்பது யாருக்கும் தெரியாது.அவளது தந்தையும் தனது மகள் ரசிய அரண்மனையில் வாழ்ந்து கொன்று இருக்கிறாள் என்ற சந்தோசத்தில் மரணித்து விடுவார்.
    25) அந்த இடத்தில், அந்த குறிப்பிட்ட தோட்டத்தில் அந்த அறையில் தங்க வை, நான் அந்த மணித்துளியில் வந்து என் வேலையை முடித்துக்கொள்கிறேன் என்றுசொல்லி வைத்தாற் போல, தன் தோழர்களை வேறு இடத்தில் உட்கார வைத்துவிட்டு, உடலுறவு கொள்வதற்கு முஹம்மது வந்துள்ளார், இது ஒரு நல்ல மனிதருக்கு அல்லது ஆன்மீக தலைவருக்கு தகுதியான செயலாக தெரியவில்லையே! இஸ்லாமியர்களே உங்களுக்கு இப்படி தோன்றவில்லையா?
    நீவிர் கூறியிருப்பது சரியான தகவல் இல்லை. உமது கற்பனை அவதூறுக்கு ஏற்றவாறு சம்பவத்தை கூறியுள்ளீர்கள்
    //முஹம்மதுவின் மேற்கண்ட நிகழ்ச்சி எந்த வகையில் இஸ்லாமுக்கு நன்மை செய்கிறது அல்லது இது பின்பற்றத்தகுந்த ஒரு நடத்தையா? ///
    திரும்பவும் அதே கேள்விகள் .இதுபோன்று நமது வாழ்க்கையில் நடந்தால் அதற்கான தீர்வை சொல்லித்தருகிறது.
    ////முஹம்மது நடந்துக்கொண்டது போல, இந்த ஹதீஸை படிக்கும் இஸ்லாமியர்களின் தந்தை, ஒரு பெண்ணைப் பற்றி அவர்களின் பெற்றோர்களிடம் பேசி, ஒப்பந்தம் போட்டு, அந்தபெண்ணை ஒரு லாட்ஜில் ஒரு அறையில் தங்க வைத்துவிட்டு, பிறகு அவளிடம் சென்று, உன்னை எனக்கு அன்பளிப்பாக கொடு என்றுச் சொல்லும் போது, அந்த பெண் நீ ஒரு இடையன் நான் ஒரு அரசி உனக்கு இது தகுதியில்லை என்றுச் சொன்னால், உங்கள் தந்தையைப் பற்றி பெருமித்தோடு தலை நிமிர்ந்து நடந்துச் செல்வீர்களா?////
    லாட்ஜ் என்பதெல்லாம் பதிவரின் அர்த்தமற்ற கற்பனை .முந்திய பதில்களில் இதுபற்றி சொல்லப்பட்டுள்ளது. இப்போது அதே போன்று இரண்டாவது அல்லது மூன்றாவது அல்லது நாலாவது திருமணத்திற்கு பெறோர்கள் பேசி ஒப்பந்தம் போட்டு வந்தால் அந்த மணப்பெண்ணை எங்கு வைப்பது .அவளிடம் சம்மதம் பெறுவது அப்போது நீ ஒரு இடையர் என்று சொல்லும்பொழுது தலை நிமிர்ந்து நடப்பதா?தலை கவிழ்ந்து நடப்பதா? என்று முடிசெய்வோம் .
    இங்கே மறைந்திருக்கும் பெண் உரிமை பற்றி கண்டு கொள்ளவில்லையே ஏன்?
    சிந்தியுங்கள் நாத்திக பேர்வழிகளே ,ஒரு பெண்ணின் உரிமைக்கு எந்த அளவுக்கு நபி[ஸல்] அவர்கள் .மரியாதை கொடுத்துள்ளார்கள்..இது போன்று அந்தகாலத்தில் வாழ்ந்த தலைவர்கள் மன்னர்கள் பெண்களுக்கு மரியாதை கொடுத்திருப்பார்களா?அப்படி அவர்களை அவமதித்தால் கொடுக்கும் பரிசு என்னவாக இருக்கும்?மரணதண்டனை அல்லவா பரிசாக கொடுத்திருப்பார்கள்? தன்னை அவமதித்தையும் பொருட்படுத்தாமல் அவளுக்கு பரிசு கொடுத்து அனுப்பயுள்ளதால் நபி[ஸல்] பெண்களை கண்ணியபடுத்தி உள்ளதை இதன் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.அந்த பெண்ணை நபி[ஸல்] அவர்கள் தானக் விரும்பி செல்லவில்லை.. புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அந்த கூட்டத்தின் தலைவர் ,தனது மகளை நபி[ஸல்] அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க முனைகிறார் .மேலும் அப்பெண்ணிடம் சம்மதம் அறியவே அந்த பெண்ணை அழைத்து வரசெய்துள்ளார். அந்த பெண்ணின் சம்மதம் பெற்ற பிறகு மற்ற மனைவியர் தங்கும் பகுதிக்கு அழைத்து செல்ல இருந்திருக்கலாம். அதனாலே அந்த பெண்ணின் தாதி இருக்கும் வேளையில் அணுகினார்.மற்றும் தனது தோழர்களையும் அழைத்து சென்றார். அந்த பெண் சம்மதம் தெரிவித்து இருந்தால் தன்னுடன் அழைத்து சென்ற தோழர்களை அந்த திருமணத்திற்கு சாட்சிகளாக்கி கொள்ளவும் அதன் பின்னர் தனது இருப்பிடத்திற்கு அழைத்து செல்லவுமே இருந்தார்கள் என்றுதான் இதை நல்லவர்கள் கணித்துக் கொள்வார்கள். உம்மை போன்ற நாலாந்திர பேர்வழிகளுக்கு இப்படி கிறுக்குத்தனமான கற்பனை செய்து இஸ்லாத்தையும் அதை உயிரினும் மேலாக கொண்டுள்ள மக்களையும் கேவலப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கம் .

  12. நான் நாத்திகன் ,இப்போது நாத்திகர்களுக்கு எப்படியாவது இஸ்லாத்தை ஒழித்து கட்டிவிடவேண்டும் என்ற அற்ப வெறி தலை தூக்கியுள்ளது.
    ////அதற்காகத்தான் அந்த மெஹர் திரும்ப பெறக்கூடாது. அந்த கலப்புக்கு கொடுக்கும் விலைதான் மெஹர். இதற்கு பெயர் விபச்சாரம். திருமணம் அல்ல.///
    இவர் கண்டுபிடுத்து விட்டார். குர்ஆனை ஆய்வு செய்து திருமணம் ஒரு விபச்சாரம் என்று.அவ்வாறெனின் திருமணத்தில் ஒவ்வொருவரும் மணமகளுக்கு கொடுக்கும் அன்பளிப்புகள் எல்லாம் விபச்சாரம் கட்டனம்தானா?
    நாத்திகத்தில் நடைபெறும் திருமணம்கள் கட்டணம் இல்லாமல் நடக்கும் விபச்சாரமா?
    உறுதியான வாக்குறுதி என்றால் நாத்திகன் பார்வையில் என்ன அர்த்தம் ? வாக்குறுதி என்பது ஒப்பந்தம் ஆகாதா? விபச்சாரம் எனில் கணவரின் சொத்தில் மனைவிக்கு உள்ள பங்கை குரான் ஏன் சொல்லவேண்டும்? குழந்தைகள் பற்றி ஏன் பேசவேண்டும் ?மனைவி சொத்தில் கணவருக்கு உரிய பங்கை ஏன் பேசவேண்டும்?
    இல்லையெனில் விபச்சாகரர்களுக்கு எல்லாமே அப்படிதான் தெரியுமா?

  13. மார்க்க சகோ. நான் ஆத்திகன் அவர்களே,

    மெஹருக்கும் வரதட்சிணைக்கும் உள்ள வித்தியாசம் அறிய
    முழு கட்டுரைக்கும் செல்லுங்கள்

    http://pagadu.blogspot.com/2011/12/blog-post.html

    யா அல்லாஹ்

  14. எனது அருமை முஸ்லிம் நண்பர்களே இறைவனிடமிருந்து வந்தது என்ற நம்பிக்கையாலயே திருக்குரான் மிக உயர்ந்தது என்று கூறுகிறீர்கள். எனவே நான் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலேயே கேட்கின்றேன்…?

    திருக்குறள், ஆத்திச்சூடி, நாலடியார் போன்ற அறநூல்களைவிட அப்படியென்ன உயர்வான அல்லது ஈடான கருத்துக்கள் திருக்குரானில் ஏதேனுமிருந்தால் திருக்குரான் வசனங்கள் அந்த நோக்கில்தான் அருளப்பட்டது என்று நிருபியுங்கள்…? தலைவணங்கி ஏற்றுக்கொள்கின்றேன்.

    தயவுசெய்து திருக்குரானை புகழ்வேண்டும் என்பதற்க்காக இறைவனால் அருளப்பட்டது, முகமது நபி படிப்பறிவில்லாதவர், General theory of relativity உள்ளது, Grand unified theory(ஒரு எடுத்துக்காட்டுக்காக) உள்ளது என்றெல்லாம் சொல்லாதீரகள் ஏனெனில் எங்களாலும் சித்தர் பாடல்களில் மெய்சிலிர்க்கவைக்கும் அறிவியல் உள்ளது என்று நிருப்பிக்கவே முடியும்….

  15. என்னிடம் வாருங்கள் என்று ஒவ்வொரு தளத்துக்கும் வந்து லிங்க் கொடுக்கும் விபச்சாரி இப்னு .அவனுக்கு மாமா வேலை பார்க்கும் செங்கொடி

    ************************************

    நண்பர் இப்ராஹிம், எல்லை தாண்டாதீர்கள்.

  16. நிலா ,ஆம் இதுவும் அந்த பெண்ணின் உரிமைக்கே உடன்பட்டுள்ளது. தனது முதல் கணவன் தன்னுடன் மனநிறைவோடு வாழ்ந்திருந்தால் அவள் மறு திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டாள்.எத்தனையோ இளம் இஸ்லாமிய விதவைகள் ,அந்த கணவர் மூலம் பெற்று குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி வாழ்ந்துவருவதை நான் பார்த்துள்ளேன்.மேலும் மறுமனம் விரும்புவோர் அவரது விருப்பத்திற்கு ஏற்றவாறு வாழட்டும். மறுமணம் பண்ணியே ஆகவேண்டும் அதுதான் பெண்ணுரிமை என்று நீங்கலாக எப்படி முடிவு செய்ய முடியும்?

  17. கழுதை ;கற்பூரத்தில் அப்படி என்ன வாசனை இருக்கிறது ?கற்பூர வாசனை உனக்கு தெரியுமா?என்று கேட்க வந்துவிட்டீர்கள்
    ப.கா ;அதுதான் உனக்கு தெரியாதே ,உன்னிடம் எப்படி அது பற்றி சொல்ல முடியும்?

  18. நண்பர் இப்ராஹிம், எல்லை தாண்டாதீர்கள்.
    செங்கொடி, ஆப்கானில் எல்லை தாண்டியது ஏன்?

  19. நண்பர் பண்ணைக்காரன்
    மார்க்க அறிஞர் பி.ஜே ஆண்கள் காமம் மீறினால் 4 திருமணம் வரை செய்ய்லாம என்கிறார்.திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமே என்கிறார்.நீங்கள் என்ன்வென்றால் இந்து மத கோட்பாடாகிய ஒரே கணவன் காலத்துக்கும் என்று இஸ்லாமுக்கு விரோதமாக் பேசுகிறீர்கள்.இன்னும் குரான்[ விளக்கம்] அடிமைப் பெண்களின் விரக தாபத்தை போக்கவே, அவர்களை அன்பு காட்டவே அவர்களிடன் உடலுறவு என்கிறது.

    சொர்க்கத்தில் ஒரு ஆண் 4(அல்லது அதற்கும் மேலா)+72 ஹூரிகள்+பல சிறுவர்கள் என்று குஜாலாக இருக்க .மனைவி மட்டும் ஒரே இறுதி கணவனுடன் வாழ சொல்லும் அல்லாவின் சிந்தனையை என்ன சொல்வது?

    http://www.letmeturnthetables.com/2009/10/what-islam-says-regarding-physical.html
    வரதட்சனையையும் மஹரையும் ஒப்பிடுவோம்

    வரதட்சனை என்பது பெண்ணின் த்ந்தை தாய் வழி சொத்து,சொத்துரிமை,இது கட்டாயமும் இல்லை.இதில் கணவனுக்கு உரிமை இல்லை.வரதர்சனை என்பது இந்திய சட்டப்படி குற்றம்.

