நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௫

இந்த வரைகலை படம் தான் 54:1 வசனத்திற்கு ஆதாரமாம்.
நிலா பூமியின் ஒரே துணைக்கோள். சராசரியாக‌ 3,84,403 கிமீ தூரத்தில் நீள்வட்டப்பாதையில் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியையும் சுற்றிவருகிறது. புவியின் ஈர்ப்பு விசையில் ஆறில் ஒரு பங்கே கொண்டிருந்தாலும், நிலவின் தாக்கம் பூமியில் குறிப்பிடத்தகுந்த அளவு செயல்படுகிறது. வானவியல் ஆய்வுகளில் மனிதர்களின் முன்னேற்றம் பிரபஞ்சத்துடன் ஒப்பிடுகையில் குறைவு என்றாலும், மனித வரலாற்றுடன் ஒப்பிடுகையில் மீப்பெரும் சாதனைகள் வானவியலில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. விண்கற்களின் மோதல்கள் தொடங்கி நெபுலாக்கள், புழுத்துளைகள் ஈறாக வானவியல் மாற்றங்களை நுணுக்கமாக கவனித்துக்கொண்டிருக்கிறான். ஒரு கோளோ, விண்மீனோ, விண்கற்களோ உடைந்துபோய் மீண்டும் ஒட்டிக்கொன்டு பழைய நிலையிலேயே செயல்படமுடியும் என்பதற்கான எந்தவித வாய்ப்பும் வானவியலில் இல்லை. ஆனால் குரானில் அப்படியான ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்துவிட்டது” “எனினும் அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் புறக்கணித்துவிடுகிறார்கள். இது வழமையாக நடைபெறும் சூனியம்தான் என்றும் கூறுகிறார்கள்” குரான் 54:1,2. இந்த குரான் வசனத்தின் விளக்கமாக சில ஹதீஸ்களும் இருக்கின்றன. “நாங்கள் நபி அவர்களுடன் மினாவில் இருந்தபோது சந்திரன் பிளவுபட்டது உடனே நபி அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று கூறினார்கள். இரண்டு துண்டுகளில் ஒன்று (ஹீரா) மலையின் திசையில் சென்றது” புஹாரி 3869.

அதாவது, அன்றைய அரபு மக்கள் முகம்மதுவிடம், நீர் இறைவனின் தூதர்தாம் என்பதற்கும், இறைவன் தான் உம்மிடம் வேதவசனங்களைத் தருகிறான் என்பதற்கும் என்ன அத்தாட்சி? என்று கேட்க அதற்கு முகம்மது, ஆம் நான் இறைவனின் தூதன் தாம் என்று நிலவைப்பிளந்து அதை அத்தாட்சியாக காண்பிக்கிறார். ஆனால் மனிதனால் செய்யமுடியாத மிகப்பெரிய அதிசய நிகழ்வான இதைக் கண்டு அன்றைய அரபு மக்களில் யாரும் இஸ்லாத்திற்கு மாறவில்லை என்பது ஆச்சரியம் தான். பிளந்த அந்த நிலவு என்ன ஆனது? எவ்வளவு நேரம் இரண்டு துண்டுகளாக இருந்தது? எப்போது மீண்டும் ஒன்றாக இணைந்தது என்பதுகுறித்து குரானிலோ, ஹதீஸ்களிலோ எந்த விளக்கமும் இல்லை. அதே நேரம் பூமிக்கு இரண்டு நிலவுகள் இருந்து ஒன்று அழிந்துபோய் இன்னொன்று மட்டும் மிச்சமிருப்பதாக யாரும் கூறிவிட முடியாது என்பதால், உடைந்த அந்த நிலவே ஒட்டிக்கொண்டு இப்போதும் தொடர்ந்து பூமியை சுற்றிக்கொண்டிருக்கிறது என்று நம்புவோமாக‌.

1400 ஆண்டுகளுக்கு முன்னுள்ள அந்த உலகில் குரான், ஹதீஸுக்கு வெளியே, இப்படி ஒரு நிகழ்வு நடந்ததற்கான எந்த ஒரு பதிவும் இல்லை. கிபி ஐந்து ஆறாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த எத்தனையோ நிகழ்வுகள் வரலாற்றில் இடம்பெற்றிருக்க, ஆக மிகப்பெரும் அதிசய நிகழ்வான இந்த நிலவு இரண்டான செய்தி உலகின் வேறெந்தப் பகுதியிலும் காணப்பட்டதாக தகவல் இல்லை. ஏன் அன்றைய அரேபியாவின் வேறு ஊர்களில் கூட இதை யாரும் கண்டதாக சாட்சியில்லை. இப்படியிருக்க நிலவு பிளந்ததை எந்த அடிப்படையில் ஏற்பது? இப்போது தந்திர விற்பன்னர்கள் தொடர்வண்டியை மறைப்பது, தாஜ்மஹாலை மறைப்பது என்று வித்தை செய்து காட்டுகிறார்களே அதுபோல முகம்மதுவும் தன்னிடம் கேள்விகேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மட்டும் வித்தை காட்டி விட்டாரா? அப்படியும் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் அந்த குரான் வசனம் நேரடியாக மிகத் தெளிவாகவே இருக்கிறது “சந்திரனும் பிளந்துவிட்டது” என்று. தவிரவும் நிலவு உடைந்தது மறுமை நாளுக்கான அத்தாட்சி என்றும் சில ஹதீஸ்கள் கூறுகின்றன. மறுமை நாள் என்பது உலகில் மக்கள் வாழ்ந்தது போதும் என இறைவன் முடிவு செய்து உலகை அழிக்கும் நாள் என்பது ஐதீகம். அந்த மறுமை நாளுக்கான அத்தாட்சிகள் என்று சில நிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதில் இந்த நிலவு உடைந்ததும் ஒன்று. அந்த அத்தாட்சிகள் நிகழ நிகழ மறுமை நாள் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது என்பது பொருள். இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது, “நேரம் நெருங்கிவிட்டது சந்திரனும் பிளந்து விட்டது” ஆக நிலவு உடைந்தது கட்டுக்கதையோ, கண்கட்டு வித்தையோ அல்ல உண்மையான நிகழ்வு இஸ்லாமியர்களைப் பொருத்தவரையில்.

நிலவு எப்படித் தோன்றியது என்பது குறித்து பல யூகங்கள் இருந்தாலும், 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் அளவுள்ள ஒரு கோள் பூமியை தாக்கியதால் சிதைந்து பிரிந்துபோனது தான் நிலவாக பூமியை சுற்றுகிறது எனும் சேய்க்கொள்கைதான் ஓரள‌வுக்கு ஏற்கப்பட்டிருக்கிறது. இப்படி பூமியை சிதைத்து நிலவைப் பிரித்த அந்த மோதல்தான், புவியில் உயிரினங்கள் ஏற்படுவதற்கான சாதகமான சூழலை தொடங்கிவைத்தது என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் ஆண்டுக்கு தோராயமாக 3.8 செமீ தூரம் பூமியை விட்டு நிலவு விலகிக் கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து புவியை உயிரினங்கல் வாழ்வதற்க்குத் தோதாக நகர்த்திக்கொண்டு வருவதில் நிலவு குறிப்பிடத்தகுந்த பங்காற்றி வருகிறது. நிலவின் தாக்கங்கள் என்று முதன்மையானதாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று, பூமியின் பருவ மாறுதலுக்கு காரணமான பூமி தன் அச்சில் 23 பாகையளவு சாய்ந்திருப்பதை நிலைப்படுத்துவது. இரண்டு, கடல் நீரின் ஏற்ற வற்றங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர்சுழற்சிக்கு உதவுவது.

முக்கியமான இந்த இரண்டு தாக்கங்களை பூமியில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிலவு, திடீரென ஒரு நாள் உடைந்துபோனது என்றால் அதன் தாக்கம் பூமியின் பருவகால நிலைகளில் தகுந்த மாறுதல்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது போன்ற எந்த மாறுதல்களும் பூமியில் ஏற்படவில்லை என்பதே உண்மை. இந்த நிகழ்வை முகம்மது நிகழ்த்திக்காட்டியது மக்கா எனும் ஊரில் அதாவது செங்கடலுக்கு அருகிலுள்ள ஒரு ஊர். கடலின் ஏற்றவற்றங்களைக் கட்டுக்குள் வைத்துருக்கும் நிலவு உடைந்தபோது செங்கடலில் ஏதாவது மாற்ற‌ங்கள் நிகழ்ந்திருக்க வேண்டுமல்லவா? அந்த மாற்றங்கள் அருகிலிருந்த மக்கவும் எட்டியிருக்க வேண்டுமல்லவா? அது ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்க வேண்டுமல்லவா? (நிலவு உடைந்ததற்கான ஆதாரமாகவேனும்) அப்படி ஏதேனும் ஹதீஸ் இருக்கிறதா? என்றால் நிலவு உடைந்தது என்பதை எப்படி ஏற்பது?

நிலவின் ஈர்ப்பு விசை மிகமிகக் குறைவு. தனக்கான வளிமண்டலங்களைக்கூட ஈர்த்து தக்கவைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு நிலவின் ஈர்ப்புவிசை பலவீனமானது. அதனால்தான் அங்கு காற்று இல்லை. காற்றைக்கூட ஈர்த்துவைத்துக்கொள்ள முடியாத நிலவு உடைந்து அதன் இரண்டு துண்டுகளும் மலையின் இருபக்கம் தெரியும் அளவுக்கு பிரிந்துவிட்ட பிறகு தமக்குள் எப்படி ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொண்டன?