    ஆனால் மெஹர் என்பது முஸ்லிம் ஆண் கன்டிப்பாக கொடுக்க வேண்டும்.
    ______________-
    ஒரு வேளை விவார ரத்து ஆனால் வரதட்சனை பெண்ணிடமே திருப்பி அளிக்கப் பட வேண்டும்.சூழலுக்கு தக்க அவளுக்கு ஜீவனாம்சம் அளிக்கப் படவேண்டும்.

    இஸ்லாமில் ஆண் பெண்ணை விலக்கு செய்தால் மஹரை அவளே வைத்துக் கொள்ளலாம்.பெண் ஆணை விவாக ரத்து செய்தால் மஹரை திருப்பி அளிக்க வேண்டும்.ஜீவனாம்சம் கிடையாது
    இந்த ஆண்கள் ஆண்கள் நன்றாக விளையாடலாம்.முதல் மனைவியின் அனுமதி இன்றியே 2,3,4, திருமணம் +எண்ணற்ற வலக்கரம் சொந்தமாக்கிய பெண்கள்(வைப்பாட்டி) வைத்துக் கொள்ளலாம்..அபோது விவாக இரத்து அவசியம் இல்லை.முதல் மனைவி வெறுத்து போய் விலகினால் மஹர் திருப்பி ஆணுக்கு வந்து விடும் அவன் இன்னொரு பெண்ணை இதை கொடுத்து திருமணம் செய்ய்லாம். ஒரு சம்யத்தில் மொத்தம் 4 மனைவி மட்டும்தான் சுழற்சிமுறையில் வானமே எல்லை.
    இதில் இஸ்லாமில் கூட பெண்களுக்கு வரதட்சனை நகைகள் மூலம் அளிக்கப் படுகிறது. குறைந்த பட்சம் 5 பவுன் இல்லாமல்[1 இலட்சம்] திருமணம் நடப்பது இல்லை.மஹர் என்று 500 அல்லது 1000 ரூ மட்டுமே பேருக்கு கொடுக்கிறார்கள்.இதுவும் இந்துக்களின் பரிசப் பணம் போன்றது.
    இஸ்லாமில்?[விவகரத்து ஆனால் அல்லது ஆகா விட்டால்]

    கணவனின் சொத்தில் மனைவிக்கு எவ்வளவு பங்கு வரும்

    மனைவியின் சொத்தில் கணவனுக்கு எவ்வளவு பங்கு வரும்?

    ஒப்பீடு பார்ப்போமா?
    நணப்ர் பண்ணைக்காரனுக்கு தேவைப்பட்டால் அளிக்கலாம்.அவரின் விருப்பமே முக்கியம்

  20. ////சொர்க்கத்தில் ஒரு ஆண் 4(அல்லது அதற்கும் மேலா)+72 ஹூரிகள்+பல சிறுவர்கள் என்று குஜாலாக இருக்க .மனைவி மட்டும் ஒரே இறுதி கணவனுடன் வாழ சொல்லும் அல்லாவின் சிந்தனையை என்ன சொல்வது?///
    இறைவனை நம்பினால் இறைவனின் அனைத்து ஆற்றல்களையும் நம்பவேண்டும் .நல்ல பெண்களே சுவனம் அடைவார்கள் .அவர்கள் தங்களது அந்த சிறந்த கணவன் ஒருவனே போதும் என்று எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இங்கே மூன்று நாலு அல்லது அதற்கு மேல் தேடியவர்கள் நரகில் இருப்பார்கள்.சுவன பெண்களின் உணர்வுகள் ஒரு ஆணின் உணர்வுக்கு ஈடுகட்டக் கூடியதாகவே இருக்கும் என்பதுதான் இதன் பொருள்.
    ///வரதட்சனை என்பது பெண்ணின் த்ந்தை தாய் வழி சொத்து,சொத்துரிமை,இது கட்டாயமும் இல்லை.இதில் கணவனுக்கு உரிமை இல்லை.வரதர்சனை என்பது இந்திய சட்டப்படி குற்றம்.////
    வரதட்சணை என்பதில் கணவனுக்கு உரிமை இல்லையா?.ரொக்கமாக வாங்கிய வரதட்சணை பணத்தை கணவன் வீட்டார செலவு செய்துவிடுவார்கள். அந்த பெண்ணுக்கு சேரும் என்றால் இந்திய சட்டப்படி அது எப்படி குற்றமாகும்?
    /////ஆனால் மெஹர் என்பது முஸ்லிம் ஆண் கன்டிப்பாக கொடுக்க வேண்டும்.///
    மகர கொடுக்க இயலாத ஒரு ஆணிடம் குரான் வாசிக்க தெரியாத பெண்ணுக்கு அதை வாசிக்க கற்று கொடுத்து ,அதையே அந்த பெண் மகாராக ஏற்றுக் கொண்டு திருமணம் நடந்ததுக்கு நபிவழி செய்து உள்ளது.அதனால் மணமகள் மகரை கணவனுக்கு விட்டு கொடுக்கலாம்.
    ////ஒரு வேளை விவார ரத்து ஆனால் வரதட்சனை பெண்ணிடமே திருப்பி அளிக்கப் பட வேண்டும்.சூழலுக்கு தக்க அவளுக்கு ஜீவனாம்சம் அளிக்கப் படவேண்டும்////
    வரதட்சணை இந்து திருமனம்களில் திரும்ப அளிக்கப்பட்டதை நான் அறியவில்லை.
    .////இஸ்லாமில் ஆண் பெண்ணை விலக்கு செய்தால் மஹரை அவளே வைத்துக் கொள்ளலாம்.பெண் ஆணை விவாக ரத்து செய்தால் மஹரை திருப்பி அளிக்க வேண்டும்.ஜீவனாம்சம் கிடையாது///
    மகரை திருப்பி அளிப்பதால் அது விபச்சாரம் கிடையாது .திருமண ஒப்பந்தமே .
    ///இந்த ஆண்கள் ஆண்கள் நன்றாக விளையாடலாம்.////
    பலமுறைகள் பலராலும் விளக்கம் கொடுக்கப்பட்டது.நீங்கள் அறிவுபூர்வமகா விளக்கம் அளிக்கக் கூடியவர்கள் அல்லவா?
    இந்தியாவில் இந்து,கிறிஸ்தவ திருமண சட்டங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதாசாரத்தையும் முஸ்லிம் திருமண சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதாசாரத்தையும் ஆண்களையும் பெண்களையும் ஒப்பிட்டு சர்வே செய்து பாருங்கள்.உண்மை விளங்கும்.முஸ்லிம் வீடுகளில் வெடிக்காத ஸ்டவ் இந்துக்கள் வீடுகளை மட்டும் வெடித்த ரகசியம் தெரியும் .இந்துக்கள் ,கிறிஸ்தவர்களை விட முஸ்லிமகள் பலதார மனம் செய்தவர்கள் ,கள்ள உறவுக்காரர்கள் குறைவான சதவிகிதத்திலே இருப்பார்கள் என்பதை அறிவீர்கள்.
    இந்த உண்மைகளை அறிந்துகொண்டு ஆண்கள் எங்கு விளையாடுகின்றனர் என்பதை தெரிவியுங்கள் அவதூறு பரப்புவது எளிது.அவ்வாறு அவதூறு க்ளிலப்புவதே எங்கள் வேலை என்றால் உங்களை நாங்கள் கண்டு கொலவேண்டிய அவசியமில்லை .ஆனால் நாங்கள் நீதி நியாய போராளிகள் என்றால் ஆதாரத்துடன் பேசுங்கள்.சுழற்சி முறை என்று நீங்கள் சொல்லுவது போல் எனக்கும் நிறையவே கற்பனிக்க தெரியும் .
    ______________-இங்கே சொத்து விவரம் சொன்னது முஸ்லிம் திருமணம் விபச்சாரம் அல்ல ,திருமணமே என்பதற்கு ஆதாரமாக கூறப்பட்டது. அதை சரி கண்டுவிட்டீர்கள் என்று நம்புகிறேன் .அப்புறம் சொத்து பிரிவினையில் கணவன் மனைவிக்கு உள்ள ஏற்றத்தாழ்வை பற்றி பேசுவதாக இருந்தால் இது பற்றிய ஆன்லைன் பீஜெவில் மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு அதன் பின்னர் தொடருங்கள்

  21. நண்பர் வால்பையனை காணோம்!வாங்க வால்பையன்!

  22. முகமது தன் வளர்ப்பு மகனின் வீட்டிற்குச் செல்லும் போது, வாசலில் போடப்பட்டிருந்த துணி சிறிது காற்றினால் நகர்ந்ததால், தன் மருமகளிடம் பார்க்கக்கூடாததை முகமது பார்த்துவிடுகிறார். தன் மருமகளின் அழகு இவர் உள்ளைத்திற்குள் செல்கிறது . இதை தன் கணவனுக்கு ஜைனப் தெரிவிக்கும்போது, அவன் முகமதுவிடம் சென்று “தான் தன் மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் ஆசைப்பட்டதால், திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்றுச் சொல்கிறார்.

    அதற்கு முகமது, “வேண்டாம், உன் மனைவியை நீயே வைத்துக்கொள்” என்று சொல்கிறார்(அந்த காலத்தில் இஸ்லாமுக்கு முன்பு, இப்படி மருமகளை திருமணம் செய்துக்கொள்வது, மிகப்பெரும் குற்றமாக கருதப்பட்டது. அன்று மட்டுமல்ல இன்று கூட அது குற்றம் தான்.), இதை பார்த்துக்கொண்டு இருக்கிற அல்லா, உடனே ஒரு வசனத்தை இறக்குகிறார், தன் நபியின் ஆசையை பூர்த்தி செய்ய, அது தான் குர்-ஆன் 33:37.

    குர்-ஆன் 33:37
    (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; “அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்” என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (33:37)

    அல்லா சொல்கிறார், முகமதுவிற்கு தன் மருமகள் மீது ஆசை இருந்தும், மனிதர்களுக்கு பயந்து, (ஏனென்றால், அப்படிப் பட்ட வழக்கம் இருட்டில் வாழ்ந்ததாகச் சொல்லும் மக்கா அரபி மக்களிடம் கூட இல்லை) அதை மனதிலே மறைத்து ” உன் மனைவியை விவாகரத்து” செய்யவேண்டாம் என்றுச் சொன்னாராம். அதை அறிந்த அல்லா, வளர்ப்பு மகன் விவாகரத்து செய்துவிட்ட பிறகு உனக்கு உன் மருமகளோடு திருமணத்தை “நாம் செய்தோம் ” என்றுச் சொல்கிறார்.

    இப்படியெல்லாம் நடக்கவில்லை, சரித்திர ஆசிரியர் தவறாகச் சொன்னார் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள். சரி சரித்திர ஆசிரியர் சொன்னது தவறு என்றே வைத்துக்கொள்வோம், குர்-ஆனில் அல்லா சொன்னது தவறாகுமா? இந்த வசனம் இன்று இஸ்லாமியர்களிடம் உள்ள குர்-ஆனில் இல்லையா?
    ஒரு வளர்ப்பு மகன் தன் தந்தையைப் பார்த்து, “நான் விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்றுச் சொன்னால் அதன் பொருள் என்ன? இதற்கு முன்பு என்ன நடந்துயிருந்தால் இந்த வார்த்தைகள் வெளிவரும்?

    “உன் மனைவியை நீயே வைத்துக்கொள்” என்று முகமது சொன்னார் என்று குர்-ஆன் சொல்கிறது, சரித்திர ஆசிரியரை விட்டுவிடுவோம்.

    முகமது சொன்னது பதில் என்றால், அதற்கு முன்பு தன் மகன் என்ன சொல்லியிருப்பான் என்று சுலபமாக யூகிக்கலாம். இதற்கு Ph.D பட்டம் படித்துவரவேண்டிய அவசியமில்லை. எனவே, குர்-ஆன் வசனப்படி, முகமது தன் மகனின் வீட்டிற்குச் சென்று வரும் போது, ஏதோ நடந்துள்ளது, அதை தன் மனைவி மூலம் அறிந்த வளர்ப்பு மகன் தந்தையிடம் என்ன சொல்லியிருந்தால், முகமது இப்படி “உன் மனைவியை நீயே வைத்துக்கொள் ” என்றுச் சொல்லமுடியும். சிந்தித்து பார்க்கவேண்டும்.

    தன் மருமகளை வளர்ப்பு மகன் விவாகரத்து செய்தது உண்மையா இல்லையா?
    முகமது தன் முன்னால் மருமகளை திருமணம் செய்தது உண்மையா இல்லையா? இதை யாரும் மறுக்கமாட்டார்கள்.
    இந்த இரண்டு விவரங்கள் மட்டும் தவறு என்றுச் சொல்லுங்கள் பார்க்கலாம்?

  23. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?

    சஹீஹ் புகாரி: பாகம் 1, அத்தியாயம் 8, எண் 371

    நபி(ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி(ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி(ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி(ஸல்) அவர்கள் தங்களின் தொடையிலிருந்த வேஷ்டியை நீக்கினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் தொடையின் வெண்மையை பார்த்தேன். நபி(ஸல்) அவர்கள் ஊருக்குள்ளே நுழைந்தபோது ‘அல்லாஹ் பெரியவன்! கைபர் வீழ்ந்துவிட்டது! நிச்சயமாக நாம் ஒரு (எதிரிக்) கூட்டத்திடம் பகைமையுடன் இறங்கினால் எச்சரிக்கப்பட்ட அம்மக்களின் காலை நேரம் மோசமானதாம்விடும்’ என்று மும்முறை கூறினார்கள். அவ்வூர் மக்கள் தங்களின் வேலைகளுக்காக வெளியே வந்தபோது நபி(ஸல்) அவர்களைப் பார்த்ததும், ‘முஹம்மதும் அவரின் பட்டாளமும் வந்துள்ளார்கள்’ என்று (பதட்டமாகக்) கூறினார்கள்.

    நாங்கள் கைபரைப் பலவந்தமாகக் கைப்பற்றினோம். போர்க் கைதிகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டபோது ‘திஹ்யா’ என்ற நபித்தோழர் வந்து ‘இறைத்தூதா அவர்களே! கைதிகளிலுள்ள ஒரு பெண்ணை எனக்குக் கொடுங்கள்’ என்று கேட்டார். ‘நீர் போய் ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் சென்று ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணைத் தேர்ந்தெடுத்தார். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! ‘குறைளா’ மற்றும் ‘நளீர்’ என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்’ என்றார். அப்போது ‘அப்பெண்ணையும் திஹ்யாவையும் அழைத்து வாரும்’ என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். அப்பெண் அழைத்து வரப்பட்டார். அப்பெண் வந்ததும் ‘நீ கைதிகளிலிருந்து வேறொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்’ என்ற திஹ்யாவிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அப்பெண்ணை விடுதலை செய்து பின்னர் அவரைத் திருமணம் செய்தார்கள்.

    இந்த ஹதீஸை அறிவிக்கிற அனஸ்(ரலி) அவர்களிடம் ஸாபித் என்ற தோழர், ‘அபூ ஹம்சாவே நபி(ஸல்) அப்பெண்ணுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தார்கள்?’ என்று கேட்டதற்கு ‘அவரையே மஹராகக் கொடுத்தார்கள்; அதாவது அவரை விடுதலை செய்து பின்னர் மணந்தார்கள்’ எனக் கூறினார்.

    நாங்கள் (கைபரிலிருந்து) திரும்பி வரும் வழியில் ‘ஸஃபிய்யா’ அவர்களை உம்மு ஸுலைம்(ரலி) மணப்பெண்ணாக ஆயத்தப்படுத்தி நபி(ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறுநாள் காலை நபி(ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள். அப்போது நபி(ஸல்) ஒரு விரிப்பை விரித்து ‘உங்களில் யாரிடமாவது ஏதாவது (சாப்பிடுகிற) பொருள்கள் இருந்தால் கொண்டு வந்து இதில் போடுங்கள்’ என்று கூறினார்கள். உடனே ஒருவர் பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார். வேறு ஒருவர் நெய்யைக் கொண்டு வந்தார். ஒருவர் மாவைக் கொண்டு வந்தார். (இப்படி எல்லோரும் கொண்டுவந்த) அவற்றையெல்லாம் சேர்த்து ஒன்றாகக் கலந்தார்கள். அது நபி(ஸல்) அவர்களின் ‘வலீமா’ எனும் மணவிருந்தாக அமைந்தது” என அனஸ்(ரலி) அறிவித்தார்.

    “அவளுடைய உடல் முழுவதையும் மறைக்கும் விதத்தில் ஒரே ஆடையை அணிந்தாலும் அது அவளுக்குப் போதுமானதாகும்” என இக்ரிமா கூறினார்

    1) கைபர் ஊரில் அதிகாலையில் நுழைந்து, மக்கள் தங்கள் வேலைக்கு ஆயத்தமாகி சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்கள் மீது திடீரென்று போர் புரிந்து, ஆண்களையெல்லாம் கொன்றுவிட்டு, அடிமைகளாக பிடிக்கப்பட்ட பெண்களில் ஒரு பெண்ணை தனக்கு எடுத்துக்கொண்டு அப்பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொண்ட ஒருவரை எப்படி மனிதருள் மாணிக்கம் என்று ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்கள்?

    2) தன் குடும்பம் முழுவதும் மடிந்து இரத்த கறைகளோடு பிணங்களாக கிடக்கும் போது, அந்தப் பெண் எப்படி தன் குடும்பத்தை கொன்று அழித்த ஒரு ஆணோடு உடலுறவு கொள்ளுவாள்?

    3) இதை படிக்கும் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் கணவரையும், தந்தையையும், இதர குடும்பத்தார்களையும் கொன்ற ஒரு மனிதனை நீங்கள் திருமணம் செய்துக்கொள்வீர்களோ? ஆம், நான் செய்துக்கொள்வேன் என்றுச் சொல்வீர்களானால், உங்களை என்னவென்று உலகம் அழைக்கும்?

    4) மேற்கண்ட இஸ்லாமிய ஆதாரம் சொல்கிறது, மறு நாள் காலையில் முஹம்மது புது மாப்பிள்ளையைப் போல இருந்தாராம்? (ஏன் இருக்கமாட்டார், புது மனைவி கிடைத்தாளே அதுவும் யூதப்பெண், மாப்பிள்ளையாகத் தான் தென்படுவார்.) இப்படிப்பட்டவரையா பின்பற்றுங்கள் என்று இஸ்லாமிய உலகம் இதர மக்களை வற்புறுத்துகிறது?

  24. கைபரில் பிடித்த பெண்ணோடு முஹம்மது உடலுறவு கொள்ளும் அந்த இரவு, அவருடைய தோழர் வெளியே கதவருகே இரவெல்லாம் என்ன செய்துக்கொண்டு இருந்தார்? மற்றும் காலை முஹம்மதுவை கண்டவுடன் என்ன கூறினார்? அதற்கு முஹம்மது என்ன பதில் சொன்னார்? என்பதை அல் தபரி முஹம்மதுவின் வாழ்க்கை சரிதையிலிருந்து படியுங்கள்.

    இறைத்தூதர் ஷஃபிய்யாவோடு உடலுறவு கொண்டு இருந்த அந்த இரவு, அபூ அய்யுப் என்பவர் அந்த கதவு பக்கத்தில் இரவெல்லாம் நின்றுக்கொண்டு இருந்தார். காலையில் அபூ அய்யுப் இறைத்துதரை பார்த்தவுடன் “அல்லாஹு அக்பர்” என்று கூறினார், இவர் தன்னுடன் ஒரு வாளையும் வைத்திருந்தார். இவர் இறைத்தூதரைப் பார்த்து, “ஓ அல்லாஹ்வின் தூதரே, இந்த பெண்ணுக்கு திருமணம் இதற்கு முன்பு தான் நடந்தது, நீங்கள் இப்பெண்ணின் தந்தையை கொன்றுவிட்டீர்கள், அவளின் சகோதரனையும், மற்றும் கணவனையும் கொன்றுவிட்டீர்கள். ஆகையால், இந்த பெண்ணை நான் நம்பவில்லை (உங்களுக்கு இவள் மூலமாக ஆபத்துவந்துவிடுமோ என்று பயந்து இரவெல்லாம் காவல் காத்தேன்” என்றார்). இதைக் கேட்டு இறைத்தூதர் சிரித்தார் மற்றும் நீ செய்தது “நல்லது” என்றார். (அல் தபரி சரித்திரம் – The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)

    Ibn ‘Umar [al-Waqidi] – Kathir b. Zayd – al-Walid b. Rabah – Abu Hurayrah: While the Prophet was lying with Safiyyah Abu Ayyub stayed the night at his door. When he saw the Prophet in the morning he said “God is the Greatest.” He had a sword with him; he said to the Prophet, “O Messenger of God, this young woman had just been married, and you killed her father, her brother and her husband, so I did not trust her (not to harm) you.” The Prophet laughed and said “Good”. (The History of al-Tabari, Volume XXXIX (39), p. 185; bold and underline emphasis ours)

    1) முஹம்மதுவின் தோழரின் கணிப்பு என்ன?

    2) ஏன் அவர் ஒரு வாளோடு இரவெல்லாம் காவல் காத்துக்கொண்டு இருந்தார்?

    3) எதிரி நாட்டு அரசரோடு முஹம்மது இரவெல்லாம் உரையாடிக்கொண்டு இருந்தாரா? திடீரென்று எதிரி நாட்டு அரசர் முஹம்மதுவை கொல்ல முயற்சி எடுத்தால் உடனே சென்று காப்பாற்றிவிடலாம் என்று இவர் நினைத்தாரா?

    5) முஹம்மது செய்த கொலைகள் பற்றி அவரது தோழர் சொன்னது என்ன?

    6) முஹம்மது உடலுறவில் ஈடுபட்டு இருந்த அந்தப்பெண் யார்?

    7) அந்தப் பெண் ஏன் முஹம்மதுவை கொன்று போடுவாள் என்று முஹம்மதுவின் தோழர் நினைத்தார்?

    8) முஹம்மதுவின் தோழருக்கு முஹம்மது கொடுத்த பதில் என்ன?

    9) தன்னோடு உடலுறவு கொள்ளும் ஆணை அப்பெண் கொலை செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று முஹம்மதுவின் தோழர் பயப்பட்டால், அந்தப் பெண் விருப்பத்தோடு அம்மனிதனோடு (முஹம்மதுவோடு) இரவை கழிக்க விருப்பமில்லாமல் இருக்கிறாள் என்று தானே அர்த்தம்?

    10) ஏன் அந்த பெண்ணுக்கு விருப்பமில்லை என்று முஹம்மதுவின் தோழர் நினைத்தார்? முஹம்மது அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு இருந்தாரே? ஒரு மனைவி இப்படி செய்வாள் என்று முஹம்மதுவின் தோழர் ஏன் சந்தேகப்பட்டார்?

    11) தன் தோழரின் கணிப்பை முஹம்மது மறுத்தாரா அல்லது ஆமோதித்தாரா?

    12) முஹம்மது ஆமோதித்தார் என்றுச் சொன்னால், அதன் அர்த்தமென்ன?

    இந்த கேள்விகளுக்கெல்லாம் இக்கட்டுரையின் முதலில் நான் கொடுத்த சஹிஹ் புகாரி ஹதீஸையும், இந்த அல் தபரி சரித்திர விவரத்தையும் படித்தாலே பதில் சொல்லிவிடலாம்.

    சரி,

    ஒரு பெண்ணை கற்பழித்தவரையா இஸ்லாமியர்கள் பின்பற்றுகிறார்கள்?
    இவரையா எல்லாரும் பின்பற்றத்தகுந்த நல்ல மாதிரி என்று அல்லாஹ் கூறுகிறார்?
    இவர் சொன்னதையா நம்பி கிறிஸ்தவர்கள் இஸ்லாமை நம்பவேண்டும்?

    அருமையான இஸ்லாமியர்களே, ஒரு முறை உங்கள் நம்பிக்கையைப் பற்றி சுய பரிசோதனை செய்துப்பாருங்கள்.

  25. பாலியல்(செக்ஸ்) விஷயங்களில் முகமது ஒரு மனிதத் தன்மைக்கு மிஞ்சிய பலமுள்ளவர்(Superman) என்று இஸ்லாமிய பாரம்பரியம் தெரிவிக்கிறது.

    நபி(ஸல்) அவர்கள் இரவில் அல்லது பகலில் தங்களின் மனைவிமார்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் தங்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ‘அவர்களின் மனைவியர் பதினோரு பேர் இருந்தார்கள்’ என அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறியபோது நான் அவரிடம், அதற்கு நபி(ஸல்) அவர்கள் சக்தி பெறுவார்களா? என்று நான் கேட்டதற்கு ‘நபி(ஸல்) அவர்களுக்கு முப்பது பேர்களுடைய சக்தி கொடுக்கப்பட்டுள்ளது’ என நாங்கள் பேசிக் கொள்வோம்’ என அனஸ் (ரலி) கூறினார்” என கதாதா அறிவித்தார்.

    மற்றோர் அறிவிப்பில் ‘நபி(ஸல்) அவர்களுக்கு (அந்நேரத்தில்) ஒன்பது மனைவியர் இருந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது. (Sahih al-Bukhari: பாகம் 1, அத்தியாயம் 5, எண் 268).
    இந்த பாரம்பரியங்கள் எப்படி நம்பத்தகுந்ததாகும்? கவனிக்கவும் – அந்த காலகட்டத்தில் முகமது 20 அல்லது 25 வயது இளைஞராக இல்லை – இந்த வயதினரால் கூட இது முடியாத காரியமாக இருக்கும் – தன்னுடைய ஒன்பது மனைவிகளையும் அவர் அடையும் போது அவர் சுமார் 60 வயதுடைய மனிதராக இருந்தார். மேலும் இந்த பாரம்பரியங்களின் படி இது ஏதோ ஒருமுறை நடந்த நிகழ்வு இல்லை இது முகமதுவின் வழக்கமான செயலாக இருந்ததாம்.