குரானில் அனேக இடங்களில் மனிதர்கள் குரானை சிந்தித்துப்பார்க்க வேண்டாமா? என்று கூவுகிறது. இஸ்லாமியர்கள் இந்த வசனத்தை சந்திரனை உடைத்ததை எப்படி சிந்திக்கிறார்கள்? எப்படி புரிந்து கொள்கிறார்கள்? ஒரு கதை கூறப்படுவதுண்டு, வானில் கடவுள் தெரிகிறார் என்று ஒருவன் கூற மற்றவர்கள் தெரியவில்லையே எனக்கேட்க, வாழ்நாளில் பொய்யே கூறாதவர்களுக்கு மட்டும்தான் கடவுள் காட்சி தருவார் என்று அவன் கூறவும், மற்ற எல்லோரும் ஆமாம் தெரிகிறார் என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்களாம். அப்படித்தான் அந்த ஹதீஸ்களைக் கூறியவர்கள் நிலவு உடைந்ததைக் கண்டார்களோ. எது எப்படியோ! முகம்மது தன் சொந்தக் கற்பனைகளை மெய்ப்படுத்திக்கொள்ளத்தான் அல்லாவையும் வேதத்தையும் பயன்படுத்திக்கொண்டார் என்பதைத்தான் இது மெய்ப்பிக்கிறது.

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

65 thoughts on “நிலவை உடைத்து ஒட்டிய அல்லா

  1. அய்யய்யோ, அடுத்த பின்னூட்ட(அக்க)ப்போருக்கு களம் தயாராயுடுச்சே?
    இந்த முறையாவது கடவுளை நம்பும் நண்பர்கள் கண்டதைப்பேசி குழப்பாமல் நீங்கள் எழுப்பிய வினாவுக்கு (onlinepjவுக்கு வா என்று எழுதாமல்) பதில் அளிக்கிறார்களா என்று பார்க்கலாம்.
    ((ஆனாலும் ரொம்ப அப்புராணியா இருக்கனோ?))

  2. சில இஸ்லாமிய அறிஞர்கள் இந்த நிலவு உடைந்து சேர்வதை வேறு விதமாக பொருள் கொள்கின்றனர்.
    ஷாக்கா என்ற அரபி வார்த்தைக்கு பல அர்த்தம் உண்டு.அத்ற்கு நிலத்தை உழுதல் தோன்டுதல்,மற்றும் பிளவு படுதல் என்று பொருள் கொள்ளலாம்.

    இந்த நிலவு உடைந்து சேர்வதை ஒரு தீர்க்க தரிசனம் நிறை வேறியதாக கூறுகின்றனர். அதாவது 1969ல் சந்திரனில் இறங்கிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அங்கிருந்து 21 கிலோ எடையுள்ள கற்களை கொண்டு வந்ததையே குறிக்கிறது என்று கூறுகிறார்கள்.

    இத்தளத்தில் உள்ள விவரங்களை மொழி பெயர்த்து தந்து இருக்கிறேன்.

    http://www.submission.org/miracle/moon.html
    http://www.harunyahya.com/signs03.php

  3. //குரானில் அனேக இடங்களில் மனிதர்கள் குரானை சிந்தித்துப்பார்க்க வேண்டாமா? என்று கூவுகிறது.//

    குரான்ல இருக்குறதுலயே பெரிய காமெடி இதுதான்

  4. சகோதரர் பி.ஜே அவர்களுடன் விவாதம் செய்ய ஒப்பந்தம் இட ஆறு மாதத்தில் வர முயர்சிப்பதாக் கூறினீர்கள்! எப்போது விவாதம் செய்வதாக உத்தேசம்!
    நீங்கள் ஒரு அறிவு ஜீவியாக இருந்தால் விவாத்தம் செய்ய முன்வரவும். பதுங்குவது முறையன்று!

  5. //நீங்கள் ஒரு அறிவு ஜீவியாக இருந்தால் விவாத்தம் செய்ய முன்வரவும். பதுங்குவது முறையன்று!//

    இங்கே விவாத‌ம்தான் ந‌ட‌ந்து கொண்டு இருக்கிற‌து. அந்த‌ நில‌வு பிள‌ந்ததாக குரான் கூறுவதை ந‌ம்புவ‌த‌ற்கு ஏதாவ‌து விஞ்ஞான‌ ஆதாரம் காட்ட‌ முடியுமா?

    யாரும் ப‌துங்க‌வில்லை கேள்வி இங்கே? ப‌தில் எங்கே?

  6. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    பதில் சொல்கிறவர்களுக்கு : இங்கே நிறைய பேர் என்னதான் நீங்கள் தலைப்பில் உள்ளதை பற்றி பேசினாலும் விரைவில் அவர்கள் தடம் மாறி வேறு கேள்விகளை கேட்டு திசை திருப்பிவிடுவர்………ஜாக்கிரதை

  7. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    நிலவு பிளந்ததா இல்லயா என்று விவாதம் நடந்து கொண்டிருப்பது சரிதான் ஆனால் நிலவு ஸுஜூது செய்யுமா என்று கேள்வி கேட்டு தடம் புரளாமல் இருந்தால் சரிதான்…………..

  8. சரி ஸ்கூல்பாய்,
    நிலவு பிளந்ததா இல்லையா?
    நபிகள் நாயகம் பிளந்திருந்தால், அதற்கு அறிவியல் ஆதாரம் தரவும்.

  9. /நிலவு பிளந்ததா இல்லயா என்று விவாதம் நடந்து கொண்டிருப்பது சரிதான் ஆனால் நிலவு ஸுஜூது செய்யுமா என்று கேள்வி கேட்டு தடம் புரளாமல் இருந்தால் சரிதான்/

    வாங்க நண்பர் ஸ்கூல் பாய் நலமா?.இந்த தடவை நான் தலைப்புக்கு வெளியே எதுவும் கேட்க மாட்டேன்.ஏதோ தெரிந்த வரைக்கும் தலைப்புக்குள்ளேயே கேட்கிறேன்.

    1.இந்த குரான் 54.1விற்கு பெரும்பாலான முஸ்லீம்களின் விளக்கம் என்ன?

    2.ஏனெனில் இந்த நிலவு பிளந்தது கடந்த ( முகமது நபியின்)காலத்தை குறிக்கிறதா, அல்லது எதிர்காலத்தை(கடைசிக் காலம்) குறித்து சொல்லப் படுகிறதா?

    3.இந்திய இஸ்லாமிய அறிஞர் யூசுப் அலி(இவர் குரானை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்) முகமதுவின் காலத்தில் நிலவு பிளந்தது உண்மைதான் ஆனல் திரும்பவும் நிலவு கடைசிக் காலத்தில் பிளக்கும் என்று கூறுகிறார்.

    4.குரானில் நிலவு பிளந்தது ஒருமுறைதான் என்றும் திருப்பி சேர்ந்தது பற்றி எந்த தகவலாவது கூறப்பட்டு இருக்கிறதா?

  10. இறைவனின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்

    அன்புச் சகோதரர் செங்கொடி அவர்களுக்கு,

    நீங்களும் உங்கள் வீட்டாரும் நலமா?

    முதலில் உங்களுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஏனென்ரால் இஸ்லாம் சம்மந்தமான உங்கள் பதிவின் மூலம் இலவசமாக இஸ்லாத்திற்க்கு விளம்பரம் செய்து வருகிறீர்கள் உங்களின் இந்த சேவை தொடரட்டும். மேலும் இஸ்லாம் தொடர்பான உங்கள் அறிவுப்பூர்வமான(?) கேள்விகள் அனைத்தும் கடந்த 1400 ஆண்டுகளாக பலரால் கேட்க்கப்பட்டது தான். இது அனைத்திற்க்கும் பதில்கள் பலரால் தரப்பட்டுவிட்டன ஆனால் சில மக்களுக்கு உங்கள் கேள்விகள் புதியது போல தெரியலாம் அப்படி நினைக்கும் சகோதரர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் தயவு செய்து நீங்கள் குர்ஆனையும் இஸ்லாம் சம்மந்தமான நூல்களையும் படியுங்கள்.

    சரி விஷயத்திற்க்கு வருகிறேன். முஹம்மது நிலவை பிளந்துக் காட்டியதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை, அது பொய், இது அறிவியலுக்கு எதிரானது என்று கூறுகிறீர்கள்.

    ஆதாரம் 1: முஹம்மது நிலவை பிளந்துக் காட்டிய அந்த காலத்தில் இங்கு இந்தியாவில் கேரள பகுதிகளை ஆண்டு வந்த மன்னர் “சேரர் தொண்டை மான்” நிலவு பிளந்ததை தன் கண்களால் பார்த்து பிறகு கடல் மார்க்கமாக அரபு பிரதேசத்திற்க்கு சென்று அங்கு இஸ்லாத்தை தளுவுகிறார் பின்னர் இந்தியாவை நோக்கி திரும்பி வரும் தருணத்தில் அவர் மரணித்து விடுகிறார் அவரின் அடக்கஸ்தளம் இன்றும் ஓமான் நாட்டில் உள்ளது. இதற்க்கு ஆதாரம் இன்று வரை கேரளாவில் வாழ்ந்து வரும் சேர ராஜ குடும்பத்தின் வாரிசுகள்.

    ஆதாரம் 2: நிலவில் உள்ள அந்த கோடிற்க்கு(நீங்கள் பதிந்துள்ள முதல் புகைப்படம்) விஞ்ஞானிகளால் வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? “Arab Line” அரேபிய கோடு இதை பல விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்கிறார்கள் மேலும் அதற்க்கு தகுந்த விளக்கமும் தருகிறார்கள். இஸ்லாம் குறித்து இவளவு ஆராய்ச்சி(?) செய்யும் உங்களுக்கு இது ஏன் தெரியாமல் போனது.