    இந்த பாரம்பரியங்களை எப்படி புரிந்து கொள்ளவேண்டும் என்று விளக்கமளிக்கும் மற்றொரு ஹதீஸ் இப்படிக் கூறுகிறது:
    ஆயிஷா (ரலி) அறிவித்தார்

    இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள் (Sahih al-Bukhariபாகம் 6, அத்தியாயம் 76, எண் 5765) .
    முகமது உடலுறவில் ஈடுபடுவதாக கற்பனை செய்து கொண்டிருந்தார் என்று இந்த ஹதீஸ் கூறினாலும், உண்மையில் அவர் அப்படி செய்யவில்லை – முதலில் நாம் மேலே படித்த ஹதீஸ்களுக்கு இந்த ஹதீஸ் வர்ணணையா அல்லது விளக்கமா?

    கவனிக்கவும் – மேலும் இந்த பாரம்பரியம் (முகமதுவின் விருப்பமான மனைவி மூலமாக கொடுக்கப்பட்டது), ஒரு தடவையல்ல தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வு என்று வலியுறுத்துகிறது.

    முகமது பற்றியும், மற்றும் அவர் எப்படி இந்த சூன்யத்திற்கு கீழ் ஆட்கொள்ளப்பட்டார் என்பதை பற்றியும் விளக்கமாக அறிய கீழ் கண்ட அகராதி தொடுப்பில் சென்று படிக்கவும்: Muhammad and Satan.

    தான் ஈடுபட்டதாக எண்ணிக் கொண்டிருந்த அநேக உடலுறவில் அவர் உண்மையில் ஈடுபடவில்லை என்றாலும், மேலேயுள்ள பாரம்பரியங்கள் முகமதுவின் மனதில் உடலுறவு(sex) முக்கியமான விஷயமாக இருந்தது என்பதற்கு பல ஆதாரப் பகுதிகளை வழங்குகிறது. பார்க்கவும்: Muhammad, Islam, and Sex.
    இதன் விளைவுகள்:

    இந்த சிறிய ஆய்வின் பயன் வெறும் முகமதுவின் செக்ஸ் வாழ்க்கையை பற்றிய விவரங்கள் மட்டுமே நமக்கு அறியத் தருகின்றன என்று இல்லாமல், அதற்கும் மேலாகச் சென்று அதிகமான விவரங்களை கொடுக்கின்றன. வெளிப்படையாகச் சொல்லவேண்டுமானால், ‘ஆதாரப்பூர்வமான, மற்றும் நம்பத்தகுந்த உண்மையான” ஹதீஸ்கள் என்றழைக்கப்படும் இந்த ஹதீஸ்கள், முகமது ஏதோ ஒரு மாயையிலும், மனப்பிரம்மையிலும் பீடிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கின்றன.

    இதுவரை நாம் பார்த்த விவரங்கள் உண்மையென்றால், உடனே மற்றொரு கேள்வி எழும்புகிறது: இஸ்லாமியப் பாரம்பரியத்தின் இன்னும் எத்தனை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இந்த வகையைச் சார்ந்தவை?

    இறையியல் மற்றும் நடைமுறை வாழ்க்கைக்கான இஸ்லாமுடைய பெரும்பாலான போதனைகள் ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே முஸ்லீம்கள் தங்கள் நம்பிக்கையையும், வாழ்க்கையையும் முகமதுவின் ஏதோ மனப்பிரம்மை என்று சொல்லப்படுவதன் மீதுதான் கட்டிக்கொண்டிருக்கிறார்களோ?

    முகம்மதுவின் மாயை அல்லது பிரம்மைதான் ஹதீஸ்களில் உண்மைகளாக தொகுக்கப்பட்டுள்ளது என்றால், இது குரானைக் குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது.

  26. முகமது ஏன பல(4க்கு மேல்) திருமணங்கள் செய்தார்?
    எப்ப‌டி எல்லாம் திரும‌ண‌ங்க‌ள் செய்ய‌லாம் என்று முஸ்லிம்க‌ளுக்கு புரிய‌ வைக்க‌ நான் சொல்ல்ல‌ வில்லை ப‌ண்ணைக்கார‌னின் குரு வாக்க‌ர் கூறுகிறார் .சிரிக்காம‌ல் ப‌டிக்க‌ வேண்டும்.
    http://www.letmeturnthetables.com/2008/06/why-prophet-muhammad-married-more-times.html

    very important
    ….
    3-He married young and intelligent ‘Aisha bint Abu Bakr (RA) so that she remembers and continues to teach the masses all matters relating to married life and even the rest. This marriage also aimed at fostering his friendly relations with Abu Bakr (RA) and also to refute the baseless Arab tradition of not marrying the daughter of the called-not real brother. It was also a practical manifestation that one can marry a virgin.
    ….
    8-He married Zainab bint Jahsh (RA) to uproot the baseless Arab tradition of not marrying the divorcees of adopted-not-real sons.Islam holds that no matter how much dear no one can just as one’s son from his own loins. Montgomery Watt writes;

    ” … a social motive may have outweighed the political one in her case – to show that Muhammad had broken with old taboos.” (Muhammad at Medina p.288, pub. Oxford, 1956)

  27. இறை தூதருக்கு சிறப்பு சக்திகள் இல்லை!சரி அதனால் அவருக்கு மக்கா மதினா தவிர வேறு இடம் தெரியாது!ஆனால் அவர் மூலமாக வேதம் இறக்கிய இறைவனுக்கு உலகமே தெரியாதா?குரானில் யூதர்கள் பற்றியும் மக்க மதினா அரபு மக்கள் பற்றி மட்டுமே குர்ப்பிடபட்டுள்ளதே?ஏன் மற்ற இடங்கள் பற்றி சொள்ளவ்ல்லை?
    அடுத்து ஒரு இறைதூதரை தெரியாமல் கொலை செய்தால் கொலை செய்தவன் ஒரு இறை நம்பிக்கை உள்ள அடிமையை விடுவிக்க வேண்டும் என குரான் கூறுகிறது!இறை நம்பிக்கை உள்ளவர்கள் இறைவனின் அடிமைகள் என்றும் குரான் சொல்லுது!ஆக இறைவனின் அடிமையாக இருக்கும் ஒருவன் எப்படி தனி மனிதனுக்கு அடிமையாக இருக்க முடியும்?அது நியாயமானதா?எல்லா மனிதர்களும் சமம இல்லைன்னு சொல்றாங்களா?

  28. நான் நாத்திகன் ////அல்லா சொல்கிறார், முகமதுவிற்கு தன் மருமகள் மீது ஆசை இருந்தும், மனிதர்களுக்கு பயந்து, (ஏனென்றால், அப்படிப் பட்ட வழக்கம் இருட்டில் வாழ்ந்ததாகச் சொல்லும் மக்கா அரபி மக்களிடம் கூட இல்லை) அதை மனதிலே மறைத்து ” உன் மனைவியை விவாகரத்து” செய்யவேண்டாம் என்றுச் சொன்னாராம். அதை அறிந்த அல்லா, வளர்ப்பு மகன் விவாகரத்து செய்துவிட்ட பிறகு உனக்கு உன் மருமகளோடு திருமணத்தை “நாம் செய்தோம் ” என்றுச் சொல்கிறார்.////
    ///அந்த வசனத்தில் ‘தனது மருமகள் மீது ஆசை இருந்தும்,,,,,,,என்று உள்ளது போல் நீங்களாகவே கற்பனையில் எழுதிவிட்டு அதைதான் மனதில் மறைத்து வைத்ததாக உங்களுக்கு எப்படி தெரியும்?
    முகமது சொன்னது பதில் என்றால், அதற்கு முன்பு தன் மகன் என்ன சொல்லியிருப்பான் என்று சுலபமாக யூகிக்கலாம். இதற்கு Ph.D பட்டம் படித்துவரவேண்டிய அவசியமில்லை. ///
    நண்பர் நன் நாத்திகன் அவர்களே ,பிஹெச்டி பண்ணாமல் கீழுள்ள இணைப்பில் ஐந்தாவதாக ஜைனப் அவர்கள் திருமணம் பற்றி முழு விளக்கமும் உள்ளது.அதை தாங்கள் படித்து விட்டு உங்களது கேள்விகளை அடுக்குங்கள் .
    http://onlinepj.com/books/nabikal_pala_thirumanangal_seythathu_en/

    ///தன் மருமகளை வளர்ப்பு மகன் விவாகரத்து செய்தது உண்மையா இல்லையா?
    முகமது தன் முன்னால் மருமகளை திருமணம் செய்தது உண்மையா இல்லையா? இதை யாரும் மறுக்கமாட்டார்கள்
    இந்த இரண்டு விவரங்கள் மட்டும் தவறு என்றுச் சொல்லுங்கள் பார்க்கலாம்?////

    இந்த இணைப்பை படித்தபின்னர் ,கேளுங்கள் பார்க்கலாம்.இன்சால்லாஹ் பதிலளிக்கலாம்

  29. ( மார்க்க சகோ. நான் ஆத்திகன் அவர்களே,
    மெஹருக்கும் வரதட்சிணைக்கும் உள்ள வித்தியாசம் அறிய முழு கட்டுரைக்கும் செல்லுங்கள்)

    அய்யா முழு கட்டுரை என்ன! அடிவரைக்கும் போயி பாத்தேன், அங்க ஒருத்தரு (முட்டாள்களை கொட்டுபவர்) “நச்” சுன்னு ஒங்கள கொட்டியிருக்காரே, வீக்கம் ரொம்ப அதிகமோ? ஏன்ன பதிலே இல்லாம பேந்தப் பேந்த அசடு வழியிராப்புல தெரியுது, நீங்க முதல்ல போயி வரதட்சனைன்னா என்னான்னு மூனு பொண்ணுங்கள கட்டி கொடுத்தவரிடம் விபரம் கேட்டீங்கனா நல்லது, அப்புறம் இந்த மாதிரி அரவேக்காட்டு கட்டுரை எழுதி கொட்டு வாங்க தேவையில்ல பாருங்க…

    Aகாளி Bகாளி சீக்காளி

  30. மார்க்கசகோ சீக்காளி அவர்களே,
    முட்டாள்களை குட்டுபவனுக்கு பதில் எழுதியதை பார்க்கவில்லையா?
    அதற்கு கீழேயும் நிறைய காஃபிர்கள் எழுதியிருந்தார்களே.
    அதனையும் படித்திருக்கலாமே?

  31. முஹம்மது செய்தது கற்பழிப்பா அல்லது திருமணமா?

    நாத்திக அண்ணாச்சி, மேலேயுள்ள இந்த தலைப்பு
    சம்பந்தமா ஒங்களுக்கு குற்றம் சுமத்த தேவையான ஹதீஸை மட்டும் பாகம், அத்தியாயம், எண், என எல்லாவற்றையும் குறிப்பிட்டு எழுதினா போதுமா, இதற்கு பிறகும் பல ஹதீஸ்கள் உள்ளதே இதைப் பற்றி ஒங்களுக்கு ஒன்னும் தெரியாதா? அல்லது அதை வசதியாக மறந்து விட்டீர்களா?.

    சஹீஹ் புகாரி: பாகம் 1, அத்தியாயம் 8, எண் 371
    நீங்கள் குறிப்பிட்ட இந்த ஹதீஸின் படி
    ஸஃபிய்யாவை முஹம்மது நபியவர்கள், தாங்களாகவே தேடி பிடித்து மணம் புரியவில்லை மாறாக நபித்தோழர் ஒருவர் ‘குறைளா’ மற்றும் ‘நளீர்’ என்ற குலத்தின் தலைவி ஸஃபிய்யா பின்த் ஹுயய் என்ற பெண்ணையா திஹ்யாவிற்குக் கொடுத்துள்ளீர்கள். அந்தப் பெண் தங்களுக்கே தகுதியானவள்’ என்று சொன்ன பிறகுதான் ஸஃபிய்யாவை திருமணம் செய்யும் முடிவிற்கே வருகிறார்கள் என்பது தெளிவு.

    1) மதீனா, மற்றும் கைபரில் இருந்த யூதர்கள் முஸ்லிம்களுடன் செய்த ஒப்பந்தத்தை மீறினர்,
    மக்கா காபிர்களுக்கு ஆதரவாக கைபரில் இருந்து கொண்டு எட்டப்பன் வேலை செய்து கொண்டிருந்ததால் தான் அவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டது, அடிமைகளாக பிடிக்கப்பட்டது அக்கால வழக்கப்படிதான்.

    2) ஒங்களை விட அந்தக் கால வழக்கத்தை யூதகுல தலைவரின் மகளாக இருந்த ஸஃபிய்யா நன்றாக விளங்கியிருந்தார், அதுவும் போர்க் கைதியாக பிடிக்கப்பட்டு சாதாரன மனிதரான திஹ்யா என்பவரிடம் அடிமையாக இருப்பதைவிட முஹம்மது நபியின் மனைவி என்ற அந்தஸ்துடன் சுதந்திரமாக வாழ்வதை நல்லதாக கருதியிருப்பார்.
    (நீளம் கருதி நாத்திகரின் கேள்விக்கு பதில் மட்டும் தந்துள்ளேன்.)

    3) இதை படிக்கும் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் கணவரையும், தந்தையையும், இதர குடும்பத்தார்களையும் கொன்ற ஒரு மனிதனை நீங்கள் திருமணம் செய்துக்கொள்வீர்களோ? ஆம், நான் செய்துக்கொள்வேன் என்றுச் சொல்வீர்களானால், உங்களை என்னவென்று உலகம் அழைக்கும்?
    நான் நாத்திகன்)

    நாத்திக அண்ணாச்சி, மேலே உள்ள கேள்வியை இந்தக் கால பெண்களிடம் ரொம்ப வெவரமா கேட்டுள்ளீர்கள், ஆனால் எந்த பெண்ணுக்காக இவ்வளவு மாஞ்சு, மாஞ்சு, கிறுக்கி இருக்கிறீர்களோ அந்த ஸஃபிய்யாவே நான் முஹம்மது நபியுடன் தான் வாழ்வேன் என வாழ்ந்து காட்டியுள்ளார், நீங்க எவ்வளவு எறச்சாலும் அது விழழுக்குத்தான் என்னத்த முழிக்கிறிய ஒன்னும் பிரியிலியா? நான் முதல் பாராவுல சொன்னது போல மொத்த ஹதீஸையும் பாக்கோனும்,

    (பாகம் 2, அத்தியாயம் 33, எண் 2035
    ஸஃபிய்யா(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்கள் ரமலானில் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி(ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள். உம்மு ஸலமா(ரலி)வின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளைச் சார்ந்த இருவர் நடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள், ‘நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார்” எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) ‘ஸுப்ஹானல்லாஹ்’ என்றனர். இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டு விடுவான் என நான் அஞ்சுகிறேன்” எனக் கூறினார்கள்.

    பாகம் 2, அத்தியாயம் 33, எண் 2038
    ஸஃபிய்யா(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் (இஃதிகாஃப்) இருந்தார்கள். அவர்களுடன் அவர்களின் மனைவியரும் இருந்துவிட்டுத் திரும்பினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அவசரப்படாதே!” நானும் உன்னோடு வருகிறேன்” என்றார்கள். என் அறை உஸாமாவின் வீட்டிற்குள் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் என்னுடன் வெளியே வந்தார்கள். அப்போது, அன்ஸாரிகளைச் சேர்ந்த இருவர் நபி(ஸல) அவர்களைச் சந்தித்து, அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டுக் கடந்து சென்றனர். நபி(ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ‘இங்கே வாருங்கள், இவர் (என் மனைவி) ஸஃபிய்யாவே ஆவார்!’ எனக் கூறினார்கள். அவ்விருவரும் ‘ஸுப்ஹானல்லாஹ் – இறைத்தூதர் அவர்களே!” என்று (வியப்புடன்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்; உங்கள் உள்ளங்களில் அவன் தவறான எண்ணங்களைப் போட்டு விடுவான் என நான் அஞ்சினேன்” என்று தெளிவுபடுத்தினார்கள்.

    பாகம் 2, அத்தியாயம் 33, எண் 2039
    அலீ இப்னு ஹுஸைன் அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது ஸஃபிய்யா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவர் திரும்பிச் செல்லும்போது அவருடன் நபி(ஸல்) அவர்களும் நடந்தனர். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் அவர்களைக் கூர்ந்து பார்த்தார். அவர் கூர்ந்து பார்த்ததும் அவரை நபி(ஸல்) அவர்கள் அழைத்து, ‘இங்கே வா! இவர் ஸஃபிய்யா! நிச்சயமாக ஷைத்தான் ஆதமுடைய மக்களின் ரத்த நாளங்களில் ஓடுகிறான்’ எனக் கூறினார்கள்.
    ஸஃபிய்யா(ரலி) இரவு நேரத்திலா நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றார்கள்? என்று நான் சுஃப்யானிடம் கேட்டேன். அதற்கவர் ‘இரவெல்லாமல் வேறென்ன?’ என்று விடையளித்தார் என்று அலீ இப்னுஅப்தில்லாஹ் கூறுகிறார்.

    நாத்திக அண்ணாச்சி இந்த ஹதீஸ்கள் மூலம் ஏதாவது புரியுதா?

    இரண்டு ஹதீஸ்களையும் ஸஃபிய்யா அவர்களே அறிவிக்கிறார்கள், இஃதிகாஃப் என்பது ரமலானில் கடைசிப் பத்து நாட்கள் பள்ளிவாசலிலேயே தங்கிவிடுவது, வீட்டுக்கெல்லாம் போகப்படாது, அதனால் தான் தனது அன்பு கணவரை பாக்க அன்னை ஸஃபிய்யா அவர்கள் பள்ளிவாசலுக்கு வருகிறார்கள், திரும்பி செல்லும் போது, மனைவியை வீட்டு வாசல் வரை விட்டு வர முஹம்மது நபியவர்களும் கூட செல்கிறார்கள், அப்போது எதிரே வந்த நபித்தோழரில் ஒருவர் கூர்ந்து பார்த்ததை கண்ட நபியவர்கள் இவர் என் மனைவி ஸஃபிய்யா என்கிறார்கள், காரணம் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்த நபியவர்கள் இரவில் யாரோ ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டு செல்கிறாரே என தமது தோழர்கள் சந்தேகப்படக் கூடாதே என்பதற்காக தெளிவு படுத்துகிறார்கள்.

    இதன் மூலம் தெரிய வருவது என்ன
    அன்னை ஸஃபிய்யா அவர்கள் மற்ற மனைவிகளை
    போலவே தானும் நபிகளின் மீது பாசமுள்ள, அன்பான, மனைவியாக வாழ்ந்துள்ளார்கள்.

    பாகம் 6, அத்தியாயம் 78, எண் 6157
    ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
    நபி(ஸல்) அவர்கள் (ஹஜ்ஜை முடித்துக் கொண்டு மக்காவிலிருந்து) புறப்பட விரும்பினார்கள். அப்போது (தம் துணைவியரான) ஸஃபிய்யா(ரலி) அவர்கள் தங்களின் கூடார வாசலில் சோர்வாகவும் கவலையாகவும் இருக்கக் கண்டார்கள். ஏனெனில், அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது.
    அப்போது நபி(ஸல்) அவர்கள் குறைஷியரின் வழக்கில் (செல்லமாகச் ஏசப்படும் வார்த்தையில்) அல்லாஹ் உன்னை அறுக்கட்டும்! நீ எம்மை (மக்காவிலிருந்து புறப்படவிடாமல்) தடுத்துவிட்டாய்’ என்று கூறினார்கள். பிறகு, ‘நஹ்ருடைய (துல்ஹஜ் 10 வது) நாளில் நீ (கஅபாவைச்) சுற்றி வந்தாயா? என்று கேட்டார்கள். ஸஃபிய்யா(ரலி) அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். ‘அப்படியானால் (உன் ஹஜ் பூர்த்தியாகிவிட்டது) நீ புறப்படு’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். )

    பாகம் 2, அத்தியாயம் 25, எண் 1771
    ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
    ஹஜ் முடித்துப் புறப்படும் நாளில் ஸஃபிய்யா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர் ‘நான் உங்களை (புறப்படுவதைவிட்டும்) தடுத்துவிட்டேன் எனக் கருதுகிறேன்’ என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் ‘காரியத்தைக் கெடுத்து விட்டீரே!” என்று கூறிவிட்டு ‘இவர் நஹ்ருடைய (10-ஆம்) நாளில் வலம்வந்துவிட்டாரா?’ எனக் கேட்டார்கள். அதற்கு ‘ஆம்’ எனச் சொல்லப்பட்டதும் ‘அப்படியாயின் புறப்படு!” என்றார்கள்.

    நாத்திக அண்ணாச்சிக்கு சில கேள்விகள்:

    தனது தந்தையையும், கணவரையும், இதர குடும்பத்தார்களையும் கொன்ற, முஹம்மது நபியுடன் ஏன் ஸஃபிய்யா அவர்கள், இறுதிக்காலம் வரை நல்ல மனைவியாக நடந்து கொண்டார்கள்.

    குடித்து விட்டு தினமும் கொடுமை செய்கிறான் என்ற காரணத்திற்காக இன்றைய பெண்கள், தூங்கும் போது அம்மிக்கல்லை கணவனின் தலையில் போட்டு கொல்வதும், சாப்பாட்டில் விஷம் வைத்து அவனை பரலோகத்துக்கு அனுப்பும் நிலையில், பாரிய இழப்பிற்குள்ளான
    ஸஃபிய்யா அவர்கள், எந்தவித கட்டுப்பாடும், கண்கானிப்பும் இல்லாத நிலையில், முஹம்மது நபியும் இசட் பிரிவு, கமாண்டோ பாதுகாப்பு, புல்லட் புரூப் ஆடை என அதி உயர் பாதுகாப்பு ஏதுமின்றி, தனிமையில் தன்னுடன் தங்கும் நபிகளை பழி தீர்க்க ஏன் சிறு முயற்ச்சி கூட செய்யவில்லை.
    குறைந்த பட்சம் நபிகளிடமிருந்து தப்பி செல்லக் கூட யோசிக்கவில்லையே ஏன்?.

    (ஒரு பெண்ணை கற்பழித்தவரையா இஸ்லாமியர்கள் பின்பற்றுகிறார்கள்?
    இவரையா எல்லாரும் பின்பற்றத்தகுந்த நல்ல மாதிரி என்று அல்லாஹ் கூறுகிறார்?
    இவர் சொன்னதையா நம்பி கிறிஸ்தவர்கள் இஸ்லாமை நம்பவேண்டும்?

    அருமையான இஸ்லாமியர்களே, ஒரு முறை உங்கள் நம்பிக்கையைப் பற்றி சுய பரிசோதனை செய்துப்பாருங்கள். நான் நாத்திகன்)

    நாத்திக அண்ணாச்சி இவ்வளவு கூவியும், கற்பழித்துவிட்டார் என கதறியும், இவரையா பின் பற்றனும் என ஓலமிட்டும் குதிப்பவருக்கு, அன்னை ஸஃபிய்யா அவர்கள்.தனது அன்பான செயல்கள் மூலம் அண்ணல் நபிகள் தான் என் அன்புக் கணவர் என்பதை உறுதிபடுத்தி சென்றுள்ளார்கள்.

    இதை படிக்கும் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் கணவரையும், தந்தையையும், இதர குடும்பத்தார்களையும் கொன்ற ஒரு மனிதனை நீங்கள் திருமணம் செய்துக்கொள்வீர்களோ?
    என்ற
    நாத்திக அண்ணாச்சியின் கேள்வியை நகைப்பிற்குரியதாக்கி விட்டார்கள் அன்னை ஸஃபிய்யா அவர்கள்.

  32. நான் நாத்திகன் அவர்களே ,முன் கொடுத்த இணைப்பிலே சபியா தலைப்பில் வரும் விசயங்களை பாருங்கள்.
    நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு கிறித்துவ தளங்களில் உள்ளதை அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி வருகிறீர்கள். அதற்கான மறுப்புகளும் அது போன்றே இணைய தளங்களில் வந்துள்ளன.அதை தாங்கள் கவனத்திற்க் கொள்ளாமல் அவற்றில் உண்மை எங்கே உள்ளது என்பது பற்றி சிந்திக்காமல் அதை அப்படியே ஏற்று கொள்ளுவதுதான் பகுத்தறிவா? கிறித்துவம் பற்றி
    http://www.jesusinvites.com
    மேற்கண்ட இணையதளத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு பதில அளிக்க இயலாதவர்கள் ,இஸ்லாம் பற்றி அவதூறு பரப்புவதிலே கண்ணும் கருத்துமாக உள்ளனர்.
    http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/thamas-agrement/
    இந்த இணைப்பில் உள்ள விவாத ஒப்பந்தம் பாருங்கள் .ஏற்கனவே நடந்த விவாதங்களும் ஆன்லைன்பீஜே வில் உள்ளது.