    இப்படிக்கு
    உங்கள் சகோதரன்
    அப்துர்ரஹ்மான்
    abdulr829@gmail.com

  11. மிக அருமையான பதிவு. அந்தகால மக்களின் அறிவு அவ்வளவுதான். ஆஊன்னா இறைவனின் தூதரே …அப்படின்னு ஆரம்பித்து விடுவார்கள் அவரும் நல்லா ரீல் சுத்துறாரு…

  12. ஆதாரம் 1: முஹம்மது நிலவை பிளந்துக் காட்டிய அந்த காலத்தில் இங்கு இந்தியாவில் கேரள பகுதிகளை ஆண்டு வந்த மன்னர் “சேரர் தொண்டை மான்” நிலவு பிளந்ததை தன் கண்களால் பார்த்து பிறகு கடல் மார்க்கமாக அரபு பிரதேசத்திற்க்கு சென்று அங்கு இஸ்லாத்தை தளுவுகிறார் பின்னர் இந்தியாவை நோக்கி திரும்பி வரும் தருணத்தில் அவர் மரணித்து விடுகிறார் அவரின் அடக்கஸ்தளம் இன்றும் ஓமான் நாட்டில் உள்ளது. இதற்க்கு ஆதாரம் இன்று வரை கேரளாவில் வாழ்ந்து வரும் சேர ராஜ குடும்பத்தின் வாரிசுகள்.//

    1.முகமது நிலவை பிள‌ந்த வருடம் எது?

    2.அந்த சேர மன்னனின் முழு பெயர் என்ன ?

    3.சேரமான் பெருமானின் வம்சம் ஆண்டது(கொடிங்க நல்லூரில் இருந்து) 800 1102 கி.பி. அப்ப‌டி எனில் நீங்க‌ள் சொல்லும் அர‌ச‌ர் எந்த‌ வ‌ம்ச‌த்தை சேர்ந்த‌வ‌ர்?
    http://en.wikipedia.org/wiki/Chera_Dynasty
    3.அதை ப‌ற்றி அந்த‌ கால‌ த‌மிழ்/ம‌லையாள‌ இல‌க்கிய‌ங்க‌ளில் குறிப்பிட‌ப் ப‌ட்டு உள்ள‌தா?

    4.ஏதேனும் க‌ல்வெட்டு எதேனும் இதை ப‌ற்றி சொல்கிற‌தா?

  13. //ஆதாரம் 2: நிலவில் உள்ள அந்த கோடிற்க்கு(நீங்கள் பதிந்துள்ள முதல் புகைப்படம்) விஞ்ஞானிகளால் வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா? “Arab Line” அரேபிய கோடு இதை பல விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்கிறார்கள் மேலும் அதற்க்கு தகுந்த விளக்கமும் தருகிறார்கள். இஸ்லாம் குறித்து இவளவு ஆராய்ச்சி(?) செய்யும் உங்களுக்கு இது ஏன் தெரியாமல் போனது//

    இந்த பேர் வைத்த‌து /விஞ்ஞானிகள் விளக்கங்கள் குறித்த இணையப் பக்கம்?

  14. //உங்கள் அறிவுப்பூர்வமான(?) கேள்விகள் அனைத்தும் கடந்த 1400 ஆண்டுகளாக பலரால் கேட்க்கப்பட்டது தான்//

    இது எப்படி ஒரு ‘மாமூலான’ வசனமாக இருக்கிறது?

  15. நண்பர் அப்துர்ரஹ்மான்,

    ஒரு கோள் இரண்டாக உடைந்து மீண்டும் ஒன்று சேர்வது என்பது அறிவியலைப் பொருத்தவரை சாத்தியமில்லாத ஒன்று. அப்படி நிலவு உடைந்து சேர்ந்ததை அல்லது நிலவுக்கு பாதிப்பு ஏற்பட்டதை பூமியில் அதன் விளைவால் நேரவேண்டிய மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் இல்லை. குரானிலும் ஹதீஸிலும் கூறப்பட்டிருக்கும் நிலவு உடைந்தது கட்டுக்கதை அல்லது அறியாமல் கூறப்பட்டது என்பதற்கு இது ஒன்றே போதுமானது.

    சேரமான் பெருமான் பாஸ்கர ரவிவர்மா நிலவு உடைந்ததை பார்த்து இஸ்லாத்திற்கு மாறியதும் ஐயத்திற்கிடமானதே. பாஸ்கர ரவிவர்மாவின் காலம் எட்டாம் நூற்றாண்டு ஆனால் அவர் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த முகம்மதை சந்தித்திருக்கிறார். மக்காவில் முகம்மதை சந்தித்துவிட்டு கடல்வழியாக திரும்பினாலும், தரை வழியாக திரும்பினாலும் தற்போது ஓமன் நாட்டிலிருக்கும் சலாலா நகருக்கு செல்லவேண்டிய அவசியமில்லை. ஆனால் அவரின் சமாதி இருப்பது சலாலா நகரில். அன்றைய அரேபிய பகுதியில் அருகில் இருந்த நாடுகளுக்கு கடிதம் அனுப்பிய செய்திகள்கூட‌ அதிகாரபூர்வ ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் போது, தூரப்பகுதி நாடான இந்தியாவிலிருந்து ஒரு மன்னரே முகம்மதை தேடிவந்து மதம் மாறி பின் அவருடன் மாலிக் பின் தீனார் எனும் பிரச்சாரகரையும் அனுப்பிவைத்த செய்தி அதிகாரபூரவமான ஹதீஸ்களில் இடம்பெறாமல் போனதெப்படி?

    நிலவின் மேற்பரப்பில் கோடுபோல் தெரியும் அந்தப் படம் வரைகலை உத்தியில் வரையப்பட்ட படம். ஆனால் அது அரப் லைன் என்று அறிவியலாளர்களால் பெயர் கொடுக்கப்பட்டதாக குறிப்பிடுகிறீர்கள். விபரம் தாருங்கள்.

    தோழமையுடன்
    செங்கொடி

  16. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    //ஒரு கோள் இரண்டாக உடைந்து மீண்டும் ஒன்று சேர்வது என்பது அறிவியலைப் பொருத்தவரை சாத்தியமில்லாத ஒன்று. அப்படி நிலவு உடைந்து சேர்ந்ததை அல்லது நிலவுக்கு பாதிப்பு ஏற்பட்டதை பூமியில் அதன் விளைவால் நேரவேண்டிய மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்ததற்கான அறிகுறிகள் இல்லை//
    ஏன் அது சாத்திய மில்லாத ஒன்று? என்னென்ன விளைவிகள் வரும் என்று செங்கொடி அவர்களே “”விளக்க”” முடியுமா (என்னைப்பற்றி என்ற தலைப்புக்குள் சில கேள்விகளை கேட்டுள்ளேனே அதற்கு தங்கள் பதில் என்ன? இல்ல நான் உங்ககூட பேசமாட்டேன் என்று சொல்லுவது ஆசிரியர்கு அழகல்ல!!)

  17. நிலவு உடைந்ததர்க்கான ஆதாரங்களை கேட்டால் , எந்த விளைவுகளும் பூமியில் நிகழவில்லையே என்று சொன்னால், என்னன்னென்ன நிகழ்வுகள் வரும் என்று கேட்பது அறிவுடமையா..?

  18. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    //நிலவு உடைந்ததர்க்கான ஆதாரங்களை கேட்டால் , எந்த விளைவுகளும் பூமியில் நிகழவில்லையே என்று சொன்னால், என்னன்னென்ன நிகழ்வுகள் வரும் என்று கேட்பது அறிவுடமையா..?// நீங்க‌தான்(செங்கொடி) சொல்லுரீங்க‌ நில‌வு பிள‌ந்தால் பூமிதாங்காதுன்னு அதான் என்ன‌ விளைவுக‌ள் வறும்னு கேட்டேன் நான் ஒன்னும் த‌லைப்புக்கு வெளியே கேட்க‌ல‌யே? எப்ப‌டியும் ஆசிரிய‌ர் தெரிந்துதான் எழுதி இருப்பார்

  19. Question
    //நீங்க‌தான்(செங்கொடி) சொல்லுரீங்க‌ நில‌வு பிள‌ந்தால் பூமிதாங்காதுன்னு அதான் என்ன‌ விளைவுக‌ள் வறும்னு கேட்டேன் நான் ஒன்னும் த‌லைப்புக்கு வெளியே கேட்க‌ல‌யே? எப்ப‌டியும் ஆசிரிய‌ர் தெரிந்துதான் எழுதி இருப்பார்.//

    Answer is already there in the blog.

    1.முக்கியமான இந்த இரண்டு தாக்கங்களை பூமியில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிலவு, திடீரென ஒரு நாள் உடைந்துபோனது என்றால் அதன் தாக்கம் பூமியின் பருவகால நிலைகளில் தகுந்த மாறுதல்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

    2.. ஆனால் அது போன்ற எந்த மாறுதல்களும் பூமியில் ஏற்படவில்லை என்பதே உண்மை.

    3.இந்த நிகழ்வை முகம்மது நிகழ்த்திக்காட்டியது மக்கா எனும் ஊரில் அதாவது செங்கடலுக்கு அருகிலுள்ள ஒரு ஊர். கடலின் ஏற்றவற்றங்களைக் கட்டுக்குள் வைத்துருக்கும் நிலவு உடைந்தபோது செங்கடலில் ஏதாவது மாற்ற‌ங்கள் நிகழ்ந்திருக்க வேண்டுமல்லவா?