  33. இஸ்லாத்தை பற்றி தெரியாமல் இந்த செங்கொடி உழர்கின்றது எங்கள் மார்க்கம் உண்மை என்பதற்கு உங்களுக்கு ஒரு ஆதாரம் தருகின்றேன் இதை வசித்த பின் இனிமேல் யாரும் எந்த நாத்திகனும் கேள்வி கேட்க் வேண்டாம்

    எங்கள் மார்க்கம் சுன்னி கழுவும் மார்க்கம் உங்கள் போல சீரு நீர் கழித்து சுத்தம் செய்யதவாகள் அல்ல நாங்கள் 5 நேரமும் எங்கள் உடல் உருப்புக்களை வுழு செய்து இறைவணை வணங்கும் முஸ்லீம்களோ நாங்கள்

  34. \\ நண்பர் பண்ணைக்காரன்
    மார்க்க அறிஞர் பி.ஜே ஆண்கள் காமம் மீறினால் 4 திருமணம் வரை செய்ய்லாம என்கிறார்.திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமே என்கிறார்.//

    நெருப்பை பெட்ரோல் ஊற்றியணைக்க முடியுமா!!!
    அதுபோலதான் காமமும்…

  35. நெருப்பை பெற்றோல்விட்டு அணைக்க முடியாது .ஆனால் கணவனை மனைவி அணைக்க முடியும் .ஒருவர் அணைப்பில் அடங்காதவர் இருவர்,அலது மூவர் அல்லது நால்வர் அணைப்பில் அடக்கிட முடியும் .அதையும் மீறும் காம வெறியர்களை இஸ்லாம் அனுமதிக்க வில்லை .பத்தாயிரத்தில் ஒருவர் இப்படி இருப்பார்கள் .அவர்களை பொதுவில் வைத்து பார்க்க முடியாது.

  36. \\பண்ணைக்காரன்,
    நெருப்பை பெற்றோல்விட்டு அணைக்க முடியாது .ஆனால் கணவனை மனைவி அணைக்க முடியும் .ஒருவர் அணைப்பில் அடங்காதவர் இருவர்,அலது மூவர் அல்லது நால்வர் அணைப்பில் அடக்கிட முடியும் .அதையும் மீறும் காம வெறியர்களை இஸ்லாம் அனுமதிக்க வில்லை .பத்தாயிரத்தில் ஒருவர் இப்படி இருப்பார்கள் .அவர்களை பொதுவில் வைத்து பார்க்க முடியாது.//

    நண்பரே உங்களுடைய விளக்கத்தை ஏற்றுக்கொள்ளும் அளவிற்க்கு உங்களைப்போன்று உயர்ந்த அறிவு எமக்கில்லை… அன்பே கட்வுள்,பிரபஞ்ச சக்தியே கடவுள்…

  37. சூபி ,நீங்கள் ஏற்கனவே ஆத்திகரா?அல்லது ஆண்ட்ரு ப்ளு போல நாத்திகராக இருந்து பிரபஞ்சசக்தி ஆத்திகராக மாறிவிட்டீர்களா?
    சூபி என்றால் மனிதனும் தெய்வமாகலாம் என்ற கொள்கையா?நச்சரிப்பு ஏனெனில் ,பெயரில் உச்சரிப்பு பலமாக இருக்கிறது எனபதால் .

  38. திரு எஸ்.ஹிஃப்ராஹிம்

    சித்தர்களின் ஆன்மீகத்தை
    சூஃபியிசத்தின் ஆன்மீகத்தை
    பௌத்தத்தின் ஆன்மீகத்தை
    சமணத்தின் ஆன்மீகத்தை
    தாவோவின் ஆன்மீகத்தை
    தலைவணங்கி ஏற்க்கிறேன் மேலும்
    இதில் ஏதேனும் குறைகளிருந்தால் அதை தவிர்க்கவும் தயாராக இருக்கின்றேன்.
    முடிந்தளவு கடைபிடிக்கவும் முயற்ச்சிக்கின்றேன்.

  39. சரி நான் ஏற்கணவே கேட்டகேள்வியான திருக்குறள், ஆத்திச்சூடி etc… விட உயர்ந்த அல்லது இணையான அறக்கருத்துக்கள் திருக்குரானில் இருந்தால் விள்க்குங்கள் என்று கேட்டிருந்தேன் பதிலேதும்மில்லையே நிச்சியம் தெரிந்துக்கொள்வதர்க்காகவே நண்பர்களே.

    திருக்குறளின் தற்போதுதான் புரிந்துகொள்ளப்பட்ட(கண்டுபிடிக்கபட்ட) பொருள்கள் இலக்கிய இலக்கன ஆதாரத்துடன்

    மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
    உயிர் நீப்பர் மானம் வரின்
    என்கிறார் வள்ளுவர்..( 969ம் குறளில் )

    கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு பாதிப்பு ஏற்பட்ட்டல் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்த குறளுக்கு கூறப்படும் விளக்கம்..
    ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே ?
    குழப்பமாக இருக்கிறது அல்லவா?
    அந்த குறளை கவனமாக பாருங்கள்..
    அதில் சொல்லப்ப்ட்டு இருப்பது கவரி மான் அல்ல..
    கவரி மா…
    ஆம்.. கவரி மா என்று ஒரு விலங்கு இருக்கிறது..
    அதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று குழப்பி விட்டனர்..
    புறனானூற்றில் இது குறித்த குறிப்பு இருக்கிறது..

    நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
    தண் நிழல் பிணி யோடு வதியும்
    வட திசை யதுவே வான் தோய் இமயம்…

    இமயமலை பகுதியில் , கவரிமா என்ற விலங்கு நரந்தை எனும் புல்லை உண்டு , தன் துணையுடன் ஜாலியாக வாழும் என்பது இதற்கு அர்த்தம்.
    அதாவது கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல… இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் ஆச்சரியம்..
    கவரிமா என்பது மான் வகையை சார்ந்தது அல்ல.. மாடு வகையை சார்ந்தது என்பது அடுத்த ஆச்சரியம்..
    இந்த கவரி மா குறித்து பதிற்று பத்து போன்றவற்றில் குறிப்புகள் உள்ளன.
    முடி சடை போல தொங்க கூடிய விலங்குதான் கவரிமா… இந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம்..
    கவரி என்பதில் இருந்துதான் சவரி முடி என்ற இன்றைய் சொல் உருவானது..
    மா என்பது மிருகங்களுக்கு உரிய பொதுவான சொல். ( அரிமா அரிமா என்ற எந்திரன் பாடலை நினைவு படுத்தி கொள்ளலாம்.. அரிமா=சிங்கம் )
    சரி..
    இந்த குறளுக்கு அர்த்தம் என்ன?
    பனி பிரதேசத்தில் வாழும் கவரிமாவுக்கு , அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது..
    அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும்..
    அதே போல சில மனிதர்கள், அவர்கள் பெருமைக்கு பங்கம் வந்து விட்டால், அவர்கள் வாழ்வது சிரமமாகி விடும்…
    கலைஞர் தன் உரையில் கவரிமான் தன் முடியை இழந்தால் உயிர் வாழாது என சொல்லப்படுகிறது…அதே போல மானம் மிக்க மனிதர்களும், மானம் இழந்து உயிர் வாழ மாட்டார்கள் என்று விளக்கம் அளிக்கிறார்..
    சரியான விளக்கம்.. கவ்ரிமான் , கவரிமா சர்ச்சையில் அவர் சிக்காதது ரசிக்கதக்கது….

    எனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை..
    பெரும்பாலானான உரைகளும் தவறு இல்லை..

    ஆனால் கவரிமா வை கவரிமான் என புரிந்து கொள்வது தவறு..
    நன்றி
    http://pichaikaaran.wordpress.com/

    அறத்தின் உச்சம்
    Extraordinary Thirukkural
    (தற்போது கண்டுபிடித்த பொருள்)

    அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
    பொறுத்தானோட டூர்ந்தா னிடை.

    திருக்குறள்-37

    பல்லக்கில் செல்பவர்க்கு நாம் எங்கோ செல்கின்றோம், நம் பல்லக்கு எங்கோ செல்கிறது என்ற(முட்டாள்தனமான) சிந்தனை வராதோ அதுபோன்றே,,, நாம் நல்லது செய்கின்றோம் என்ற நினைவே இல்லாமல் நல்லது செய்யவேண்டும்…

    இதை ஒரு மாபெறும் கட்டுரையாக சொல்லவில்லை, குறிப்பிட்ட கடவுளின் பேரில் சொல்லவில்லை, குறிப்பிட்ட இனத்தின் மீது சொல்லவில்லை, குறிப்பிட்ட வர்ணத்தின் மீது சொல்லவில்லை, மனிததன்மைக்கே பொதுவாக சொல்லியுள்ளார். இதுபோன்று பல திருக்குறளுக்கு உண்மைப்பொருளை தற்போது கண்டுபிடித்து வருகின்றனர். எனவே திருக்குறளை தேசிய நூலாக அறிவித்து “தேசிய நூல்” எனற பெயருக்கு அளவில்லா பெருமையை சேர்க்க பாடுபடுங்கள்.

  40. பெண்ணின் தலைமுடி உட்பட சிற்றின்ப வேட்கையை தூண்டிவிடமுடியும் எனும் மதக் கோட்பாடே புர்க்காவை அணிந்து கொள்வதற்கான அடிப்படை, அதாவது பெண் உடல் பாலுறுவுக்கு அழைப்புவிடக்கூடியது என்று பெண்ணை தன் உடலை புர்க்கா போட்டு மூடச் சொல்கிறது. பெண் உடல் பாவத்தின் சின்னம் என்று மநு ஸ்மிருதி ஒரு விதமாக சொல்கிறது, குரான் வேறு விதமாக சொல்கிறது, பைபிள் வேறுவிதமாக சொல்கிறது அவ்வளவுதான். “கன்னிகள் பூப்படைவதுதான் தேவதூதர்களின் வீழ்ச்சிக்கு காரணம்” என்று டெர்ர்டுலின் எனும் கிறத்தவ பாதிரியார் சொல்லியிருக்கிறார். “ஒரு பெண் குளியலறைக்குச் செல்லும் போதெல்லாம் சைத்தான் அவளுடனிருக்கிறான் அவளது உடம்பு சைத்தானின் விளையாட்டரங்கம்” என்று முகம்மது அறிவித்தார். ஆண்களின் உடம்பு பற்றி, மனம் பற்றி ஏன் இத்தகைய கருத்தாக்கங்கள் இல்லை.

  41. விபச்சாரமும் அனுமதிக்கப்பட்டதே…!

    புஹாரி ஹதீஸ் : 6837

    அபூஹுரைரா (ரலி) மற்றும் ஸைத் பின் காலித் (ரலி) ஆகியோர் கூறியதாவது.

    ஓர் அடிமைப் பெண் கற்பைக் காக்காமல் விபசாரம் செய்துவிட்டால்… (அவளுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவள் விபசாரம் செய்தால் அவளை சாட்டையால் அடியுங்கள். அதற்குப் பிறகும் விபசாரம் செய்தால் (திரும்பவும்) சாட்டையால் அடியுங்கள், மறுபடியும் அவள் விபசாரம் செய்தால் (மறுபடியும்) சாட்மையால் அடியுங்கள். அவள் மீண்டும் விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக்கற்றைக்காவது விற்றுவிடுங்கள் என்று கூறினார்கள். (இதில் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷஹாப் முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், (அவளை விற்றுவிடவேண்டும் என்பது) மூன்றாவது தடவைக்குப் பிறகா அல்லது நான்காவது தடவைக்குப் பிறகா என்று எனக்குத் தெரியாது எனக் கூறினார்கள்.

    மேற்கண்ட ஹதீஸை காணும் பொழுது ஒரு அடிமைப் பெண் விபச்சாரம் புரிவதைக் கூட முஹம்மது நபி தடை செய்துள்ளார் என்ற உயர்வான சிந்தனை உங்கள் மனதில் தோன்றலாம். உங்கள் எண்ணம் தவறானது கற்பழிப்பதற்கே அனுமதியளித்தவர்கள் விபச்சாரத்தை ஏன் தடுக்க வேண்டும்?

    அடிமைகளுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் உரிமையாளரை மீறி தன்னிச்சையாக செயல்படக் கூடாது. அவள் உரிமையாளருக்கு மட்டுமே வைப்பாட்டி. உரிமையாளர் விரும்பினால் பிற ஆண்களுக்கு அடிமைப் பெண்களைத் இரவலாகத் தரலாம்.

  42. நான் நாத்திகன் ////“ஒரு பெண் குளியலறைக்குச் செல்லும் போதெல்லாம் சைத்தான் அவளுடனிருக்கிறான் அவளது உடம்பு சைத்தானின் விளையாட்டரங்கம்” என்று முகம்மது அறிவித்தார்./////
    யாரிடம் அறிவித்தார்? எங்கிருந்து இந்த செய்தி பெற்றீர்?
    ////ஆண்களின் உடம்பு பற்றி, மனம் பற்றி ஏன் இத்தகைய கருத்தாக்கங்கள் இல்லை///
    ஆண்கள் அலுவலகத்துக்கு ட்ரவுசர் பனியன் மட்டும் அணிந்து வருகிறார்களா?
    ஆணும் பெண்ணும் சமத்துவம் பேசும் நீங்கள் உடை அணிவதிலும் ஆண்களைப் போல பெண்களும் கோட் ,சர்ட் ,லூஸ் பேன்ட் ,கழுத்து தெரியாதவாறு இருக்க பிடித்து டை,கால்கள் ,விரல்கள் ,நகம் தெரியாதவாறு சூ,சாக்ஸ் அணிந்து வருவதை வற்புறுத்தி பெண்கள் உரிமைகளை நிலைநிறுத்த பாடுபட மறுக்கிறீர்கள்?
    ஏன் பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து கவர்ச்சி காட்டுவதுதான் பெண் உரிமை என்று கொள்ள வேண்டும்? சோஷலிச காலத்து ரஷ்ய பெண்கள் கூட முகம் கைகள் தவிர ஏனைய பகுதிகளை மறைத்து தான் உடை அணிந்துள்ளனர்? இப்போது அரைகுறை ஆடை அணிகின்றனர் என்றால் அப்போது கட்டாயபடுத்தியது யார்?

  43. ///விபச்சாரமும் அனுமதிக்கப்பட்டதே…!////
    விபச்சாரத்திற்கு தணடனைகள் உண்டு.அதற்கு ஆதாரம் வேண்டுமென்றால் ,நான் நாத்திகன் சவுதியி இருந்தால் அங்கு விபச்சாரம் செய்து அதற்கான தண்டனைகளை தெரிந்த கொள்ளட்டும்

  44. http://periyarnaathigan.blogspot.com/ குர்ஆன் விபச்சாரம் செய்யமும் அனுமதி அளிக்கிறது.

    இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது – நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான். (குர்ஆன் 4:24)

    இந்த வசனம் முஹம்மதுவிற்கும், மற்றும் எல்லா முஸ்லீம்களுக்கும் கொடுக்கப்பட்டது என்பதினால், முஹம்மதுவும், இதர இஸ்லாமியர்களும் தங்களுக்கு போரில் கிடைத்த அல்லது தங்களிடம் அடிமைகளாக இருக்கும் திருமணமான இதரபெண்களோடு விபச்சாரம் செய்ய (உடலுறவு) கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இதில் இன்னும் வேதனையான, சகிக்கமுடியாத விஷயம் என்னவென்றால், இன்றுவரை இந்த கட்டளை இரத்து செய்யப்படவில்லை, அதாவது தற்காலத்திலும் போரில் பிடிபட்ட அல்லது அடிமைகளாக இருக்கும் திருமணமான பெண்களை கற்பழிக்க முஸ்லீம்களுக்கு அனுமதியுண்டு.

    ஆக, இஸ்லாமிய இறைவனாகிய அல்லாஹ் தன் இறைத்தூதர் தன் அயலானின் மனைவி மீது ஆசைக் கொள்ள அனுமதித்துள்ளார் இதனால் அவர் தன் உள்ளத்தில் விபச்சாரம் செய்துள்ளார்.(உண்மையில் இந்த பெண் முஹம்மதுவின் வளர்ப்பு மகனின் மனைவியாவாள்). இதுமட்டுமல்லாமல், அல்லாஹ் முஹம்மதுவோடு கூட, இதர இஸ்லாமியர்களும் (இன்றைய இஸ்லாமியர்களும்) தங்களுக்கு போரில் கிடைக்கும் திருமணமான பெண்களோடு அல்லது அடிமைப்பெண்களோடு விபச்சாரம் செய்ய அனுமதி கொடுத்துள்ளார்.

  45. இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?

    பதில்:

    இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி தாக்குவதை இலக்காக கொண்டு உலக ஊடகங்கள் செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் உடை அணிவதை விமரிசிக்காத ஊடகங்களே உலகில் இல்லை எனலாம். இஸ்லாம் வலியுறுத்தும் – இஸ்லாமிய உடை பற்றிய காரண காரியங்களை அறியும் முன்பு இஸ்லாம் தோன்றும் முன்பு – உலகில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

    1. முந்தைய காலங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு – போகப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள்.

    பண்டைய காலங்களில் பெண்கள் சமுதாயத்தில் மிகவும் கீழத்தரமாக மதிக்கப்பட்டு – மனிதனுக்கு உண்டான அடிப்படை கௌரவம் கூட மறுக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டார்கள் என்பதை கீழ்க்காணும் வரலாற்று உண்மைகள் நமக்கு போதுமான விளக்கத்தை தருகின்றன.

    A. பாபிலோனிய நாகரீகம்:

    பாபிலோனிய சட்டப்படி பெண்கள் கீழ்த்தரமாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டார்கள். ஒரு மனிதன் ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டால் அவருக்கு மரண தன்டனை வழங்குவதற்கு பதிலாக அவருடைய மனைவிக்கு மரண தண்டனை வழங்கும் வழக்கம் பாபிலோனிய நாகரீகத்தில் இருந்தது.

    B. கிரேக்க நாகரீகம்:

    பண்டைகால நாகரீகங்களில் கிரேக்க நாகரீகம் பெருமைக்குரியதாக கருதப்பட்டது. மேற்படி ‘பெருமைக்குரிய’ நாகரீக காலத்தில் – பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள். ‘பண்டோரா’ என்றழைக்கப்பட்ட ‘கற்பனைப் பெண்மணி’ யே மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகள் அனைத்திற்கும் அடிப்படை காரணமாக அமைந்தவள் என்று கிரேக்க புராணங்கள் பறை சாற்றுகின்றன. கிரேக்கர்கள் பெண்களை மனித குலத்தில் தாழந்தவர்கள் என்றும் – ஆண்களுக்கு அடிமைகள் என்றும் கருதினார்கள். கிரேக்க நாகரீகத்தின் பிற்பட்ட காலத்தில் பெண்கள் – உயர்வானவர்களாக மதிக்கப்பட்டாலும் – ஆண்களுக்கு உரிய தான் என்ற அகம்பாவத்தாலும் – பாலியியல் பலாத்காரங்களுக்கும் – பெண்கள் உட்படுத்தப்பட்டார்கள். கிரேக்க சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் – விபச்சாரம் பரவலாக காணப்பட்டது.

    C. ரோமானிய நாகரீகம்:

    ரோமானிய நாகரீகம் புகழின் உச்சநிலையில் இருந்தபோது கூட ஒரு ஆண் தனது மனைவியை கொலை செய்வதை தனது உரிமையாக கொண்டிருந்தான். விபச்சாரமும் – பெண்களை நிர்வாணமாக பாhப்பதுவும் – ரோமானியர்களின் மிகச் சாதாரண பழக்க வழக்கமாக இருந்தது.

    D. எகிப்திய நாகரீகம்:

    எகிப்தியர்கள் பெண்களை ஒரு தீமையாகவும் – சாத்தானின் சின்னமாகவும் கருதினார்கள்.

    E. இஸ்லாமிய மார்க்கம் தோன்றுவதற்கு முன்பிருந்த அரேபிய நாகரீகம்:

    அரேபியாவில் இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு – அரேபியர்கள் பெண்களை கீழத்தரமாக மதித்தார்கள். பெண்குழந்தைகள் பிறந்தால் அவைகளை உயிரோடு மண்ணில் புதைத்தார்கள்.

    2. இஸ்லாம் பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது.. அவர்கள் சமுதாயத்தில் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை வலியுறுத்தியது.

    ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது. சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை இஸ்லாம் வலியுறுத்தியது.

    ஆண்களுக்குரிய ‘ஹிஜாப்’

    வழக்கமாக இஸ்லாத்தில் பெண்களுக்கு மாத்திரம்தான் ‘ஹிஜாப்’ முறை உள்ளதாக பொதுமக்கள் வாதிடுவார்கள். ஆனால் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ்; பெண்களுக்கான ‘ஹிஜாப்’ பற்றி அறிவிப்பதற்கு முன்பாக ஆண்களுக்கான ‘ஹிஜாப்’ பற்றித்தான் முதலில் அறிவிக்கிறான்.

    அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் ‘(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.‘ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

    ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் – வெட்கமற்ற அல்லது நாணமற்ற எண்ணம் தோன்றுமேயானால் – அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.

    பெண்களுக்குரிய ‘ஹிஜாப்’

    அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸுரத்துன் நூரின் முப்பத்து ஒன்றாவது வசனத்தில் ‘(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம் கணவர்கள் தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள்…………….ஆகிய இவர்களைத் தவிர(வேறு அண்களுக்குத் ) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.’ என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

    ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

    1) ஹிஜாப் அணிவதற்கான அளவுகோல்கள்: நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான முதல் அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் – பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் – கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம்.

    இஸ்லாமிய ஆடையில் எஞ்சிய ஐந்து அளவுகோல்களும் – ஆண்களுக்கும் – பெண்களுக்கும் சமமானவையே.

    2) அணியக் கூடிய ஆடை உடல் பரிணாமத்தை வெளிக்காட்டாத அளவுக்கு தொய்வாக இருக்க வேண்டும்.

    3) அணியக் கூடிய ஆடை உற்றுப் பார்த்தால் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும்படியான மெல்லிய ஆடையாக இல்லாது – உரத்த ஆடையாக இருக்க வேண்டும்

    4) அணியக் கூடிய ஆடை (பெண்கள் ஆண்களை வசீகரிக்கக் கூடியவாறும் – ஆண்கள் – பெண்களை வசீகரிக்கக் கூடியவாரும்) எதிர்தரப்பாரை கவரக்கூடிய அளவுக்கு கவர்ச்சியாக இல்லாமல் இருக்க வேண்டும்.

    5) ஆண்கள் பெண்களைப் போல் ஆடை அணிவதையும் – பெண்கள் ஆண்களைப் போல் ஆடை அணிவதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.

    6) அணியக் கூடிய ஆடை இறை நிராகரிப்பாளர்கள் அணியக் கூடிய ஆடையைப் போன்று இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு இறை நிராகரிப்பவர்கள் உடுத்துகின்ற காவி நிறம் – கருப்பு நிறம் – போன்ற ஆடைகள் அணிவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

    3. இஸ்லாமிய ஆடை மனிதர்களின் நடத்தையையும் – பழக்கவழக்கங்களையும் உள்ளடக்கியது.

    மேற்கூறிய ஆறு நெறிமுறைகள் தவிர மனிதனின் நன்னடத்தை அவனது பழக்கவழக்கம் அவனது மனோபாவம் மற்றும் தனிமனித எண்ணங்கள் ஆகியவையும் இஸ்லாமிய ஆடை முறையில் உள்ளடங்கும். ஒரு மனிதர் ஆடைகளில் மாத்திரம் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பாரேயானல் – இஸ்லாமிய ஆடையின் ஒரு பகுதியை மாத்திரம் பின்பற்றுவது போன்றதாகும். ஆடைகளிலும் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைப்பிடிப்பதோடு – தனது கண்களிலும் – தனது உள்ளத்திலும் – தனது எண்ணத்திலும் – இஸ்லாமிய ஹிஜாப் முறையை கடைபிடிக்க வேண்டும். இஸ்லாமிய ஹிஜாப் என்பது – ஒருவர் நடக்கும் விதத்திலும் – அவர் பேசும் விதத்திலும் – அவர் பழகும் விதத்திலும் பிரதிபலிக்க வேண்டும்.

    5. ஹிஜாப் பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:

    பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸுரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது.

    நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன்.

    பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் – அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் – ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது என அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

    இரட்டை சகோதரிகள் – ஓர் உதாரணம்:

    இரட்டைப் பிறவியான சகோதரிகள் – இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள் கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார். அதாவது தனது முகம் – மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை கேலியும் – கிண்டலும் செய்வார்கள்?. இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா?. அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா?.

    கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார். மேற்படி வகையான ஆடைகள் ஆண்பாலரை கேலியும் கிண்டலும் – தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள் மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

    7. வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை.

    இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் – அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர். சிலர் இஸ்லாம் கருணையில்லாத – காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமரிசிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு சிறிய கேள்வியை கேட்டிருக்கிறேன். தங்களுடைய மனைவியுடனோ – அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு – தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்?. நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோருமே அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான். அதில் இன்னும் சிலர் – வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து கொல்வோம் என்றும் சொன்னார்கள்.அவர்களிடம் நான் கேட்டதெல்லாம் – யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு – வல்லுறவு கொண்டு விட்டால் – மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் – வேறு யாரோ ஒருவரின் மனைவியோ -சகோதரியோ – அல்லது தாயோ வல்லறவு கொள்ளப்பட்டு – வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் ஏன் அதனை காட்டுமிராண்டித்தனம் எனகிறீர்கள். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?.