    4.அந்த மாற்றங்கள் அருகிலிருந்த மக்கவும் எட்டியிருக்க வேண்டுமல்லவா? அது ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்க வேண்டுமல்லவா? (நிலவு உடைந்ததற்கான ஆதாரமாகவேனும்) அப்படி ஏதேனும் ஹதீஸ் இருக்கிறதா? என்றால் நிலவு உடைந்தது என்பதை எப்படி ஏற்பது?

  20. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    //1.முக்கியமான இந்த இரண்டு தாக்கங்களை பூமியில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் நிலவு, திடீரென ஒரு நாள் உடைந்துபோனது என்றால் அதன் தாக்கம் பூமியின் பருவகால நிலைகளில் தகுந்த மாறுதல்களை ஏற்படுத்தியிருக்க வேண்டும்//
    இது உங்கள் செங்கொடியின் கருத்தா இல்லை ஏதும் விஞ்ஞாணிகளின் கருத்தா?

    1.பூமியின் பருவகால நிலைகள் ….எந்த‌ மாதிரியான‌ ப‌ருவ‌ கால‌ நிலை. டைட் பற்றி விளக்கங்கள் எனக்கு தேவைஇல்லை நிலவு உடைவதினால் ஏற்படும் விளைவுகள் எனக்கு தெரிய வேண்டும்.

    //இந்த நிகழ்வை முகம்மது நிகழ்த்திக்காட்டியது மக்கா எனும் ஊரில் அதாவது செங்கடலுக்கு அருகிலுள்ள ஒரு ஊர். கடலின் ஏற்றவற்றங்களைக் கட்டுக்குள் வைத்துருக்கும் நிலவு உடைந்தபோது செங்கடலில் ஏதாவது மாற்ற‌ங்கள் நிகழ்ந்திருக்க வேண்டுமல்லவா?// //அந்த மாற்றங்கள் அருகிலிருந்த மக்கவும் எட்டியிருக்க வேண்டுமல்லவா? அது ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்க வேண்டுமல்லவா?// //அந்த மாற்றங்கள் அருகிலிருந்த மக்கவும் எட்டியிருக்க வேண்டுமல்லவா? அது ஹதீஸ்களில் பதியப்பட்டிருக்க வேண்டுமல்லவா? (நிலவு உடைந்ததற்கான ஆதாரமாகவேனும்) அப்படி ஏதேனும் ஹதீஸ் இருக்கிறதா? என்றால் நிலவு உடைந்தது என்பதை எப்படி ஏற்பது?// …………..இதெல்லாம் “அறிவியல்” (அறிவியலா எப்படி விளக்கனும்னு படித்த உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்) விள‌க்க‌மா? இல்ல‌ வாத‌த்துகாக‌ வ‌ந்த கேள்வியா?

  21. என்னப்பா இது வர ஒரு முஸ்லிம் கூட வந்து நிரூபிக்கவில்லையே நிலவு உடைந்ததை.

  22. http://nineplanets.org/luna.html
    http://en.wikipedia.org/wiki/Moon
    http://en.wikipedia.org/wiki/Tidal_force

    அலைகள் என்பது நிலவினால் பூமியில் ஏற்படும் மாற்றமாகும்.
    சந்திரன் பிளப்பு(எப்படி சரி பாதியா அல்லது எப்படியோ) நிச்சயமாக அலைகளின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்ததி இருக்க வேண்டும்.

    மாற்றம் 1

    சரி பாதியாக மலைக்கு இரு புறமும் தெரியும் படி( அவர்கள் பார்த்த விதம்) பிளந்தது என்றால் அது கட‌லலைகளை இரு புறங்களிலும் இருந்து இழுத்து இருக்கும் .கடல் பிளந்தது (எங்கோ நடந்தது போல் இருந்தால் நான் பொறுப்பல்ல) போல் ஒரு தோற்றம் ஏற்பட்டு இருக்கும்.

  23. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    பிறச்சனையில்லை…….. தங்களால் நிலவு பிளந்திருந்தால் என்ன நடக்கும் என்று ஆணித்தரமாக சொல்ல முடியாதுதானே?
    i already told in my last comment dont assume the effect with the tidal force i want exactly what will happen if moon split and the effect to human race!!?? got it

  24. [54:1] In the name of Allah, the Gracious, the Merciful.
    [54:2] The Hour has drawn nigh, and the moon is rent asunder.

    குரான் என்பது முகம்மதின் சொந்தமான வசனங்கள் அல்ல. அவையாவும் இறைவனின் நேரடி வார்த்தைகள்.

    நீங்கள் தயவு செய்து ஹதீஸ்களை வைத்துக்கொண்டு “இதற்கு ஆதரம் கொடு” , “அதற்கு ஆதரம் கொடு” என்று கேட்கவேண்டாம். ஹதீஸ்கள் இறைவனின் வார்த்தைகள் கிடையாது.

    நிலவு பிளந்தது என்று இறைவன் சொல்லியுள்ளார்.
    இறைவன் சொன்னதிற்கு குரானே ஆதாரம்.
    குரானுக்கே (இறைவனின் வார்த்தைகே)ஆதாரம் கேட்கிறீர்களா????

    அதற்கு அதுதான் ஆதாரம்.
    இந்தச் சின்ன புரிதல்கூடவா இல்லை உங்களிடம்?

    தெரிந்து கொள்ளுங்கள்.
    குரானை நம்புபவர்களுக்கு குரானே ஆதாரம்.
    குரானை நம்பாமல் நீங்கள் கேள்வி கேட்டால் என்ன செய்வது? :-(((

    முதலில் குரானை நம்புங்கள் பின்னர் , குரானில் சொல்லப்பட்டவைக்கு குரானே ஆதாரம் என்ற புரிதல் வந்துவிடும்.

  25. ///பிறச்சனையில்லை…….. தங்களால் நிலவு பிளந்திருந்தால் என்ன நடக்கும் என்று ஆணித்தரமாக சொல்ல முடியாதுதானே?//

    ஒருவேளை நிலவு பிளந்து இருந்தால் அதன் விளைவாக ஏதேனுமொரு நிகழ்வு நடந்து அது பதிவு செய்யப் பட்டு இருக்கும்.

    நிலவு பிளந்தால் இது நடக்கலாம் என்பது இயற்பியல் விதிகளின் படி ஒரு அனுமானமே. ஒரு இது ஒரு ஹைப்போதிஸிஸே.
    I can’t assure that these facts are the effect of moon split.It is a hypothesis.

    ஒரு விஷயம் ஒரு காலத்தில் குறிபிட்ட சூழ்நிலையில் நட‌க்கிறது என்றால்.

    பிறிதொரு காலத்தில் அதே சூழ்நிலையில் நடக்க வேண்டும். அது மட்டுமே உண்மை.

  26. நிலவு பிளந்ததை முகமதுவின் காலத்தில் நடை பெற்றதாக நம்புகிறீர்கள்.

    1.முகமதுவிற்காக நிலவு பிளக்கப் பட்டதா?.

    நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்” என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள செய்பவற்றை நன்கறிபவன். (31:29)

    2.அல்லது நிலவு பிளக்கும் கால‌த்தை அறிந்த முகமது அத்னை மக்கா வாசிகளுக்கு காட்டினாரா?

    இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். (36:39)

    சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (55:5)
    சந்திரன் ஒளியும் மங்கி- (75:8)

    3.அல்லது மக்காவாசிகளின் கண்களுக்கு மட்டும் நிலவு பிள்ந்தது போல் தெரிந்ததா?

    எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், “இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள். (54:2)
    அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர், மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும். (54:3)

  27. //ஹதீஸ்கள் இறைவனின் வார்த்தைகள் கிடையாது.//

    ந‌ண்ப‌ரே சுன்னி இஸ்லாமில் குரானுக்கு என்ன‌ ம‌திப்பு மரியாதையோ அதே அளவு உறுதியான ஆதாரப் பூர்வமான ஹதிஸ்களுக்கு கொடுக்கப் படுகிறது. அனேகமான இஸ்லாமிய சட்டதிட்டங்கள் ஹதிதுகளை ஆதாரமாக கொண்டவை.

    முஸ்லீம்களில் சிலர் குரான் மட்டுமே என்ற கொள்கை உடையவர்கள் . அவர்களை குரானிய வாதிகள் என்று அழைக்கப் படுகிறார்கள்.
    http://en.wikipedia.org/wiki/Qur'an_alone
    http://www.quranists.com/

  28. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    //நிலவு பிளந்தால் இது நடக்கலாம் என்பது இயற்பியல் விதிகளின் படி ஒரு அனுமானமே. ஒரு இது ஒரு ஹைப்போதிஸிஸே.
    I can’t assure that these facts are the effect of moon split.It is a hypothஎசிச்// அதான் சார் கேக்குறேன் நிலவு பிழந்தால் என்ன நடக்கும் திரும்ப திரும்ப அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கிரீர்கள். என்ன அனுமானம் அதை சொல்லிவிடுங்கள் திரும்பவும் அலைகள் புராணத்திற்கு போகாதீர்கள் அது உங்கள் அனுமானமே “நிலவினால் அலைகளே மாற்றத்திற்கு ஏற்படும் போது; பிளந்தால் வேறு மாதிரியான மாற்றம் அந்த கால மக்கள் குறிப்பிடும்படி ஏற்படலாம்” நீங்கள் ஏதோ ஒன்று அனுமானம் செய்துகொண்டு சரித்திரத்தை நோண்டினால் என்ன செய்வது???

    //நிலவு பிளந்ததை முகமதுவின் காலத்தில் நடை பெற்றதாக நம்புகிறீர்கள்.

    1.முகமதுவிற்காக நிலவு பிளக்கப் பட்டதா?.

    நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான்; இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்” என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள செய்பவற்றை நன்கறிபவன். (31:29)

    2.அல்லது நிலவு பிளக்கும் கால‌த்தை அறிந்த முகமது அத்னை மக்கா வாசிகளுக்கு காட்டினாரா?

    இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். (36:39)

    சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. (55:5)
    சந்திரன் ஒளியும் மங்கி- (75:8)

    3.அல்லது மக்காவாசிகளின் கண்களுக்கு மட்டும் நிலவு பிள்ந்தது போல் தெரிந்ததா?

    எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், “இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்” என்றும் கூறுகிறார்கள். (54:2)
    அன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர், மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும். (54:3)//
    ஐய்யோ சங்கரா!! உள‌ர‌ ஆர‌ம்பித்து விட்டீரா எனினும் நான் பதில் சொல்ல கடமை பட்டிருக்கிறேன் என் பதில்: ட்ப்ப்க்டெ ஹெட்ப்ஹ்க் ப்க்ஃப்ப்ப்ட்க்ப்க்ப்ர் ட்ர்ட்ப்ர்க்ட்ப்க்கெப்ட் க்ப்ட்ப்ட்ப்ர் ப்க்ட்ர்ப்க்ட் ர்ப்ட்ப்ட்ப்ட்ட் பெர்பெக்பெரெ ப்ந்ட்க்ர் ரெர்ட்ட்ப்ட் ர்ந்ட்ங்ட் ப்க்ட்ப்ட்ப் இஞுனுட்நுச்னுச் ந்ட்னுன்நுட்னுஎவ்னெஉ ஜ்ப்ப்னுப்வுப் ஜுப்னைட்ச்ன்ப்விட்ன் இனின்வெ இனிஉப்ன்வ் வ்புப்வ் ஜுன்வ் ஜுபெடெந்ட் ஒஜொஞ் நொஎஜ்கொஇஜ்ன் இனிங்வ் இன்ர்க் ஜுனுர்க் ந்னுன்ர்ஃப் உனுப்ங்வ் இஉனுங்வ் ஈஉன்ஹ்ரெக் இனினெர் இஹிர் நுன்ஹ்க் உப்ங் இஉனுங்வ் ஜுப்னுங் இஉனுஜ்க் இஉனெநுர்க்ன் க்ஞுர்.
    வேதாள‌ம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டது!! அடெரால்,டிசடிரைன் மருந்தை தவராமல் உட்கொள்ளுங்கள் தங்களுக்கு உங்கள் மொழியில் பதில் அளிப்பதற்காக நானும் உட்கொள்கிறேன் . இந்த பதிவில் “பிரிவோம்” அடுத்த பதிவில் “சந்திப்போம்”

  29. “ட்ப்ப்க்டெ ஹெட்ப்ஹ்க் ப்க்ஃப்ப்ப்ட்க்ப்க்ப்ர் ட்ர்ட்ப்ர்க்ட்ப்க்கெப்ட் க்ப்ட்ப்ட்ப்ர் ப்க்ட்ர்ப்க்ட் ர்ப்ட்ப்ட்ப்ட்ட் பெர்பெக்பெரெ ப்ந்ட்க்ர் ரெர்ட்ட்ப்ட் ர்ந்ட்ங்ட் ப்க்ட்ப்ட்ப் இஞுனுட்நுச்னுச் ந்ட்னுன்நுட்னுஎவ்னெஉ ஜ்ப்ப்னுப்வுப் ஜுப்னைட்ச்ன்ப்விட்ன் இனின்வெ இனிஉப்ன்வ் வ்புப்வ் ஜுன்வ் ஜுபெடெந்ட் ஒஜொஞ் நொஎஜ்கொஇஜ்ன் இனிங்வ் இன்ர்க் ஜுனுர்க் ந்னுன்ர்ஃப் உனுப்ங்வ் இஉனுங்வ் ஈஉன்ஹ்ரெக் இனினெர் இஹிர் நுன்ஹ்க் உப்ங் இஉனுங்வ் ஜுப்னுங் இஉனுஜ்க் இஉனெநுர்க்ன் க்ஞுர்”

    இவர் இப்படியே பதில் சொல்றது பெட்டர்னு நெனைக்கிறேன். நிஜமாவே இவர் ஒழுங்கா பதில் சொல்றதுக்கு இது பெட்டர் தான்.

    நிலவு பிளந்துதுன்னு திருக்குர் ஆன் லயும், ஹடீட்லையும் சொல்லிருக்கு. அது நடந்துதா? இல்லையா? நடந்துதுண்ணா இவர்தான் புரூஃப் பண்ணனும். அப்படி ஏதும் நடக்கலண்ணுதான், இங்க கடல்லையோ, வெதர்லயோ மாற்றம் ஒன்னும் இல்லைன்னு சொல்றாங்க.

    ஆனா இவரு, அஸம்ஷன் பண்ணாம கரக்டா சொல்லச் சொல்றாரு. நிலா ஏற்கனவே ஒடஞ்சிருந்தாத்தான் கரக்டா சொல்லமுடியும், அதுவரை அஸ்ம்ஷன் தான்.

    அதெல்லாம் இருக்கட்டும். நிலவு ஒடஞ்சுதா இல்லையா ஒடஞ்சுதுண்ணா எப்படி

  30. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    கலக்குகுங்க குந்தவி அப்படியே சங்கர் மாதிரியே பேசுறீங்க??

  31. பூமியின் துணைக் கோளாக அமைந்துள்ள சந்திரனைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள், சந்திரன் இரண்டாகப் பிளப்பதும், பிறகு ஒன்று சேர்வதும் சாத்தியமற்றது என்று கருதலாம்.
    ஆனால் திருக்குர்ஆனில் இறைவன் தனது தனிப் பெரும் ஆற்றலால் நிகழ்த்திய அற்புதங்களைக் கூறும் போது, அதற்கான சான்றுகளையும் உலகில் விட்டு வைக்கிறான்.
    நூஹ் நபியின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தைச் சொல்லும் போது அவர் பயணித்த கப்பலைச் சான்றாக விட்டு வைத்திருக்கிறோம் என்று இறைவன் குறிப்பிடுகிறான். அந்தக் கப்பல் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

    கடலை இரண்டாகப் பிளந்து, நல்ல வர்களைக் காப்பாற்றி, ஃபிர்அவ்ன் என்ற கொடியவனைக் கடலுக்குள் மூழ்கடித்த அற்புதத்தைக் கூறும் போது, அவனது உடலை அத்தாட்சியாக விட்டு வைத் துள்ளோம்’ என்று குறிப்பிடுகிறான். இறை வன் விட்டு வைத்த ஃபிர்அவ்னின் உட லும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு பாது காக்கப்பட்டுள்ளது.

    அது போல் சந்திரன் பிளந்ததைக் கூறி விட்டு, இது ஓர் அற்புதம் என்பதை யும் உறுதி செய்து விட்டு, அனைத்தும் பதிவாகியிருக்கின்றது என்று கூறுகிறான்.

    சந்திரன் பிளந்த நிகழ்வு தந்திரமோ அல்லது கண்கட்டு வித்தையோ அல்ல. அது பதிவாகியிருக்கின்றது என்று கூறுகிறான்.
    நிலவில் முதலில் காலடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், அங்கு இறங்கிய போது அவர் பயணித்த விண்கலம் நிலவைப் பல கோணங்களில் ஏராளமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது.
    அவற்றுள் ஒரு கோணத்தில் எடுக்கப் பட்ட புகைப்படங்களில் ஓர் ஆப்பிளை இரண்டாக அறுத்து மீண்டும் இணைத்தது போன்ற கோடு இருந்தது.

    இதற்கான காரணத்தை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு அரபியன் பிளவு என்று பெயரிட்டனர். காரணம், சந்திரன் பிளந்தது என்ற நம்பிக்கை அரபியரிடம் (முஸ்லிம்களிடம்) இருந்தது தான்.
    முஸ்லிம்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் பிளவு அமைந்துள்ளது என்பதே இதன் பொருளாகும்.
    இறைவன் கூறுவது போன்று, சந்திரன் பிளந்ததற்கான ஆதாரம் சந்திரனிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்தக் கண்டுபிடிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
    இந்தத் தகவல் அமெரிக்க அரசால் தமிழ் உட்பட உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட்ட அமெரிக்கன் ரிப்போர்ட் டர் என்ற மாத இதழில் புகைப்பட ஆதாரங்களுடன் வெளிவந்தது.
    சந்திரன் பிளந்தது பற்றியும், அதற்கான சான்று சந்திரனில் பதிவாகி யுள்ளது பற்றியும் திருக்குர்ஆன் அறிவித்திருப்பது இது இறைவேதம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

  32. கலக்குகுங்க நீதியரசன் அப்படியே ஸ்கூல் பாய் மாதிரியே பேசுறீங்க???

  33. நீதியரசர் அப்படின்னாலே நம்பிக்கையை மட்டுமே வைத்து தீர்ப்பு கொடுத்துருவாங்க போல இருக்கு.

  34. குர்ரானில் கூறப்பட்ட நிலவு பிளந்தது பற்றிய கருத்துக்கள் அக்காலத்திய வானியல் மற்றும் இயற்பியல் அறிவுடன் பொருத்திப் பார்க்கப் படவேண்டும் என்று எண்ணுகிறேன்.