    8.மேற்கத்திய சமூகம் பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து விட்டதாக தவறான கருத்தை கொண்டுள்ளது.

    மேற்கத்திய நாடுகள் சொல்லும் பெண் விடுதலை என்பது – பெண்களின் உடலை பயன் படுத்திக்கொள்வதற்கும் – பெண்களின் ஆன்மாக்களை கொச்சைப் படுத்தவதற்கும் – பெண்களின் கௌரவத்தை இழக்கச் செய்யவும் – மேலை நாட்டினர் அணிந்திருக்கும் மாறுவேடமே தவிர வேறில்லை. மேற்கத்திய உலகம் – சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்திவிட்டதாக கூறிக்கொள்கிறார்கள். உண்மையில் பெண்களின் உயர்வான நிலை என்பது – பெண்களை போகப்பொருளாக பயன்படுத்திக் கொள்ளவும் – அவர்களை சமூகத்தின் காட்சிப்பொருளாக மாற்றுவதையுமே – பெண்விடுதலை என்கிறார்கள். ‘கலை’ மற்றும் ‘கலாச்சாரம்’ என்கிற பெயரில் வண்ணத்திரைகளில் வியாபாரிகள் தங்களின் பொருட்களை விற்பதற்கு பெண்களை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்வதைத்தான் பெண் விடுதலை என்கிறார்கள்.

    9. அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.

    உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. 1990 ஆம் ஆண்டில் – அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1756 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை சொல்கிறது. பின்னர் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. குற்றம் நிகழ்ந்த ஆண்டு குறிப்பிடப் படவில்லை. அந்த ஆண்டு – 1992 அல்லது 1993 ஆக இருக்கலாம். பிறகு வந்த ஆண்டுகளில் அமெரிக்கர்கள் இன்னும் ‘தீவிரமாக’ வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்.

    அமெரிக்காவில் இஸ்லாமிய ‘ஹிஜாப்’ முறை நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் – அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார். அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி – மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் – அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும். மேற்கண்டவாறு இஸ்லாமிய ஆடை முறை அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் – அமெரிக்காவில் வல்லுறவு குற்றங்கள் அதிகரிக்குமா?. அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா?. அல்லது குறையுமா?.

    10. இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் – வல்லுறவு குற்றம் கண்டிப்பாக குறையும்.

    இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் – தூய்மையான சமுதாயம் அமைவதை எவராலும் தவிர்க்க முடியாது. அமெரிக்காவாக இருக்கட்டும் – ஐரோப்பாவாக இருக்கட்டும் – அல்லது உலகில் எந்த நாடாக இருந்தாலும் எங்கெல்லாம் இஸ்லாமிய சட்டத் திட்டங்கள் நடைமுறை படுத்தப்படுகிறதோ – அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். எனவே இஸ்லாமிய ஆடை முறை பெண்களை இழிவுபடுத்துவதில்லை. மாறாக பெண்களின் மானத்தையும் – கற்பையும் காப்பாற்றி அவர்களை சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்களாக மாற்றுகிறது.

    மூல நூல்: டாக்டர். ஜாகிர் நாயக் அவர்களுடன் அனைத்து மதத்தவர்களும்

    ஆங்கில மூலம்: டாக்டர் ஜாகிர் நாயக்
    தமிழாக்கம்: அபூ இஸாரா

  46. நான் நாத்திகன், முஸ்லிம் எதிரிகளிடம் போரில் பிடிபட்ட முஸ்லிம் பெண் கைதிகள் பற்றி பேச மறுக்கிறீர்கள்.அக்காலத்தில் போர் நியதி அப்படியே இருந்தது. அதில் இஸ்லாம் சீர்திருத்தம் கொண்டு வந்தது அந்த பெண்கள் மூலம் அவரது எஜமானருக்கு பிறந்த குழந்தைகள் அவரது குழந்தைகளாக கருதப்படும்.மேலும் குழந்தை பெற்ற பிறகு அவளும் குழந்தையும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாவார்கள்.
    ////இதில் இன்னும் வேதனையான, சகிக்கமுடியாத விஷயம் என்னவென்றால், இன்றுவரை இந்த கட்டளை இரத்து செய்யப்படவில்லை, அதாவது தற்காலத்திலும் போரில் பிடிபட்ட அல்லது அடிமைகளாக இருக்கும் திருமணமான பெண்களை கற்பழிக்க முஸ்லீம்களுக்கு அனுமதியுண்டு.///
    தற்காலத்தில் அமேரிக்கா ,ரசியா படைகள் இராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் நிர்வாணமாக கிடத்தி படுத்திய சித்ரவதைகளை நான் நாத்திகன் உணரமாட்டாரா?ஐநா அமைப்பு ஏற்படுத்தி சர்வதேச நாடுகளும் ஒப்புக் கொண்ட விதிகளுக்கு மாற்றமாக செயல்பட்டதேல்லாம் இவர் சகித்துக் கொண்டாரா? அவாரிருக்க இப்போது அக்காலம்போல போர்கள் ஏற்பட வாய்ப்புகள் இல்லாத பொழுது ஏன் இவ்வாறு இவர் கற்பனிக்க வேண்டும்? போர்கைதிகள் சிறைபிடித்து அவர்களுக்கென்று தனிஒயாக சிறைகள் அவர்களுக்கு என்று உணவு வகைகள் ,பராமரிப்புகள் எல்லாம் சிறைபிடித்த நாடுகள் செய்யவேண்டும் என்ற ஒப்பந்தங்கள் ஏற்படுத்திய பிறகு சிறைக்கைதிகளை தனியாரிடம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.மேலும் ராணுவ வீரர்களுக்கு அரசு உதியமும் அநேக சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது .நவீன ஆயுதங்கள் அரசு எ\வழங்குகிறது. ஆனால் அக்கால போரில் உதயம் கிடையாது ஆயுதங்கள் குதிரைகள் எல்லாமே மக்கள் தான் கொண்டு வருவார்கள் .அவர்கள் போரில் வெற்றி பெற்றால் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் வர்களுக்கும் குதிரைகொண்டு வந்தவர்களுக்கும் அதிகமாகவும் பங்கிடப்பட்டது.அது போன்றே பெண்களுக்கான உணர்வுகளுக்கும் உணவுகளுக்கும் அவர்கள் பொறுப்பாக்கப்பட்டார்கள். அக்காலத்தின் போர் விதி முறைகள் அனைத்து நாடுகளிலும் அவ்வாறே இருந்ததால் பெண்களும் அதற்கு இணங்கி வாழ்ந்தார்கள்.அதை படிப்படியாக அறுத்தது இஸ்லாம் என்பதை ஏற்கனவே உங்களுக்கு சுட்டிக்காட்டியுள்ள ஆன்லைன் பீஜெவிலும் நண்பர் முஹம்மது யூசுப் கொடுத்துள்ள ஜாஹிர்நாயக் நூல்களிலிருந்தும் தெரிந்து கொள்ளுங்கள் .
    சர்வேதேச ஒப்பந்தங்கள் ஏற்பட்ட பிறகும் போர்கைதிகளிடம் நியாயமாக நடந்து கொள்ளாத அமெரிக்க நூல்களிலிருந்து இஸ்லாத்தை விமர்சிக்க மனசாட்சிக்கு அஞ்சுங்கள்

  47. சூபி
    /////சித்தர்களின் ஆன்மீகத்தை
    சூஃபியிசத்தின் ஆன்மீகத்தை
    பௌத்தத்தின் ஆன்மீகத்தை
    சமணத்தின் ஆன்மீகத்தை
    தாவோவின் ஆன்மீகத்தை
    தலைவணங்கி ஏற்க்கிறேன் மேலும்////
    சூபி ,இந்த ஆண்மீகங்களில் ஆணாதிக்கம் மிகைத்துள்ளனவா?சமத்துவம் மிகைத்துள்ளனவா?

    சமணத்தின் ,பொவுத்தத்தின் ஆன்மிகம் எறும்பை கூட கொள்ளகூடாது என்பது உண்மையா? சமணத்தின் நிர்வாணம் என்பது பக்தியின் முக்தியா/?
    பெண் துறவிகள் என்பதெல்லாம் ஏற்புடையதா?
    சூபியிசத்தின் ஆன்மிகத்தில் நிறைய கதைகள் உள்ளனவே அதையெல்லாம் நம்புகிறீர்களா?அதில் உங்களை கவர்ந்தது எது?

  48. சூப்பி ,///நான் ஏற்கணவே கேட்டகேள்வியான திருக்குறள், ஆத்திச்சூடி etc… விட உயர்ந்த அல்லது இணையான அறக்கருத்துக்கள் திருக்குரானில் இருந்தால் விள்க்குங்கள் என்று கேட்டிருந்தேன் பதிலேதும்மில்லையே நிச்சியம் தெரிந்துக்கொள்வதர்க்காகவே நண்பர்களே////
    இலக்கியத்தையும் வாழ்வியல் வழிகாட்டுதல்களையும் யாராவது ஒப்பிடுவார்களா?
    நீங்கள் பள்ளி தேர்வுக்ககாக மனப்பாடம் செய்வதையும் ,ஒரு மனிதன் தனது வாழ்வை இம்மையிலும் மறுமையிலும் செம்மைப்படுத்துவதர்க்கான வாழ்வியல் நெறிமுறைகளை பயிற்சி முறைகளை நடைமுறைபடுத்தலையும் ஒன்று எனக் கொள்வது மிகையா?அல்லது அகமா ?

  49. நண்பர் முகம்மது யூசுஃப்,

    இவ்வளவு சிரமப்பட்டு வெட்டி ஒட்டுவதற்குப் பதிலாக புர்கா குறித்து ஒரு கட்டுரை இருக்கிறது. முதலில் அங்கு சென்று என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று படித்துவிட்டு வாருங்கள்.

    அல்லது,

    ஏற்கனவே படித்துவிட்டு அங்கு ஒட்டுவதற்கு வெட்கப்பட்டுத் தான் இங்கு ஒட்டியிருக்கிறீர்களா?

  50. பெரும்பாலான மாணவர்கள் மதிப்பென்களுக்காகத்தான் படிக்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து எனக்குமில்லை ஆனால் அனைவரும் அல்ல உயர்திரு எஸ்.ஹிப்ராஹிம் அவர்களே….

    திருக்குறள் போன்றவற்றில் எவ்வளவு உயர்வான அறக்கருத்துகள் இருந்தாலும் அவைகள் மனப்பாடம் செய்யவே எழுதப்பட்டவை என்ற அதிபயங்கரமான புத்திசாலித்தனம் தங்களிடம் இருக்குமென்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை திரு எஸ்.ஹிப்ராஹிம் அவர்களே…

    திருக்குறளின் வழி
    இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்து விடல்.

    நட்பு வளரட்டும்…எஸ்.ஹிப்ராஹிம்
    குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
    மிகைநாடி மிக்க கொளல்.

  51. vivaakara raththu enpathu allah aangalai vida pengalukke athikam salukai valangi ullan. islaam ella vidayathilum pengalukku uriyamaiyai valangi ullathu. qula u entru sollum pengal koorum vivaakaraththu itku entha kaaranamum solla thevai illai. enakku en kanavarai pidikkavilai. avvalvu than. aanaal aan oru pennai vendaam entru solvathaanaal uriya kaaranathai solli athai niroopikkavaum vendum. neengal ontrume theriyaamal visamathanamaka ungal kadduraiyai eluthi irukkireerkal kaaranam thaan enna?

  52. மனைவியை மிரட்டுவது என்றால் எப்படி விளக்கவும், இஸ்லாத்தின் படி கணவனுக்கு மனைவி அடிமை என்று நீங்கள் சொல்கிறீர்கள் பிறகு ஏன் மிரட்டவேண்டும்?

    கணவனுக்கு மூன்று சந்தர்ப்பம் கொடுத்தாலும் பெண் யாரிடமும் முறையிடக்கூடாது என்று எங்கேயும் சொல்லப்படவில்லை, மாறாக கணவன் தலாக்கை தவறாக பயன்படுத்தினால் அதை மனைவி முறையிட்டு அவனை திருத்தலாம் , மனைவிக்கு ஏன் ஒருமுறை என்றால் இவனோடு இனி வாழமுடியாது என்ற கட்டாயம் வரும் போது தான் இந்த முறை

  53. பெண்ணுக்கு தேவையானதை கட்டாயம் செய்யச்சொல்லி இஸ்லாம் வலியுறுத்துகிறது, இஸ்லாத்தை பொறுத்தவரை முழுக்க முழுக்க இறை பயம் சார்ந்தது, அதை இறை பயம் அற்ற பத்தர்கள் கண்டால் இதேபோலத்தான் விமர்சிப்பார்கள்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்