    குர்ரானில் விளக்கப்பட்டுள்ள இந்நிகழ்வை பிற்காலத்தில் வந்த இஸ்லாமிய அறிஞர்கள் பலரும் பலவிதமாக விளக்கப்படுத்தியுள்ளனர். சிலர் சூரிய கிரகணத் தோற்றம் என்றும் இதை அர்த்தப்படுத்துகின்றனர். சூரிய கிரகணம் இயற்கை நிகழ்வு என்பதால் அதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன.

    http://en.wikipedia.org/wiki/Splitting_of_the_moon

    ல் இது சம்பந்தமாக பல்வேறு காலங்களில் பல்வேறு இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கங்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    எனவே, இதை அப்படியே literal ஆகப் பார்க்க வேண்டியதில்லை.

  35. குரான் முகம்மது நபிக்கு எந்த ஒரு அற்புதம் செய்யவும் அனுமதி அளிக்கப்படவில்லைஎன்றும் கூறுகிறது. அதே நேரத்தில் நிலவை உடைத்ததையும் பேசுகிறது. இது முரண்பாடு. ஆனால் இதனை பல சப்பை வாதங்கள் வைத்து சமாளிக்கிறார்கள். அவர் இருந்தபோது நிலவு
    இவர்கள் இஸ்லாமிய அடையாளத்தை நியாயப்படுத்தவேண்டும் என்ற ஒரே காரணம்தான் முக்கியமாக இருக்கிறதே தவிர, இவர்களை பார்த்து மற்றவர்கள் சிரிப்பது தெரிவதே இல்லை.

  36. நீதியரசர் அவர்களே,

    நூஹ் நபியின் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டால், அது நூஹ் நபியின் கப்பல்தான் என்று நிரூபிக்கப்பட வேண்டும். எந்த கப்பல் கிடைத்தாலும் அது நூஹ் நபியின் கப்பல் என்று கூறிவிட முடியாது. அதுவும், பைபிள் குரான் சொல்லும் காலத்தியதாக அறிவியற்பூர்வமாக நிரூபிக்கப்பட வேண்டும். அந்த கப்பலும் உலகத்தில் தற்போது இருக்கும் அனைத்து உயிரினங்களிலும் இரண்டு ஜோடி ஏற்றி 40 நாட்களுக்கு உணவும் கொள்ளத்தக்கவையாக இருக்கவேண்டும். உதாரணமாக நூற்றுக்கணக்கான வகையான பெங்குவின்கள், பல ஆயிரக்கணக்கான வகையான பூச்சிகள், அவைகளுக்கு உணவு எல்லாம் இருக்கவேண்டும். கூடவே சரியாக நூஹ் நபி காலத்தில் உலகமெங்கும் (அலாஸ்காவிலிருந்து சவுதி அரேபியா, அண்டார்டிகா, மங்கோலியா, சீனா, ஜப்பான், ஹிமாலயா, தென்னமெரிக்க காடுகள் எல்லாவற்றிலும் ஒரே நேரத்தில் வெள்ளம் வந்தது என்பதையும் நிரூபிக்க வேண்டும்.

    அதே மாதிரி சந்திரனை பிளந்ததாக சொல்லும் அற்புதம் சரியாக 1400 வருடங்களுக்கு முன்னால் நடந்திருக்க வேண்டும். எப்போதோ பல கோடி வருடங்களுக்கு முன்னால் நிலவில் நடந்த பூகம்பத்தின் பிள்வை வைத்து ஆ நிலவு உடைந்து சேர்ந்தது என்று அள்ள முடியாது. அந்த பிளவு சரியாக 1400 வருடங்களுக்கு முன்னால் குரானின் அந்த வரி வெளிப்பட்ட அன்றுதான் நடந்தது என்று நிரூபிக்கப்பட வேண்டும்.

    இதெல்லாம் நிரூபித்துவிட்டு வாருங்கள். பிறகு பேசுவோம்.

  37. அரிவியல் அல்லாவிடம் இல்லை என்பதை இக்கட்டுரை அரியத்தருகிரது

  38. You Are Refusing Allah(swt) and islam.. can you say how the world has come? from atom? ha ha ha now scientists has discovered that there is smallest one than an atom.. what do you say? “energy cannot be created nor be destroyed”… this is the main of the scince.. if you ask a question that who created allah(swt). then i wil ask who created the energy..?

    “SUYANALAVAATHIGALAY SOAR POARUKKU THAYARA” “UNGALUKKU NEENGALA AAGUMANATHAYUM< THADUKKAPPATTADHAYUM VAHUKKUREERGALA?

  39. நண்பர் நீதி அரசன் நன்றாக கூறினார், நிலவு பிளந்ததை பற்றிய ஒரு சிறு ஆதாரம் நிலவில் இருக்கிறது, ஆனால் ஒரு நூறு வருடங்களுக்கு முன்னர் இந்த ஆதாரம் கூட தெரிந்திருக்காது, அப்போது நிலவு பிளந்ததை பற்றி படிப்பவர் தான் பெரிய அறிவாளி என்று நினைத்து கொண்டு இஸ்லாம் பொய் என்று கூறி இருப்பார்.

    இன்னும் சில காலங்களில் நிலவு பிளக்கப்பட்டது உண்மை என்று தெரிய வரும், அப்போதும் நீங்கள் அதை பொய் என்று நிரூபிக்க எதாவது கிடைக்குமா என்று தான் தேடுவீர்கள், இப்படியே உங்கள் வாழ் நாள் முழுவதும் வீணடித்தும் உங்களால் ஒரு முடிவுக்கு வர முடியாது,

    எங்கு சென்றாலும் கடைசியில் நம்பிக்கையின் அடிப்படையிலயே வரவேண்டும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

  40. //எங்கு சென்றாலும் கடைசியில் நம்பிக்கையின் அடிப்படையிலயே வரவேண்டும் என்பதை யாராலும் மறுக்க முடியாது//
    நல்ல நம்பிக்கை.அதாவது நம்புங்கள் மத புத்தகத்தில் கூறப்பட்டதை.நம்புங்கள் அது உண்மையாகும் என்று.

    நீங்களாவது பதில் சொல்லுங்க..
    நிலவு பிளந்ததை முகமதுவின் காலத்தில் நடை பெற்றதாக நம்புகிறீர்கள்.

    1.முகமதுவிற்காக நிலவு பிளக்கப் பட்டதா?.

    2.அல்லது நிலவு பிளக்கும் கால‌த்தை அறிந்த முகமது அத்னை மக்கா வாசிகளுக்கு காட்டினாரா?

    3.அல்லது மக்காவாசிகளின் கண்களுக்கு மட்டும் நிலவு பிள்ந்தது போல் தெரிந்ததா?

    4.கடைசி நாளிலும் நிலவு பிளக்குமா?

    5. அல்லது நிலா என்ன ஆகும்? ஏனென்றால் நேரம் நெருங்கி விட்டது என்றும் கூறப் படுகிறது?

  41. //You Are Refusing Allah(swt) and islam.. can you say how the world has come? energy cannot be created nor be destroyed”… this is the main of the scince.. if you ask a question that who created allah(swt). then i wil ask who created the energy..? //
    உலகம் எப்படி தோன்றியது என்பது பற்றி சில கருத்துகள் நிலவுகின்றன.அதில் இறைவன்(ஏதாவது ஒரு மத்த்தை சேர்ந்த) படைத்தார் என்பதும் ஒரு கருத்து. எந்த கருத்துமே ஐயந்திரிபர நிரூபிக்கப்படவில்லை.

    from atom? ha ha ha now scientists has discovered that there is smallest one than an atom.. what do you say? “

    ஹி ஹி ஹி அணுவை விட சிறிய துகளுக்கும் அல்லாவிற்கும் என்ன சம்பந்தம் ? கொஞ்சம் விளக்குங்கள்.

    //if you ask a question that who created allah(swt). then i wil ask who created the energy..? //

    அல்லாவும் ஆற்றலும் ஒன்றா? ஆற்றலுக்கு உயிரில்லை,இடம்,கால,அறிவியல் விதிகளுக்கு கட்டுப் பட்டது. அல்லா எப்படிங்க?

  42. //அல்லாவும் ஆற்றலும் ஒன்றா? ஆற்றலுக்கு உயிரில்லை,இடம்,கால,அறிவியல் விதிகளுக்கு கட்டுப் பட்டது. அல்லா எப்படிங்க?//

    ஹா ஹா ஹா அறிவியல் விதிகளை உருவாக்கியது யார்.? எதற்கு கட்டு படுது. ஏன் கட்டுபடுது.

    புத்திசாலி தனமா கேக்குறதா நெனப்பா.

  43. //ஹா ஹா ஹா அறிவியல் விதிகளை ஹா ஹா ஹா அறிவியல் விதிகளை உருவாக்கியது யார்.? எதற்கு கட்டு படுது. ஏன் கட்டுபடுது.

    அப்ப‌டி எல்லாம் இல்லீங்கோ. யாருங்க, எப்போங்க,எப்படிங்கோ உருவாக்கினாங்கோ?
    அப்ப‌ க‌ட்டு ப‌டாதா? கொஞ்ச‌ம் விள‌க்குங்க‌.

    //புத்திசாலி தனமா கேக்குறதா நெனப்பா//

    ஏங்க நான் உங்க‌ளோட‌ விவாத‌ம் ப‌ன்றேன் நான் எப்படி புத்திசாலி ஆக முடியும்? உங்க‌ளை மாதிரித்தான் நானும்.

  44. நண்பர்களே,
    அறிவியல் விதிகளை உருவாக்கியது ஆண்டவன் என்றால் அவ்விதிகளுக்கான சூத்திரத்தை வேத‌புத்த‌க‌த்திலிருந்து கொஞ்ச‌ம் விள‌க்கித்தாருங்க‌ள்,ப‌ள்ளிப்பாட‌ புத்த‌க‌த்தில் சேர்த்து ச‌ம‌ச்சீர் க‌ல்விக்கு உத‌வி புரிந்தால் உல‌க‌ ம‌க்க‌ளும் ப‌ய‌ன‌டைவார்க‌ள்,உல‌மாக்க‌ளை க‌ல‌ந்து உருப்ப‌டியாக‌ எதையாவ‌து செய்யுங்க‌ள் புண்ணிய‌மாவ‌து கிடைக்கும் உங்க‌ளுக்கு.

  45. @sankar
    //அப்ப‌டி எல்லாம் இல்லீங்கோ. யாருங்க, எப்போங்க,எப்படிங்கோ உருவாக்கினாங்கோ?
    அப்ப‌ க‌ட்டு ப‌டாதா? கொஞ்ச‌ம் விள‌க்குங்க‌.//

    சும்மா அப்டி இல்லனா, எப்டி கட்டுப்படும். அத நான் கேக்குறேன், முடிஞ்சா பதில் சொல்லுங்க.

    @rafi
    //அறிவியல் விதிகளை உருவாக்கியது ஆண்டவன் என்றால் அவ்விதிகளுக்கான சூத்திரத்தை வேத‌புத்த‌க‌த்திலிருந்து கொஞ்ச‌ம் விள‌க்கித்தாருங்க‌ள்,ப‌ள்ளிப்பாட‌ புத்த‌க‌த்தில் சேர்த்து ச‌ம‌ச்சீர் க‌ல்விக்கு உத‌வி புரிந்தால் உல‌க‌ ம‌க்க‌ளும் ப‌ய‌ன‌டைவார்க‌ள்//

    உலகத்துல உள்ள எல்லா சூத்திரதையும் எழுதுனுன்னா ஒரு கோடி புத்தகம் வேணும், கொஞ்சம் லாஜிக்கா பேச கத்துகங்க.

    காமத்தையும் கடவுள் தான படச்சாறு அப்ப காமசூத்ரா வேத புத்தகத்துல இருக்கான்னு ஒரு ஆளு கேப்பாரு, இந்த மாதிரி கேனத்தனமான கேள்வி கேக்குரவன்களோட நோக்கம் விசயத வெளங்க இல்ல, விதண்டா வாதம் புரிய.

  46. @sankar

    1) முகமதுவிற்காக நிலவு பிளக்கப் பட்டதா?.

    மக்களுக்கு காண்பிக்க.

    2.அல்லது நிலவு பிளக்கும் கால‌த்தை அறிந்த முகமது அத்னை மக்கா வாசிகளுக்கு காட்டினாரா?

    ஆம்.

    3.அல்லது மக்காவாசிகளின் கண்களுக்கு மட்டும் நிலவு பிள்ந்தது போல் தெரிந்ததா?

    பிளக்காமல் பிளந்தது போல எப்படி தெரியும்.

    4.கடைசி நாளிலும் நிலவு பிளக்குமா?

    சரியாக தெரியவில்லை.

    5. அல்லது நிலா என்ன ஆகும்? ஏனென்றால் நேரம் நெருங்கி விட்டது என்றும் கூறப் படுகிறது?

    அது பற்றி இல்லை.

  47. Fa
    //உலகத்துல உள்ள எல்லா சூத்திரத்தையும் எழுதனும்னா ஒரு கோடி புத்தகம் வேனும் கொஞ்சம் லாஜிக்கா பேசகத்துக்குங்க//

    அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் சூத்திரம் இருக்குங்கோ…அத்தனையும் புத்தகம் போட்டுத்தானுங்கோ படித்துக்கொண்டிருக்கிறோம். எல்லாம் தேவையில்லிங்கோ அறிவிய‌ல் அறிஞ‌ர்க‌ள் க‌ண்டுபுடிச்ச‌தையெல்லாம் ஆண்ட‌வ‌ன் ஏற்க‌ன‌வே சொல்லிப்புட்டாருன்னு ஜால்ரா போடுற‌ ச‌மாச்சார‌த்துக்கு ம‌ட்டும் சூத்திர‌ம் கொடுத்தா போதுமுங்கோ.

    //காமத்தையும் கடவுள்தான படைச்சாறு//

    யாரு..கடவுளோட பி.ஏவா பேசுறது ?..ப‌டைச்சதா எந்த கேனயனும் சும்மா சொல்ல‌லாமுங்கோ எப்ப‌டி ப‌டைச்சேன்னு சொல்ற‌துக்குத்தான் புத்தி வேனுமுங்கோ அது அறிவிய‌ல் அறிஞ‌ர்க‌ளால்தானுங்கோ முடியும்.

    அர‌பு நாட்டு புத்த‌க‌த்தில் எழுதிவ‌ச்சு பொள‌ந்த‌ நில‌வுக்கு பெய‌ர் அம்புலிமாமா நில‌வுங்கோ எங்க‌ ஊரு நில‌வு க‌ல‌ர்க‌ல‌ரா தெரியுதுங்கோ..ந‌ம்புங்கோ..ஒருத்த‌ங்க‌ம‌ட்டும் ந‌ம்புனா ப‌த்தாதுங்கோ..ஒல‌க‌மே ந‌ம்ப‌னுங்கோ..பிள்ளையார் பால் குடிச்சார்னா சிரிக்கிறீங்கோ..நில‌வ‌ பொள‌ந்தார்னா ம‌ட்டும் க‌ண்ண‌மூடிக்கிட்டு ந‌ம்புறீங்கோ..அது எப்ப‌டீங்கோ?????

  48. பதிவுக்குள் வருபவர்கள் ஸ்கூல்பாய் என்ற பெயரை ”*****” என்று படிக்கவும். அதுபோல அவர் எழுதுவதையும் ” அல்லா இருக்கிறார், ஆனால் நான் நிருபிக்க மாட்டேன். கடவுள் இல்லை என்று சொல்லும் நீங்கள்தான் நிறுபிக்க வேண்டும்” என்று வாதிடுவர்கள் பட்டியலில் வைக்கவும்.

  49. வாங்க சாகித் உங்க செங்கொடி ரிலேடிவிடி பத்தி பேசும்போது எங்க போயிருந்தீங்க……….படம் போட்டு விளக்குனது யாரு? வாயில வட சுட்டு தந்தது யாரு? அட அத வுடுமையா எதையும் பகுத்து அறியும் சாகித்தே நீ தயரா?

    //அல்லா இருக்கிறார், ஆனால் நான் நிருபிக்க மாட்டேன். கடவுள் இல்லை என்று சொல்லும் நீங்கள்தான் நிறுபிக்க வேண்டும்// வாருங்கள்…………..!!!!சிகப்பு கலர்ல துண்டு கட்டிட்டு கொட்டு அடிச்சா பெரிய ________________ “ஆ”…………..வாரும் தாங்களாவுது வாய் பேச்சு பேசாமல் அறிவியல் பூர்வமான எழுத்து விவாதத்துக்கு விவாதத்துக்கு வாரும் இல்லை மூடிக்கொண்டு இரும்……

  50. இடுப்பில் சிகப்பு துண்டை கட்டி கொண்டு பறை அடிக்கும் உழைக்கும் வர்கம் சாகித்தே என் சவாலுக்கு என்ன பதில் தரப் போகிறீர்கள்..

  51. சார்பியல் கொள்கைக்கும் குரானுக்கும் என்ன சம்பந்தம்.?

    நீங்கள் நம்புவது

    1. திரு முகமது என்பவருக்கு 610 632 வரை அல்லாவால் ஜிப்ரயீல் என்னும் மலக்கு மூலம் சிறிது சிறிதாக அல்லாவால் அளிக்கப் பட்டதுதான் குரான்.

    2.முகமதுவின் மறைவிற்கு பிறகு,இந்த குரான் மன்னம் செய்தவர்களிடம் இருந்து கலீபா திரு உஸ்மான் அவர்களால் தொகுக்கப் பட்டது.

    3. அத்ற்கு பிறகு சுமார் 100 வருடங்கள் கழித்து ஹதிதுகள் தொகுக்கப் பட்டது.
    இதில்தான் அந்த நிலவு பிளந்த செயல் கூறப் பட்டு உள்ளது.

    4. சுன்னி முஸ்லீம்கள் குரான் மற்றும் சில ஹதிதுகளை ஆதார பூர்வமாக ஏற்கின்றனர். பிற பிரிவு இஸ்லாமியர் வேறு ஹதிதையோ அல்லது ஹதிதை நிராகரிக்கின்றனர்.

    நிலவு பிள்ந்தற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

    சில(அல்லது பல?) அறிவியல் விவகாரங்கள் குரானில் இருக்கிறது என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம் .

    1. குரானும் அறிவியலும் ஒத்து போகிற விஷயங்கள் என்னென்ன‌?

    2.குரானில் கூறப் படாத அறிவியல் விஷயங்கள் இருக்க முடியுமா?

    3.குரானுக்கு எதிரான அறிவியல் விஷ்யங்களை என்ன செய்வது?

  52. அன்புள்ள செங்கொடி
    எங்கள் முஸ்லீம்களை அறிவியல் பக்கம் போக விடாமல் இந்த குரான் விஞ்ஞானிகள் செய்யூம் வித்தைகளைப் பார்க்கும் போது மிகக் கவலையாக இருக்கின்றது. முஸ்லீம்கள் எல்லோரும் இஸ்லாத்தில் விரும்பி இருக்கவில்லை. உண்மையை வெளியே சொன்னால் இவா;கள் நெருக்குதல்கள் அதிகம் என்றுதான் பல போ; இருக்கின்றௌம். திருமண வாழ்க்கை போன்ற பல விடயங்களில் இஸ்லாம் சொன்னதைப் போல் இல்லாமல் நீங்கள் சொன்ன அலாவூதீனைப் போன்று கன்னியமாக நடந்து கொள்கின்றௌம்.
    மனித நாகரீகம் குறைந்த இடத்தில் பிறந்து அரேபிய கேவலங்களை மதமாக அரங்கேற்றிச் சென்ற முகம்மதின் வண்ட வாளங்களை நாh;நாராய்க் கிழிக்க காத்திருந்தோம். குரானின் அறிவீனத்தைத் தொகுத்தும் இருந்தோம். ஆனால் நாங்கள் எழுத நினைத்ததைவிட சிறப்பான பதிவை வெளியிட்டதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றௌம் – இலங்கையிலிருந்து

  53. அய்யா வணக்கம்.

    குரான் என்ன சொல்லிச்சு,பைபிள் என்ன சொல்லிச்சு,கீதை என்ன சொல்லிச்சு

    ப்ளா..ப்ளா..ப்ளாஆ இதெல்லாம் வேண்டாம், மனுஷனா நீ என்ன சொல்ற?

    எல்லா மனுஷனும் ஒண்ணுதான், கடவுளத் தூரவிடு…

    நல்லா உழை, உழைச்சதுக்கு உரிய ஊதியத்த கறாரா வாங்கிரு,

    யாரையும் ஏமாத்தாதே,யாரிடமும் ஏமாறாதே,செலவழிச்சது போக

    மீதியச் சேத்து வை,இந்த உலகத்துல நாம இருக்கப் போறது அதிகமாப் போனா

    எம்பதோ, நூறோ வருஷந்தான்,

    ஏம் மதந்தான் பெருசு, உம் மதம் சிறுசு,

    அதத் தூர தள்ளு..

    இறை நம்பிக்கை இருக்கட்டும், எனக்கும் இருக்கு,

    நேற்றுவரை நடந்ததை மற, அல்லா சொன்னாரு, யேசு சொன்னாரு

    கிருஷ்ணன் சொன்னாரு எல்லாம் இருக்கட்டும்,

    உனக்கு சுயமா அறிவு இருக்குல்ல,அத வச்சு யோசி,

    காலம் ரொம்ப ரொம்ப கொறஞ்ச அளவுலதான் இருக்கு.

    உலகத்துல இருக்குற வளங்களச் சுரண்டாம தண்ணிய சேமிச்சு,

    மாற்று எரிபொருள் கண்டு பிடிச்சு நம்ம சந்ததிகளுக்கு கொடுத்து

    நாம‌ செத்துப் போவோம்!

    ஜின் எங்க‌ இருக்கு, த‌ப்பாத் எங்க‌ இருக்கு, வாயு புத்திர‌ன் எங்க‌ இருக்கான்,

    சாகா வ‌ர‌ம் வாங்கின‌ மார்த்தாண்ட‌ன் எங்க‌ இருக்கான்,

    யேசு என்னைக்கு வாறாரு…..

    எல்லா குப்பைக‌ளையும் தூர‌ விடுத்து மொத்த‌ ம‌னித‌குல‌ ச‌முதாய‌த்துக்கும்

    ப‌ய‌ன்ப‌டுற‌மாதிரி ஒண்ணு ம‌ண்ணா வாழுங்க‌ப்பா…

    பொறவு பாப்ப‌மென்ன‌.. வ‌ர‌ட்டா..

    த‌மிழ‌ன்.இந்தியன்@யாஹூ.காம்

  54. //எல்லா குப்பைக‌ளையும் தூர‌ விடுத்து மொத்த‌ ம‌னித‌குல‌ ச‌முதாய‌த்துக்கும்
    ப‌ய‌ன்ப‌டுற‌மாதிரி ஒண்ணு ம‌ண்ணா வாழுங்க‌ப்பா//

    தோழர் தமிழன்
    உங்கள் கருத்துதான் எங்களுடையதும். மனிதர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டுமென்றால் அவர்கள் மதங்களை தனிப்பட்ட, வாழ்வியல் நெறியாக,மற்றவர்களை(மத ,இன,மொழி) ஒற்றுமையாக வாழ பயன்படுத்தினால் மட்டுமே இயலும்.

    ஆனால் பாருங்கள் எல்லா மதங்களும் ஒரு குறிப்பிட்ட நபர் கூறிய,குறிப்பிட்ட புத்தகங்களில் கூறப்பட்ட கருத்துகளை பின்ப்ற்றுபவர்களை மட்டுமே அவர்களின் கடவுள் ஆதரிப்பார்,மற்றவர்களை (மறுமை நாளில்) துன்புறுத்துவார் என்றால் இது நிச்சயமாக மனிதர்களுக்கு இடையே பகைமை ஏற்படாதா?

    மதம் என்பது அரசியல் அதிகாரத்தை பெற ஏற்படுத்தப்பட்ட சித்தாந்த்மே.கடந்த காலத்தின் மதங்களின் பெயரால் நடைபெற்ற மனித விரோதச் செயல்கள் யாவும் இப்போதும் மத வாதிகளால் நியாயப் படுத்தப்படுகிறது.

    மதத்தை பற்றி தெரிந்து கொள்ள இயலாத சாதாரண மனிதர்கள் மதவாதிகளால் பகடைக்காயாக உருட்டப்படுவதும்,அவர்கள் மத்த்திற்க்காக உயிரிழந்தால் சொர்க்கம் கிடைக்கும் என்பதும் அறிவுள்ள எந்த மனிதனாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    இந்த விமர்சங்களால் மதம் அழிந்துவிடும் என்று கருத முடியாது.ஆனால் மதத்தால்(மத புத்தகங்களால்) எல்லா கேள்விகளுக்கும்(நாங்க கேட்ட கேள்விகள்தான்) பதில் சொல்ல முடியலவில்லை என்பதை ஆணித்தரமாக இத்தொடர் நிரூபித்திருக்கிறது.

    மதத்தில் உள்ள கொள்கைகளில் எனக்கு சரியாக தோன்றும்(மற்றவர்களை வெறுக்காத)கொள்கைகளை மட்டும் பின்பற்றுவேன்.மறுமை நாளில் என்ன நடக்குமோ மற்றவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.ஏனெனில் எனக்கே என் மத புத்தகங்களில் பதில் தெரியாத கேள்விகள் இருக்கிறது என்ற சிந்தனை ஏற்படவேண்டுமென்பதே எங்களின் நோக்கம்.

  55. சென்கொடி சிரகுகள் ‍: விமர்சனங்களை எப்போதுமே வரவேர்க்கும் சித்தாந்தம் உலகில் இஸ்லாம மட்டுமே.உமது கருத்து ஓருவித அறியாமை உளரல். இதற்கு எழூத்து பதில சரியாக வராது. நேருக்கு நேர் விவாதம் தான் இதற்கு தீர்வு. உண்மையை உடைத்து சொல்ல அதுதான சிரந்த வழி.
    இது ஓளிந்து நின்று கல் எரிவது போன்ற்து. கருத்து எழுதுவது அதை பார்த்து சிரிப்பது போன்ற்து.

  56. //விமர்சனங்களை எப்போதுமே வரவேர்க்கும் சித்தாந்தம் உலகில் இஸ்லாம மட்டுமே//
    1.விமர்சனம் என்பது எப்படி இருந்தால் வரவேற்பு கிடைக்கும்?

    2.எப்படிப்பட்ட வரவேற்பு?ஒரு உதாரணத்துடன் கூறவும்.

    //உமது கருத்து ஓருவித அறியாமை உளரல். இதற்கு எழூத்து பதில சரியாக வராது. //

    அறியாமை என்றால் இந்த வச‌னம் குரானில் இல்லையா?

    அறியாத உளரலுக்கே எழுத்து பதில் கொடுக்க இயலாமை.சரி உங்களுக்கும் எழுத்து பதில் கொடுக்க தெரியாதா?.
    ___________

    பதிவுக்கு வருவோம்.

    நிலவு பிளந்ததா?

    நிலவு பிளநது ஒட்டியதா?

    இனிமேல்தான் பிளக்கப் போகிறதா?

    நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்துவிட்டது என்றால் எந்த நேரம்?.

    இந்த கேள்விகளுக்கு அறிந்த ,உளரலில்லாத‌,எழுத்துமூலம் பதில் அளிக்கவும்.

    வாய்மொழிதான் பிடிக்கும் என்றால் ஒலிப்பதிவு செய்து அனுப்பலாம்.அனைவரும் கேட்டு பயன்பெறுவர்.

  57. செங்கொடி ,
    ஆறாம் நூற்றாண்டின் அராபிய எழுத படிக்க தெரியாதவனுக்கு இவ்வளவு தான் தெரியும்.
    இதற்கு மேல் எதிர்பார்த்தல் கூடாது, அவனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புருடா உட்டுட்டு போய்ட்டான்.
    அதுல என்ன அறிவியலாவது இல்லை மன்னாங்கட்டியாவது ?
    ஒரு மயிரும் இருக்காது .

  58. mele irukkum padatthil irukkum kodu unmaithan. aanal antha kodu oru 1000km thoorathileye mudinthathu. ithupol niraya kodugal ullathu. Aage muhammad nilavai pilakka villai. Niraya keeri irukkirar.

    wwwdothoax-slayerdotcom/moon-split-miracledotshtml

    seraman perumal endru oruvar aaram notrandil irunthar endru vaithu kolvom. Avar matthume ulagatthil nilavu pilanthathai paarthar endru vaithu kolvom. avarukku eppadi arabiayavil oru irai thoothar irukkirar, avarthan nilavai pilanthar endru therium ?

  59. பிங்குபாக்: Nakkeran

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்